Friday, February 2, 2007

உலகக் கோப்பை - சில சுவாரசியமான தகவல்கள் - 2



2007 மார்ச் மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் நடக்க இருப்பது 9வது உலகக் கோப்பை போட்டிகளாகும்.இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன(விரிவான தகவல்கள் விரைவில்) . இதற்கு முன் நடைபெற்ற எட்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மூன்று முறையும் (1987,1999,2003),மேற்கிந்தியத் தீவுகள் இரண்டு முறையும்(1975,1979),இந்தியா ஒரு முறையும்(1983),பாகிஸ்தான் ஒரு முறையும் (1992),இலங்கை ஒரு முறையும் (1996) வென்றுள்ளன.

இதுவரை எந்த ஒரு நாடும், தனது மண்ணில் உலகக் கோப்பையை வென்றதில்லை. (1996ல் இலங்கை வென்ற பொழுதும்,அம்முறை இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து நடத்தின).

உலகக் கோப்பை போட்டிகளில் மிக அதிக முறை பங்கேற்றவர் பாகிஸ்தானைச் சேர்ந்த வாசிம் அக்ரம்.இவர் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை 38 (5 உலகக் கோப்பைகள்). இரண்டாவதாக வருபவர் இலங்கையைச் சேர்ந்த அரவிந்த டி சில்வா (35 போட்டிகள்,5 உலகக் கோப்பைகள்), மூன்றாவது இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத்(34 போட்டிகள், 4 உலகக் கோப்பைகள்). சச்சின் டெண்டுல்கர் இதுவரை 4 உலகக் கோப்பைகளிலும்,33 போட்டிகளிலும் விளையாடி,மியாண்டட்டுடனும் ஸ்டிவ் வாஹ்வுடனும் நாலாவது இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

10வது உலகக் கோப்பை போட்டிகள் 2012ல் இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை ஆகிய நாடுகளில் நடக்கவுள்ளன. இதன் இரண்டு அரை இறுதி ஆட்டங்கள் முறையே கொழும்பு மற்றும் கராச்சியிலும், இறுதியாட்டம் மும்பையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விவியன் ரிச்சர்ட்ஸ், ரிக்கி பான்டிங், அரவிந்த டி சில்வா மூவரும் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டங்களில் சதம் அடித்துள்ளனர். மூன்று முறையும் அவர்களது அணிகள் கோப்பையை வென்றன்.



உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த பெருமைக்குரியவர் சச்சின் டெண்டுல்கர்(தல போல வருமா?). இவர் இதுவரை 33 போட்டிகளில் பங்கேற்று 1732 ரன்கள் குவித்துள்ளார்(சராசரி 59.72!). இதில் 4 சதமும், 12 அரை சதங்களும் அடங்கும். இவரின் அதிகபட்ச ரன் 152. இவருக்கு அடுத்து வருபவர் ஜாவெத் மியாண்டட்(33 போட்டிகள் 1083 ரன்கள் 1 சதம் 8 அரை சதம் அதிகபட்ச ரன் 103)




அதிக விக்கெட்டுகள் எடுத்த பெருமைக்குரியவர் வாசிம் அக்ரம். இவர் 38 போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறந்த பந்து வீச்சு 5-28,சராசரி 23.80 எகானமி ரேட் 4.04. இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் 33 போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

தகவல்கள் தொடரும்..

பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.

உலகக் கோப்பை - சில சுவாரசியமான தகவல்கள் - 1



மார்ச் 11 2007ல் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்க இருக்கும் 9வது உலகக் கோப்பை போட்டிகளில் வெல்லும் அணிக்கு வழங்கப்பட இருக்கும் இக்கோப்பை வடிவமைக்கப்பட்ட ஆண்டு 1999.லண்டணில் இருக்கும் 'Garrard & Co' என்ற கம்பெனியால் வடிவமைக்கப்பட்டது.முழுக்க முழுக்க வெள்ளி மற்றும் 'கில்ட்'ஆல் (கில்ட்க்கு தமிழ்ல என்னங்க??) ஆன இக்கோப்பை 60 செ.மீ உயரமும் 11 கிலோ எடையும் கொண்டது.

