Friday, February 16, 2007

முதல் இடத்தை இழக்குமா ஆஸ்திரேலியா ?

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் அணிகள் மற்றும் அதன் வீரர்களின் தரவரிசையை எல்.ஜி. மற்றும் ஐ.சி.சி இணைந்து வெளியிட்டு வருகிறது.





ஒருநாள் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான எல்.ஜி ஐ.சி.சி தரவரிசை முதன்முதலில் அக்டோபர் 2002ல் வெளியிடப்பட்டது. அன்று முதல் இவ்வரிசையில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது ஆஸ்திரேலியா அணி. தற்பொழுது அவ்விடத்தை தென்னாப்பிரிக்க அணியிடம் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த காமன்வெல்த் பேங்க் தொடரில் இரண்டு இறுதிப்போட்டிகளிலும் இங்கிலாந்திடம் தோற்று கோப்பையை நழுவவிட்டது ஆஸ்திரேலியா. அடிமேல் அடியாக நேற்று நியூஸிலாந்தில் நடைபெற்ற சாப்பல்-ஹேட்லி கோப்பையின் முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோற்று மரணஅடி வாங்கியுள்ளது. உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில் தொடர்ந்து தோற்று வருவது ஆஸ்திரேலிய அணியில் பீதியை ஏற்படுத்துமா?

பாகிஸ்தானுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடரை தென்னாப்பிரிக்கா 3-1 என்ற நிலையில் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் தரவரிசை ரேட்டிங்கில் 128 புள்ளிகள்(4595 புள்ளிகள்/36 போட்டிகள்) பெற்று ஆஸ்திரேலியாவுடன்(ரேட்டிங் 128, 5633 புள்ளிகள்/44 போட்டிகள்) சமமாக முதலிடத்தில் உள்ளது.நியூஸிலாந்துடனான முதல் போட்டியில் தோல்வியுற்ற ஆஸ்திரேலியா மீதமுள்ள இரண்டு போட்டிகளில் தோற்றால் முதல் இடத்தை இழக்கும். கடந்த ஐந்து வருடங்களாக் முதல் இடத்தில் இருந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு பின்னடைவாகும்.

இவ்வரிசையில் இந்தியா தற்பொழுது 6வது இடத்தில் உள்ளது( ரேட்டிங் 108,5084 புள்ளிகள்/47 போட்டிகள்). விசாகப்பட்டினத்தில் வரும் 17ம் தேதி இலங்கையுடன் நடைபெறும் இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கையை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்தை பெறும்.

ஒருநாள் போட்டிகளுக்கான தற்போதைய தரவரிசைப் பட்டியல்


Team *Matches Points Rating
Australia 44 5633 128
South Africa 36 4595 128
Pakistan 34 3780 111
New Zealand 35 3818 109
Sri Lanka 43 4675 109
India 47 5084 108
England 36 3806 106
West Indies 39 3956 101
Bangladesh 35 1454 42
Zimbabwe 34 755 22
Kenya 9 0 0


Last updated: 16 Feb 2007

* Matches palyed since August 2005

Thursday, February 15, 2007

கண்டுபிடியுங்கள் - கிரிக்கெட் புதிர்போட்டி 2


முதல் போட்டில நம்ம கொத்ஸ் 9 கேள்விகளுக்கும், வைசா 8 கேள்விகளுக்கும் சரியா பதில் சொல்லி கலக்கினாங்க.சிறில் அலெக்ஸ் 10 கேள்விகளுக்கும் எடக்குமுடக்கா சரியான(?) பதில் சொன்னாரு. இதோ இப்ப 2வது போட்டி. இந்த முறை யாராவது எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்றாங்களான்னு பார்க்கலாம்.





1. டெஸ்ட் போட்டிகளில் முதல் இரட்டை சதம் அடித்தவர் யார்?டெஸ்ட் போட்டிகளில் முதல் சிக்ஸ் அடித்தவரும் இவரே!

2. தனது நாடு விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த பெருமையை பெற்றவர்கள் மூவர்.ஒருவர் ஆஸ்திரேலியாவின் சார்லஸ் பேனர்மேன்.மீதி இருவர் யார்?

3. இந்தியா விளையாடிய முதல் ஒருநாள் போட்டி என்று,யாருடன் நடைபெற்றது?

4. ஒரு உலகக்கோப்பை தொடரில் (ஒரு மேட்ச் அல்ல,one entire worldcup tournament) அதிக கேட்ச் பிடித்தவர் யார்?

5. தொடர்ந்து அதிக ஒருநாள் போட்டிகள் விளையாடிய வீரர் யார்?

