Thursday, March 29, 2007

சற்றுமுன் : இந்திய அணியின் புதிய பயிற்சியாளார் அறிவிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளர் சேப்பலுக்கு பதில் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக சரத் பவார் தெரிவித்துள்ளார். இவர் முந்தைய பயிற்சியாளரை விட மிகவும் இளமை(?)யானவர் மற்றும் திறமை(?)யானவர் என அவர் தெரிவித்தார். இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.சற்றுமுன் நிருபர் சிவபாலனுக்கு இவர் அளித்த பே(ட்)டி..

சிவபாலன்: "வாழ்த்துக்கள் திரு மந்திரா பேடி அவர்களே. "

ம. பேடி : "நன்றி. நான் ரொம்பவும் சந்தோஷமா இருக்கேன். இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கும்னு கனவுலயும் நினைக்கலை"

சிவபாலன் : "இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கிங்க ? "


ம. பேடி : " சரியா உக்காரலாம்னு இருக்கேன். இந்த சேர்ல ஒரு கால் ஆடிகிட்டே இருக்கு. கொஞ்சம் பேலன்ஸ் பண்ணி உக்காந்துக்கறேன் வெயிட் பண்ணுங்க "


சிவபாலன் : "மேடம் நான் கேட்டது இந்திய அணி நல்லா விளையாட என்ன பண்ணலாம்னு இருக்கீங்கன்னு? "

ம. பேடி : "ஓ அதுவா, அதை முதல்ல நான் கிரிக்கெட்னா என்னனு கத்துகிட்டதுக்கு அப்புறமா முடிவு பண்ணணும்"

சிவபாலன் : "என்னது கிரிக்கெட் கத்துக்கனுமா? அப்புறம் எப்படி உங்களை பயிற்சியாளர் ஆக்கனாங்க? "


ம. பேடி : "இதுல என்ன ஆச்சரியம்? கிரிக்கெட்டே தெரியாதவங்க நம்ம டீம்ல இருக்கும்பொழுது, நான் பயிற்சியாளர் ஆகக்கூடாதா?. நம்ம ஊருல கோச் ஆகறதுக்கோ, டீம்ல விளையாடறதுக்கோ கிரிக்கெட் தெரியனும்னெல்லாம் அவசியமில்லை. வேற வழி நிறைய இருக்கு"

சிவபாலன் : "உங்களுக்கு முன்னால கோச்சா இருந்த சேப்பலை பத்தி என்ன நினைக்கிறிங்க? "


ம. பேடி : "அவர் எங்கே கோச் பண்ணாரு. சும்மா சும்மா கோச்சுகிட்டு தான் போனாரு. ஏடாகூடமா மெயில், எஸ்.எம்.எஸ் அனுப்பவே அவருக்கு நேரம் சரியா இருக்கு"


சிவபாலன் : "வெளிநாடுகள்ள ஆடுறப்ப நம்ம வீரர்கள் சொதப்புறதை பத்தி? "


ம. பேடி : "அதுக்கு நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன்.எல்லா ப்ளேயர்ஸையும் வெளிநாடுகளுக்கு கூட்டிட்டு போய் புக் கிரிக்கெட் ஆடப்போறோம். அதுல நிறைய ரன் எடுத்தவுடனே எல்லாருக்கும் கான்ஃபிடன்ஸ் வந்துடும். அதுக்காக நிறைய புக்ஸ் ஆர்டர் பண்ணியிருக்கோம்."


சிவபாலன் : "நம்ம அணி மனதளவில ஸ்டாரங்கா இல்லன்னு சொல்றதை பத்தி..."


ம. பேடி : "உண்மைதான். நம்ம அணி மெண்டலி வீக் தான். அதுக்காக நிமஹன்ஸ்ல இருந்தும், கீழ்பாக்கத்துல இருந்தும் நாலு பேரை டீம்ல சேர்த்து மெண்டலி ஸ்ட்ராங்கா ஆக்கப்போறோம்" .


சிவபாலன் : "வேற எதாவது அதிரடி திட்டம்??"

