Wednesday, May 2, 2007

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை..



இது அடிக்கடி விளம்பரங்கள்ல நீங்க கேக்கற ஒரு வாக்கியம் தான். அதுலயும் குறிப்பா சரவனா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள்ல கேக்கலாம். சரவனா ஸ்டோர்ஸ் சகோதரர்கள் பிரிஞ்சதுக்கப்புறம் சரவனாங்கற பெயர்லயே ஆளுக்கு ஒரு கடைய தொறந்துகிட்டு விளம்பரத்துல எங்களுக்கு வேற எங்கும் கிளைகள் இல்லைனு சொல்லி எல்லாரையும் குழப்புவாங்க. சரி இப்ப எதுக்கு இதெல்லாம்னு கேக்கறது தெரியுது..


வேற ஒன்னுமில்லைங்க கடந்த ரெண்டு மாசமா கிரிக்கெட் வச்சு இந்த பதிவை ஓட்டியாச்சு. இனிமே வேற எதாவது எழுத முயற்சி பண்ணனும். அதுக்கு மறுபக்கம் அப்படிங்கற பேர்ல வேற ஒரு பதிவை ஆரம்பிச்சிருக்கேன். இனிமே அதுல வேற எதாவது எழுதலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அதுக்குதான் இந்த பில்டப். மறுபக்கம்ன உடனே எதோ வில்லங்கமா எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்க சிங்கத்தை பத்தி எழுதப் போறேன்னெல்லாம் கற்பனை பண்ணிக்காதீங்க. கிரிக்கெட் தவிர மத்ததெல்லாம் எழுதற ஒரு பக்கம் தான் மறுபக்கம். அப்பாடா பெயர்க்காரணம் சொல்லியாச்சு :) இதுவரைக்கும் இந்தியா பெர்முடாவோட ஆடற மாதிரி சுலபமா அங்கங்க நடக்கற மேட்ச் பத்தி செய்தி, புகைப்படம், வீடியோனு சுலபமா ஓட்டியாச்சு. இனிமே தான் எதாவது சொந்த சரக்கு எழுதனும். இந்தியா பங்களாதேஷோட ஆடற மாதிரி ரொம்ப கஷ்டமான காரியம் தான். பார்க்கலாம். இந்த உதாரணத்துலயும் கிரிக்கெட்டானு கேக்காதீங்க..வாலை நிமிர்த்த முடியாது :)

எனது மறுபக்கம்

Monday, April 30, 2007

Well Done Ozs



நான்காவது முறையாக மற்றும் தொடர்ந்து மூன்று முறை உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்கள்!




அனைத்து அணியினரையும் துவம்சம் செய்து தாங்கள் உண்மையிலேயே உலக சாம்பியன்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். They Deserve it.

ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், அயர்லாந்து போன்ற அணிகளுக்கு இது மறக்க முடியாத உலகக்கோப்பையாக அமைந்தாலும், பிற அணிகளுக்கு இது விரைவில் மறக்க நினைக்கும் உலகக்கோப்பையாகவே அமைந்தது. இந்தியா,பாகிஸ்தான் அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறிய ஏமாற்றம், பாப் உல்மரின் மரணம் தந்த சோகம், அவரின் மரணம் பற்றிய விசாரனை தந்த அதிர்சிகள், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளின் வளர்ச்சி தந்த ஆச்சரியம், ஆஸ்திரேலிய அணியினரின் அதிரடி ஆட்டம் தந்த மலைப்பு,இறுதிப்போட்டியின் இறுதியில் நடந்த சிறுபிள்ளைத்தனமான குழப்பம் என இந்த உலகக்கோப்பை உணர்ச்சிகளின் கலவையாக அமைந்தது. ஒருசில போட்டிகள் தவிர்த்து மற்ற அனைத்தும் ஒருதலைப் பட்சமாக அமைந்தது ரசிகர்களிடையே சோர்வையே ஏற்படுத்தியது.

மொத்தத்தில் இந்த உலகக்கோப்பை பெரிய ஏமாற்றமே (ஆஸ்திரேலிய ரசிகர்களை தவிர மற்றவர்களுக்கு ) .


Thursday, April 26, 2007

நியூட்டனின் காதல் விதிகள்



எல்லாருமே சின்ன வயசில நியூட்டன் விதிகள் படிச்சிருப்போம். இப்போ கேட்டா நியூட்டனோட மூணாவது விதி மட்டும் தான் பாதி பேருக்கு தெரியும்(எனக்கும் தான் :) ). ஏன்னா அதுமட்டும் தான் ஈஸியா ஞாபகம் வச்சுக்க முடியும். மூணு விதிகளும் உங்களுக்கு இன்னும் ஞாபகத்துல இருந்தா நீங்க நெறைய படிக்கலைன்னு அர்த்தம் :)

புவியீர்ப்பு விசை மட்டுமில்ல விழியீர்ப்பு விசை பத்தியும் சில விதிகள் எழுதியிருக்காரு நம்ம நியூட்டன். எவ்வளவு பேரு அதை படிச்சிங்கன்னு தெரியாது. படிக்காதவங்களுக்காக இங்கே..

Universal law:

"Love can neither be created nor be destroyed; only it can transfer from
One girlfriend to another girlfriend with some loss of money "



first law:

" a boy in love with a girl, continue to be in love with her and a girl
in love with a boy, continue to be in love with him, until or unless
any external agent(brother or father of the gal) comes into play and
break the legs of the boy. "



second law:

" the rate of change of intensity of love of a girl towards a boy is
directly proportional to the instantaneous bank balance of the boy and
the direction of this love is same to as increment or decrement of the
bank balance. "



third law:

" the force applied while proposing a girl by a boy is equal and opposite
to the force applied by the girl while slapping."


லவ் பண்றவங்க பண்ணப்போறவங்க எல்லாம் இதை நல்லா படிச்சு மனப்பாடம் பண்ணிக்கோங்க :)

Friday, April 20, 2007

கொடூரமான விலங்குகள் - டாப் 5


விலங்கினங்களில் மிகக் கொடூரமான விலங்குகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்திருப்பவை..

TOP 5 DEADLIEST ANIMALS.............................. read fully




#5 African Lion



Credit: © Bruce G. Stumpf - On The Matrix


Giant fangs? Check. Lightning quick? That too. Razor sharp claws? You betcha. Hungry? You better hope not. These big cats are near perfect hunters.





#4 Great White Shark




Credit: © Klaus Jost - www.jostimages.com


Blood in the water can excite these sharks into a feeding frenzy, where they’ll use all 3,000 of their teeth to bite anything that moves.




#3 Australian Box Jellyfish



Credit: © Larry Friesen, Saturdays.net


Also known as the sea wasp, this salad-bowl sized jellyfish can have up to 60 tentacles each 15 feet long. Each tentacle has 5,000 stinging cells and enough toxin to kill 60 humans.



#2 Asian Cobra



Credit: © The Cobra Information Site

While the Asian Cobra doesn’t hold the title of most venomous snake, it does the most with what it has. Of the 50,000 deaths by snakebite a year, Asian Cobras are responsible for the largest chunk.



AND # 1




While all the above said animals use their respective weapon to bring the end of its enemy, this creature with its appearance on screen can kill many and when it speaks some dialogues then that is the worst that can happen for any living being on earth !


Tuesday, April 17, 2007

எந்த ஊருல இருக்கீங்க?



மெயில்ல வந்த மேட்டர். நீங்க இருக்க ஊரைப் பத்தி தெரிஞ்சுக்க ஒரு அருமையான வழி. உங்க ஊருல எப்படின்னு மறக்காம சொல்லிட்டுப் போங்க..

How to Identify the City you are in

Scenario 1
Two guys are fighting and a third guy comes
along, then a fourth and they start arguing about who's right.
You are in Kolkata

Scenario 2
Two guys are fighting and a third guy comes
along, sees them and walks on.
That's Mumbai

Scenario 3
Two guys are fighting and a third guy comes along & tries to make peace. The first two get together & beat him up.
That's Delhi

Scenario 4
Two guys are fighting. A crowd gathers to watch.
A guy comes along and quietly opens a chai stall
That's Ahmedabad.

Scenario 5
Two guys are fighting and a third guy comes
he writes a software programm to stop the fight ..
but the fight doesn't stop b'cos of a bug in the program
Thats Bangalore !!!!

Scenario 6
Two guys are fighting. Both of them take time out and call their friends on mobile.Now 50 guys are fighting.
You are in Chandigarh.

Friday, April 6, 2007

போவோமா ஊர்கோலம்..




ஒரு வாரம் Los Angeles,Disney Land, San Diegoனு ஊர் சுத்த கிளம்பியாச்சு. அதனால இந்த வாரம் பதிவுகள் போடறது கஷ்டம். அடுத்த வாரம் (ஏப்ரல் 14) மீட் பண்ணலாம். அது வரைக்கும் :-h :-h

Wednesday, April 4, 2007

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ?




கிரிக்கெட்டின் மற்றொரு முகமான Twenty/20 போட்டிகள் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது. அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் தற்பொழுது இந்த போட்டியையும் ஆடுகிறார்கள். பாகிஸ்தான்,இலங்கை,இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் Twenty/20 கோப்பைக்கான உள்நாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இன்னும் அவ்வளவு பிரபலமா ஆகவில்லையெனினும், இதுதான் கிரிக்கெட்டின் எதிகாலம்னு ஒரு பேச்சு இருக்கு. சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணி கூட ஒரு Twenty/20 போட்டியில் விளையாடி ஜெயித்தார்கள். இதுதான் இந்திய அணி ஆடியிருக்கும் ஒரே Twenty/20 போட்டி. தற்பொழுது மண்டல அணிகளுக்கு இடையேயான Twenty/20 போட்டிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஐந்து நாட்கள் தொடர்ந்து ஆடும் டெஸ்ட் போட்டியை பார்க்க பொறுமையில்லாதவர்களுக்கு ஒரு மாற்றாக ஒருநாள் போட்டிகள் இருந்தது. பரபரப்புக்கும், சுவாரசியங்களுக்கும் குறைவில்லாத இப்போட்டிகள் ரசிகர்களை கட்டிப்போட்டது. இன்றைய வேகமான உலகில் ஒருநாள் முழுதும் செலவழித்து ஒரு ஆட்டத்தை ஆடுவதும் அதிகமாகவே தோன்றுகிறது. இதுவே கூட நிறைய நாடுகள் கிரிக்கெட்டில் ஆர்வமில்லாமல் இருப்பதற்கும் ஒரு காரணம். இதற்கெல்லாம் ஒரு தீர்வாக வந்திருப்பதே Twenty/20 போட்டிகள். முதல் அதிகாரபூர்வ Twenty/20 போட்டி இங்கிலாந்தில் 2003ம் ஆண்டு ஆடப்பட்டது. கால்பந்தாட்டம், ஹாக்கி போல இப்போட்டிகளும் குறைவான நேரத்தில் ஆடப்படுகிறது. சுமாராக ஒரு போட்டி மூன்று மணிநேரத்தில் முடிந்துவிடுவது இதன் சிறப்பு.

இப்போட்டிகளை பிரபலப் படுத்துவதன் மூலம் விரைவில் ஒலிம்பிக்கில் சேர்க்க ஐசிசி முயன்று வருகிறது. போட்டிநேரம் காரணமாக ஒலிம்பிக்கில் இடம்பெற முடியாமல் இருந்ததால், மற்ற விளையாடுகள் போல் கிரிக்கெட்டையும் விரைவில் ஆடி முடிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் முதல் Twenty/20 உலக சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இவை அனைத்தும் கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்த ஐசிசி எடுத்து வரும் முயற்சிகள்.

Twenty/20 எப்படி விளையாடப்படுகிறது, அதன் விதிமுறைகள் என்ன என்பவை தெரியாதவர்களுக்காக..

ஒவ்வொரு அணியும் 20 ஓவர்கள் வீசும்.

வழக்கம்போல் ஒவ்வொரு அணியிலும் பதினொன்று வீரர்கள் இருப்பார்கள். ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக நான்கு ஓவர்கள் வீசலாம்.

நோ-பாலுக்கு 2 ரன்கள் கொடுக்கப்படும். அதுமட்டுமன்றி அதற்கடுத்த பந்து 'Free Hit Delivery'யாக எடுத்துக்கொள்ளப்படும். இதில் ரன் அவுட் முறையில் மட்டுமே ஒரு பேட்ஸ்மேனை அவுட்டாக்க முடியும். இது ஒருநாள் போட்டிகளில் இரண்டு நோ-பால் வீசுவதற்கு சமம்.

ஒவ்வொரு அணியும் தங்களது 20 ஓவர்களை 75 நிமிடங்களில் வீசி முடிக்க வேண்டும். அப்படி வீசி முடிக்காவிட்டால், 75 நிமிடங்களுக்குப் பிறகு வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் கூடுதலாக ஆறு ரன்கள் பேட்டிங் டீமுக்கு வழங்கப்படும். பேட்டிங் செய்யும் அணியால் நேரம் விரயமாக்கப்பட்டிருந்தால் கூடுதல் நிமிடங்கள் அளிப்பது குறித்து நடுவர்கள் முடிவெடுக்கலாம்.

தேவையின்றி நேரத்தை வீண் செய்யும் அணியின்(பேட்டிங்/பவுலிங்) ஸ்கோரில் ஐந்து ரன்கள் குறைக்கப்படும்.

முதல் ஆறு ஓவர்களுக்கு இரண்டு தடுப்பாளர்கள் மட்டுமே 30 யார்ட்க்கு வெளியே நிற்க முடியும். அதன் பின் ஐந்து தடுப்பாளர்கள் மட்டுமே எல்லைக்கோட்டில் நிற்க முடியும்.

இரு அணிகளும் சமமான் ரன்கள் எடுத்திருந்தால் Bowl-Out முறையில் வெற்றி பெறும் அணி தீர்மானிக்கப்படும். Bowl-Out பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.



இப்போட்டிகளால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள்..

டெஸ்ட் போட்டிகளில் இருக்கும் தரம் மற்றும் ஜென்டில்மேன்ஷிப் ஒருநாள் போட்டிகளில் குறைந்துவிட்டதாக் ஒரு குற்றச்சாட்டு உண்டு. Twenty/20 போட்டிகளால் அது மேலும் குறைய வாய்ப்புள்ளது.

50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளின் வேகத்திற்கேற்ப வீரர்கள் குறைந்தது 30 ஓவர்களாவது (முதல் 20 மற்றும் கடைசி 10) அடித்து ஆட வேண்டிய சூழ்நிலை உள்ளது. 20 ஓவர்கள் கொண்ட இப்போட்டிகளால் தொடக்கத்திலிருந்து இறுதி வரை அடித்து ஆடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது கிரிக்கெட்டின் தரத்தை மேலும் குறைக்கக்கூடும்.

நடுவர்களின் பொறுப்பு அதிகரிக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாத அணிகளுக்கு விதிமுறைகள் கடுமையாக இருப்பதால், இதில் முடிவெடுக்க வேண்டிய பொறுப்புள்ள நடுவர்கள் செய்யும் சிறு தவறும் சச்சரவுகளுக்கு வழிவகுக்கும்.

இப்போட்டிகள் பிரபலமடைந்தால், காலம் காலமாக ஆடப்பட்டு வரும் டெஸ்ட் போட்டிகளுக்கான வரவேற்பு குறையும். இது காலப்போக்கில் டெஸ்ட் போட்டிகளே இல்லாத நிலையை கூட உருவாக்கக்கூடும்.இதில் ஒருநாள் போட்டிகளும் விதிவிலக்கல்ல.


சாதகங்களும் பாதகங்களும் நிறைந்த Twenty/20 போட்டிகள் வெற்றி பெறுமா? காலமும் கிரிக்கெட் ரசிகர்களும் தான் பதில் சொல்ல வேண்டும்.

Tuesday, April 3, 2007

ICL Indian Cricket League - சாத்தியமா ? ? ?

இந்தியா உலகக்கோப்பைல தோத்து வெளியே போனாலும் போச்சு ஆளாளுக்கு அடுப்பு பத்த வச்சு அல்வா கிண்ட ஆரம்பிச்சுட்டாங்க. என் பையனை ஓபனிங் இறக்கியிருந்தா நல்லா ஆடியிருப்பான், இந்தியா ஜெயிச்சிருக்கும்னு ஷேவாகோட அப்பா ஒரு அல்வா குடுத்தாரு. முதல் சுற்றுல தோத்து வெளியே வரவரைக்கும் வாய் தொறக்காத சேப்பல், இந்த அணி தேர்வுல உடன்பாடில்லை, மூத்த வீரர்கள் ஒத்துழைக்கலைனு வரிசையா பவுண்ஸர் போட்டுகிட்டு இருக்காரு.