6. டெஸ்ட் போட்டிகளில் முதல் விக்கெட்டை வீழ்த்தியவர் யார்?

7. ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு அணி 407 ரன்கள் அடித்தது. இதுவே ஒரு டெஸ்ட் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச டூப்ளிகேட் ஸ்கோராகும்.அந்த அணி எது?எந்த நாட்டுக்கு எதிராக அடித்தது?

8. முன்பு ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணிக்கும் 60 ஓவர்கள் வீசப்பட்டு வந்தது.ஒரு அணிக்கு 50 ஓவர்கள் என்ற முறையில் நடந்த முதல் ஒருநாள் போட்டி எது?

9. ஒரு ஒருநாள் போட்டியில் 112 ரன்கள் அடித்து,6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தவர் யார்?

10. உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய வயதான வீரர் யார்?

11. டெஸ்ட் போட்டியின் 5 நாட்களும் விளையாடிய பெருமையை(பொறுமையை) உடைய இரண்டு இந்தியர்கள் யார்?

12. உலகக்கோப்பையை வென்ற அணியில் இருந்த இவர், பின் தனது அணி மீண்டும் உலகக்கோப்பையை வென்ற பொழுது அணியின் பயிற்சியாளராக் இருந்தார்.யார் இவர்?

1975,1979 உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்தியத்தீவு அணியினருக்கு பாராட்டு விழா




9வது உலகக்கோப்பை மேற்கிந்தியத்தீவகளில் மார்ச் மாதம் நடைபெற இருப்பது அனைவரும் அறிந்ததே. இதில் மேற்கிந்தியத்தீவுகள் அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தானுடன் மார்ச் 13ம் தேதி விளையாடுகிறது. இப்போட்டி தொடங்குவதற்கு முன் 1975 மற்றும் 1979ல் உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்தியத்தீவுகளின் அணியினருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை ஐ.சி.சி கிரிக்கெட் உலகக்கோப்பை 2007ன் மேனேஜிங் டைரக்டரும் சி.இ.ஒ.வுமான கிறிஸ் டெரிங் தெரிவித்துள்ளார்.

இவ்விழாவில் கோப்பையை வென்றவர்களில் தற்போதுள்ள 18 வீரர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்படும். அவர்கள் வென்ற ப்ருடென்ஷியல் கோப்பை மீண்டும் ஒருமுறை மேற்கிந்திய மண்ணில் வழங்கப்படும். அதுமட்டுமன்றி வெற்றிபெற்ற அணியில் பங்கேற்ற மறைந்த வீரர்களான கீத் பாய்ஸ், ராய் ஃப்ரெட்ரிக்ஸ் மற்றும் மால்கம் மார்ஷல் ஆகியோரின் குடும்பத்தினரும் கௌரவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விழாவை ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக்கோப்பை 2007 குழுவும் மேற்கிந்தியத்தீவகளின் கிரிக்கெட் வாரியமும் இணைந்து நடத்துகின்றன. இரண்டு முறையும் கோப்பையை வென்ற அணியின் கேப்டன் க்ளைவ் லாய்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

1975 WEST INDIES TEAM - Clive Lloyd (captain & man of the match), Gordon Greenidge, Rohan Kanhai, Alvin Kallicharran, Deryck Murray (wicketkeeper), Sir Vivian Richards, Andy Roberts, Collis King, Maurice Foster, Lance Gibbs, Vanburn Holder, Bernard Julien. Keith Boyce (deceased), Roy Fredericks (deceased). Sir Clyde Walcott - Team Manager and coach (deceased)

1979 WEST INDIES TEAM - Clive Lloyd (captain), Gordon Greenidge, Alvin Kallicharran, Deryck Murray (wicketkeeper), Sir Vivian Richards (man of the match), Andy Roberts, Collis King, Faoud Bacchus, Colin Croft, Joel Garner, Michael Holding, Larry Gomes, Desmond Haynes, Malcolm Marshall (deceased). Sir Clyde Walcott - Team Manager and Coach (deceased).

************************************

ஐ.சி.சி உலகக்கோப்பையின் அதிகாரபூர்வ குளிர்பானமான பெப்ஸி நேற்று 'We Love WI Cricket" என்ற புதிய விளம்பரத்தை தொடங்கியுள்ளது.பல்வேறு போட்டிகளையும் அறிவித்துள்ள ஜமைக்கா பெப்ஸி நிறுவனம், முதல் பரிசாக USD 250,00 மதிப்புள்ள பேக்கேஜை அளிக்கவுள்ளது.இதில் பார்படாஸ் தீவுகளில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு இருவர் சென்று வர நுழைவுச்சீட்டு, விமானச்செலவு மற்றும் தங்குமிடம்,உணவுக்கான் செலவுகள் அடங்கும்.

