Wednesday, February 14, 2007

கண்டுபிடியுங்கள் - கிரிக்கெட் புதிர்போட்டி



சினிமா, அரசியல்,ஃபோட்டோ, கவிதைன்னு எல்லா விதமான போட்டிலயும் கலக்குற நம்ம பதிவர்கள் கிரிக்கெட் அறிவை சோதிக்க சில கேள்விகள். பதிலை பின்னூட்டத்தில் போடுங்க.

பரிசு? வேறென்ன இதயத்தில் ஒரு இடந்தான் :)) ( ஐடியா உதவி : நாமக்கல் சிபியார் )




1. டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் அடித்த வீரர் யார்?

2. முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?

3. எத்தனை விதமான முறைகளில் ஒரு பேட்ஸ்மெனை அவுட்டாக்க முடியும்?

4. முதல் ஒரு நாள் போட்டியின் முதல் பந்தை வீசியவர் யார்?

5. ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை தொடர்ந்து ஆட்ட நாயகன் விருது பெற்றவர் யார்?

6. தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் யார்?

7. 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தான் மொத்தமாக அடித்த ரன்களை விட அதிக விக்கெட்களை வீழ்த்திய ஒரே வீரர் யார்?

8. இம்மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே ஒரு விக்கெட் விழுந்தது? இச்சாதனையை படைத்த ஒரே மைதானம் இதுதான். எந்த மைதானம்?

9. மூன்றாவது நடுவரால் அவுட் கொடுக்கப்பட்ட முதல் வீரர் யார்?

10. 'Obstructing the Field' என்ற முறையில் அவுட்டான முதல் வீரர் யார்?

பார்க்கலாம் எவ்வளவு பேர் சரியா சொல்றாங்கன்னு?

39 comments:

நாமக்கல் சிபி said...

1. The first batsman to make century in test cricket was
Charles Bannerman of Australia.

2.First Test match was played between Canada and U.S.A. in 1844.The first one-day match was played between England and Australia in 1971.

3. 6 முறைகள்.
அ. கேட்ச்
ஆ. போல்ட்
இ. எல்.பி.டபிள்யூ
ஈ. ரன் அவுட்
உ. ஸ்டம்பிங்க்
ஊ. பேட்ஸ் மேனே பேட்டால் ஸ்டம்பைத் தட்டிவிட்டுக் கொண்டால்

நாமக்கல் சிபி said...

9. சச்சின் டெண்டுல்கர்

மணிகண்டன் said...

சிபியாரே,

1,2,9 கரெக்ட். 3வது தப்பு.

மீதியையும் முயற்சி பண்ணுங்க. கூகுளாண்டவர் அருள் புரிவாராக :)

நாமக்கல் சிபி said...

10. Russell Endean

நாமக்கல் சிபி said...

3. 7 முறைகளில் அவுட் ஆக்கலாம்!

நாமக்கல் சிபி said...

4. Thomson

மணிகண்டன் said...

சிபியாரே,

3,4,10 எல்லாம் தப்புங்க

நாமக்கல் சிபி said...

4. Graham Mckezie

இதுதான் சரியான விடை!

மணிகண்டன் said...

சிபி இப்போ 4வது கரெக்டுங்க..கலக்குங்க

நாமக்கல் சிபி said...

3. 10 விதங்களில் அவுட் செய்யலாம்!

1.caught
2.bowled
3. LBW
4. stump
5. run out
6. timed out
7. Handling the bowl
8. Hit wicket
9. obstructing fielder
10. hitting the ball twice

சிறில் அலெக்ஸ் said...

1. டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் அடித்த வீரர் யார்?

அந்த மேட்சின் மேன் ஆஃப் த மாட்ச்

2. முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?
ஜெயிச்ச டீமுக்கும் இந்தியாவுக்கும் அல்லது
அமிர்கான் டீமுக்கும் ஆங்கிலேயர் டீமுக்கும்

3. எத்தனை விதமான முறைகளில் ஒரு பேட்ஸ்மெனை அவுட்டாக்க முடியும்?
ஒரே வழிதான் அவர விளையாட வைக்கணும். விளையாடாத பேட்ஸ்மேன் அவுட் ஆக மாட்டார்
4. முதல் ஒரு நாள் போட்டியின் முதல் பந்தை வீசியவர் யார்?
ஓப்பனிங் பௌலர்
5. ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை தொடர்ந்து ஆட்ட நாயகன் விருது பெற்றவர் யார்?
தொடர்ந்து நல்லா ஆடியவர்
6. தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் யார்?
டெஸ்ட் போட்டி அதிகமா அஅடறவங்க 'வீரர்' இல்ல
7. 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தான் மொத்தமாக அடித்த ரன்களை விட அதிக விக்கெட்களை வீழ்த்திய ஒரே வீரர் யார்?
அட இந்தியராத்தான் இருக்கணும்
8. இம்மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே ஒரு விக்கெட் விழுந்தது? இச்சாதனையை படைத்த ஒரே மைதானம் இதுதான். எந்த மைதானம்?
சரியா மெயிண்டைன் பண்ணாத மைதானம்
9. மூன்றாவது நடுவரால் அவுட் கொடுக்கப்பட்ட முதல் வீரர் யார்?
ஓடத் தெரியாதவர்
10. 'Obstructing the Field' என்ற முறையில் அவுட்டான முதல் வீரர் யார்?
தடி மாடு

எப்டி நம்ம க்ரிக்கட் அறிவு?
:)))

நாமக்கல் சிபி said...