இந்த வரிசைல லேட்டஸ்டா சேர்ந்திருக்கறது ஜீ(Zee) டி.வியை சேர்ந்த சுபாஷ் சந்திரா. Indian Cricket Leagueனு ஒரு புது திட்டத்தை தொடங்கப்போறதா சொல்லியிருக்காரு இவர். இதுக்கான அனுமதி வேண்டி பிசிசிஐக்கு லெட்டர் அனுப்பிச்சிருக்காங்க. பிசிசிஐ செயலாளர் நிரஞ்சன் ஷா இது பத்தி சீக்கிரம் முடிவெடுப்போம்னு சொல்லியிருக்காரு. இந்தியால நடக்கற உள்நாட்டு போட்டிகளான ரஞ்சி, இரானி, சேலஞ்சர் போட்டிகள் மாதிரி இதுவும் நடத்தப்படும்னு சொல்லியிருக்கு Zee டி.வி குழுமம்.

முதல் கட்டமா இதுல 100 கோடி ரூபாய் முதலீடு பண்ணப்போறாங்க. பதினாலு பேர் கொண்ட ஆறு லீக் அணிகள் உருவாக்கப்படும். இதுல ரெண்டு பேர் இந்திய அணியில விளையாடுற இல்ல விளையாடுனவங்க இருப்பாங்க. நாலு வெளிநாட்டு வீரர்களும் எட்டு இளம் வீரர்களும் இருப்பாங்க. கொஞ்ச கொஞ்சமா மூனு வருஷத்துல இது பதினாறு அணிகளா உயர்த்தப்படும். பிசிசிஐ தேர்வுக்குழு தகுந்த வீரர்கள் இல்லாம தடுமாறுறதை மனதில் கொண்டு இது தொடங்கப்பட்டதாகவும், பிசிசிஐ இந்த லீக்ல இருந்து எந்த வீரரை வேணும்னாலும் தேர்வு செஞ்சுக்கலாம்னும் சொல்லியிருக்காங்க (வெளிநாட்டு வீரரை தேர்வு செய்யலாமா ? ). ஒவ்வொரு மாநிலத்திலயும் இதுக்கான திறனாய்வுக்குழு அமைக்கப்ப்படும்னும், ஒவ்வொரு வீரரோட ஆட்ட விவரங்கள், குணாதிசயங்கள் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் பதிவு செய்யப்படும்னும் சொல்லியிருக்காங்க.

The finer points of ICL:

- 6 teams or clubs to play in the opening year
- Talks on with BCCI for gaining access to stadiums
- Executive Board of the league under installation
- Pool of referees and umpires to be created
- Rules committee to form regulations for ICL
- Ombudsman to look into grievances of players
- League to begin with Twenty20 format and move to ODI format
- League to be a joint venture between Essel Group and ILFS Group
- Each team to have a mentor, media manager, psychologist, physio
- Prize money for the winner- US$ 1 million
- League teams to compete with teams internationally
- Number of teams to be increased from 6 to 16 in three years


நன்றி : Cricinfo.com

இப்போ மனசுல தோனுற கேள்விகள் ....

இது போன்ற தனியார் லீக்குகள் தாக்குபிடிப்பது சாத்தியமா?

இப்போட்டிகளுக்கு மக்களிடையே வரவேற்பு இருக்குமா?

பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட பிசிசிஐ இதன் மூலமும் காசு சம்பாதிக்க முயலுமா?

இதில் விளையாட திறமையான வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா? அல்லது பெயருக்காக சோப்ளாங்கி வெளிநாட்டு வீரர்கள் அழைத்து வரப்படுவார்களா?

இந்திய மைதானங்களை வெளிநாட்டு மைதானங்கள் போல் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றி நமது வீரர்களுக்கு பயிற்சி அளிக்காமல், இதுபோல் நூற்றுக்கணக்கான வீரர்களை உருவாக்குவது மட்டுமே பலன் தருமா?

பிசிசிஐன் அணியில் உள்ள வீரர்கள் இதில் விளையாட பிசிசிஐ அனுமதிக்குமா?

இதற்கான விடைகள் கொஞ்ச நாள்ல தெரியும். என்னோட கருத்து இந்த முயற்சி வெற்றி பெறுவது கஷ்டம் தான். இந்திய கிரிக்கெட்டில் புரளும் அரசியல்,மாநிலபற்று மற்றும் பணம் இதையும் சில மாதங்களில் திசை திருப்பி விடும் என்பது தான். இதுல எவ்வளவு திறமையான வீரர்களை உருவாக்குனாலும் பிசிசிஐ தேர்வுக்குழுவில் உள்ள மாநில மற்றும் வட்டார பாசம் அதை ஓரம்கட்டிவிடும்.

Monday, April 2, 2007

நாளைய தலைப்புச் செய்திகள்



நாள் : ஏப்ரல் 3 , 2023

27 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு முற்படுத்தப்பட்டவர்கள் போராட்டம்.

இன்று 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்

இது ஒரு கண்துடைப்பு பட்ஜெட் - அதிமுகவின் தலைவர் டி.டி.வி தினகரன் பேட்டி

2026ல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் - காங்கிரஸ் தலைவர் கார்த்திக் சிதம்பரம் பேட்டி.

சினிமாவில் இரத்தத்தை காண்பிக்கக்கூடாது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி உத்தரவு

இந்திய வேலைகளை அமெரிக்காவுக்கு அவுட்சோர்சிங் செய்வதை எதிர்த்து இந்திய கனினிப் பொறியாளர்கள் கட்சி போராட்டம்.

தனுஷ்-ஐஸ்வர்யா மகனும், ஜோதிகா-சூர்யா மகளும் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்.

தண்ணீரின் விலை இன்று 24 ரூபாய் உயர்ந்து லிட்டருக்கு 865 ரூபாயாக இருந்தது.

தொடர்ந்து ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையிலிருந்து இந்தியா முதல் சுற்றில் வெளியேறியது.

பெர்முடாவுடனான நல்லுறவை வளர்க்கும் முயற்சியாக, அந்நாட்டிற்கான இந்திய தூதுவராக ஷேவாக் நியமனம்.

எல்லாம் ஒரு கற்பனைதாங்க :) யாருக்கு தெரியும் எதாவது நடந்தாலும் நடக்கலாம்.

டிஸ்கி : எல்லாம் ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது தாங்க. எதாவது முத்திரை குத்திடாதீங்க :)

Friday, March 30, 2007

சென்றார்கள்.. வந்தார்கள்..



இதுக்கெல்லாம் விளக்கம் குடுக்கனுமாங்க..படத்தை பாருங்க உங்களுக்கே புரியும்..

எதுக்குப்பா இவ்ளோ 'கன்'னு???? காப்பாத்தவா? சுட்டு தள்ளவா?




Pirates of the Carribean



Mission Impossible :(



Final Destination??



Gone in 60 Seconds!!


The Inside Man?



GodFather?





இப்படி ஆரம்பிச்சு!!!




இப்படி முடிஞ்சிடுச்சு...





திராவிட் என்ன சொல்றாருன்னா...





அடுத்த வேலைக்கு தயாரான அகர்கர்... (ஏண்டா என்னை வம்புக்கு இழுக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதா? )


இந்தியா முதல் சுற்றுலயே தோத்து வெளிய போனதால நடந்த நன்மைகள்..

Thursday, March 29, 2007

சற்றுமுன் : இந்திய அணியின் புதிய பயிற்சியாளார் அறிவிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளர் சேப்பலுக்கு பதில் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக சரத் பவார் தெரிவித்துள்ளார். இவர் முந்தைய பயிற்சியாளரை விட மிகவும் இளமை(?)யானவர் மற்றும் திறமை(?)யானவர் என அவர் தெரிவித்தார். இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.







சற்றுமுன் நிருபர் சிவபாலனுக்கு இவர் அளித்த பே(ட்)டி..

சிவபாலன்: "வாழ்த்துக்கள் திரு மந்திரா பேடி அவர்களே. "

ம. பேடி : "நன்றி. நான் ரொம்பவும் சந்தோஷமா இருக்கேன். இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கும்னு கனவுலயும் நினைக்கலை"

சிவபாலன் : "இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கிங்க ? "


ம. பேடி : " சரியா உக்காரலாம்னு இருக்கேன். இந்த சேர்ல ஒரு கால் ஆடிகிட்டே இருக்கு. கொஞ்சம் பேலன்ஸ் பண்ணி உக்காந்துக்கறேன் வெயிட் பண்ணுங்க "


சிவபாலன் : "மேடம் நான் கேட்டது இந்திய அணி நல்லா விளையாட என்ன பண்ணலாம்னு இருக்கீங்கன்னு? "

ம. பேடி : "ஓ அதுவா, அதை முதல்ல நான் கிரிக்கெட்னா என்னனு கத்துகிட்டதுக்கு அப்புறமா முடிவு பண்ணணும்"

சிவபாலன் : "என்னது கிரிக்கெட் கத்துக்கனுமா? அப்புறம் எப்படி உங்களை பயிற்சியாளர் ஆக்கனாங்க? "


ம. பேடி : "இதுல என்ன ஆச்சரியம்? கிரிக்கெட்டே தெரியாதவங்க நம்ம டீம்ல இருக்கும்பொழுது, நான் பயிற்சியாளர் ஆகக்கூடாதா?. நம்ம ஊருல கோச் ஆகறதுக்கோ, டீம்ல விளையாடறதுக்கோ கிரிக்கெட் தெரியனும்னெல்லாம் அவசியமில்லை. வேற வழி நிறைய இருக்கு"

சிவபாலன் : "உங்களுக்கு முன்னால கோச்சா இருந்த சேப்பலை பத்தி என்ன நினைக்கிறிங்க? "


ம. பேடி : "அவர் எங்கே கோச் பண்ணாரு. சும்மா சும்மா கோச்சுகிட்டு தான் போனாரு. ஏடாகூடமா மெயில், எஸ்.எம்.எஸ் அனுப்பவே அவருக்கு நேரம் சரியா இருக்கு"


சிவபாலன் : "வெளிநாடுகள்ள ஆடுறப்ப நம்ம வீரர்கள் சொதப்புறதை பத்தி? "


ம. பேடி : "அதுக்கு நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன்.எல்லா ப்ளேயர்ஸையும் வெளிநாடுகளுக்கு கூட்டிட்டு போய் புக் கிரிக்கெட் ஆடப்போறோம். அதுல நிறைய ரன் எடுத்தவுடனே எல்லாருக்கும் கான்ஃபிடன்ஸ் வந்துடும். அதுக்காக நிறைய புக்ஸ் ஆர்டர் பண்ணியிருக்கோம்."


சிவபாலன் : "நம்ம அணி மனதளவில ஸ்டாரங்கா இல்லன்னு சொல்றதை பத்தி..."


ம. பேடி : "உண்மைதான். நம்ம அணி மெண்டலி வீக் தான். அதுக்காக நிமஹன்ஸ்ல இருந்தும், கீழ்பாக்கத்துல இருந்தும் நாலு பேரை டீம்ல சேர்த்து மெண்டலி ஸ்ட்ராங்கா ஆக்கப்போறோம்" .


சிவபாலன் : "வேற எதாவது அதிரடி திட்டம்??"

ம. பேடி : "இருக்கே. மக்கள் கிரிக்கெட் பார்க்காம என்னையே டி.வில பார்க்கறாங்கன்னா அதுக்கு காரணம் க்ளாமர். அதனால இனிமே நம்ம டீமும் மேட்சுல ஆடும்போது சட்டையில்லாம சல்மான்கான் மாதிரி ஆடப்போறாங்க. அந்த க்ளாமர்ல எதிரணி தடுமாறும்போது நம்ம பசங்க அடிச்சு ஜெயிச்சுடுவாங்க :) " .


சிவபாலன் : "சட்டை போடலைன்னா ஸ்பான்சர்ஸ் லோகோ எல்லாம் எப்படி தெரியும்? " .


ம. பேடி : "எல்லா லோகோவையும் உடம்புல ப்ளூ குத்திடுவோம்" .

சிவபாலன் : "என்னது ப்ளு குத்துவீங்களா?"

ம. பேடி : "ஆமாம் நம்ம டீம் கலர் ப்ளூ தான. அதான் பச்சை குத்தறதுக்கு பதிலா ப்ளூ குத்துறோம்"

சிவபாலன் : "அடுத்த உலகக்கோப்பைலயாவது இந்தியா ரெண்டாவது சுற்றுக்கு போகுமா? "

ம. பேடி : "கண்டிப்பா போகும். நேத்து நைட் ஐசிசியோட தலைவர் மால்கம் ஸ்பீடோட டின்னர் சாப்பிட்டேன். அப்போ அடுத்த தடவை இந்தியாவையும், பெர்முடாவையும் மட்டும் ஒரு க்ரூப்ல போட்டு, அந்த க்ரூப்ல முதல் ரெண்டு இடத்தை பிடிக்கற அணிகள் அடுத்த சுற்றுக்கு போற மாதிரி பண்ணனும்னு கேட்டேன். அவரும் சரின்னு சொல்லிட்டாரு. அதனால் அடுத்த தடவை முதல் சுற்றுல இந்தியா பெர்முடா கிட்ட தோத்தாலும் அடுத்த சுற்றுக்கு போயிடும்" .

சிவபாலன் : "சோர்ந்து போயிருக்கற நம்ம வீரர்களுக்கு எதாவது ஊக்கத்திட்டம் வச்சிருக்கிங்களா?"

ம. பேடி : "ஆமாங்க, இனிமே அடிக்கிற ஒவ்வோரு 25 ரன்னுக்கும் இல்லைன்னா எடுக்கற ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஒரு கிஸ் தருவேன்னு சொல்லியிருக்கேன்"

சிவபாலன் : "இவ்வளவு நேரம் எங்களுக்காக செலவு பண்னதுக்கு ரொம்ப நன்றிங்க. ஆமா ரொம்ப நேரமா பக்கத்து ரூம்ல எதோ டி.வி சத்தமா கேடுகிட்டு இருக்கே? "

ம. பேடி : "ஆமா நம்ம சச்சின் தான் உக்காந்து இங்கிலீஷ் படம் பார்த்துகிட்டு இருக்காரு"

சிவபாலன் : "என்ன படம்?"

ம. பேடி : "GONE IN 60 SECONDS !"

Wednesday, March 28, 2007

எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம் ?

இந்த பதிவுல வர எல்லாருமே கோடிகோடியா சம்பாதிச்சுட்டாங்க. அதனால் இந்த பதிவுல சொல்றது எல்லாம் கற்பனையே..நம்ம சிறில் கவி தந்த விதை எழுதற மாதிரி இது மெயில் தந்த விதை. மெயில்ல வந்த விஷயத்துக்கு கற்பனைய கலந்து எழுதியிருக்கேன்.

ஏப்ரல் ஆறாம் தேதி பிசிசிஐ குழு இந்திய அணியோட தோல்விக்கான காரணங்களை விவாதிக்க போறாங்களாம். அப்போ பெரிய தலைங்க சிலது உருளும்னு பேசிக்கறாங்க. ரொம்ப நாளாவே மேட்ச்ல ஆடறதை பொறுத்து தான் சம்பளம் கொடுக்கனும்னு ஒரு பேச்சு இருக்குது. ஒருவேளை அதை கட்டாயமாக்கினா என்னவெல்லாம் நடக்கலாம்னு ஒரு சின்ன கற்பனை.




இடம் : அகர்கர் வீடு

அகர்கர் மேட்சுல விளையாட (இன்னுமாடா நீ டீம்ல இருக்க ? ) புறப்பட்டுகிட்டு இருக்கார்..

அகர்கர் அம்மா : " தம்பி, இந்த தடவையாவது கொஞ்சம் உருப்படியா பந்து போட்டு ரெண்டு விக்கெட் எடுக்க பாருப்பா. நீ விக்கெட் எடுத்து சம்பாதிக்கர காசுல தான் உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும் :( ".

