Thursday, February 15, 2007

கண்டுபிடியுங்கள் - கிரிக்கெட் புதிர்போட்டி 2


முதல் போட்டில நம்ம கொத்ஸ் 9 கேள்விகளுக்கும், வைசா 8 கேள்விகளுக்கும் சரியா பதில் சொல்லி கலக்கினாங்க.சிறில் அலெக்ஸ் 10 கேள்விகளுக்கும் எடக்குமுடக்கா சரியான(?) பதில் சொன்னாரு. இதோ இப்ப 2வது போட்டி. இந்த முறை யாராவது எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்றாங்களான்னு பார்க்கலாம்.





1. டெஸ்ட் போட்டிகளில் முதல் இரட்டை சதம் அடித்தவர் யார்?டெஸ்ட் போட்டிகளில் முதல் சிக்ஸ் அடித்தவரும் இவரே!

2. தனது நாடு விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த பெருமையை பெற்றவர்கள் மூவர்.ஒருவர் ஆஸ்திரேலியாவின் சார்லஸ் பேனர்மேன்.மீதி இருவர் யார்?

3. இந்தியா விளையாடிய முதல் ஒருநாள் போட்டி என்று,யாருடன் நடைபெற்றது?

4. ஒரு உலகக்கோப்பை தொடரில் (ஒரு மேட்ச் அல்ல,one entire worldcup tournament) அதிக கேட்ச் பிடித்தவர் யார்?

5. தொடர்ந்து அதிக ஒருநாள் போட்டிகள் விளையாடிய வீரர் யார்?

6. டெஸ்ட் போட்டிகளில் முதல் விக்கெட்டை வீழ்த்தியவர் யார்?

7. ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு அணி 407 ரன்கள் அடித்தது. இதுவே ஒரு டெஸ்ட் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச டூப்ளிகேட் ஸ்கோராகும்.அந்த அணி எது?எந்த நாட்டுக்கு எதிராக அடித்தது?

8. முன்பு ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணிக்கும் 60 ஓவர்கள் வீசப்பட்டு வந்தது.ஒரு அணிக்கு 50 ஓவர்கள் என்ற முறையில் நடந்த முதல் ஒருநாள் போட்டி எது?

9. ஒரு ஒருநாள் போட்டியில் 112 ரன்கள் அடித்து,6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தவர் யார்?

10. உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய வயதான வீரர் யார்?

11. டெஸ்ட் போட்டியின் 5 நாட்களும் விளையாடிய பெருமையை(பொறுமையை) உடைய இரண்டு இந்தியர்கள் யார்?

12. உலகக்கோப்பையை வென்ற அணியில் இருந்த இவர், பின் தனது அணி மீண்டும் உலகக்கோப்பையை வென்ற பொழுது அணியின் பயிற்சியாளராக் இருந்தார்.யார் இவர்?

9 comments:

சிறில் அலெக்ஸ் said...

இந்தமுறை கேள்விகளே எடக்கு முடக்காய் இருப்பதால் நான் ஜூட்..

க்ளீன் பௌல்ட்.

:)))

மணிகண்டன் said...

என்னங்க சிறில், உங்க காமெடியான பதில்களை எதிர்பார்த்திட்டு இருந்தா ஏமாத்திட்டிங்களே :(

ரொம்ப கஷ்டமான கேள்வியா கேட்டுட்டேனோ?

வைசா said...

எனது அடுத்த முயற்சி:

1. WL Murdoch of Australia against England at the Oval in 1884.

2. Aminul Islam of Bangaladesh against India in 2000/01
DL Houghton of Zimbabwe against India in 1992

3. Against England at Leeds in 1974 (13th July 1974)

4. RT Ponting of Australia took 11 catches in 11 matches in 2003
If it's a wicket keeper, it's AC Gilchrist of Australia who took 21 catches in 10 matches in 2003

5. 185 matches by SR Tendulkar from 1989/90 to 1997/98

6. A Hill of England took the wicket of NFD Thomson and took the first catch as well.

7. India against Pakistan in March 2005. In the second Test, India was 407 all out in the first innings and 407 for 9 dec in the second.

8. West Indies v Australia in 1977/78 at Antigua

9. PD Collingwood of England scored an unbeaten 112 and took 6 for 31 against Bangaladesh at Trent Bridge, Nottingham in 2005

10. NE Clarke of Netherlands played at a tender age of 47 in 1995/96!

11. M Jaisimha scored unbeaten 20 and 74 against Australia at Calcutta in 1959-60
RJ Shastri scored 111 and unbeaten 7 against England at Calcutta in 1984-85

Poor Calcutta spectators!

12. Geoff Marsh of Australia won the World Cup in 1987 as a player and in 1999 as the coach

நன்றிகள்.

வைசா

மணிகண்டன் said...

வைசா,

கலக்கிட்டீங்க !! 8வது தவிர மீடி எல்லாம் சரி. 8வது பதில்ல ஒரு நாடு கரெக்ட்.

கொஞ்சம் முயற்சி பண்ணுங்க..

வாழ்த்துக்கள்.

மணிகண்டன் said...

வைசா,
8வது கேள்விக்கு ஒரு க்ளு. 50 ஓவர்கள் கொண்ட போட்டியா ஆரம்பிச்ச இந்த மேட்ச்,இடையில மழை காரணாமா 45 ஓவரா குறைக்கப்பட்டது. இருந்தாலும், அதிகாரபூர்வமான முதல் 50 ஓவர் மேட்சாக கருதப்படுகிறது.

மணிகண்டன் said...

வாங்க சரவணன்,

3,5,7 மட்டுமே சரி. மற்றவை தவறு.

முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

வைசா said...

// 8வது கேள்விக்கு ஒரு க்ளு. 50 ஓவர்கள் கொண்ட போட்டியா ஆரம்பிச்ச இந்த மேட்ச்,இடையில மழை காரணாமா 45 ஓவரா குறைக்கப்பட்டது. இருந்தாலும், அதிகாரபூர்வமான முதல் 50 ஓவர் மேட்சாக கருதப்படுகிறது. //

விடை இதோ:

West Indies v Pakistan in 1976/77 at Guyana

சரி தானா?

நன்றிகள்.

வைசா

மணிகண்டன் said...

வைசா,

கலக்கிட்டிங்க..எல்லா பதிலும் சரி.

வாழ்த்துக்கள்!!

மணிகண்டன் said...

கேள்விகளுக்கான விடைகள் வைசாவின் பின்னூட்டங்களில்..