நன்றி : jamaicaobserver.com

Wednesday, February 14, 2007

கண்டுபிடியுங்கள் - கிரிக்கெட் புதிர்போட்டி -- முடிவுகள்

இதுவரைக்கும் பதில் சொன்னவங்கள்ள இலவசக்கொத்தனார் 9 கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லியிருக்காரு. வைசா 8 கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லியிருக்காங்க.வாழ்த்துக்கள்!

விடைகள்..

1.ஆஸ்திரேலியாவின் சார்ல்ஸ் பேனர்மேன்
2.USA Vs Canada in 1844
3. 10 அவை
caught
bowled
LBW
stump
run out
timed out
Handling the bowl
Hit wicket
obstructing fielder
hitting the ball twice
(ஐ.சி.சி விதிகளின்படி Retiredம் அவுட் தான் என கொத்ஸ் மேற்கோள் காட்டியதால் 11ம் சரியான விடையே)

4.ஆஸ்திரேலியாவின் க்ரஹம் மெக்கின்ஸி
5.சவுரவ் கங்கூலி
6.அலன் பார்டர் (153)
7. பி.எஸ்.சந்திரசேகர்
8. ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியம்
9. சச்சின் டெண்டுல்கர்
10. இங்கிலாந்தின் லென் ஹட்டன்

மீண்டும் ஒரு போட்டி விரைவில்..

கண்டுபிடியுங்கள் - கிரிக்கெட் புதிர்போட்டி



சினிமா, அரசியல்,ஃபோட்டோ, கவிதைன்னு எல்லா விதமான போட்டிலயும் கலக்குற நம்ம பதிவர்கள் கிரிக்கெட் அறிவை சோதிக்க சில கேள்விகள். பதிலை பின்னூட்டத்தில் போடுங்க.

பரிசு? வேறென்ன இதயத்தில் ஒரு இடந்தான் :)) ( ஐடியா உதவி : நாமக்கல் சிபியார் )




1. டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் அடித்த வீரர் யார்?

2. முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?

3. எத்தனை விதமான முறைகளில் ஒரு பேட்ஸ்மெனை அவுட்டாக்க முடியும்?

4. முதல் ஒரு நாள் போட்டியின் முதல் பந்தை வீசியவர் யார்?

5. ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை தொடர்ந்து ஆட்ட நாயகன் விருது பெற்றவர் யார்?

6. தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் யார்?

7. 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தான் மொத்தமாக அடித்த ரன்களை விட அதிக விக்கெட்களை வீழ்த்திய ஒரே வீரர் யார்?

8. இம்மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே ஒரு விக்கெட் விழுந்தது? இச்சாதனையை படைத்த ஒரே மைதானம் இதுதான். எந்த மைதானம்?

9. மூன்றாவது நடுவரால் அவுட் கொடுக்கப்பட்ட முதல் வீரர் யார்?

10. 'Obstructing the Field' என்ற முறையில் அவுட்டான முதல் வீரர் யார்?

பார்க்கலாம் எவ்வளவு பேர் சரியா சொல்றாங்கன்னு?

Tuesday, February 13, 2007

இந்தியா ஏன் கிரிக்கெட்டில் தோற்கிறது ?



Times of India சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரப்படம் இந்திய கிரிக்கெட்டின் தோல்விக்கான காரணத்தை நகைச்சுவையாக காட்டியுள்ளது.


விளம்பரங்களில் மட்டுமே விளாசும் சில வீரர்கள் கவனிப்பார்களாக :)


Monday, February 12, 2007

கோவா நேரு ஸ்டேடியம் - ஒரு பார்வை





இந்திய இலங்கை அணியினருக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி, கோவாவில் உள்ள நேரு மைதானத்தில் நடக்க உள்ளது.முதல் இருபோட்டிகளில் முதல் போட்டி ரத்தானதும்,இரண்டாவது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றதும் அனைவரும் அறிந்ததே.

இம்மைதானத்தில் இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன.அதில் 4 போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது. மற்ற இரண்டு போட்டிகளில் ஒன்று ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையேயும் மற்றொன்று மேற்கிந்தியத்தீவுகள்-நியூஸிலாந்து அணிகளுக்கும் இடையே நடைபெற்றுள்ளது.

இங்கு முதல் சர்வதேச போட்டி அக்டோபர் 25,1989 அன்று ஆஸ்திரேலியா மேற்கிந்தியத்தீவுகளுக்கு இடையே MRF கோப்பைக்காக நடந்தது. கடைசி போட்டி இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏப்ரல் 3,2006 அன்று நடந்துள்ளது.