அகர்கர் : "நான் என்னம்மா பண்றது. எந்த பால் போட்டாலும் லெக் சைட்லயே போகுது. கஷ்டப்பட்டு ஆஃப் சைட்ல போட்டா அந்த பாழப்போன எதிர்டீம்காரங்க அடிச்சிடறாங்க"

அ. அம்மா : "அப்பப்ப ஸ்லோ பால் மாதிரி எதாவது போடேம்பா? "

அகர்கர் : "அந்த கூத்தை ஏம்மா கேக்கறீங்க. போன தடவை இப்படிதான் ஸ்லோபால் போடறேன்னு ரொம்ப ஸ்லோவா போட்டுட்டேன். பந்துக்கு முன்னால நான் பேட்ஸ்மேன் கிட்ட போயிட்டேன். அவன் என் சட்டைய பிடிச்சு என்னடா நீ மட்டும் வர? பந்து எங்கேடான்னு கேக்கறான். "

அ. அம்மா : "என்னவோப்பா.உன்னை நம்பி தான் இந்த குடும்பம் இருக்குங்கறதை மறந்துடாத "


இடம் : ஷேவாக் வீடு

ஷேவாக்கின் மனைவியும் பால்காரரும்...

பால்காரர் : "ஏம்மா எத்தினி தபாம்மா வர்ரது. எப்போ தான் பாக்கிய குடுப்ப? '

ஷேவாக் மனைவி : "கோச்சுக்காதீங்க. கொஞ்சம் பொறுத்துக்கோங்க. அடுத்த மேட்சுல அவர் அம்பதோ நூறோ அடிச்ச உடனே குடுத்துடறேன். "

பால்காரர் : "இத்தையேதான் ரெண்டு வருசமா சொல்லிகினுகீற. போன மேட்சுல தான் பெர்முடா கிட்ட நூறு அடிச்சாரே, அந்த காசு என்னாச்சு? "

ஷே. மனைவி : " அந்த காசு மளிகைக்கடை பாக்கிக்கே சரியா போச்சுப்பா"

பால்காரர் : "இதப்பாரும்மா எனக்கு அதெல்லாம் தெரியாது. நாளைக்கு காசு வரலை வூட்ல இருக்க பாத்திரம் பண்டம் எல்லாம் தெருவுக்கு வந்துடும் "

ஷே. மனைவி : கண்ணிருடன் மனதுக்குள் "இந்த விடியா மூஞ்சிய கட்டிகிட்டு இப்படி கஷ்டப்பட வேண்டியதா இருக்கு. ஒரு பாண்டிங்கையோ, ஜெயசூரியாவையோ கட்டியிருந்தா இந்நேரம் ராணி மாதிரி இருந்திருக்கலாம்"



இடம் : மும்பை மைதானம்

ஜாகிரும் ஹர்பஜனும் பயிற்சி(?) முடிந்து பேசிகிட்டு இருக்காங்க..

ஹர்பஜன் : "ஆமா ஜாகிர், என்ன இப்பல்லாம் பயிற்சிக்கு தினமும் லேட்டா ஏழு மணிக்கு மேலயே வர?"

ஜாகிர் : "அதையேன் கேக்கற. கிர்க்கெட்ல வர வருமானம் வாய்க்கும் வயித்துக்குமே சரியாயிருக்கு. அதான் பார்ட்-டைமா காலைல பேப்பர் போட்டுகிட்டு இருக்கேன்"

ஹர்பஜன் : "அட நாதாரி, உன்கிட்ட எவ்வளவு நாளா என்னையும் எதாவது வேலைக்கு சேர்த்து விடுன்னு சொல்லிகிட்டு இருக்கேன். என்னையும் சேர்த்து விட்டிருக்கலாம்ல? "

ஜாகிர் : "நான் அவங்க கிட்ட கேட்டேனே. அதுக்கு அவங்க இதுக்கெல்லாம் வேகமா ஓடறவங்களால தான் முடியும், ஸ்பின்னர்சை எல்லாம் சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க"

ஹர்பஜன் : "வேகமா ஓடனுமா? ஏன் சைக்கிள்ல தான எல்லாரும் போவாங்க? "

ஜாகிர் : "அது கரெக்டு. உன்னாலயோ என்னாலயோ சைக்கிள் எல்லாம் வாங்க முடியுமா?"

ஹர்பஜன் : "சரி பரவாயில்லை. வேர எதாவது வேலை இருந்தா சொல்லு"

ஜாகிர் : "தமிழ்மணம்னு ஒரு சைட்ல செந்தழல் ரவிங்கறவர் டெய்லி ஏதோ வேலைவாய்ப்பு செய்திகள் போடறாராம். அதை வேனா பாரேன்? "

ஹர்பஜன் : "அதெல்லாம் மண்டைல எதாவது இருக்கறவங்களுக்குப்பா. நமக்கு வேலைக்காவாது"



இடம் : சச்சின் வீடு

சச்சினும் அவரது மகனும்...

சச்சின் : "ஏண்டா இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பலை?"

பையன் : "இல்லைப்பா ஸ்கூல் ஃபீஸ் கட்டாததால மிஸ் ஸ்கூலுக்கு வரவேணாம்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு மேட்சுலயாவது எதாவது அடிப்பியாப்பா?"

சச்சின் : "கவலைப்படாதடா, நாளைக்கு நல்லா ஆடி காசோட வீட்டுக்கு வரேன். எப்பவுமே நான் ஆடும்போது நீ உக்காந்து பாத்தா தான் எனக்கு ராசி. இப்பல்லாம் நீ உக்காந்து பார்க்கறதில்லையா?"

பையன் : "இல்லைப்பா மறக்காம உக்காந்து பார்க்கறேன். நீங்க ஆட வரும்போது எல்லாம் நீங்க நல்லா ஆடனுமேன்னு டென்ஷன்ல மூச்சா வந்துடுது. மூச்சா போக பாத்ரூம் போயிட்டு வரதுக்குள்ள நீங்க அவுட்டாயிடறீங்க :( "

சச்சின் : "சரி சரி, நாளைக்கு மூச்சா வந்தாலும் எந்திரிச்சு போகாம உக்காந்து பார்க்கனும். என்ன ?"

பையன் : "சரிப்பா."

இதுக்கு மேல இன்னைக்கு இவனுங்களை கலாய்ச்சா நல்லாயிருக்காதுன்னு நினைக்கிறேன். அதனால அடுத்த பதிவுல மற்றொரு கலாய்ப்பு. வேணாம் போதும் இத்தோட நிறுத்திக்கோனு [-X யாராவது மிரட்டினா கலாய்க்கறதை நிறுத்திடறேன். இப்போதைக்கு :-h :-h..

Tuesday, March 27, 2007

நாங்க ரொம்ப வியர்ட் -- இந்திய அணி


ஆளாளுக்கு அவங்களோட வியர்டான குணங்களை பத்தி எழுதறாங்க. எங்களைதான் யாருமே எழுத கூப்பிடலைனு ரொம்ப வருத்தப்படறாங்க இந்திய அணியினர். கூப்பிடலைன்னா என்ன நாங்க ரொம்பவே வியர்டுன்னு அவங்களோட வியர்ட் குணங்களை எனக்க்கு மெயில்ல அனுப்பியிருந்தாங்க. உங்களுக்காக அது..

ஏத்தி விடப்பா தூக்கி விடப்பா
பத்து மேட்ச் தொடர்ந்து டக் அடிச்சு ஃபார்மில இல்லாம தடுமாறுற பேட்ஸ்மேனையோ, விக்கெட்டே கெடைக்காம கவலைப்படர பவுலரையோ பார்த்தா எங்களுக்கு ரொம்ப பரிதாபமாயிடும். அதனால அவங்களுக்கு ரெண்டு செஞ்சுரியோ, 10 விக்கெட்டோ குடுத்து பெரிய நிலைமைக்கு கொண்டு வந்து விடுவோம். இந்த மாதிரி எங்களை நாயடி அடிச்சே பெரிய ஆள் ஆனவங்க நிறைய பேர் இருக்காங்க. அது என்னவோ தெரியலை, ஃபார்ம்ல இல்லாதவங்க எல்லாம் எங்க கிட்ட ஆடும்பொழுது ஃபார்முக்கு வந்துடறாங்க :)

தாய்மண்ணே வணக்கம்
எங்களுக்கு நம்ம தாய்மண்ணு ரொம்ப பிடிக்கும். அதனால தான் வெளில எங்க ஆடப்போனாலும் கீழே விழுந்து அந்த ஊரு மண்ணு எங்க உடம்பில ஒட்டிடாம பார்த்துக்கறோம். இது தெரியாத சில முட்டாளுங்க நாங்க கீழே விழுந்து புரண்டு ஃபீல்டிங்கே பண்றதில்லைனு சொல்றாங்க. அப்ப நம்ம ஊருல ஆடும்பொழுதும் ஏண்டா விழுந்து பிடிக்க மாட்டேங்கறீங்கனு நீங்க கேக்கறது தெரியுது. நம்ம ஊருல கீழே விழுந்து நம்ம பாரத மண்ணுக்கு அடிபட்டுட்டா..அதனால தான் :)

ஒற்றுமை
எங்களுக்குள்ள இருக்க ஒற்றுமை வேற யாருக்கும் வராதுங்க. ஒருத்தர் அவுட்டாயிட்டா மத்தவங்க எல்லாம் நிறைய அடிச்சு அவரை வருத்தப்பட வைக்க மாட்டோம். எல்லாரும் கடகடனு அவுட்டாயிட்டு வந்துடுவோம். டீம்ல ஒருத்தர் மனசு கஷ்டப்பட்டாலும் எங்களுக்கு தாங்காது. ஒருத்தன் அழும்போது மத்தவங்க சிரிக்க முடியுமா? அதனால் எப்பவும் எல்லாரும் ஒற்றுமையா ஒரே மாதிரி விளையாடுவோம்:). மேட்சுன்னா வெற்றி தோல்வி சகஜம் தான். அதுக்காக கூட ஆடுறவனை விட்டுக்குடுக்க முடியுமா?

வீட்டில புலி வெளியில எலி
எல்லாரும் எங்களை இந்தியால ஆடும்பொழுது மட்டும் தான் ஜெயிப்பீங்க. வெளில போய் ஆடுறப்ப உங்க பருப்பு வேகாதுங்கறாங்க. நீங்களே யோசிச்சு பாருங்க. நம்ம ஊருல நாங்க ஆடும்போடு நாங்க ஜெயிக்கனும்னு நீங்கல்லாம் எப்படி விரும்பறீங்களோ அதே மாதிரி தான் அந்த ஊரு மக்களும் அவங்க டீம் ஜெயிக்கனும்னு ஆசைப்படுவாங்க. அவங்க ஆசையை கெடுக்கலாமா? அப்படி கெடுத்ததுக்கப்புறம் அங்கேல்லாம் போய் சுத்திப்பார்க்க முடியுமா? அதனால தான் எந்த ஊருக்கு போய் ஆடுனாலும் தோத்துட்டு வரோம். இனியாவது எங்களை இப்படி சொல்லி கிண்டல் பண்றதை நிறுத்துங்க. இல்லைன்னா நாங்க எந்த நாட்டுக்கு போறோமா அந்த நாட்டோட பேரை இந்தியானு தற்காலிகமா மாத்தி வச்சிடுங்க. என்ன OKயா?


அச்சமில்லை அச்சமில்லை
எங்களுக்கு மேட்ச்ல தோக்கறதை பத்தி பயமே இல்லை. எப்படியும் எங்க ஊரு கேனைங்க எங்களை கைவிடாதுங்க. ஒரு மேட்ச் எதாவது சப்பை டீம் கிட்ட 100 அடிச்சிட்டா போதும் வாழ்க்கைல செட்டில் ஆயிடலாம். எங்களுக்கு பயமெல்லாம் எதிரணிய பார்த்து தான். பங்களாதேஷ்ல இருந்து ஆஸ்திரேலியா வரைக்கும் நாங்க பயப்படாத டீமே கிடையாது. அங்கே பவுலர் ஓடி வரும்போதே இங்கே எங்களுக்கு நடுங்க ஆரம்பிச்சுடும். என்னங்க பண்றது எங்க பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக் :). எல்லா டீமும் பெர்முடா மாதிரி ஆயிடுமா? அதனால நாங்க பயப்படாம விளையாட இனிமே பெர்முடவோட மட்டும் தான் ஆடரதுன்னு முடிவு பண்ணிட்டோம் :)

உங்களுக்கு தெரிஞ்ச வியர்டை நீங்களும் சொல்லிட்டு போங்க..


நாம இன்னும் இந்த அதிர்ச்சில இருந்து மீளாம இருக்கோம். இந்த வீனாப்போனதுங்க என்ன பண்ணுது பாருங்க..









கவலைப்படாட்டியும் பரவாயில்லை. கவலைப்படற மாதிரி நடிக்கவாவது செய்யலாம்ல?

Monday, March 26, 2007

அப்படி என்ன தாண்டா பேசுவீங்க?

லோக்கல்ல தென்னை மட்டை வச்சு ஆடறவங்களா இருந்தாலும், சர்வதேச லெவல்ல ஆடறவங்களா இருந்தாலும், ஒவ்வொரு ஓவர் முடிஞ்சதும், நடந்து வந்து பேட்டை தட்டிகிட்டு எதாவது பேசறது வழக்கம். இது சம்பந்தமா மெயில்ல வந்த ஒரு ஜோக்கையும், நடந்து முடிந்த இந்தியா-இலங்கை போட்டியையும் கலந்த ஒரு கற்பனை :)

இலங்கை 254 ரன் அடிச்சு இந்தியா 255 ரன் அடிச்சா வெற்றிங்கற நிலைமைல உத்தப்பாவும், கங்கூலியும் ஆட வர்றாங்க. முதல் ஓவர் சமிந்தா வாஸ் போடறாரு. உத்தப்பா தடவு தவுனு தடவி ரன் எதுவும் எடுக்காம ஆறு பந்தையும் ஆடி முடிச்சுடறாரு.

கங்கூலி : ஏண்டா, ஃபோரு சிக்ஸுனு அடீப்பனு பார்த்தா இப்படி தடவிட்டு வந்து சிரிக்கறேயே. உனக்கு உத்தப்பானு பேர் வச்சதுக்கு சொத்தப்பானு பேர் வச்சிருக்கலாம்.

உத்தப்பா : பேசாத நீயி.அவன் ஓடி வர்றது தான் தெரியுது. பந்து எங்கே விழுந்து எங்கே போகுதுன்னே தெரியலை.நானே சின்னதம்பி கவுண்டமணி மாதிரி ஒருவழியா தடவி அவுட்டாகாம நிக்கறேன். அடுத்து அந்த பஞ்சுமிட்டாய் தலையன் மலிங்கா போடுவான். நீ என்ன பண்ரனு பார்க்கலாம்.

கங்கூலி : இந்த பெங்காலிக்கு அந்த ரங்கோலி மண்டையன் எல்லாம் தூசுடா. பாரு இப்ப என் ஆட்டத்தை.

அடுத்த ஓவர் கங்கூலி வழக்கம் போல பந்துக்கு ஒத்தடம் குடுத்து ஆடிட்டு வரார்.
உத்தப்பா: (நக்கலான சிரிப்போட :) ) என்னமோ நாலு பால்ல ஆறு சிக்ஸ் அடிக்கபோற மாதிரி பேசுனே மாங்கா மண்டையா. ஏண்டா அடிக்கலை?
கங்கூலி : ஹி.ஹி அடிக்கலாம்னு தான் பார்த்தேன். எப்படியும் நீங்க எல்லாம் சீக்கிரம் அவுட்டாயி போகப்போறீங்க. நான் ஒரு 100 பால்ல 40 ரன் அடிச்சா அடுத்த கேப்டன் ஆயிடுவேன்ல. அதான். இது நமக்குள்ளயே இருக்கட்டும். நான் கேப்டன் ஆனா உன்னை வைஸ் கேப்டன் ஆக்கிடுறேன்.
உத்தப்பா : (மனசுக்குள்ள "போகாத ஊருக்கு வழி சொல்லுது பாரு பொறம்போக்கு. இது மறுபடியும் கேப்டனாயி நான் வைஸ் கேப்டன் ஆகறதுக்குள்ள எனக்கு சங்கூதிடுவாங்க" ). ஆகா நல்லா திட்டம் போடுறீங்க. கலக்கிடலாம்.

கொஞ்ச நேரத்துல உத்தப்பா உலக்கோப்பையில தனது அதிகபட்ச ஸ்கோரான 18 ரன்னை அடிச்சு அவுட்டாயி போறாரு. இப்போ ஷேவாக்கும் கங்கூலியும் ஆடறாங்க.