ம. பேடி : "இருக்கே. மக்கள் கிரிக்கெட் பார்க்காம என்னையே டி.வில பார்க்கறாங்கன்னா அதுக்கு காரணம் க்ளாமர். அதனால இனிமே நம்ம டீமும் மேட்சுல ஆடும்போது சட்டையில்லாம சல்மான்கான் மாதிரி ஆடப்போறாங்க. அந்த க்ளாமர்ல எதிரணி தடுமாறும்போது நம்ம பசங்க அடிச்சு ஜெயிச்சுடுவாங்க :) " .


சிவபாலன் : "சட்டை போடலைன்னா ஸ்பான்சர்ஸ் லோகோ எல்லாம் எப்படி தெரியும்? " .


ம. பேடி : "எல்லா லோகோவையும் உடம்புல ப்ளூ குத்திடுவோம்" .

சிவபாலன் : "என்னது ப்ளு குத்துவீங்களா?"

ம. பேடி : "ஆமாம் நம்ம டீம் கலர் ப்ளூ தான. அதான் பச்சை குத்தறதுக்கு பதிலா ப்ளூ குத்துறோம்"

சிவபாலன் : "அடுத்த உலகக்கோப்பைலயாவது இந்தியா ரெண்டாவது சுற்றுக்கு போகுமா? "

ம. பேடி : "கண்டிப்பா போகும். நேத்து நைட் ஐசிசியோட தலைவர் மால்கம் ஸ்பீடோட டின்னர் சாப்பிட்டேன். அப்போ அடுத்த தடவை இந்தியாவையும், பெர்முடாவையும் மட்டும் ஒரு க்ரூப்ல போட்டு, அந்த க்ரூப்ல முதல் ரெண்டு இடத்தை பிடிக்கற அணிகள் அடுத்த சுற்றுக்கு போற மாதிரி பண்ணனும்னு கேட்டேன். அவரும் சரின்னு சொல்லிட்டாரு. அதனால் அடுத்த தடவை முதல் சுற்றுல இந்தியா பெர்முடா கிட்ட தோத்தாலும் அடுத்த சுற்றுக்கு போயிடும்" .

சிவபாலன் : "சோர்ந்து போயிருக்கற நம்ம வீரர்களுக்கு எதாவது ஊக்கத்திட்டம் வச்சிருக்கிங்களா?"

ம. பேடி : "ஆமாங்க, இனிமே அடிக்கிற ஒவ்வோரு 25 ரன்னுக்கும் இல்லைன்னா எடுக்கற ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஒரு கிஸ் தருவேன்னு சொல்லியிருக்கேன்"

சிவபாலன் : "இவ்வளவு நேரம் எங்களுக்காக செலவு பண்னதுக்கு ரொம்ப நன்றிங்க. ஆமா ரொம்ப நேரமா பக்கத்து ரூம்ல எதோ டி.வி சத்தமா கேடுகிட்டு இருக்கே? "

ம. பேடி : "ஆமா நம்ம சச்சின் தான் உக்காந்து இங்கிலீஷ் படம் பார்த்துகிட்டு இருக்காரு"

சிவபாலன் : "என்ன படம்?"

ம. பேடி : "GONE IN 60 SECONDS !"

44 comments:

சிவபாலன் said...

மணி

இது மாதிரி முக்கியமான பேட்டிக்கெல்லாம் என்னை அழைக்காமல் சென்றதற்கு மென்மையாக கண்டிக்கிறேன்..

பேட்டி சூப்பர்..

மயிலாடுதுறை சிவா said...

கலக்கல்...சூப்பர்...

மயிலாடுதுறை சிவா

மணிகண்டன் said...

//இது மாதிரி முக்கியமான பேட்டிக்கெல்லாம் என்னை அழைக்காமல் சென்றதற்கு மென்மையாக கண்டிக்கிறேன்..
//
வருத்தப்படாதீங்க சி.பா. நிருபர்னு இருந்த இடத்தில எல்லாம் உங்க பேரை போட்டுட்டேன். சந்தோஷம் தான்?

மணிகண்டன் said...

//கலக்கல்...சூப்பர்...
//

நன்றி ம.சிவா..

சிவபாலன் said...

கண்டனத்தை ஏற்று மதிப்பளித்த மணிகண்டனுக்கு ஒரு "ஓ"..

உ.தோ.பின் ரொம்பவே மாறிட்டீங்க..Ha Ha Ha..

