டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் அணிகள் மற்றும் அதன் வீரர்களின் தரவரிசையை எல்.ஜி. மற்றும் ஐ.சி.சி இணைந்து வெளியிட்டு வருகிறது.
ஒருநாள் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான எல்.ஜி ஐ.சி.சி தரவரிசை முதன்முதலில் அக்டோபர் 2002ல் வெளியிடப்பட்டது. அன்று முதல் இவ்வரிசையில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது ஆஸ்திரேலியா அணி. தற்பொழுது அவ்விடத்தை தென்னாப்பிரிக்க அணியிடம் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த காமன்வெல்த் பேங்க் தொடரில் இரண்டு இறுதிப்போட்டிகளிலும் இங்கிலாந்திடம் தோற்று கோப்பையை நழுவவிட்டது ஆஸ்திரேலியா. அடிமேல் அடியாக நேற்று நியூஸிலாந்தில் நடைபெற்ற சாப்பல்-ஹேட்லி கோப்பையின் முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோற்று மரணஅடி வாங்கியுள்ளது. உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில் தொடர்ந்து தோற்று வருவது ஆஸ்திரேலிய அணியில் பீதியை ஏற்படுத்துமா?
பாகிஸ்தானுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடரை தென்னாப்பிரிக்கா 3-1 என்ற நிலையில் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் தரவரிசை ரேட்டிங்கில் 128 புள்ளிகள்(4595 புள்ளிகள்/36 போட்டிகள்) பெற்று ஆஸ்திரேலியாவுடன்(ரேட்டிங் 128, 5633 புள்ளிகள்/44 போட்டிகள்) சமமாக முதலிடத்தில் உள்ளது.நியூஸிலாந்துடனான முதல் போட்டியில் தோல்வியுற்ற ஆஸ்திரேலியா மீதமுள்ள இரண்டு போட்டிகளில் தோற்றால் முதல் இடத்தை இழக்கும். கடந்த ஐந்து வருடங்களாக் முதல் இடத்தில் இருந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு பின்னடைவாகும்.
இவ்வரிசையில் இந்தியா தற்பொழுது 6வது இடத்தில் உள்ளது( ரேட்டிங் 108,5084 புள்ளிகள்/47 போட்டிகள்). விசாகப்பட்டினத்தில் வரும் 17ம் தேதி இலங்கையுடன் நடைபெறும் இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கையை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்தை பெறும்.
ஒருநாள் போட்டிகளுக்கான தற்போதைய தரவரிசைப் பட்டியல்
Team       *Matches    Points    Rating
Australia     44        5633      128
South Africa  36        4595      128
Pakistan      34        3780      111
New Zealand   35        3818      109
Sri Lanka     43        4675      109
India         47        5084      108
England       36        3806      106
West Indies   39        3956      101
Bangladesh    35        1454      42
Zimbabwe      34        755       22
Kenya         9         0         0
Last updated: 16 Feb 2007
* Matches palyed since August 2005
Friday, February 16, 2007
முதல் இடத்தை இழக்குமா ஆஸ்திரேலியா ?
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 10:36 AM
Labels: ஆஸ்திரேலியா, கிரிக்கெட்
Subscribe to:
Post Comments (Atom)




11 comments:
தரவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
நன்றி ஆவி அம்மணி
ஆஸ்திரேலியா தான் விளையாடிய 646 ஒருநாள் போட்டிகளில் முதல்முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுள்ளது !!
நேற்று தோற்ற ஆஸி அணி ஒரு இரண்டாம் தர அணி. அவசரப்பட வேண்டாம்.
அட! முதன் முறையாக ஆஸ்திரேலியா முதல் இடத்தில் இல்லாமல் ஒரு தரப்பட்டியல் வரப்போகிறதா.. அதிசயம் தான் மணிகண்டன்!
18/02/2007 அன்று ஆஸ்திரேலியா நியூசிலாந்திடம் 2ஆவது போட்டியிலும் தோற்று(336 ரன்கள் எடுத்தும்) 2ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
தென்னாப்பிரிக்கா முதலிடம்.
//நேற்று தோற்ற ஆஸி அணி ஒரு இரண்டாம் தர அணி. அவசரப்பட வேண்டாம்//
இருக்கலாம்.ஆனால் இங்கிலாந்திடம் தோற்றது முதல்தர அணிதானே?
//அட! முதன் முறையாக ஆஸ்திரேலியா முதல் இடத்தில் இல்லாமல் ஒரு தரப்பட்டியல் வரப்போகிறதா.. அதிசயம் தான் மணிகண்டன்! //
ஆமாங்க கார்த்தி,முதல்தடவையா..பெரிய சறுக்கல்தான் ஆஸ்திரேலியாவுக்கு.
//18/02/2007 அன்று ஆஸ்திரேலியா நியூசிலாந்திடம் 2ஆவது போட்டியிலும் தோற்று(336 ரன்கள் எடுத்தும்) 2ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
தென்னாப்பிரிக்கா முதலிடம். //
தகவலுக்கு நன்றி அபுல்.இப்பொ ரெண்டு புள்ளி வித்தியாசத்தில ஆஸ்திரேலிய இரண்டாவது இடத்தில இருக்காங்க.
இன்று (20/02/2007) நடந்த 3ஆவது போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வி. நியூஸிலாந்து 346 ரன்களை துரத்தி வென்றது. மெக்மில்லன் 117, புல்டன் 51 மற்றும் மெக்கல்லம் 86(நாட் அவுட்). முன்னதாக மேத்யூ ஹைடன் 181(நாட் அவுட்) ஆஸ்திரேலியா அணியில் தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோர் அடித்தார்.
இந்த மேட்சில் மொத்தம் 26 சிக்ஸர்கள்..
ஆஸ்திரேலியாவில் எல்லோரும் பேட்டிங் செய்வார்கள் .. ஆனால் பௌலிங்?? மெக்ராத் மற்றும் பிரட் லீ மட்டுமே அவர்களின் பலம்.. தற்போது கேள்விக்குறியாக உள்ளது..
இந்நிலையில் பிரட் லீ காயம் காரணமாக உலகக்கோப்பையில் சில மேட்ச்களைத் தவரவிடுவாரென்றும் தோன்றுகிறது..
Post a Comment