கங்கூலி : என்ன ஷேவாக், இன்னைக்கு எவ்வளவு அடிக்கறதா உத்தேசம்?
ஷேவாக்: நிச்சயமா இன்னைக்கும் செஞ்சுரி அடிச்சிடாலம்னு தோனுது.
கங்கூலி : இவனுங்களை என்ன அந்த பெர்முடா தலையனுங்கனு நினனச்சியா 114 அடிக்கறதுக்கு. நேத்து அடிச்சதை விட ஒரு ரன் கம்மியா அடிப்பனு தோனுது.
ஷேவக் : என்ன 113ஆ?
கங்கூலி : இல்லை 14.

10 ஓவர்ல இந்தியா 42 ரன் அடிச்சிருக்கு.
கங்கூலி : இந்த ரெண்டு பன்னாடைங்களும் போடறதை பார்த்தா அடிக்க முடியும்னு தோனலை. பேசாம இன்னும் 6 ஓவருக்கு டொக்கு வச்சிட்டு ஸ்பின்னர்ஸ் வந்தோன அடிக்கலாம்.
ஷேவாக் : போன ஓவர் வாஸ் போடும்போது கொஞ்சம் சோர்வா இருந்தான். அதனால் இந்த ஓவர்ல நீ அடிச்சு ஆடு, நான் அடுத்த ஓவரை பார்த்துக்கறேன். (மனசுக்குள்ளே "எப்படியும் இந்த நாயி அடிச்சு ஆடறேன்னு அவுட்டாயி போயிடும். அடுத்த கேப்டன் நாந்தான்" )

அவர் எதிர்பார்த்த மாதிரியே கங்கூலி அடிச்சு ஆட ட்ரை பண்ணி அவுட்டாயிடறாரு. ஸ்கோர்போர்ட்ல இருந்து கங்கூலி பேரை எடுத்துட்டு சச்சின் பேரை போடறதுக்குள்ள அவரும் அவுட்டாயி திரும்பராரு. அப்போ எதிர்ல உள்ள வர திராவிட்,

திராவிட் : ஏய் மூதேவி, அதான் ரெண்டு பாலை தொடாம விட்டில்ல.இந்த பாலையும் விடவேண்டியது தான?
சச்சின் : நானும் அப்படித்தான் நினைச்சேன். மூனாவது பால் ஆடுறப்ப பூஸ்ட் விளம்பரம் ஞாபகம் வந்துடுச்சு. அதுல ஆடர மாதிரி நினைச்சுகிட்டு பாலை தொட்டேன். அவுட்டாயிடுச்சு.அடுத்த மேட்சுல அடிக்கறேன்.
திராவிட் : அடுத்த மேட்ச் உன் பையனோட உங்க வீட்டு கிரவுண்ட்ல தான் ஆடப்போற. உன்னையெல்லாம் தலையில கட்டி என் கழுத்த அறுக்கறாங்க. அப்படி என்ன அவசரம் உனக்கு?
சச்சின் : பின்ன. போன மேட்சுல கொஞ்ச நேரம் நின்னு ஆடிட்டு போறதுக்குள்ள, ஃப்ரிட்ஜ்ல இருந்த பீரையெல்லாம் காலி பண்ணிடுச்சுங்க பரதேசிங்க. அதான் அவசரமா போறேன். ரேண்டு பீராவது தேத்தனும்ல.
திராவிட் ; ஓ இதுல இப்படி ஒன்னு இருக்கா. நீ சொல்றதும் சரிதான். அப்படியே எனக்கு ரெண்டு எடுத்து ஒளிச்சு வை.

திராவிடும், ஷேவாக்கும் எதிர்பார்த்ததை விட கொஞ்ச நேரம் தாக்கு பிடிச்சு ஆடறாங்க.ஸ்கோர் 20 ஓவர்ல 89 ரன்.

திராவிட் : ஆமா போன உலகக்கோப்பைல சிக்ஸா அடிச்ச,இப்ப என்ன ஆச்சு?
ஷேவாக்: அப்போ ஒவ்வொரு சிக்ஸ் அடிக்கரதுக்கு முன்னாலயும் எங்கம்மா ரிலையன்ஸ் ஃபோன்ல கூப்பிடுவாங்க. இந்த தடவை அவங்க ஃபோன்ல சார்ஜ் இல்லை. அதான்.
திராவிட் : த்த்த்தூதூ. இதெல்லாம் ஒரு பொழப்பு?
ஷேவாக் : (மனசுக்குள்ள என்னை பார்த்து துப்பிட்டியா? இந்த ஓவர்ல அவுட்டாயி உன்னை என்ன பண்றேன் பாரு)

ஷேவாக் அவுட்டாகி போறரு. திராவிட் அவரை கூப்பிட்டு,

திராவிட் : ஏண்டா அவன் தான் ஸ்லிப்ல ஒருத்தனை நிக்க வச்சிருக்கானே அப்புறம் ஏண்டா அவன்கிட்டயே தூக்கி குடுக்கறே.
ஷேவாக் : இல்லைண்ணே ஸ்லிப்ல நின்னு தூங்கிகிட்டு இருக்கான் அந்த பன்னாடை. என்னை டைவர்ட் பண்ற மாதிரி கொட்டாவி வேற விடுறான். அதான் அவனை அலர்ட்டா ஆக்கறதுக்கு கேட்ச் குடுத்தேன்.
திராவிட் : எல்லாரும் சொல்லி வச்சு எனக்கு குழி பறிக்கறீங்களா? போங்கடா நானே பார்த்துக்கறேன்.

அடுத்து வர யுவராஜும் தேவையில்லாம ரன் அவுட்டாயி போறாரு. அப்போ

திராவிட் : டேய் ப்ரில்கிரீம் மண்டையா, அதான் பால் நேரா ஃபீல்டர் கிட்ட போகுதே அப்புறம் ஏண்டா ஓடி வந்து ரன் அவுட்டான?
யுவராஜ் : இந்த பேச்சுக்கும் ஒன்னும் குறைச்சலில்லை. நான் தான் ஓடிவந்தேன்ல நீயும் வரவேண்டியது தான்?உனக்கு சுவருன்னு பேரு வெச்சதுக்கு குட்டிச்சுவருன்னு பேர் வச்சிருக்கலாம்
திராவிட் : நீ ஓடி வந்தது எங்கேடா தெரியுது. மண்டைல பூசியிருக்கர க்ரீம்ல க்ளேர் அடிச்சு கண்ணே தெரிய மாட்டேங்குது.

அடுத்து வர நட்சத்திர ஆட்டக்காரர் டோணி முதல் பால்ல அவுட்டாகி போறாரு. மகா கடுப்பான திராவிட் அவரை கூப்பிட்டு,

திராவிட் : டேய் சடையாண்டி, அவன் தான் ஸ்டம்புக்கு நேர பாலை போடறான்ல. கையில அவ்வளவு பெரிய பேட் வச்சிருக்கியே, அதால ஆடாம ஏண்டா காலை குறுக்கால விட்ட?
டோணி : இல்லன்னே, பேட்ட வைக்கலாம்னு தான் குனிஞ்சேன். அதுக்குள்ள முடி முன்னால் விழுந்து கண்ணை மறைச்சிடுச்சு
திராவிட் : போடி மாவு, ஏற்கனவே வீட்டு சுவத்தை எல்லாம் இடிச்சுட்டானுங்க. இனி உனக்கு சங்கு தான். முடிய வெட்டு முடிய வெட்டுனு எவ்வளவு தடவை சொன்னேன் கேட்டியாடா முள்ளம்பன்றி தலையா.
டோணி : கவலைப் படாதீங்கண்ணே, அதான் அகர்கர் இருக்கான்ல.
திராவிட் : யாரு அவனா? முப்பது யார்ட் சர்கிளுக்கு வெளியே அடிச்சா சிக்ஸ் இல்லைடா, பவுண்டரிக்கு வெளியே அடிக்கனும்னு எவ்வளவோ தடவை சொல்லிட்டேன். கேக்க மாட்டேங்கறான். அவனை வெச்சு உருப்பட்டாப்ல தான்.
டோணி : அப்புறம் ஏன்னே அவனை டீம்ல சேர்த்தீங்க?
திராவிட் : நான் எங்கேடா சேர்த்தேன். அந்த சச்சின் தான் அடம் பிடிக்கறான். ஒட்டடைக் குச்சிக்கு, துடைப்பகட்டை ரெகமண்டேஷன்.

அடுத்து வரும் அகர்கர் அதிசயமாக தாக்கு பிடித்து ஆறு ரன்கள் அடிச்சிருக்கார்.

திராவிட் : டேய் அதான் ஆறு ரன் அடிச்சு கலக்கிட்டியே, அப்புறம் ஏண்டா இப்படி பொனம் மாதிரி மூஞ்சிய வச்சிருக்க?
அகர்கர் : உங்க கிட்ட சொல்றதுக்கென்ன. நானே விழுந்து புரண்டு ஒரு ஃபிகரை செட் பண்ணி வச்சிருந்த்தேன், அது இப்போ நம்ம முனாஃபோட சுத்துது.
திராவிட் : ஏண்டா, அந்த ஃபிகர் கிட்டயே கேக்க வெண்டியது தான?
அகர்கர் : கேட்டேனே. என்னை விட முனாஃப் நல்லா போடறானாம். நிறைய விக்கெட் எடுக்கறானாம். அதான் என்னை கழட்டி விட்டுடுச்சு.
திராவிட் : நீயும் நல்லா போட்டு விக்கெட் எடுக்க வேண்டியது தான?
அகர்கர் : எண்ணன்னே என்னை பத்தி தெரிஞ்சு தான் பேசுறீங்களா? அதெல்லாம் நம்ம கையிலயா இருக்குது. என்னால முடிஞ்ச விஷ்யம்னா பண்ணலாம். விக்கெட் எடுக்கறதெல்லாம் நம்ம சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம்னே.

சிறிது நேரத்தில் அகர்கரும் அவுட்டாகிப் போக, திராவி தனியாளாக வீரத்துடன் போராடுகிறார் :). மலிங்கா வீசும் ஓவரில் நான்கு பவுண்டரி அடிச்சுட்டு சங்கக்கராவை பெருமையாக பார்க்கிறார்.

சங்கக்கரா ; அடிச்சதெல்லாம் ஓசி ஃபோரு. இது பார்க்கறதை பாரு. இதைத்தான் அணையப்போற விளக்கு பிரகாசம எரியுதுன்னு சொல்லுவாங்க. அடுத்த ஓவர்ல இருக்குதுடி உனக்கு ஆப்பு.

வழக்கம் போல் சைக்கிள் ஸ்டாண்டாக அனைத்து ஆட்டக்காரர்களும் அவுட்டாக, முனாஃபும், ஹர்பஜனும் கடைசி விக்கெட்டுக்கு ஆடுகிறார்கள்.

சங்கக்கரா : ஏண்டா பன் தலையா, அதான் எல்லாரும் அவுட்டாயி பொயிட்டாங்கள்ல, நீங்க மட்டும் எதுக்குடா துள்ளுறீங்க?
ஹர்பஜன் : எங்களையெல்லாம் யாரும் விளம்பறத்துல நடிக்க கூப்பிடறதில்லை. இப்படி எதாவது அடிச்சாலாவது கூப்பிடுவாங்கள்ல.அதான்.
சங்கக்கரா : நீங்க திருந்த மாட்டீங்களாடா? உங்களுக்காக சிகாகோல இருந்து சிறில்னு ஒருத்தர் ஃபேக்ஸ் அனுப்பியிருக்காரு.
ஹர்பஜன் : என்னவாம்?
சங்கக்கரா : போய் விவசாயத்தை பாருங்கடா!னு சொல்லியிருக்காரு.
ஹர்பஜன் : இது கூட நல்ல யோசனை தான். நாங்க விவசாயம் பண்ற அழகை பார்த்துட்டு சுகுனா பம்ப், ஸ்பிக் யூரியானு எதாவது விளம்பரத்துல நடிக்க கூப்பிடுவாங்களா?

சங்கக்கரா மயங்கி விழுகிறார்!!

போட்டி முடிந்தபின், சிவராமகிருஷ்ணன் திராவிடிடம் கேள்விகள் கேட்கிறார்.

சிவா: திராவிட், இன்னைக்கு தோத்ததை பத்தி என்ன சொல்ல விரும்பறீங்க?
திராவிட் : hmm..It's a disappointing day for us. Our bowlers didn't bowled well, batsmen didn't bat well and fielder's didn't field well.
சிவா: ஏண்டா, பவுலிங்கும் போடமாட்டிங்க, ரன்னும் அடிக்க மாட்டிங்க, விழுந்து ஃபீல்டிங்கும் பண்ண மாட்டிங்க! அப்புறம் என்ன ம....க்குடா கிளம்பி வந்தீங்க?
திராவிட் : ஹி.ஹி.. போன வருஷம் ஆட வந்தப்ப சில கரீபியன் தீவுகளை சுத்தி பார்க்க நேரமில்லாம போச்சு.அதுக்கு தான் சுத்தி பார்க்கலாம்னு கம்பைண்ட் ட்ரிப்பா இங்கே வந்தோம்.
சிவா : வந்தது தான் வந்தீங்க. 12 பேர் மட்டும் வந்திருக்கலாம்ல. எதுக்குடா சும்மா பெஞ்சுல உக்கார்ரதுக்கு பதான்,ஸ்ரீசாந்த், கார்த்திக் மூனு பேரையும் கூட்டிகிட்டு வந்தீங்க?
திராவிட் : ஆறு டிக்கெட் வாங்கினா ஒன்னு ஃப்ரீன்னு சொன்னாங்க. அதான் 12 டிக்கெட்டுக்கு 2 டிக்கெட் ஃப்ரீயா கிடைக்குதேன்னு கூட்டிகிட்டு வந்தோம்.
சிவா : அப்படி பார்த்தாலும் ஒரு டிக்கெட் செலவு தானடா?
திராவிட் : அது ஒன்னும் பெரிய விஷயமில்லை. இந்தியாக்கு போன உடனே அஞ்சால் அலுப்பு மருந்து விளம்பரத்துல நடிச்சு அந்த காசை சம்பாதிச்சுடலாம் :)

சிவராமகிருஷ்ணனும் சுருண்டு விழுகிறார் ! !

Friday, March 23, 2007

ஒரு இந்திய ரசிகனின் புலம்பல்


கோடிக்கணக்கான ரசிகர்களோட கனவை கனவாவே ஆக்கிட்டாங்க இந்திய அணியினர். நான் இப்போ வேண்டிக்கறதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் ஜெயிக்கனும்னு தான். எல்லாரோட எதிர்பார்ப்பை, ஆசையை, கனவை கிழிச்சு குதறிப்போட்டுட்டாங்க. இந்திய அணியை வெறித்தனமா சப்போர்ட் பண்ண நான் இந்தியா அடுத்த சுற்றுக்கு போகக்கூடாதுன்னு தான் இப்போ நினைக்கிறேன். You don't deserve it guys.உங்களை பத்தி பெருமையா எழுதினதுக்காக வெக்கப்படறேன்,வருத்தப்படறேன்.

பங்களாதேஷ் கிட்ட தோத்தப்ப எதோ பேட் ல்க் அதனால் தான் தோத்தோம், நிச்சயமா இலங்கைய ஜெயிச்சு அடுத்த சுற்றுக்கு போவோங்கற நம்பிக்கை இருந்துச்சு. இன்னுமாட எங்களை நம்பறீங்கன்னு இன்னைக்கு நிரூபிச்சுட்டாங்க. இதுக்கு மேல கேவலமா ஒரு அணி, அதுவும் பத்தாயிரம் ரன் அடிச்ச மூனு பேர் இருக்கற அணி ஆட முடியுமான்னு தெரியலை. தயவு செய்து மேட்ச் ஃபிக்ஸிங் செஞ்சாவது பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு போக வைக்கனும். அவங்களே நம்மளை விட நல்லா ஆடுவாங்கங்கற நம்பிக்கை இருக்கு. ஒருநாள் தோத்தா பரவாயில்லை. மறுபடியும் மறுபடியும் அதே மாதிரி தோக்குறப்போ வெறுப்பு தான் வருது. இன்னைக்கு ஆடின விதத்தை பார்க்கறப்போ இவங்களை பத்தி பெருமையா சொல்றதெல்லாம் just hypeனு தோனுது. இப்பவாவது உனக்கு புத்தி வந்துதேனு சந்தோஷ்,சிறில் எல்லாம் சிரிக்கறது கேக்குது. என்னங்க பண்றது..நான் கொஞ்சம் ஸ்லோ..