தென்றல் said...

/அதனால இனிமே நம்ம டீமும் மேட்சுல ஆடும்போது சட்டையில்லாம சல்மான்கான் மாதிரி ஆடப்போறாங்க. /

அய்யோ... மணிகண்டன்..!
BCCI-க்கு அனுப்பிடாதீங்க... அப்புறம் பிரச்சனைதான்!

சந்தோஷ் aka Santhosh said...

மணி அடுத்த சிக்ஸர் கலக்கல்.
//அப்போ அடுத்த தடவை இந்தியாவையும், பெர்முடாவையும் மட்டும் ஒரு க்ரூப்ல போட்ட//
என்ன பெர்முடாவை இம்முட்டு கேவலமா நினைச்சிடிங்க. அடுத்த தடவை fixes போடும் பொழுது அந்த குரூப்புல இந்தியாவும்,இந்தியா blueவும் மட்டும் தான் இருக்கணும் செமி பைனல் வரைக்கும் இதை மெயின்டேயின் பண்ணா போதும் நாங்க எப்படியும் finals போயிடுவோம்.

சந்தோஷ் aka Santhosh said...

மக்களே பாத்துகோங்க இம்முட்டு அழகான கோச் வரபோறாங்க நீங்காளூம் டீமுல சேரணுமா இங்க வந்து அப்ளிகேசன் போடுங்க.

மு.கார்த்திகேயன் said...

மணி, உங்க நகைச்சுவை உணர்வை வெளிய கொண்டு வர்றதுக்காக தானோ இந்தியா தோத்துச்சு

மு.கார்த்திகேயன் said...

மணி, கடைசி பஞ்ச் கலக்கல் பஞ்ச்..

இராம் said...

//கண்டிப்பா போகும். நேத்து நைட் ஐசிசியோட தலைவர் மால்கம் ஸ்பீடோட டின்னர் சாப்பிட்டேன். அப்போ அடுத்த தடவை இந்தியாவையும், பெர்முடாவையும் மட்டும் ஒரு க்ரூப்ல போட்டு, அந்த க்ரூப்ல முதல் ரெண்டு இடத்தை பிடிக்கற அணிகள் அடுத்த சுற்றுக்கு போற மாதிரி பண்ணனும்னு கேட்டேன். அவரும் சரின்னு சொல்லிட்டாரு. அதனால் அடுத்த தடவை முதல் சுற்றுல இந்தியா பெர்முடா கிட்ட தோத்தாலும் அடுத்த சுற்றுக்கு போயிடும்" //

மணி,

கலக்கல் :))

அடுத்தமுறை இந்தியா அடுத்த சுற்றுக்கு போச்சுன்னா இதை நினைச்சி நினைச்சி சிரிக்க போறோம் எல்லாருமே!!!

:))

/"அதுக்கு நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன்.எல்லா ப்ளேயர்ஸையும் வெளிநாடுகளுக்கு கூட்டிட்டு போய் புக் கிரிக்கெட் ஆடப்போறோம். அதுல நிறைய ரன் எடுத்தவுடனே எல்லாருக்கும் கான்ஃபிடன்ஸ் வந்துடும். அதுக்காக நிறைய புக்ஸ் ஆர்டர் பண்ணியிருக்கோம்." /

இதை படிச்சதும் SV.சேகரோட நாடகம் ஒன்னு ஞாபத்துக்கு வருது, அதிலே அவரு MLA'வா நடிப்பார். அதிலே நிருபர் வந்து கேள்வி கேட்கிறப்போ "மெரினா பீச்'ஐ தஞ்சாவூர்க்கு மாத்தணும், பெரியகோவிலை இன்னொரு இடத்திலே மாத்துவோம்"ன்னு சக்க காமெடியா இருக்கும்:)

அது மாதிரி புக்ஸ் கிரிக்கெட் எல்லாம் ஆடியா இவனுக ஃபார்ம்'கெல்லாம் வரப்போறாய்ங்கே?????

தமாசு தமாசு... :)

மணிகண்டன் said...

//கண்டனத்தை ஏற்று மதிப்பளித்த மணிகண்டனுக்கு ஒரு "ஓ"..