இங்கு விளையாடிய நான்கு போட்டிகளில் (இலங்கையுடன் 2, இங்கிலாந்துடன் 1, ஆஸ்திரேலியாவுடன் 1), இந்தியா மூன்று போட்டிகளில் தோல்வியையும் 1 போட்டியில் வெற்றியையும் தழுவியுள்ளது. இலங்கையுடன் இம்மைதானத்தில் மோதிய இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோற்றுள்ளது. இவ்விரண்டு போட்டிகளும் அத்தொடரின் மூன்றாவது போட்டி என்பது குறிப்பிடதக்கது. (எல்லாம் நமக்கு எதிரா இருக்கேங்க ?)

இம்மைதானத்தில் அடிக்கப்பட்டுள்ள அதிகமான ஸ்கோர் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அடித்த 294 ரன்கள் ஆகும். இப்போட்டியில் யுவராஜ் சிங் அடித்த 103 ரன்கள் இம்மைதானத்தில் அடிக்கப்பட்ட தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும்.இப்போட்டியை இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நியூஸிலாந்துக்கு எதிராக மேற்கிந்தியத்தீவுகள் அடித்த 123 ரன்கள் குறைந்த ஸ்கோராகும்.இரண்டாவதாக விளையாடி ஆஸ்டிரேலியா அடித்த 269 ரன்களே இரண்டாவதாக் களமிறங்கும் அணிகள் அடித்த அதிகபட்ச ஸ்கோராகும்.இம்மைதானத்தின் ஒரு விக்கெட்டுக்கான சராசரி ரன் 29.59 ஆகும். ஒரு ஓவருக்கான சராசரி ரன் விகிதம் 4.61 ஆகும்.

இலங்கையை வென்று இம்மைதானத்தை ராசியான மைதானமாக இந்தியா மாற்றுமா?

ஆஸ்திரேலியாவின் பூமராங்



நமக்கு சாதா ஆப்புன்னா, ஆஸ்திரேலியாவுக்கு ஸ்பெஷல் மசாலா ஆப்பு கிடைச்சிருக்கு. ரெண்டு இறுதிப் போட்டிலயும் தோத்து இங்கிலந்து கிட்ட கோப்பையை தூக்கி குடுத்திருக்கு. கிரிக்கெட்னா வெற்றி தோல்வி சகஜம் தான். இது ஒன்னும் பெரிய விஷயமில்லைங்கறவங்க போன வாரம் ஆஸ்திரேலிய அணியோட பயிற்சியாளர் சொன்னதை படிங்க..

"உலகக்கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியா ஆடும் இத்தொடர் அணியின் வீரர்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிரணியினர் நாங்கள் எதிர்பார்த்தபடி எங்களுக்கு ஈடு கொடுத்து ஆடவில்லை. எதிரணியினரின் பலவீனமான பேட்டிங்கினால் எங்கள் பந்து வீச்சாளர்கள், தங்களது யார்க்கர்,பவுன்சர் போன்ற திறமைகளை சோதித்துப் பார்க்க முடியவில்லை. எங்கள் பந்து வீச்சாளர்களின் திறமையை வளர்க்கும் விதம் அவர்கள் விளையாடவில்லை. அதே காரணத்தால் எங்கள் அணியினரின் ஃபீல்டிங் திறமையையும் சோதிக்க முடியவில்லை".

கடைசி ரெண்டு இறுதிப்போட்டிலயும் அடி வாங்கினிங்களே, அப்ப எல்லாத்தையும் சோதிச்சு பார்த்திருக்கலாமேங்க?? மறந்துட்டிங்களோ?

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே
போன கதை உனக்கு தெரியுமா??

சொந்த செலவில் சூனியம்





மேற்கிந்தியத்தீவுகளை தொரத்தி தொரத்தி அடிச்சாங்களே, இலங்கயையும் ஜெயிப்பாங்கன்னு ஒரு நம்பிக்கைல டிஷ் நெட்வ்வொர்க்ல 40 டாலர் கட்டி மேட்ச் பார்க்க முடிவு பண்ணேங்க. அதுதான் இப்போ சூனியமா போச்சு. முதல் மேட்சை நம்ம வருண பகவான் கவுத்தாரு. ரெண்டாவதை நம்ம பசங்களே தட்டுல வச்சு வெத்தலை பாக்கோட இலங்கைக்கு குடுத்துட்டாங்க. ஆக மொத்தம் 20 டாலர் எள்ளு. மீதி 20 டாலருக்காவது ஏதாவது நல்லது நடக்குதா பார்க்கலாம். 20 டாலருக்கு சரவணபவன்ல மிளகாப்பொடி தோசையும், மேங்கோ லஸ்ஸியுமாவது சாப்பிட்டிருக்கலாம். வயித்துக்கவது புண்ணியமா போயிருக்கும்.