இவ்வளவு பணம் குவிக்கறிங்களேடா, அதுக்கு கொஞ்சமாவது பொறுப்பா விளையாடனும்னு தோனலையா உங்களுக்கு. உங்களை சொல்லி குத்தமில்ல. உங்களை நம்பி இன்னும் உக்காந்து பார்க்கறோமே எங்களை சொல்லனும். திரும்ப பெர்முடா, ஸ்காட்லாந்துனு எதாவது அணி கிடைச்சா வெளுத்து வாங்குங்க.கேன மாதிரி கைதட்டி ரசிக்க நாங்க இருக்கோம். எப்படியும் உங்களுக்கு பணம் கிடைக்க போகுது, உங்களுக்கு என்ன கவலை. டி.வில காண்பிக்கறப்ப மட்டும் இஞ்சி திண்ண குரங்கு மாதிரி மூஞ்சிய வச்சிகிட்டு சோகமா இருக்கற மாதிரி போஸ் குடுங்க. இனிமே மேட்ச் பார்த்து நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்கடானு நல்ல பாடம் கத்து குடுத்துட்டிங்க.

தயவு செஞ்சு நீங்க இதுவரைக்கும் சம்பாதிச்ச காசுல கொஞ்சத்தை எதாவது புக்கி கிட்ட குடுத்து பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு போக வைங்க. கிரிக்கெட்டுக்கு கொஞ்சம் நல்லது பண்ன புண்ணியமாவது கிடைக்கும்.

பி.சி.சி.ஐ கிட்ட கேக்கறது எல்லாம் ஒன்னே ஒன்னு தான். தயவு செஞ்சு வயசான காலி பெருங்காய டப்பாக்களை எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு இளம் வீரர்களை கொண்டு வாங்க. அதனால் தொடர்ந்து 15, 20 மேட்ச் தோத்தாலும் பரவாயில்லை. அணில ஒரு புத்துணர்சியாவது வரும். இப்ப இருக்கவங்க ஆடினாலும் தோத்து தான் போறோம். அதுக்கு புது ஆளுங்களை முயற்சி பண்ணி அவங்களுக்காவது வாய்ப்பு கொடுக்கலாம். சச்சின் அவர்களே, நீங்க நிறையா சாதனை பண்ணியிருக்கீங்க. பெரிய ப்ளேயர் தான். ஆனா every good thing should come to an endனு சொல்ற மாதிரி உங்களுக்கான நேரம் வந்துடுச்சு. நீங்களாவே ரிடையர் ஆகறது உங்க கடந்த கால சாதனைகளுக்கு மரியாதை. உங்களை அணிய விட்டு தூக்க வேண்டிய தர்மசங்கடமான் நிலைமைய குடுக்காதீங்க. இதே தான் இன்னைக்கு சொதப்பின எல்லா பெரிய ப்ளேயர்களுக்கும். நீங்க பண்ண நல்லதெல்லாம் போதும். புதுசா வரவங்க பாத்துப்பாங்க. நீங்க எல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. வேறா ஏதாவது அணில பயிற்சியாளர் பதவி காலியாகும், இல்லைன்னா வர்ணனையாளர் பதவி காலியாகும். You guys are fit to talk cricket, not to play cricket. இன்னைக்கு ஒரு மேட்சுல தோத்ததை வச்சு இதை சொல்லலை. சமீபகாலமா நீங்க ஆடறதை வச்சு சொல்றேன். I really feel ashamed for writing about you in my previous posts.

எப்பவும் இந்தியா தோத்த இந்த மாதிரி திட்டிட்டு, புலம்பிட்டு அடுத்த நாளே அவங்க ஆடறதை பார்க்க உக்காந்திடுவேன். ஆனா இந்த முறை அவங்க குடுத்த அதிர்ச்சி ரொம்ப அதிகம். இனியாவது நல்ல திறமையான, கிரிக்கெட்ட பணம் காய்க்கும் மரமா பார்க்காம கிரிக்கெட்டா பார்க்கற அணிய சப்போர்ட் பண்ணுவோங்கற முடிவுக்கு வந்துட்டேன்.

WELL DONE SRILANKA FOR KICKING A...HOLES OUT OF WORLDCUP! ! !

Thursday, March 22, 2007

நாளை நமதே !

ஒருவழியா கால்குலேட்டரை தூக்கிப் போட்டுட்டு, ஜெயிச்சா போதும் அடுத்த சுற்றுக்கு போயிடலாங்கற நிலைமைக்கு வந்திருக்கோம் இலங்கையோட புண்ணியத்தால. இலங்கை ஏற்கெனவே அடுத்த சுற்றுக்கு போயிட்டதால நாளைக்கு அவ்வளவு சீரியஸா விளையாடமாட்டாங்கன்னு சொல்லவும் முடியாது. ஏன்னா அவங்க நாளைக்கு தோத்தா, சூப்பர் 8க்கு 0 புள்ளிகளோட போகனும். இந்தியா 2 புள்ளிகளோட போகும். அடுத்த சுற்றுல இந்த 2 புள்ளிகள் ரொம்ப ரொம்ப முக்கியம். அதனால் இலங்கையும் நிச்சயமா ஜெயிக்கத்தான் பார்ப்பாங்க.

நாளைக்கு அணில உத்தப்பா இருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன். அவருக்கு பதிலா கார்த்திக் உள்ள வர வாய்ப்பிருக்கு. அதே மாதிரி அகர்கருக்கு பதிலா பதானை கொண்டு வந்தால் நல்லா இருக்கும். உத்தப்பாவுக்கு பதிலா பதானை கொண்டுவரவும் வாய்ப்பிருக்கு. அப்போ ஜாகிர்,முனாஃப்,பதான்,அகர்கர்,கும்ப்ளே/ஹர்பஜன்னு அஞ்சு பவுலர்கள் இருப்பாங்க. இந்தியா இந்த முடிவை எடுக்கவும் வாய்ப்புகள் அதிகம். ஏன்னா நாளைக்கு இலங்கை கிட்ட நாலு பவுலர்களையும், அஞ்சாவது 10 ஓவருக்கு ஷேவாக்,சச்சின்,யுவராஜ் எல்லாரையும் வச்சு ஒப்பெத்தறது ரொம்ப கஷ்டம். இருக்கற நாலு பவுலர்கள்ல யாராவது ஒருத்தர் சொதப்பினாலும் ரொம்ப சிக்கலாயிடும். அதனால அஞ்சு பவுலர்களோட போறது நல்லது. அப்போ பதானை சேர்த்துகிட்டா பேட்டிங்கும் கொஞ்சம் பலமாகும். உத்தப்பா 5 ரன் எடுத்து அவுட்டாகறத விட, பதான் 5 ரன் எடுத்து அவுட்டானாலும், பவுலிங்க்குக்கு உதவுவாரு. ஷேவாகே நான் ஆடமாட்டேன்னாலும் திராவிட் விடமாட்டாரு. போன போட்டில சதமடிச்சு நல்லா சிமெண்ட் போட்டு இடத்தை பிடிச்சிட்டாரு. அதனால கண்டிப்பா ஷேவாக் இருப்பார்.

ஜெய்வர்தனே டாஸ் ஜெயிச்சா கண்டிப்பா பவுலிங் தான் எடுப்பார். அதேசமயம் திராவிட் ஜெயிச்சால் பேட்டிங் எடுக்கனும்கறது என்னோட கருத்து. பிட்சுல ஸ்விங் இருக்கும், ஆடரது கஷ்டம்னாலும், முதல் பத்து ஓவரை தாக்கு பிடிச்சிட்டா கொஞ்சம் ஈஸி தான். நேத்து இலங்கை பங்களாதேஷ் கிட்ட பண்ண மாதிரி. முதல் பத்து ஓவர்ல 60,70 ரன் அடிக்கனும்னு அவசியமே இல்லை. ஒன்னு ரெண்டுன்னு ஸ்டைரைக்க ரொட்டேட் பண்ணாலே, ரன்னும் வரும் கான்ஃபிடன்ஸும் வரும். அதே சமயத்தில பவுலரையும் பதட்டப்படுத்தும். அஞ்சு பந்து டொக்கு வச்சிட்டு ஆறாவது பந்தை 4 அடிக்க போய் அவுட்டாகறதுக்கு பதில் ஸிங்கிள்,2ன்னு தட்டி தட்டி ஒரு ஓவருக்கு 4 ரன் எடுத்தா போதும். 10 ஓவருக்கு 40/0 இருக்கறது 10 ஓவருக்கு 60/3னு இருக்கறத விட நல்லது தான.

ஒருவேளை வியாழக்கிழமை இரவு மழை அதிகமா இருந்தா டாஸ் ஜெயிச்சதும் பவுலிங் பண்றதை பத்தி யோசிக்கலாம். இல்லைன்னா முதல்ல பேட்டிங் பண்றது தான் நல்லது. 250 ரன்ன சேஸ் பண்ணா கூட திடீர்னு ரெண்டு விக்கெட் விழுந்துட்டா ப்ரெஷர் அதிகமாயிடும், ரன்ரேட் கம்மியாயிடும். அப்புறம் அடிச்சு ஆட முயற்சி பண்ணி இன்னும் கஷ்டம். இந்தியா சேஸ் பண்ணி வின் பண்ணதேயில்லைனு சொல்லலை. இந்த மாதிரி வாழ்வா சாவான்னு இருக்கற சூழ்நிலைல முதல்ல பேட்டிங் பண்றது பாதுகாப்பானது.

அடுத்தது பேட்டிங் ஆர்டர். நாளைக்கு கொஞ்சம் ஃபெளெக்ஸிபிளான பேட்டிங் ஆர்டர் இருக்கறது நல்லது. கங்கூலியும் ஷேவாக்கும் தான் தொடங்குவாங்க. அதுல எந்த மாற்றமும் இருக்காதுன்னு நினைக்கிறேன். ஒருவேளை முதல் விக்கெட் 2,3 ஓவருக்குள்ள போயிடுச்சுன்னா, ஒன்டவுனா திராவிடை இறக்கலாம். மறுபடியும் ஒரு விக்கெட் போகாம அடுத்த ஆறு ஏழு ஒவருக்காவது ஆட வேண்டியது முக்கியம். அதே சமயம் ரன்ரேட்டையும் ஒரு நாலு ரன்லயாவது மெயின்டெய்ன் பண்ணனும். ஒருவேளை 10 ஓவருக்கு மேல முதல் விக்கெட் போய், ரன் ரேட் கொஞ்சம் கம்மியா இருந்தா அடிச்சு ஆடற யாரையாவது இறக்கி ரன்ரேட்டை உயர்த்த முயற்சி பண்ணனும். முக்கியமானது நடந்ததை நினைக்காம பயப்படாம ஆடறது தான். முன்னால ஒரு பதிவுல சொன்ன மாதிரி 'Play your natural game.Be committed to the game'. அதிரடியா அடிச்சு ஆடனும்னு இல்லை ஆனா ஸாலிட்டா ஆடனும். பவுலரை செட்டில் ஆக விடக்கூடாது. அந்த தப்பை தான் பங்களாதேஷ் கிட்ட பண்ணோம். ஒரேயடியா தடவாம, அடிக்கடி பீட்டன் ஆகாம், ஸாலிட்டா பந்தை அடிச்சாலே பவுலருக்கு ஏதாவது வித்தியாசமா பண்ணனும்னு தோனும். அப்போ நிறைய லூஸ் டெலிவரி கிடைக்க வாய்ப்பிருக்கு. நாளைக்கு Mental Game தான் பலன் கொடுக்கும்.

ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து ஆடி 100 அடிச்சு மறுமுனைல ஆடறவங்க ஆளுக்கு ஒரு முப்பது ரன் அடிச்சு அவருக்கு ஸ்டேண்ட் குடுத்தாலே போதும். நல்ல ஸ்கோர் அடிச்சிடலாம்.கங்கூலி போன ரெண்டு மேட்சுலயும் ஒருமுனைல நிலைச்சு நின்னு ஆடுனாலும், கொஞ்சம் வேகமா ரன் எடுக்கவும் முயற்சி பண்ணனுங்கறது என்னோட அபிப்ராயம். விக்கெட்ட காப்பத்த வேண்டியது முக்கியம்னாலும், ஒண்ணு ரெண்டுன்னு எடுத்து ரன்ரேட்டை பாதுகாக்கறதும் முக்கியம்.

பவுலிங்கும், ஃபீல்டிங்கும் சுமார் தான். இதை வச்சு இலங்கைய சமாளிக்கறது கஷ்டம் தான். நாளைக்கு அநேகமா கும்ப்ளேக்கு பதில் ஹர்பஜன் மறுபடியும் வருவாருன்னு நினக்கிரேன். இலங்கைல இடதுகை ஆட்டக்காரர்கள் நெறைய பேர் இருக்கறதால ஹர்பஜன்னுக்கு தான் வாய்ப்பு அதிகம். பார்ப்போம் திராவிடும் சாப்பலும் என்ன முடிவு பண்றாங்கன்னு. நாளைக்கு ஆடப்போற பிட்ச்ல இதுவரைக்கும் எந்த போட்டியும் நடக்கலை. இந்த பிட்சுல முதல்ல, ஸ்விங்கும் பவுண்சும் இருந்தாலும், அதுக்கப்புறம் ஆடறதுக்கு ஈஸியா இருக்கும்னு சொல்றாங்க. எல்லாத்தையும் கவனத்தில எடுத்துக்கனும். கண்டிப்பா அஞ்சு பவுலர்க்ளோட போறது தான் நல்லது.

நாளைக்கு இந்தியா ஜெயிச்சா, உடனே மேட்ச் ஃபிக்ஸிங்னு சொல்றதுக்கு நிறைய பேர் கிளம்பிடுவாங்க. அவங்களுக்கு எல்லாம் சொல்றது இதுதான். மேட்ச் ஃபிக்ஸிங் நடந்திருக்கு, இல்லைன்னு சொல்லலை. அதுக்காக இந்தியா தோத்தா உடனே காசு வாங்கிட்டாங்கன்னு சொல்றதும், ஜெயிச்சா காசு குடுத்து ஜெயிக்க வச்சாங்கன்னு சொல்லாதீங்க. சில மேட்சுல நடந்ததுக்காக எல்லா மேட்சையும் சந்தேகப்பட்டா, அப்புறம் க்ரிக்கெட்டோட சுவாரசியமே போயிடும். இந்தியா நாளைக்கு தோத்து வெளியேறினா, அதுக்காக இந்தியால எல்லாரும் பார்க்காம இருக்கப்போறதில்லை. கிரிகெட்ட ரசிக்கறவங்க இந்தியா ஆடுனாலும் ஆடாட்டியும் பார்ப்பாங்க. இந்தியா ஆடுனா த்ரில் அதிகம் அவ்வளவு தான். ஆக எல்லாத்தையும் மறந்துட்டு இந்தியா நாளைக்கு ஜெயிக்கனுங்கறதை மட்டும் நினைப்போம். கடவுள் சோதிச்சாலும் கைவிட மாட்டாரு :)

நான் கொஞ்சம் weird ! !

தன்னோட weird குணங்களை பத்தி சொல்லும்பொழுது போறபோக்குல எனக்கு ஒரு பாலை போட்டுட்டு போயிட்டாரு நம்ம சிறில். கிரிக்கெட் பத்தி மட்டும் எழுதிட்டு இருந்த எனக்கு என்னைப் பத்தியும் கொஞ்சம் எழுத களம் அமைச்சுக் குடுத்ததுக்காக அவருக்கு ஒரு நன்றி!