உ.தோ.பின் ரொம்பவே மாறிட்டீங்க..Ha Ha Ha..

//

ஆமாம் சி.பா தோல்வி ஒரு மனுசனை எப்படியெல்லாம் மாத்துது பாருங்க :)

மணிகண்டன் said...

//அய்யோ... மணிகண்டன்..!
BCCI-க்கு அனுப்பிடாதீங்க... அப்புறம் பிரச்சனைதான்!
//

இதுல என்னங்க பிரச்னை? :) கற்பனை பண்ணி பாருங்க ஜாலியா இல்ல????

மணிகண்டன் said...

//இந்தியாவையும், பெர்முடாவையும் மட்டும் ஒரு க்ரூப்ல போட்ட//
என்ன பெர்முடாவை இம்முட்டு கேவலமா நினைச்சிடிங்க. அடுத்த தடவை fixes போடும் பொழுது அந்த குரூப்புல இந்தியாவும்,இந்தியா blueவும் மட்டும் தான் இருக்கணும் செமி பைனல் வரைக்கும் இதை மெயின்டேயின் பண்ணா போதும் நாங்க எப்படியும் finals போயிடுவோம்.
//

எல்லாரும் ஒரு முடிவாத்தான் இருக்கீங்க :)

Ram Ravishankar said...

கலக்கல் மணி!!!

Ideal coach should lead by example - சட்டை இல்லாம ஆடறது எப்படின்னு செஞ்சு காமிப்பாங்களா?

மணிகண்டன் said...

//மக்களே பாத்துகோங்க இம்முட்டு அழகான கோச் வரபோறாங்க நீங்காளூம் டீமுல சேரணுமா இங்க வந்து அப்ளிகேசன் போடுங்க.

//
நானும் அப்ளிகேஷன் போட்டிருக்கேன். நான் நல்லா பந்து பொறுக்கி போடுவேங்க. டோணிக்கு பதிலா என்னை சேர்த்துக்கோங்க :)

மணிகண்டன் said...

//மணி, உங்க நகைச்சுவை உணர்வை வெளிய கொண்டு வர்றதுக்காக தானோ இந்தியா தோத்துச்சு

//
கார்த்தி, நீங்க இப்படி சொல்றீங்க, சர்வேசன் என்னன்னா முத்திடுச்சா போய் டாக்டரை பாருங்கன்னு சொல்றாரு?

மணிகண்டன் said...

//மணி, கடைசி பஞ்ச் கலக்கல் பஞ்ச்..

//

நன்றி தலைவரே. இந்த ஒரு வரிதான் நல்லா இருக்குன்னு சொல்ரீங்களா?? :)

தம்பி said...

மணிகண்டன் இத்தன காமெடி பண்றிங்களே. சூப்பருங்க யாரோ சொன்ன மாதிரி லல்லுவ தூக்கிட்டு வந்து கிரிக்கெட் தலைவரா போட்டுடலாம்.

மணிகண்டன் said...

//அடுத்தமுறை இந்தியா அடுத்த சுற்றுக்கு போச்சுன்னா இதை நினைச்சி நினைச்சி சிரிக்க போறோம் எல்லாருமே!!!
//

இதுல சின்ன திருத்தம் ராயல் அவர்களே..

அடுத்தமுறை இந்தியா அடுத்த சுற்றுக்கு போச்சுன்னா சிரிக்க போறோம் எல்லாருமே!!!

தம்பி said...

இந்த வார குமுதம் ரிப்போர்டர பாருங்க சூப்பரா பின்னி பெடலடுட்த்திருக்காங்க. இனிமே பிஸ்கட் பாக்கெட்டு, ஷாப்பு பாக்கெட்டு தூக்கினு ஒரு பய நடிக்க மாட்டானுங்க.

எல்லா அலப்பறைக்கு வெச்சானுங்கப்பா ஆப்பு.

மணிகண்டன் said...

//அது மாதிரி புக்ஸ் கிரிக்கெட் எல்லாம் ஆடியா இவனுக ஃபார்ம்'கெல்லாம் வரப்போறாய்ங்கே?????
//

அதுல கூட ஷேவாக்குக்கும் சச்சினுக்கும் முட்டை தான் வருதாம் :) அதனால 0ல முடியற பேஜையெல்லாம் கிழிச்சுட்டு அழுகுனி ஆட்டம் ஆடறாங்க

மணிகண்டன் said...