ஈசியா ஜெயிச்சிருக்க வேண்டிய மேட்சை எப்படி தோக்கறதுன்னு நம்ம பசங்க கிட்டே எல்லாரும் ட்ரெயினிங் எடுத்துக்கலாம். இலங்கையை 257 ரன் எடுக்கவே விட்டிருக்கக் கூடாது.சரி அதாவது பரவாயில்லைனா, பேட்டிங்லயும் சொதப்பிட்டாங்க.டிராவிட் ஏதோ வண்டிய பிடிக்கபோற அவசரத்திலேயே விளையாடினாரு.வந்த உடனே ரொம்ப wideஆ பக்கத்து பிட்சுல விழுந்த பந்தை அடிக்க தொரத்துனாரு.அப்பவெ மனசுக்குள்ளே மணி அடிச்சிடிச்சு.போயி ஒழுங்கா படுத்தாவது தூங்கியிருக்கலாம். விதி யாரை விட்டுது.

சச்சினும் கங்கூலியும் இருந்த வரைக்கும் நம்பிக்கை இருந்துச்சு. 14 ஓவர் வரைக்கும் அடிச்சு விளாசுன அவிங்களும் அதுக்கப்புறம் ஒரு ரன்னே போதுங்கற மாதிரி தட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறங்கற மாதிரி, ஒன்னுமே இல்லாத பிட்சுலே ஏண்டா இப்படி கட்டை போடறிங்கனு கேக்க தோனுச்சு.டெண்டுல்கர் அவுட்டான பந்தை தவிர பண்டாரா வீசுன பந்துங்க அப்படி ஒன்னும் டர்ன் ஆன மாதிரி தெரியலை. ஆனா கிரிக்கெட்டோட அடிப்படை விதிப்படி, விக்கெட் டு விக்கெட் வீசினாரு. நம்ம பசங்க எப்ப தான் கத்துக்க போறங்களோ.

ஷேவாக் ஏதோ சிக்குன் குனியா வந்தவரு மாதிரி, ரொம்ப சோர்வா விளையாடினாரு. அவரோட Body Language பார்த்தா ஒரு நம்பிக்கையே இல்லாம விளையாடற மாதிரி தெரியுது. இவரை உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செஞ்சிருக்க வேண்டாமோன்னு தோனுது.பார்ப்போம் மீதி ரெண்டு மேட்சில என்ன பண்றாருன்னு. 4,6 ஏதவது அடிச்சா வெளில வந்தோன என்கவுண்டர்ல போட்டுத்தள்ளிடுவோம்னு டோனிய யாராவது மிரட்டுனாங்களா தெரியல. மனுசன் ஒரு ஸ்ட்ரோக்கு, ஹுஹும். இந்த லட்சணத்துல முதல் பந்தே கிளீன் போல்ட் வேற. அது நோ-பால்ன உடனே, ஆகா இந்தியாவுக்கு லக்குடா ஒக்கமக்கா அப்படின்னு நெனைச்சா, ஒன்னும் நடக்கல. பேசாம முதல்லயே அவுட்டாயி போயிருக்கலாம். மேட்சாவது சீக்கிரம் முடிஞ்சிருக்கும். கடைசி வரைக்கும் ஜெயிக்க போறோம், ஜெயிக்கபோறோம்னு படங்காட்டிட்டே வந்து கழுத்தறுத்தாங்க. சரி கடைசி பால்ல சிக்ஸ் அடிச்சு மியாண்டட் மாதிரி கலக்கப்போறாருன்னு பார்த்தா (நாம திருந்தவே மாட்டோம்ல ) வைடா போன பந்தை தொட்டுட்டு, அம்பையர வேற வைட் ஏண்டா தரலைனு ஒரு பார்வை பாக்குறாரு.

இவனுங்களை நம்பி பதிவெல்லாம் வேற ஆரம்பிச்சுட்டேன். உலகக்கோப்பையிலயாவது ஏதாவது பண்ணி மானத்த காப்பாத்துங்கப்பா. இதுல உலகக்கோப்பை போட்டிகள பார்க்குறதுக்கு டிஷ் நெட்வொர்க்ல 200 டாலராம். செந்தழல் ரவி மாதிரி யாராவது புண்ணியவான்கள் ஸ்பான்சர் பன்னுங்கப்பா :))