அஞ்சு குணங்களை சொன்னா போதுமாம். அதனால நான் weirdனு நினைக்கிற என்னோட அஞ்சு பெரிய விஷயங்கள் உங்களுக்காக (இதுலயும் ரெண்டு கிரிக்கெட் சம்பந்தப்பட்டது தான் )

1. சாப்பிடும் பொழுது எதாவது புக் படிக்கறது. படிக்க ஒரு புக் இல்லைன்னா சாப்பாடு இறங்காது. சாப்பாடு இல்லாம் புத்தகம் படிக்கலாம் ஆனா புத்தகம் இல்லாம சாப்பிட முடியாது நம்மால.என் அம்மா, அக்கா, மனைவி எல்லாரும் எவ்வளவோ சொல்லி பார்த்துடாங்க. நான் திருந்தற மாதிரி இல்லை. இப்பல்லாம் என் வீட்டுக்காரம்மாவும் சாப்பிடும் பொழுது புத்தகம் படிச்சிகிட்டே சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. என்னால முடிஞ்ச நல்ல காரியம் :) . படிச்சிகிட்டே சாப்பிட்டா ருசியே தெரியாதும்பாங்க. சிலசமயம் அது நல்லது தாங்க :). ஒரு தடவை பருப்பே போடாம பண்ண பொங்கலை கூட தெரியாம சாப்பிட்டுட்டு போயிருக்கேன்னா பார்த்துக்கோங்க :)

2. வண்டி ஓட்டிட்டு போகும்பொழுது முன்னால போற காரோட நம்பரை கூட்டி என்ன நம்பர் வருதுன்னு பார்க்கறது. அந்த காரோட நம்பர்ல எதாவது சிறப்பு இருக்கா (உதாரணமா எனக்கு தெரிஞ்ச யாரோட பிறந்தநாளாவது) அப்படின்னு யோசிக்கறது வழக்கம். இது எப்ப ஆரம்பிச்சுதுன்னு தெரியாது. ஆனா இன்னும் தொடர்ந்துகிட்டு இருக்கு. இதனால எந்த பயனும் இலலைன்னாலும், சில சமயம் கவனம் சிதறும். நானும் இதை நிறுத்தனும்னு பார்க்கறேன் முடியலை.

3. கொழுகொழுன்னு எதாவது குழந்தைய பார்த்தா உடனே அதோட கன்னத்தை கிள்ளனும்னு தோனும்( குழந்தை அழுகாத அளவுக்கு தான்). முன்னெல்லாம் சொந்தக்காரங்க குழந்தைங்க யாரையாவது கிள்ளிகிட்டு இருந்தேன். இப்பொ என் பையனை கிள்ளி அதனால் தெனமும் திட்டு வாங்கிட்டு இருக்கேன். இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு பையன் பெரியவனாகி உதைக்கப் போறான் :)

4. கிரிக்கெட் பார்க்கும்பொழுது எதாவது ஒரு இடத்துல உக்காந்து, இந்தியா நல்லா ஆட ஆரம்பிச்சிட்டா மேட்ச் முடியற வரைக்கும் கம் போட்டு ஒட்டுன மாதிரி அதே இடம் தான். அடுத்தடுத்த மேட்சுக்கும் அதே இடம் தான். இந்தியா தோக்கற மேட்ச் வரைக்கும் இது கண்டின்யூ ஆகும். அப்புறம் வேற இடம் தேட வேண்டியது தான். எனக்கு தெரிஞ்சி கிரிக்கெட் பார்க்கற முக்கால்வாசி பேரு கிட்ட இந்த சென்டிமென்ட் இருக்கும்னு நினைக்கிறேன். இதுல நான் மட்டுமில்லை, மத்தவங்களும் அவங்க இடதை விட்டு நகரக்கூடாது. அப்ப தான் ஒர்க் அவுட் ஆகும் :) . இதுனால் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கறத விட எனக்கு திட்டு கிடைக்கறது தான் அதிகம்.

5. மேட்ச் ஃபிக்ஸிங், பெட்டிங், டைம் வேஸ்ட்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு சொன்னாக்கூட கிரிக்கெட் மேல வெறியா இருக்கறது. இந்தியா கேவலமா தோத்தாக்கூட கொஞ்ச நேரத்துக்கு எரிச்சலா இருக்கும்.இனிமே கிரிக்கெட்டே பார்க்கக் கூடாதுன்னு தோனும். ஆனா நைட்டே ஹைலைட்ஸ் பார்க்க உக்காந்திடுவேன். ஒரு படத்தை 10 தடவை 20 தடவை பார்க்கிற மாதிரி, இந்தியா ஜெயிச்ச மேட்சா இருந்தா முழு ரீப்ளேய கூட அலுக்காம பார்ப்பேன். காலைல பார்த்த மேட்ச் தானன்னு யாரவது எதாவது சொன்னா கூட இந்த காது to அந்த காது தான். இவ்வளவு வெறியா இருக்குறியே நீ பெரிய ப்ளேயரானு கேட்டு யாரும் மானத்தை வாங்கிடாதீங்க :( . போன உலகக்கோப்பை நடந்தப்போ சின்ன 6" டி.விய ஆஃபிசுக்கு எடுத்துட்டு போய், Requiremet Documents,technical Specification print out, அட்டை டப்பா எல்லாம் மூனு பக்கமும் வச்சு உள்ளே டி.வி வச்சு மேட்ச் பார்த்தேன்னா பார்த்துக்கோங்க :). என் ராசி இந்த தடவையும் பிடுங்க நிறைய ஆணி குடுக்காம நெட்ல மேட்ச் பார்க்க விட்டுட்டாங்க :)

அடுத்து என் பங்குக்கு நானும் அஞ்சு பந்து வீசனுமாமே..ஆறு பந்து வீசி ஒரு ஓவராக்கிடறேனே.இதோ என்னோட லிஸ்ட்

1. சிவபாலன்
2. SK ஐயா
3. கனவுலகம் கார்த்தி
4. தம்பி கதிர்
5. ஃபாஸ்ட் பவுலர் (உங்க உண்மையான் பேர் என்னங்க???? பிரெட் லீ, ஷேன் பாண்ட்னு எல்லாம் சொல்லாதீங்க :) )
6. சந்தோஷ்

இவங்க ஆறு பேரும் இந்த பதிவை படிப்பாங்களான்னு தெரியலை. படிக்கற யாராவது அவங்க கிட்ட சொன்னீங்கன்னா உங்களுக்கு 1000 பின்னூட்டம் பரிசாக தரப்படும்.

Wednesday, March 21, 2007

சூப்பர் 8க்கு செல்ல வழி


இன்னைக்கு நடந்த மேட்சுல இலங்கை 318 ரன் அடிச்சு பங்களாதேஷை பொளந்து கட்டிட்டாங்க .இன்னைக்கும் தீபாவளி கொண்டாடலாம்னு ஆசையோட இருந்த பங்களாதேஷுக்கு பொங்கல் குடுத்துட்டாங்க. எப்படி எல்லாம் ஆடக்கூடாதுன்னு நாம புரிய வச்சோம், எப்படியெல்லாம் ஆடனும்னு இன்னைக்கு இலங்கை புரியவச்சிட்டாங்க. எந்த பவுலரையும் செட்டில் ஆகவே விடலை. பவுண்டரியோ சிக்ஸோ அடிக்க முடியாத நேரங்கள்ல ஒன்னு,ரெண்டுன்னு எடுத்து தொய்வில்லாம ஆடினாங்க. பவுலர்களும் நல்லா பந்து வீசி பங்களாதெஷை 112 ரன்னுக்கு சுருட்டிட்டாங்க.Good Work Srilanka!

இந்த மேட்சை பத்தி அதிகமா பேசறதை விட்டுட்டு அடுத்து நாம் என்ன பண்ணா அடுத்த சுற்றுக்கு போக முடியும்னு பார்க்கலாம்.

இன்றைய நிலவரப்படி நம்ம க்ரூப்ல இருக்கற அணிகளோட புள்ளிகள் மற்றும் நெட் ரன்ரேட்.







CountryMatchesWonLostNo ResultPointsNRR
Srilanka220044.594
India211022.507
Bangladesh21102-2.002
Bermuda22000-5.0



இப்போதைய நிலவரப்படி நாம வெள்ளிக்கிழமை இலங்கைய வெற்றி பெற்றாலே போதும். ரன்ரேட் பத்தி அவ்வளவா கவலைப்பட வேண்டாம். எப்படின்னா உதாரணத்துக்கு இந்தியா 250 ரன் அடிச்சு இலங்கைய 240 ரன்னுக்கு அவுட்டாக்குதுன்னு வச்சுக்குவோம்.அப்போ இந்தியாவோட ரன்ரேட் 1.75 கிட்ட இருக்கும். இதேதான் இந்தியா 300 ரன் அடிச்சு, இலங்கையை 290க்கு அவுட்டாக்கினாலும், 200 ரன் அடிச்சு அவங்களை 190க்கு அவுட்டாக்கின்னாலும். 250 ரன் இலக்கை, இந்தியா இரண்டாவதா ஆடி 49 ஓவர்ல அடிச்சா கூட இந்தியாவோட ரன்ரேட் 1.7 கிட்ட இருக்கும். அப்போ இலங்கையோட ரன்ரேட் 2.94 இருக்கும்.

பெர்முடாவொட போட்டில பங்களாதேஷ், இந்தியாவோட ரன்ரேட்டை விட அதிகம் எடுக்க என்ன பண்ணனும்னு பார்க்கலாம்.

பங்களாதேஷ் முதல்ல ஆடி 300 ரன் எடுத்து, பெர்முடாவை 0 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக்கினா கூட அவங்க ரன்ரேட் 0.7 கிட்ட தான் இருக்கும். அதேமாதிரி பெர்முடா முதல்ல ஆடி 50 ரன் அடிச்சு, பங்களாதேஷ் அதை 2 ஓவர்ல அடிச்சா கூட ரன்ரேட் 0.3 தான் இருக்கும். ஆக ரன்ரேட் மூலமா பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு வர வாய்ப்பே இல்லை.

மக்கா வெள்ளிக்கிழமை ஜெயிச்சு அடுத்த சுற்றுக்கு வாங்கப்பா ! ! புலம்ப வச்சுடாதீங்க

வெள்ளிக்கிழமை மழை வருமா வராதான்னு தெரிந்து கொள்ள

Tuesday, March 20, 2007

சூப்பர் 8க்குள் நுழைந்தது இந்தியா ! ! !



எல்லாரும் இந்தியா சூப்பர் 8க்கு போகுமா போகாதான்னு கவலைப்பட்டுகிட்டு இருக்க, எல்லாரோட எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றி இன்னைக்கே சூப்பர் 8க்கு போயிடுச்சு இந்திய அணி.

இதுபற்றி கூறிய டிராவிட் "நாங்க தங்கியிருந்த ஹோட்டல் ராசியில்லாததால், ஒரு மாறுதலுக்காக சூப்பர் 8 மோட்டலுக்கு மாறிட்டோம். இப்ப எங்களை சூப்பர் 8க்கு போகலைன்னு யாரும் குறை சொல்ல முடியாதுல்ல " என்றார்.











சும்மா காமெடிங்க..யாரும் அடிக்க வராதீங்க :) :)

Monday, March 19, 2007

பாதிக் கிணறு தாண்டியாச்சு !



இன்னைக்கு பெர்முடாவை தோற்கடிச்சு பாதிக்கிணறு தாண்டி இருக்கு இந்தியா. ஆனா மீதி பாதியை தாண்டறது தான் கஷ்டமான விஷயம். அதையும் தாண்டலைன்னா வெளியேறவேண்டியது தான்.






பெர்முடாவுக்கு எதிரா 413 ரன் அடிச்சு உலகக்கோப்பையில சாதனை பண்ணியிருக்கு இந்தியா. இதுவரைக்கும் உலகக்கோப்பைல கென்யாவுக்கு எதிரா இலங்கை அடிச்ச 398 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோரா இருந்தது. இன்னைக்கு அதை முறியடிச்சுது இந்தியா. அதே மாதிரி ஒரு இன்னிங்ஸ்ல 18 ஸிக்ஸ் அடிச்ச தென்னாப்பிரிக்காவோட சாதனையையும் சமன் செஞ்சிருக்கு. அதே போல் 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைச்சிருக்கு. இதெல்லாம் பெர்முடாவுக்கு எதிராதான்னாலும், நம்ம அணியினருக்கு நல்ல கான்ஃபிடன்ஸ் தந்திருக்கும் இந்த வெற்றி.






ஷேவாக் இன்னைக்கு சதமடிச்சாலும், இலங்கையின் தரமான பந்து வீச்சுக்கு எதிரா தாக்குப்பிடிப்பாரான்னு தெரியலை. அதே மாதிரி இந்தியாவோட பவுலிங் மற்றும் ஃபீல்டிங் இன்னமும் முன்னேறனும். பெர்முடா கிட்டே ஒப்பேத்தின மாதிரி இலங்கை கிட்ட பண்ண முடியாது. என்னைக்கேட்டா அடுத்த போட்டில அகர்கருக்கு பதிலா பதானை கொண்டு வரலாம். மூனு விக்கெட் எடுத்திருந்தாலும் அவ்வளவு சிறப்பா அவர் பந்து வீசின மாதிரி தெரியலை. பதான் பேட்டிங்கும் கொஞ்சம் பண்ணுவாரு. அதனால் அடுத்த போட்டிக்கு என்னோட சாய்ஸ் பதான்.








சரி, இனி மீதி கினறு தாண்ட என்ன பண்ணனும்னு பார்க்கலாமா?



இன்று பெர்முடாவை 257 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சற்று ஆறுதல் தந்துள்ளது இந்தியா. இன்றைய நிலவரப்படி இலங்கையின் நெட் ரன்ரேட் 4.86, இந்தியா 2.5, பங்களாதேஷ் 0.14. மூன்று அணிகளும் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.

சாத்தியக்கூறு - 1
புதனன்று நடைபெறும் போட்டியில் இலங்கை பங்களாதேஷை வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளாகும். வெள்ளியன்று நடைபெறும் போட்டியில் இந்தியா இலங்கையை வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்த புள்ளிகள் நான்காகும். இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் பெர்முடாவை வெல்லும் பட்சத்தில் அதுவும் நான்கு புள்ளிகள் பெற்றிருக்க்கும். இந்நிலையில் மூன்று அணிகளும் 4 புள்ளிகளுடன் இருப்பதால் சிறந்த நெட் ரன்ரேட் உள்ள முதலிரு அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும். இதன்படி இந்தியா அடுத்த போட்டியில் வெல்வதுடன், சிறந்த ரன்ரேட் வித்தியாசத்திலும் வெல்ல வேண்டும். ஒருவேளை அடுத்த போட்டியில் இலங்கை 250 ரன்கள் அடித்து பங்களாதேஷை 200 ரன்களுக்கு அவுட்டாக்கினால், இலங்கையின் நெட்ரன்ரேட் 2.93 ஆக இருக்கும். இலங்கை 300 ரன்கள் அடித்து பங்களாதேஷ் 200 ரன்களுக்கு அவுட்டாக்கினால் 3.43 ஆக இருக்கும். இந்நிலையில் இந்தியா இலங்கையை குறைந்தது 100 ரன்கள் அல்லது 15 ஓவர்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் வெள்ளியன்றே அடுத்த சுற்றுக்கு செல்லலாம். இல்லையேல் ஞாயிறன்று நடைபெரும் பங்களாதேஷ்-பெர்முடா போட்டியின் முடிவு தெரியும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

சாத்தியக்கூறு - 2
புதனன்று நடைபெறும் போட்டியில் இலங்கையை பங்களாதேஷ் வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளாகும். இந்நிலையில் பங்களாதெஷ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி . இந்தியா இலங்கை இரு அணிகளும்
மோதும் போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும்.

சாத்தியக்கூறு - 3
இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டி வெற்றி தோல்வியின்றி முடியும் பட்சத்தில் இரு அணிகளும் ஒரு புள்ளி பெற்று மொத்தம் மூன்று புள்ளிகளாகும்.இந்நிலையில் இந்தியா இலங்கை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

சாத்தியக்கூறு - 4
இலங்கை பங்களாதேஷையும் இந்தியாவையும் வெல்லும் பட்சத்தில், பங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்றால், மீண்டும் நெட் ரன்ரேட் மூலம் இந்தியா அல்லது பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Saturday, March 17, 2007

கவுத்திட்டீங்களே மக்கா..

என்னாத்த சொல்வேனுங்கோ, கேவலமா தோத்துட்டோங்கோம்னு பாட வச்சிட்டாங்க நம்ம பசங்க. இன்னுமாடா இவனுங்களை நம்புது இந்த ஊருனு நீக்க கேக்கறது தெரியுது. இதை விட கேவலமா தோக்க முடியாது தான். ஆனாலும் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை ஒட்டிகிட்டு இருக்குது.