இதில் உள்ள மூன்று வளைவான வடிவங்கள் மூன்று Stumpகளையும், கிரிக்கெட்டின் மூன்று முக்கிய அம்சங்களான 'Batting,Bowling & Fielding'யும் குறிப்பிடுவன ஆகும்.அவைகளின் மேலே இருக்கும் உருண்டை கிரிக்கெட் பந்தையும்,உலகத்தையும் குறிப்பிடுகிறது.எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இந்தப் பந்து தெரியும்படி வடிவமைக்கப்பபட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

இதுவரை வெற்றி பெற்றுள்ள ஆறு நாடுகளின் பெயர்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன.மேலும் பத்து நாடுகளின் பெயர்களைப் பொறிப்பதற்க்கு இதில் இடமுள்ளது.இந்தக் கோப்பை I.C.Cன் வசமே இருக்கும்.வெற்றி பெறும் நாட்டிடம் இக்கோப்பையின் மாதிரியே வழங்கப்படும்.1999 வரை வெற்றி பெற்ற நாடுகளிடமே அசல் கோப்பைகள் இருந்தன.1999 உலகக் கோப்பை போட்டிகளில் I.C.C இந்த முறையை மாற்றி தன்னிடமே அசல் கோப்பையை வைத்துக் கொண்டது.

இந்த முறை இந்தியா இக்கோப்பையை வெல்லுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

தகவல்கள் தொடரும்..

கிரிக்கெட் திருவிழா

இன்னும் ஒரே மாசந்தாங்க, கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா ஆரம்பிச்சிடும்..ஆமாங்க மார்ச் மாசம் ஆரம்பிக்கப் போற உலகக் கோப்பை போட்டிகள் தான் உலகெங்கும் இருக்கிற கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா.

ஜாதி,மதம்,மொழி, இனம் வித்தியாசமில்லாம இந்தியர்கள் எல்லாரையும் இணைக்கிற விஷயங்கள்ள கிரிக்கெட் முக்கியமான ஒன்னு.இந்தியாவைப் பொருத்த வரையில கிரிக்கெட்டும் ஒரு மதம் தான்.எத்தனையோ பிரச்சனைகள், கவலைகள் இருந்தாலும், எல்லாத்தையும் மறந்து மக்கள் ரசிக்கிற விஷயங்கள்ள கிரிக்கெட்டும் ஒன்னு.

ஒரு போட்டில ஜெயிச்ச உடனே தூக்கி வச்சு கொண்டாடறதும், அடுத்த போட்டில தோத்துட்டா தூக்கிப் போட்டு மிதிக்கறதும் ரொம்ப சகஜம்.அந்த அளவுக்கு மக்கள் ரத்தத்துல கலந்துட்ட ஒன்னு இந்த கிரிக்கெட்.கேவலமா தோத்தாலும் கூட ரெண்டே நாள்ல அதயெல்லாம் தொடச்சிப் போட்டுட்டு, அடுத்த மேட்ச் பார்க்க ஸ்டேடியத்துக்கு முண்டியடிச்சிட்டு போறவங்க நம்மாளுங்க.

கிரிக்கெட், மற்றும் நடைபெறப் போகும் உலகக் கோப்பை பற்றிய சுவையான தகவல்கள், சூடான செய்திகள்,புகைப்படங்கள், வீடியோக்கள்னு, கிரிக்கெட்,கிரிக்கெட்,கிரிக்கெட்னு கிரிக்கெட்டுக்கு மட்டுமேயான் ஒரு பதிவு.கண்டிப்பா பதிவுலக நண்பர்களோட ஆதரவு இருக்கும்னு நம்பறேன்.

2007 உலகக் கோப்பையின் புகைப்படம் இங்கே



இந்த கோப்பையை பற்றிய சுவையான தகவல்கள் விரைவில்..

2007 ICC World Cup Official Song





வெளையாட்ட ஆரம்பிக்கலாமா....