//Ideal coach should lead by example - சட்டை இல்லாம ஆடறது எப்படின்னு செஞ்சு காமிப்பாங்களா?
//

ha ha ..ரொம்ப குறும்புங்க உங்களுக்கு. நல்லாத்தான் இருக்கும்..ஆனா ..வேணாம் விடுங்க..தமிழ்மணத்துல இருந்து பதிவை தூக்கிடப் போறாங்க :)

மணிகண்டன் said...

//மணிகண்டன் இத்தன காமெடி பண்றிங்களே. சூப்பருங்க யாரோ சொன்ன மாதிரி லல்லுவ தூக்கிட்டு வந்து கிரிக்கெட் தலைவரா போட்டுடலாம்.

//
வாங்க தம்பி..அது கூட நல்ல யோசனையாதான் தெரியுது..இனியாவது யாராவது தலையிட்டு களையெடுத்தா தான் நம்ம டீம் உருப்படும்.

மணிகண்டன் said...

//இனிமே பிஸ்கட் பாக்கெட்டு, ஷாப்பு பாக்கெட்டு தூக்கினு ஒரு பய நடிக்க மாட்டானுங்க.

எல்லா அலப்பறைக்கு வெச்சானுங்கப்பா ஆப்பு.
//
ஆமாங்க ரிப்போர்டர் படிச்சேன். ப்ளேயர்ஸ் எல்லாம் துடைச்சி போட்டுட்டு அவங்க பிஸினஸை பார்க்க போயிட்டாங்க. அவங்களை நம்பி காசு போட்டவங்க தான் முழி பிதுங்கி நிக்கறாங்க. இது ஒருவகைல பார்த்தா சொ.செ.சூ தான். இந்த டிவிக்காரங்களும், விளம்பரக் கம்பெணிங்களும் தான் இவங்களுக்கு காசு குடுத்து காசு குடுத்து ஏத்தி விட்டு ஒரு மாயையை உருவாக்கினாங்க. இப்போ அதுக்கு அனுபவிக்கறாங்க :)

Anonymous said...

கலக்கல் பேட்டி மணி..

ஆதிபகவன் said...

மணிகண்டன்,

வேலைக்கு போகாமல் லீவு போட்டிருக்கிறீங்களா அல்லது ராத்திரியில தூங்காமல் இருக்கிறீங்களா?

எப்படி உங்களால யோசிச்சு இப்படியெல்லாம் எழுத முடியுது.:))))

//மணி, உங்க நகைச்சுவை உணர்வை வெளிய கொண்டு வர்றதுக்காக தானோ இந்தியா தோத்துச்சு//

கார்த்திகேயன் சொன்னது சரி.
இதுவே ஒரு தனித்திறமை.

உலகக்கோப்பை தோல்வியில இருந்து
இந்தியா பாடம் படிச்சுதோ இல்லையோ??!!!

நீங்க ஒரு நகைச்சுவை எழுத்தாளரா தேறீட்டீங்க.

வாழ்த்துக்கள்.

இலவசக்கொத்தனார் said...

நம்மாளுங்க தோத்தாலும் தோத்தாங்க உங்க பதிவு ஒண்ணொண்ணும் சிக்ஸர்தான் போங்க!

Radha Sriram said...

//ஆமா நம்ம சச்சின் தான் உக்காந்து இங்கிலீஷ் படம் பார்த்துகிட்டு இருக்காரு"

சிவபாலன் : "என்ன படம்?"
ம. பேடி : "GONE IN 60 SECONDS !"//

:):):) நம்ம மக்கள் உங்கள நல்ல காமெடி ரைட்டர் ஆக்கிட்டாங்க!! தூள் கிளப்பரீங்க !!! சப்ஜெக்டையும் மாத்தி பாருங்களேன்/??

மணிகண்டன் said...

//கலக்கல் பேட்டி மணி..

//
நன்றி அனானி

மணிகண்டன் said...

//வேலைக்கு போகாமல் லீவு போட்டிருக்கிறீங்களா அல்லது ராத்திரியில தூங்காமல் இருக்கிறீங்களா?
//

லீவெல்லாம் போடலைங்க :) அப்பப்ப கொஞ்சம் கொஞ்சம் எழுதி வச்சுக்க வேண்டியது தான்.