இன்னைக்கு தோத்ததுக்கு முக்கியமான காரணங்கள்னு பார்த்தா முதலாவது, டாஸை ஜெயிச்சு பேட்டிங் எடுத்தது. எந்த காரணத்துக்காக திராவிட் அந்த முடிவை எடுத்தாருன்னு தெரியலை. ஒருவேளை பங்களாதேஷை underestimate பண்ணியிருக்கலாம். சின்ன பசங்க தான, முதல்ல ஆடி நேத்து தென்னாப்பிரிக்கா கலக்கின மாதிரி நாமளும் கலக்கிடலாம்னு நினைச்சாரோ என்னவோ. எந்த பிட்ச்சா இருந்தாலும் முதல்ல கண்டிப்பா ஸ்விங்க் இருக்கும். அதுலயும் மேற்கிந்தியத்தீவுகள் பிட்சுகள்ல கேக்கவே வேணாம். இதுவரைக்கும் நடந்த எல்லா மேட்சுலயும், முதல்ல ஆடின அணிகள் எல்லாரும் தடுமாறி தான் மேலே வந்தாங்க. அப்படி இருக்கறப்ப திராவிட் கொஞ்சம் சுதாரிச்சு பவுலிங் பண்ணியிருக்கலாம். இந்தியாவில இருக்க பிட்சுகள் வேற, அங்க நிலைமை வேற. டாஸ்ல ஜெயிச்ச அயர்லாந்து பாகிஸ்தானை பேட் பண்ண சொல்லி இப்ப் கிட்டத்தட்ட(80%) சூப்பர்8 வரைக்கும் போயிருக்கு.நேத்து 40 ஓவர்ல 353 ரன் அடிச்ச தென்னாப்பிரிக்கா கூட 5 ஓவர்ல 4/1 என்ற நிலைமைல தான் இருந்தாங்க. இது முதல் காரணம்.

அடுத்தது ஷேவாக். எல்லாரும் தான் சொதப்பினாங்க, ஏன் ஷேவாக்கை மட்டும் குறை சொல்லனும்னு கேட்டா அதுக்கான பதில் ... அவரோட ஃபுட்வொர்க், Body Language எதுவுமே கான்ஃபிடண்டா இல்லை. அப்ப்டி இருக்கப்ப நிச்சயமா அவரி எடுத்து ஒரு விக்கெட்டை வேஸ்ட் பண்ணியிருக்ககூடாது. அவர் இன்னைக்கு அவுட்டானத பார்த்த சுத்தமா ஃபார்ம்ல இல்லங்கறது தெரியுது. Rediffல போட்டிருந்த மாதிரி 'International Arena is no place to try and get back your form'. கங்கூலி மாதிரி கொஞ்ச நாளைக்கு லோக்கல் போட்டில ஆடுங்க, நல்ல நிலமைக்கு வாங்க, இந்திய அணியின் கதவுகள் திறந்தே இருக்கும் உங்களுக்கு. நம்ம ஆளுங்க ஒரு விக்கெட் போனா உடனே டிஃபென்ஸிவா ஆட ஆரம்பிச்சுடுவாங்க. அப்படி இருக்கறப்ப ஷேவாக் மாத்ரி ஒருத்தரை முதல்ல இறக்கறது மகா தப்பு.

அடுத்தது 2 விக்கெட்டோ மூனு விக்கெட்டோ போயிடுச்சுன்ன அடுத்த விக்கெட்டை இழக்காம ஆடவேண்டியது முக்கியம் தான். அதுக்காக ரன்னே எடுக்காம விக்கெட்டை மட்டும் காப்பாத்திக்கறது எந்த பயனும் தராது. இன்னைக்கு அது தான் நடந்தது. நிறைய விக்கெட் போயிடுச்சேன்னு ஒரேயடியா டொக்கு போட ஆரம்பிச்சுட்டாங்க. பந்து நல்லா ஸ்விங் ஆனுது, அடிக்கறது கஷ்டம் எல்லாம் சரிதான்னாலும், அடிக்க வேண்டிய சில பந்துகளையும் அடிக்காம வேஸ்ட் பண்ணாங்க. இதே தப்பை தான் மேற்கிந்தியத்தீவுகள் கிட்ட பாகிஸ்தான் பண்ணி தோத்தாங்க. நாமளும் அதையே பண்ணோம். சுழற்பந்து வீச்ச்சை நல்லா ஆடற சச்சின், கங்கூலி, திராவி கூட இன்னைக்கு தினறுனாங்க. கங்கூலி 66 ரன் அடிச்சாலும், எனக்கென்னவோ யுவராஜ் மட்டும் தான் கொஞ்சம் நம்பிக்கயோட ஆடன மாதிரி இருந்தது.

அடுத்தது எந்த ஒரு நேரத்துலயும் அட்டாக்கிங் கேம் ஆடாம டிஃபன்ஸிவ ஆடனது. பங்களாதேஷோட இக்பால் ஆடனது ஒரு உதாரணம். எல்லாரும் அப்படி அடிச்சு ஆடனும்னு சொல்லலை. ஆனா ஒரு பக்கத்துல ஒருததர் நிதானமாவும், இன்னொரு முனைல இன்னொருத்தர் கொஞ்சமாவது ரன்னடிக்கவும் முயற்சி பண்ணியிருக்கனும். கொட்ட கொட்ட குணியற மாதிரி, பயந்து பயந்து ஆட, அவங்களும் உற்சாகமா பந்து வீச ஆரம்பிச்சுட்டங்க. ஒரு ரெண்டு மூனு ஓவர் ரிஸ்க் எடுத்து அடிச்சிருந்தா, பவுலர் வித்தியாசமா முயற்சி பண்றேன்னு எதாவது தப்பு பண்ண ஆரம்பிச்சிருப்பாரு. அந்த சந்தர்ப்பத்தை உருவாக்கவேயில்லை. Its a mind gameனு சொல்ற மாதிரி.

அதே மாதிரி இன்னொன்னு, டீம் மேல இருக்கற Pressure. போட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி முன்னாள் பங்களாதெஷ் வீரர் சொன்னது 'Expectations on India are very big. It will put some pressure on them. whereas there is no such expectation on Bangladesh.They can play freely. Even if they loose this match, they really don't loose anything'. இது முற்றிலும் உண்மை. கோடிக்கணக்கான் ரசிகர்களோட எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய நிலைமைல இருக்கறதால Pressure அதிகம். அதுவுமில்லாம, தோத்தா வீட்டில கல்லடிக்கறதும், ஜெயிச்சா மறுநாளே மலை பேடறதும் இங்கே சகஜம். இதெல்லாம் இன்னைக்கு மோசமா தோத்ததுக்கு காரணங்கள்னு நினைக்கிறேன்.

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். நடப்பவை நல்லதாக நடக்கட்டும். இனி அடுத்து என்ன? இந்தியா அடுத்த சுற்றுக்கு போகுமா? நிச்சயமா போகும்னு சொல்ல முடியாது ஆனா போகறதுக்கு வாய்ப்பிருக்கு. அடுத்து பெர்முடவோட ஜெயிச்சா இந்தியாவுக்கு 2 புள்ளிகள் கிடைக்கும். புதன்கிழமை நடக்கற மேட்சுலயும் பங்களதேஷ் இலங்கைய தோற்கடிச்சா, வெள்ளிக்கிழமை நடக்கப்போற இந்தியா-இலங்கை போட்டி டிசைடரா ஆயிடும். அதுல ஜெயிக்கற அணி சூப்பர்8க்கு போகும். இலங்கை பங்களாதேஷை தோற்கடிச்சு, இந்தியா இலங்கைய தோற்கடிச்சு, பங்களாதேஷ் பெர்முடாவை தோற்கடிச்சா மூனு டீமும் 4 பாயிண்டோட சமமா இருக்கும். அப்ப நெட் ரன்ரேட்படி அடுத்த சுற்றுக்கு போற அணிகள் தேர்ந்தெடுக்கப்படும். ஆக எப்படியும் இந்தியா அடுத்த ரெண்டு போட்டிகளையும் ஜெயிக்கனும், அதுவும் நல்ல முறையில ஜெயிக்கனும். அதாவது முதல்ல ஆடினா 60,70 ரன் வித்தியாசத்தில ஜெயிக்கனும், இரண்டாவதா ஆடி சேஸ் பண்ணா 35,40 ஓவர்ல அடிச்சு ஜெயிக்கனும். இன்னைக்கு பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலைமை அடுத்த வெள்ளிகிழமை நமக்கு வராம இருக்கனும்னா எல்லாத்தையும் மறந்துட்டு, மிகச் சிறப்பாக ஆடுனால் மட்டுமே முடியும்.

ஒருவேளை இந்தியா அடுத்தடுத்த சுற்றுக்கு போய் கோப்பையவே ஜெயிச்சாலும், இந்த தோல்வியோட தழும்பு ரொம்ப நாளைக்கு எல்லாரோட மன்சுலயும் இருக்கும்.

It's not the end of road INDIA, Come On. YOU CAN STILL DO IT ! !

Friday, March 16, 2007

நாளை இந்தியாவின் முதல் போட்டி


கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோட எதிர்பார்த்துகிட்டு இருக்கிற இந்தியாவோட முதல் உலகக்கோப்பை போட்டி நாளைக்கு நடக்குது. இந்தியாவும் பங்களாதேஷும் ஆடுற இந்தப் போட்டி Port of Spain-ல் உள்ள Queen's Park Oval மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த மைதானம் பற்றிய தகவல்கள் இங்கே.

பங்களாதேஷ் கொஞ்சம் பலவீனமான டீம்னாலும் ஒரேயடியா ஒதுக்கிடவும் முடியாது. பயிற்சி போட்டில நியூசிலாந்தை தோற்கடிச்சு எல்லாரையும் ஆச்சரியப்படுத்தினாங்க. அதனால இந்தியா கவனமாகவே விளையாடனும். பங்களாதேஷ்லயும் திறமையான் வீரர்கள் இருக்காங்க. இந்தியாவோட பேட்டிங் தான் பெரிய பலம். இந்தியா முதல்ல விளையாடி ஒரு 300 ரன் எடுத்தா சந்தேகமே இல்லாம வின் பண்ணிடலாம்.

இந்தியாவும் பங்களாதேஷும் இதுவரைக்கும் 14 போட்டில விளையாடி இருக்காங்க. இந்தியா 13 தடவையும் பங்களாதேஷ் 1 தடவையும் ஜெயிச்சிருக்காங்க. உலகக்கோப்பை போட்டிகள்ல மோதறது இது தான் முதல் முறை.






உலகக்கோப்பை போட்டிகள்ல கலக்கும் சச்சின் இந்த உலகக்கோப்பையிலும் நிச்சயமா கலக்குவார். கங்கூலியும் போராடி அணிக்குள்ள வந்திருக்கறதால தன்னோட இடத்தை தக்க வச்சுக்க நல்லா ஆடுவாருன்னு தோனுது. அதே மாதிரி திராவிட், யுவராஜ், டோணி, உத்தப்பா, கார்த்திக்னு நல்ல தரமான பேட்டிங் இருக்குது.


பேட்டிங்ல இப்போதைக்கு இருக்க ஒரே பிரச்னை ஷேவாக். சமீபகாலமா மோசமா விளையாடிட்டு இருந்தாலும், திராவிட் இவர் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காரு. ஷேவாக்குக்கு இன்னும் இரண்டு வாய்ப்பிருக்கு ஃபார்முக்கு வர. பங்களாதேஷோடயும் பெர்முடாவோடயும் அவரை ஆடவிட்டு முயற்சி பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். என்னோட கருத்து, பெர்முடா கிட்ட மட்டும் ட்ரை பண்ணலாம். நாளைக்கு போட்டில கங்கூலியயும் உத்தப்பாவையும் ஓபனிங் இறக்கி, கார்த்திக்க ஒன்டவுனா இறக்கலாம்.

அதேமாதிரி பவுலிங்ல ரெண்டு ஸ்பின்னர்களை நாளைக்கு முயற்சி பண்ண வாய்ப்பிருக்கு. இந்த மைதானம் சுழற்பந்துக்கு சாதகமா இருக்கும். ஆனா ரெண்டு ஸ்பின்னர்ஸ் எடுத்தா வேகப்பந்து வீச்சாளர்கள்ல யாரையாவது கழட்டி விடனும். அதனால் கும்ப்ளேயவும் அடுத்த மேட்ச்ல ட்ரை பண்ணலாம். என்னோட 11 பேர்

கங்கூலி
உத்தப்ப்பா
கார்த்திக்
திராவிட்
சச்சின்
யுவராஜ் சிங்
டோணி
பதான்
ஹர்பஜன்
முனாஃப் படேல்
ஜாகிர் கான்

உங்க 11 பேரையும் சொல்லுங்க. யார் சொல்ற 11 பேர் நாளைக்கு ஆடறாங்கன்னு பார்க்கலாம் :) .

Thursday, March 15, 2007

நகம் கடிக்க வைத்த அயர்லாந்து ! !


காலையில தான் "கடுப்படிக்கும் முதல் சுற்று போட்டிகள்"னு ஒரு பதிவு போட்டேன். அதை படிச்சு தொலைச்சிட்டாங்களோ என்னமோ, ஜிம்பாப்வேக்கும் எனக்கும் சேர்த்து மூக்கறுத்துட்டாங்க அயர்லாந்து.

இந்த உலகக்கோப்பையின் முதல் பரபரப்பான ஆட்டத்தை குடுத்து எல்லாரையும் ஆச்சரியப்படுத்தி இருக்காங்க அயர்லாந்து அணியினர். இரண்டு அணியுமே "Underdogs" என்பதால் இந்த போட்டியின் முடிவு பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தாதுன்னாலும், எங்களாலயும் சுவாரசியமா ஆடமுடியும்னு நிரூபிச்சதுக்காக ரெண்டு அணிகளுக்கும் ஒரு ஷொட்டு! எதிர்பார்த்ததையும் விட மகாமோசமா விளையாடி தோத்ததுக்காக பெர்முடாவுக்கு ஒரு கொட்டு. (கொட்டு ஷொட்டு : நன்றி சாத்தான்குளத்தான்)





டாஸில் ஜெயித்த ஜிம்பாப்வே அயர்லாந்தை பேட் செய்ய சொல்லிட்டாங்க. முதல் ஓவரிலேயே துவக்க ஆட்டக்காரரான போர்டர்ஃபீல்ட் ஆட்டமிழந்து திரும்பினாலும் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ஜெர்மி ப்ரே நிலைத்து ஆடினார். மறுமுனையில் சீராக விக்கெட்டுகள் விழுந்துகிட்டே இருந்துது. 89/5 என்ற நிலையில் இருந்தது அயர்லாந்து. 150 ரன்னுக்கு சுருண்டுடுவாங்க, இதுவும் சப்பை மேட்சா தான் இருக்கப்போகுதுன்னு நினைச்சேன். ஆனா ப்ரேயும் ஒயிட்டும் 6வது விக்கெட்டுக்கு 56 ரன் அடிச்சு கொஞ்சம் நல்ல நிலமைக்கு கொண்டு வந்தாங்க. அதுக்கப்புறம் வந்தவங்க உதவியோட ப்ரே ஸ்கோரை 50 ஓவருக்கு 221 ரன்னுக்கு கொண்டு வந்தாரு. கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காம 115 ரன் வேற அடிச்சாரு. ஓபனிங்க் இறங்கின பேட்ஸ்மென் கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காம் இருக்குறது உலகக்கோப்பைல இது 12வது முறை. அதோட ஒரு தொடக்க ஆட்டக்காரர் டக் அவுட்டாகி, இன்னொருத்தர் சதமடிக்கறது உலகக்கோப்பைல 2வது முறை. முன்னால 1992ல நியூசிலாந்துக்கு எதிரா அமீர் ஷோகைல் டக்கும், ரமீஸ் ராஜா சதமும் அடிச்சாங்க! ஜிம்பாப்வேல மூனு பந்து வீச்சாளர்கள் தலா 2 விக்கெட் எடுத்தாங்க (அவங்க பேரெல்லாம் தமிழ்ல எழுதினா விரல் சுளுக்கிடும் போலிருக்கு :) )






222 என்ற வெற்றி இலக்கோட ஆட வந்தாங்க ஜிம்பாப்வே. ஒருகட்டத்துல சுலபமா ஜெயிக்கற மாதிரி தான் இருந்தாங்க. தொடக்க ஆட்டக்காரரான் சிபாண்டவும், Matsikenyeri ( சத்தியமா எப்படி இவர் பேரை சொல்றதுன்னு தெரியலைங்க ) இருந்த வரைக்கும் ஈஸியா ஜெயிக்க போற மாதிரி தான் இருந்துது. 28 ஓவர்ல 128/3ங்கற வலுவான நிலையில் இருந்தாங்க. 22 ஓவர்ல 94 ரன் அடிச்ச போதும். கையில ஏழு விக்கெட் வேற. அப்போ சிபாண்டா அவுட்டாயி போனாரு. டெய்லரும்,Matsikenyeri யும் ஜோடி சேர்ந்து ஆறாவது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்து 203 ரன்னுக்கு கொண்டு வந்தாங்க. 6 ஓவர்ல 19 ரன், 4 விக்கெட்னு இருந்தது. யாருமே அந்த நிலைமைல ஜிம்பாப்வே ஜெயிச்சுடும்னு தான் நினைச்சிருப்பாங்க. பவுலர் கையில பட்டு பந்து ஸ்டம்ப்ல பட்டதுல துரதிர்ஷ்டவசமா டெய்லர் அவுட்டானாரு. 212 ரன் இருக்கும்பொழுது 7வது விக்கெட்டும் விழுந்தது. இனி ball-by-ball பார்க்கலாமா.





