Monday, February 12, 2007

சொந்த செலவில் சூனியம்





மேற்கிந்தியத்தீவுகளை தொரத்தி தொரத்தி அடிச்சாங்களே, இலங்கயையும் ஜெயிப்பாங்கன்னு ஒரு நம்பிக்கைல டிஷ் நெட்வ்வொர்க்ல 40 டாலர் கட்டி மேட்ச் பார்க்க முடிவு பண்ணேங்க. அதுதான் இப்போ சூனியமா போச்சு. முதல் மேட்சை நம்ம வருண பகவான் கவுத்தாரு. ரெண்டாவதை நம்ம பசங்களே தட்டுல வச்சு வெத்தலை பாக்கோட இலங்கைக்கு குடுத்துட்டாங்க. ஆக மொத்தம் 20 டாலர் எள்ளு. மீதி 20 டாலருக்காவது ஏதாவது நல்லது நடக்குதா பார்க்கலாம். 20 டாலருக்கு சரவணபவன்ல மிளகாப்பொடி தோசையும், மேங்கோ லஸ்ஸியுமாவது சாப்பிட்டிருக்கலாம். வயித்துக்கவது புண்ணியமா போயிருக்கும்.

ஈசியா ஜெயிச்சிருக்க வேண்டிய மேட்சை எப்படி தோக்கறதுன்னு நம்ம பசங்க கிட்டே எல்லாரும் ட்ரெயினிங் எடுத்துக்கலாம். இலங்கையை 257 ரன் எடுக்கவே விட்டிருக்கக் கூடாது.சரி அதாவது பரவாயில்லைனா, பேட்டிங்லயும் சொதப்பிட்டாங்க.டிராவிட் ஏதோ வண்டிய பிடிக்கபோற அவசரத்திலேயே விளையாடினாரு.வந்த உடனே ரொம்ப wideஆ பக்கத்து பிட்சுல விழுந்த பந்தை அடிக்க தொரத்துனாரு.அப்பவெ மனசுக்குள்ளே மணி அடிச்சிடிச்சு.போயி ஒழுங்கா படுத்தாவது தூங்கியிருக்கலாம். விதி யாரை விட்டுது.

சச்சினும் கங்கூலியும் இருந்த வரைக்கும் நம்பிக்கை இருந்துச்சு. 14 ஓவர் வரைக்கும் அடிச்சு விளாசுன அவிங்களும் அதுக்கப்புறம் ஒரு ரன்னே போதுங்கற மாதிரி தட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறங்கற மாதிரி, ஒன்னுமே இல்லாத பிட்சுலே ஏண்டா இப்படி கட்டை போடறிங்கனு கேக்க தோனுச்சு.டெண்டுல்கர் அவுட்டான பந்தை தவிர பண்டாரா வீசுன பந்துங்க அப்படி ஒன்னும் டர்ன் ஆன மாதிரி தெரியலை. ஆனா கிரிக்கெட்டோட அடிப்படை விதிப்படி, விக்கெட் டு விக்கெட் வீசினாரு. நம்ம பசங்க எப்ப தான் கத்துக்க போறங்களோ.

ஷேவாக் ஏதோ சிக்குன் குனியா வந்தவரு மாதிரி, ரொம்ப சோர்வா விளையாடினாரு. அவரோட Body Language பார்த்தா ஒரு நம்பிக்கையே இல்லாம விளையாடற மாதிரி தெரியுது. இவரை உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செஞ்சிருக்க வேண்டாமோன்னு தோனுது.பார்ப்போம் மீதி ரெண்டு மேட்சில என்ன பண்றாருன்னு. 4,6 ஏதவது அடிச்சா வெளில வந்தோன என்கவுண்டர்ல போட்டுத்தள்ளிடுவோம்னு டோனிய யாராவது மிரட்டுனாங்களா தெரியல. மனுசன் ஒரு ஸ்ட்ரோக்கு, ஹுஹும். இந்த லட்சணத்துல முதல் பந்தே கிளீன் போல்ட் வேற. அது நோ-பால்ன உடனே, ஆகா இந்தியாவுக்கு லக்குடா ஒக்கமக்கா அப்படின்னு நெனைச்சா, ஒன்னும் நடக்கல. பேசாம முதல்லயே அவுட்டாயி போயிருக்கலாம். மேட்சாவது சீக்கிரம் முடிஞ்சிருக்கும். கடைசி வரைக்கும் ஜெயிக்க போறோம், ஜெயிக்கபோறோம்னு படங்காட்டிட்டே வந்து கழுத்தறுத்தாங்க. சரி கடைசி பால்ல சிக்ஸ் அடிச்சு மியாண்டட் மாதிரி கலக்கப்போறாருன்னு பார்த்தா (நாம திருந்தவே மாட்டோம்ல ) வைடா போன பந்தை தொட்டுட்டு, அம்பையர வேற வைட் ஏண்டா தரலைனு ஒரு பார்வை பாக்குறாரு.

இவனுங்களை நம்பி பதிவெல்லாம் வேற ஆரம்பிச்சுட்டேன். உலகக்கோப்பையிலயாவது ஏதாவது பண்ணி மானத்த காப்பாத்துங்கப்பா. இதுல உலகக்கோப்பை போட்டிகள பார்க்குறதுக்கு டிஷ் நெட்வொர்க்ல 200 டாலராம். செந்தழல் ரவி மாதிரி யாராவது புண்ணியவான்கள் ஸ்பான்சர் பன்னுங்கப்பா :))

6 comments:

Anonymous said...

:-)))

மணிகண்டன் said...

பேரை சொல்லியிருக்கலாமே அனானி..

மு.கார்த்திகேயன் said...

கவலைப்படாதா மணிகண்டன்!

எல்லாமே நல்லபடியா ஆடுவாங்க நம்ம பசங்க

Naufal MQ said...

அழகான வர்ணனை மணிகண்டன். 20 டாலரை காப்பாற்ற வாழ்த்துக்கள்.

மணிகண்டன் said...

//எல்லாமே நல்லபடியா ஆடுவாங்க நம்ம பசங்க //

நல்லா ஆடுனா சந்தோஷம் தாங்க..

மணிகண்டன் said...

//அழகான வர்ணனை மணிகண்டன். 20 டாலரை காப்பாற்ற வாழ்த்துக்கள். //

20 டாலரை விட இந்தியா ஜெயிச்சா சந்தோஷம் தான்..