Monday, February 12, 2007

கோவா நேரு ஸ்டேடியம் - ஒரு பார்வை





இந்திய இலங்கை அணியினருக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி, கோவாவில் உள்ள நேரு மைதானத்தில் நடக்க உள்ளது.முதல் இருபோட்டிகளில் முதல் போட்டி ரத்தானதும்,இரண்டாவது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றதும் அனைவரும் அறிந்ததே.

இம்மைதானத்தில் இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன.அதில் 4 போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது. மற்ற இரண்டு போட்டிகளில் ஒன்று ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையேயும் மற்றொன்று மேற்கிந்தியத்தீவுகள்-நியூஸிலாந்து அணிகளுக்கும் இடையே நடைபெற்றுள்ளது.

இங்கு முதல் சர்வதேச போட்டி அக்டோபர் 25,1989 அன்று ஆஸ்திரேலியா மேற்கிந்தியத்தீவுகளுக்கு இடையே MRF கோப்பைக்காக நடந்தது. கடைசி போட்டி இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏப்ரல் 3,2006 அன்று நடந்துள்ளது.

இங்கு விளையாடிய நான்கு போட்டிகளில் (இலங்கையுடன் 2, இங்கிலாந்துடன் 1, ஆஸ்திரேலியாவுடன் 1), இந்தியா மூன்று போட்டிகளில் தோல்வியையும் 1 போட்டியில் வெற்றியையும் தழுவியுள்ளது. இலங்கையுடன் இம்மைதானத்தில் மோதிய இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோற்றுள்ளது. இவ்விரண்டு போட்டிகளும் அத்தொடரின் மூன்றாவது போட்டி என்பது குறிப்பிடதக்கது. (எல்லாம் நமக்கு எதிரா இருக்கேங்க ?)

இம்மைதானத்தில் அடிக்கப்பட்டுள்ள அதிகமான ஸ்கோர் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அடித்த 294 ரன்கள் ஆகும். இப்போட்டியில் யுவராஜ் சிங் அடித்த 103 ரன்கள் இம்மைதானத்தில் அடிக்கப்பட்ட தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும்.இப்போட்டியை இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நியூஸிலாந்துக்கு எதிராக மேற்கிந்தியத்தீவுகள் அடித்த 123 ரன்கள் குறைந்த ஸ்கோராகும்.இரண்டாவதாக விளையாடி ஆஸ்டிரேலியா அடித்த 269 ரன்களே இரண்டாவதாக் களமிறங்கும் அணிகள் அடித்த அதிகபட்ச ஸ்கோராகும்.இம்மைதானத்தின் ஒரு விக்கெட்டுக்கான சராசரி ரன் 29.59 ஆகும். ஒரு ஓவருக்கான சராசரி ரன் விகிதம் 4.61 ஆகும்.

இலங்கையை வென்று இம்மைதானத்தை ராசியான மைதானமாக இந்தியா மாற்றுமா?

1 Comment:

Anonymous said...

//இலங்கையை வென்று இம்மைதானத்தை ராசியான மைதானமாக இந்தியா மாற்றுமா? //

மாத்தப்போகுது பாருங்க..