2 ஓவர்கள் 9 ரன்கள் 3 விக்கெட். 49வது ஓவரை போட்டவரு ப்ரையன்.
48.1 ஃபுல்டாஸா வந்த பந்தை அடிச்சு கவர்ச்ல கேட்ச் குடுத்து அவுட்டானாரு உட்செயா.
11 பந்துகள் 9 ரன்கள் 2 விக்கெட்
48.2 மெதுவா வந்த பந்தை மிட்-ஆனுக்கு அடிச்சாரு Mpofu.ரன் எதுவுமில்லை.
10 பந்துகள் 9 ரன்கள் 2 விக்கெட்
48.3 பவுலர்கிட்டயே திருப்பி அடிச்சாரு Mpofu.ரன் எதுவுமில்லை.
9 பந்துகள் 9 ரன்கள் 2 விக்கெட்
48.4 இன்சைட் எட்ஜ் வாங்கி கீப்பர் கிட்ட போன பந்து. ரன் எதுவுமில்லை
8 பந்துகள் 9 ரன்கள் 2 விக்கெட்
48.5 ஸ்டெரெயிட்ட திருப்பி அடிச்ச பந்தை திறமையா வலது காலால த்டுத்தாரு ப்ரையன். ரன் எதுவுமில்லை.
7 பந்துகள் 9 ரன்கள் 2 விக்கெட்
48.6 மிட்-ஆன் பகுதில வேகமா அடிச்சிட்டு ரன் எடுக்க முயற்சி பண்ணி ரன் அவுட் ஆனாரு Mpofu
6 பந்துகள் 9 ரன்கள் 1 விக்கெட்





அடுத்து கடைசி ஓவரை போட்டவரு ஒயிட்.
49.1 ஃபுல்டாஸா வந்த பந்தை கவர் பகுதில அடிச்சு 2 ரன் எடுத்தாரு Matsikenyeri.
5 பந்துகள் 7 ரன்கள் 1 விக்கெட்
49.2 அளவு குறைந்து வந்த பந்தை ஸ்கொயர் கட் பண்ணி 2 ரன்கள் எடுத்தாரு Matsikenyeri
4 பந்துகள் 5 ரன்கள் 1 விக்கெட்
49.3 ஃபுல்டாஸா வந்த பந்தை மிட்விக்கெட் பகுதிக்கு அடிச்சு 1 ரன் எடுத்தாரு Matsikenyeri. கேட்ச் ஆகியிருக்க வேண்டியது.
3 பந்துகள் 4 ரன்கள் 1 விக்கெட்
49.4 ரெயின்ஸ்ஃபோர்ட் கவருக்கு ட்ரைவ் பண்ணி 1 ரன் எடுத்தாரு.
2 பந்துகள் 3 ரன்கள் 1 விக்கெட்.
49.5 அளவு குறைந்து வைடா போன பந்தை கட் பண்ணி 2 ரன்கள் எடுத்தாரு Matsikenyeri
1 பந்து 1 ரன் 1 விக்கெட்
49.6 ட்ரைவ் பண்ணி பந்தை மிஸ் பண்ணாரு Matsikenyeri.பந்து கீப்பர் கிட்ட போனதால ரன் எதுவும் எடுக்க முடியாம ரன் அவுட் ஆயிட்டாரு ரெயின்ஸ்ஃபோர்ட்.




ரெண்டு அணியும் 221 ரன்கள் எடுத்ததால் மேட்ச் டை ஆனாதா அறிவிக்கப்பட்டது. ஜிம்பாப்வேக்கு இது பெரிய ஏமாற்றம்னாலும் அயர்லாந்துக்கு வெற்றி தான். So near yet so farனு அடிக்கடி சொல்ற மாதிரி ஆயிடுச்சு இன்னைக்கு ஜிம்பாப்வேயோட நிலைமை. உலகக்கோப்பைல டை ஆகற மூனாவது மேட்ச் இது. 1999ல ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்க அரையிறுதிப் போட்டி டை ஆகி ஆஸ்திரேலியா ஃபைனல்ஸுக்கு போனாங்க. அலன் டொனால்ட் ரன் அவுட்டான அந்த காட்சி மறக்க முடியாதது. தென்னாப்பிரிக்கா ஜெயிக்க வேண்டிய கோப்பை அந்த ஒரு ரன்னால பறிபோனது. 2003ல இலங்கை-தென்னாப்பிரிக்கா போட்டி டை ஆகி தென்னாப்பிரிக்கா இரண்டாவது சுற்றுக்கு போக முடியாம் போச்சு. முதல் போட்டில டொனால்ட் வில்லன்னா இரண்டாவதுல டக்வொர்த்-லெவிஸ் விதிகளும், சரியான கம்யூனிகேஷன் இல்லாததும் வில்லனா அமைஞ்சது.





பயிற்சி போட்டில தென்னாப்பிரிக்காவுக்கு தண்ணி காட்டினதையும் இன்னைக்கு ஆடினதையும் பார்க்கும் பொழுது தோணறது..

WELL DONE IRELAND ! ! !

கடுப்படிக்கும் முதல் சுற்று போட்டிகள் :(


நெஜமாவே இந்த முதல் சுற்று போட்டிகள் தேவை தானானு தோனுது. போறவர அணிகளையெல்லாம் புடிச்சு போட்டு முதல் சுற்றை ஒரு சுவாரசியமே இல்லாம பண்ணிட்டாங்களோனு தோனுது. எப்படியும் (99.99%) எட்டு பெரிய அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாக்கிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து அடுத்த சுற்றுக்கு போகப்போகுது. எதாவது ஒன்னு ரெண்டு போட்டிகள்ல சிறு அணிகள் ஜெயிச்சாலும், அடுத்த சுற்றுக்கு போறது கஷ்டம் தான்.




எந்த முறையும் இல்லாம் இந்த முறை ஐசிசி மினோஸ்னு சொல்லப்படும் 8 பலம் குறந்த அணிகளை சேர்த்திருக்கு. பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதியை பெற்றவர்கள் (தாற்காலிகமாக ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிகளில் விளயாடுவதை நிறுத்தி வைத்துள்ளது) . அதுவுமில்லாம சிலமுறை பெரிய அணிகளையும் தோற்கடிச்சிருக்காங்க. கென்யாவும் அதே மாதிரி சில ஆச்சரியங்களை நிகழ்த்தி இருக்காங்க. போன முறை நடந்த சில குளறுபடிகளால அரை-இறுதி வரைக்கும் வந்தாங்க. அவங்களை கணக்கில சேர்க்காம பார்த்தா மீதி இருக்க ஐந்து அணிகளான கனடா, நெதர்லாந்து, அயர்லாந்து, பெர்முடா, ஸ்காட்லாந்து ஆகியவை சும்மா ஒப்புக்கு சப்பாணியா சேர்க்கப்பட்ட மாதிரியே தெரியுது.

பங்களாதேஷும், கென்யாவும் மட்டும் தான் பெரிய அணி எதையாவது தோற்கடிச்சு ஆச்சரியத்தை தரக்கூடிய மாதிரி இருக்காங்க. மத்த அணி எதுவும் அவ்வளவு திறமை வாய்ந்ததா தெரியல. ஃப்ளவர் பிரதர்ஸ், கேம்ப்பெல், ஸ்ட்ரீக், ப்ராண்டிஸ், நீல் ஜான்சன்னு ஒருகாலத்துல நல்ல நிலைமைல இருந்த ஜிம்பாப்வே அணியும் இப்போ உள்நாட்டு பிரச்சனைகள்,சம்பளப் பிரச்சனை போன்ற காரணங்களால பலவீனமா இருக்கு. இவங்களால பெரிய அணி எதையும் தோற்கடிக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.

இவ்வளவு பலம் குறைந்த அணிகள சேர்த்துக்கு காரணமா ஐசிசி சொல்றது அந்த நாட்டுல கிரிக்கெட்ட வளர்க்கனும், அவங்களுக்கும் பெரிய நாடுகளோட விளையாடற அனுபவம் கிடைக்கனும். இது நல்ல காரணம்னாலும், அதுக்காக இவ்வளவு அணிகளுக்கு வாய்ப்புதரனுமாங்கறது தான் கேள்வி. தற்பொழுது ODI Status இல்லாத நாடுகளுக்கு நடத்தப்படும் ஐசிசி ட்ராஃபில முதல் அஞ்சு இடத்தை பிடிக்கற அணிகளுக்கு உலகக்கோப்பைல ஆடுற வாய்ப்பும் அடுத்த ஐசிசி ட்ராஃபி வரைக்கும் ODI Status-ம் தரப்படுது. அதுக்கு பதிலா முதல் இரண்டு இடத்தை பிடிக்கற அணிகளுக்கு மட்டும் உலககோப்பைல வாய்ப்பு வழங்கலாம். முதல் ஐந்து அணிகளுக்கு ODI Status மட்டும் கொடுக்கலாம். அதோட டெஸ்ட் போட்டி தகுதி இருக்கற பத்து அணிகளும்,கென்யாவும் வருஷத்துக்கு ஒருதடவையாவது இந்த ஐந்து அணிகள்ல எதாவது ஒரு அணியோட ஒருநாள் போட்டித்தொடர் கண்டிப்பா விளையாடனும்னு சொல்லலாம். இதனால் அந்த அணிகளுக்கு பெரிய அணிகளோட விளையாடற அனுபவமும் கிடைக்கும், அவங்க நாட்டுல கிரிக்கெட் பிரபலமும் அடையும்.

இதோட இன்னொரு சிறப்பு என்னன்னா உலகக்கோப்பை மாதிரி ஒரு பெரிய போட்டில தேவையில்லாத கூட்டம் குறையும். இந்த மாதிரி அணிகள் ஆடறதால் 300 ரன் அடிக்கறது சாதாரனமா ஆயிடுச்சு. இதுவரைக்கும் உலகக்கோப்பைல 30 முறை 300 ரன்களுக்கு மேல அடிக்கப்பட்டிருக்கு. அதுல 21 முறை இது மாதிரி சிறு அணிகளுக்கு எதிரா அடிச்சதுதான்.இது நேத்து ஆஸ்திரேலியா அடிச்ச 334யும் இன்று இலங்கை அடிச்ச 321யும் சேர்க்காம. இதனால போட்டிகளுக்கு வர கூட்டமும் குறைஞ்சிடுச்சு. ஆளே இல்லாத ஸ்டேடியத்துல போட்டி நடத்தி என்னத்தையா கிரிக்கெட்ட வளர்க்க போறீங்க??

1975ல முதல் உலகக்கோப்பைல பார்த்திங்கன்னா இலங்கையும், கிழக்கு ஆப்பிரிகாவும் மட்டுமே இந்த மாதிரி சேர்க்கப்பட்டது. 1979ல இலங்கயும் கனடாவும். 1983ன் பொழுது இலங்கைக்கு 1981லயே டெஸ்ட் ஸ்டேட்டஸ் கிடைச்சதால் ஜிம்பாப்வே மட்டும் கூடுதலா சேர்க்கப்பட்டது. இந்த மூனு உலகக்கோப்பைலயும் 8 நாடுகள் தான் ஆடுனாங்க. 1987 உலகக்கோப்பைலயும் இதே நாடுகள் தான். 1992 உலகக்கோப்பைல தென்னாப்பிரிக்கா முதல்முறையா கலந்துகிட்டாங்க. ஜிம்பாப்வே டெஸ்ட் ஸ்டேட்டஸ் கிடைச்சதால் கலந்துகிட்டாங்க. முதல் தடவையா 8க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்ட உலகக்கோப்பை அதுதான்.

1996ல இருந்து தான் கூட்டம் சேர்க்க ஆரம்பிச்சாங்க. அப்போ கென்யா, நெதர்லாந்து மற்றும் UAE ஆகிய அணிகளோட சேர்த்து 12 ஆச்சு. 1999லயும் 12 அணிகள், 2003ல 14 அணிகள். அப்போ நிறைய அணிகள் இருந்தாலும் முதல் சுற்றுல இரண்டு குழுக்களாகவே பிரிக்கப்பட்டிருந்தது. அதனால் ஒன்னு ரெண்டு போட்டிகள் சொத்தையா இருந்தாலும், மத்த போட்டிகள் சுவாரசியமா இருந்தது. இந்த தடவை 16 அணிகள சேர்த்து அதையும் நாலு குழுவா பிரிச்சிட்டாங்க. ஒவ்வொரு குழுவுலயும் ரெண்டு சொத்தை அணிகள். அதுலயும் இந்தியாவுக்கு லக் இல்லை. கொஞ்சம் பலம் வாய்ந்த அணியான பங்களாதேஷை நம்ம பக்கம் தள்ளி விட்டுட்டாங்க. 17ம் தேதி வரைக்கும் நெருப்பை வயித்துல கட்டிகிட்டு இருக்கற மாதிரி ஆயிடுச்சு :) . நம்ம குழுவான் 'B'யை தான் இந்த முறை 'Group of Death'னு சொல்றாங்க.

மத்த குழுவுல எல்லாம் கண்டிப்பா ரெண்டு பெரிய அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது மாதிரி தான் இருக்கு. ஐசிசியே அடுத்த சுற்றோட அட்டவணைல A1,A2,B1,B2னு போடாம அணிகளோட பேரை போட்டிருக்காங்கன்னா பார்த்துக்கோங்க! இதுல அடுத்த காமெடி புள்ளிகள் அடிப்படைல முதல் சுற்றுல 1,2 முடிவு பண்ணாம, தரவரிசை அடிப்படைல முடிவு பண்றது. அதனால் இந்தியா எல்லா போட்டிலயும் ஜெயிச்சா கூட B2 தான். இது என்ன லாஜிக்னு தெரியலை? அப்படியே தரவரிசை படி பார்த்தாகூட போனா உலகக்கோப்பைல இருந்து இந்த உலகக்கோப்பை வரை பார்க்கலாம். அப்படி இல்லாம ஏப்ரல் 2005ல இருந்த தரவரிசைய கணக்கில எடுத்திருக்காங்க. அப்போ தான் உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதனால அந்த தேதில இருந்த தரவரிசையை கணக்குல எடுத்துகறாங்களாம்? ஐசிசிக்கு யாராவது எடுத்து சொல்லுங்கப்பா. போனதடவை ஃபைனல்ஸ் வரைக்கும் வந்த இந்தியா அந்த தரவரிசப்படி எட்டாவது இடம் :( .

இவ்வளவு அணிகள சேர்த்ததால உலகக்கோப்பையோட சுவாரசியமே குறஞ்சிடுச்சுன்னு நெறைய முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் சொல்லியிருக்காங்க. அதே தான் நம்ம கருத்தும். அவங்களுக்கு வாய்ப்பும் அனுபவமும் தேவைதான். அதுக்கு உலகக்கோப்பையை பலிகடா ஆக்கனுமா? யோசிக்குமா ஐசிசி 2011க்குள் ?

குறிப்பு : இந்த பதிவை எழுத ஆரம்பிச்சப்ப இலங்கைக்கு எதிரா பெர்முடா பேட் செய்ய ஆரம்பிச்சாங்க. இப்போ ஸ்கோர் 17 ஓவர்ல 44/7. எதுக்கு இலங்கை விழுந்து விழுந்து 321 ரன் அடிச்சாங்கன்னு தெரியலை. 100 ரன் அடிச்சிட்டு டிக்ளேர் பண்ணியிருக்கலாம்!!!


சிரமம் பார்க்காம நீங்களும் உங்க கருத்தை சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்!