//நீங்க ஒரு நகைச்சுவை எழுத்தாளரா தேறீட்டீங்க.
//
பாராட்டுக்கு நன்றி ஆதிபகவன்.

மணிகண்டன் said...

//நம்மாளுங்க தோத்தாலும் தோத்தாங்க உங்க பதிவு ஒண்ணொண்ணும் சிக்ஸர்தான் போங்க!

//

இன்னும் ரெண்டு பாக்கியிருக்கு கொத்ஸ்.அப்புறம் பழையபடி தான்..

மணிகண்டன் said...

//:):):) நம்ம மக்கள் உங்கள நல்ல காமெடி ரைட்டர் ஆக்கிட்டாங்க!! தூள் கிளப்பரீங்க !!! சப்ஜெக்டையும் மாத்தி பாருங்களேன்/??
//

நன்றி மேடம்..சீக்கிரமா மாத்தனும். இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கங்க. உலகக்கோப்பை முடிஞ்ச உடனே வேற பதிவு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.

Nakkeeran said...

coach superrrngo..
//நன்றி நக்கீரன். பார்த்தேன். ஷேவக்கோட அப்பா சொல்லியிருக்கறதை படிச்சீங்களா?? //
enna sola?

நாமக்கல் சிபி said...

கலக்கலான பேட்டி!

மந்த்ரா பேடியை பேட்டி கண்ட மணிகண்டன் வாழ்க!

மணிகண்டன் said...

//coach superrrngo..
//நன்றி நக்கீரன். பார்த்தேன். ஷேவக்கோட அப்பா சொல்லியிருக்கறதை படிச்சீங்களா?? //
enna sola?//

ஆளாளுக்கு பந்து போட ஆரம்பிச்சிட்டாங்க நக்கீரன்..ஆறாம் தேதி தெரிஞ்சுடும் யார் யாருக்கு ஆப்புன்னு :)

மணிகண்டன் said...

//கலக்கலான பேட்டி!

மந்த்ரா பேடியை பேட்டி கண்ட மணிகண்டன் வாழ்க!

//

நன்றி சிபியாரே. பேட்டி எடுத்தவர் நம்ம சிவபாலன் :)

நாமக்கல் சிபி said...

//நம்ம மக்கள் உங்கள நல்ல காமெடி ரைட்டர் ஆக்கிட்டாங்க!! //

ஆக்குறதாவது! அவரு உலகக் கோப்பை 2007 ன்னு போட்டதே இந்தியாவைப் பொறுத்தவரை காமெடி வலைப் பூதானே!

தேவ் | Dev said...

பின்னிட்டீங்க மணி.. சிவபாலன் இப்போக் கோச்சிங் போறார்ன்னு கேள்விபட்டேன் உண்மையா மணி... :-)

Anonymous said...

ஜடாயு புதிதாக எழுதி இருக்கும் பதிவின் குறிசொல்லைப் பாருங்கள்.

பெயரிலியின் அம்மாவைப் பற்றி தவறாக எழுதி இருக்கிறான்.

இதற்கும் மேலா அவன் தமிழ்மணத்தில் நீடிக்க வேண்டும்?

http://jataayu.blogspot.com/2007/03/blog-post_1084.html

OSAI Chella said...

Nice one! Loved it!

மணிகண்டன் said...

//ஆக்குறதாவது! அவரு உலகக் கோப்பை 2007 ன்னு போட்டதே இந்தியாவைப் பொறுத்தவரை காமெடி வலைப் பூதானே! //

அதானே..கரெக்டா சொன்னீங்க சிபியாரே :)

மணிகண்டன் said...

//பின்னிட்டீங்க மணி.. சிவபாலன் இப்போக் கோச்சிங் போறார்ன்னு கேள்விபட்டேன் உண்மையா மணி... :-)

//
உண்மைதாங்க தேவ்..அதுவும் சட்டை போடாம :)

மணிகண்டன் said...

//Nice one! Loved it!

//
முதல்தடவையா நம்ம பக்கம் வந்திருக்கிங்கனு நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்லா!