5. Sachin Tendulkar

மணிகண்டன் said...

சிறில், உங்க க்ரிக்கெட் அறிவு சூப்பரோ சூப்பர்.

விழுந்து விழுந்து சிரிச்சேங்க. அத பார்த்து கடுப்பான மேனஜரு மீட்டிங்குக்கு கூப்பிட்டுட்டாரு..

மணிகண்டன் said...

சிபியாரே, விடாம் முயற்சி பண்றீங்க..

3 இப்போ கரெக்ட், 5 தப்பு

நாமக்கல் சிபி said...

6. Steve Waugh

நாமக்கல் சிபி said...

5. jeya surya

சிறில் அலெக்ஸ் said...

பதிவாவே போட்டுட்டேன்.

மணிகண்டன் said...

//சிறில் said
பதிவாவே போட்டுட்டேன் //

கலக்குங்க

மணிகண்டன் said...

சிபி சார், 4,5 6 எல்லாம் தப்பு. கூகுளாண்டவர்கிட்டே கரெக்டா வேண்டுங்க, அருள் புரிவார்.

இலவசக்கொத்தனார் said...

1) முதல் டெஸ்ட் போட்டியிலே அவுஸ்திரேலியாவிற்காக பேனர்மேன் என்பவர் முதல் இன்னிங்க்ஸில் 165
ரன்கள் அடித்தார்.

2) 1877ஆம் வருடம் அவுஸ்திரேலியாவிற்கும் இங்கிலாந்துக்கும் மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் மார்ச்சு மாதம் 15ஆம் திகதியில் இருந்து 19ஆம் திகதி வரை நடை பெற்றது.

3) 11 வழிகளில் ஒரு பேட்ஸ்மன் ஆட்டக்களத்தில் இருந்து வெளியேற்றப்பட முடியும். அவை முறையே - Bowled, Caught, LBW, Run Out, Stumped, Hit Wicket, Obstructing the field, Hitting the ball twice, Handling the ball, Timed out and Retired.

4) 5 ஜனவரி 1971 இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் முதல் பந்தை வீசியவர் அவுஸ்திரேலியரான மெகின்ஸீ.

5) சவுரவ் கங்குலி - 5 முறை

6) அவுஸ்திரேலியாவிற்காக தொடர்ந்து 153 போட்டிகளில் விளையாடிய அலன் பார்டர் இச்சாதனைக்குச் சொந்தக்காரர்.

7) 40 போட்டிகள் எனச் சொல்லிவிட்டீர்களே! சரியாகத் தெரியவில்லை. ஆனால் பி.எஸ்.சந்திரசேகர் 58 போட்டிகளில் அடித்த ரன்கள் 167 ஆனால் எடுத்த விக்கட்கள் 242!

8) நல்ல கேள்வி. பதில் தெரியலையே!

9) 1992ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சச்சின் டெண்டுல்கர் மூன்றவது நடுவரால் ரன் அவுட் எனத் தீர்பளித்து அவுட் கொடுக்கப்பட்டார்.

10) இங்கிலாந்தின் லென் ஹட்டன்.

மணிகண்டன் said...

வாங்க கொத்ஸ், மொத தடவையா வந்திருகீங்க.

1.சரி
2. தவறு
3. சரிக்கும் மேலே ?? நீங்க சொல்லியிருக்குறதுக்கும் ஒன்னு கம்மி.
4,5 சரி
6 தவறு
7,9,10 சரி
8 எதுவும் சொல்லலை

ஆக 6/10 வாழ்த்துக்கள்

மணிகண்டன் said...

ஒரு சிறு திருத்தம்..

ஏழாவது கேள்வியில் 40 போட்டிகள் என்பது தவறு. அது 58 போட்டிகள்.

சிட்டிக்காட்டிய நம்ம கொத்தனாருக்கு நன்றி.

இலவசக்கொத்தனார் said...

2. இதுதாங்க முதல் சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டி - 1877 Mar 15 Australia v England Melbourne

நீங்க ஒரு நாள் போட்டின்னு கேட்கலை. அது இது - 1971 Jan 5 Australia v England Melbourne

3.இல்லீங்க. நான் சொன்னது சரிதான். ரிடயர்ட் கூட ஒரு வழியில் அவுட் ஆகறதுதான். இது பத்தி ஒரு குறிப்பு.

"Law 2.9(b) : Retired

If any batsman leaves the field of play without the Umpire's consent for any reason other than injury or incapacity, he may resume the innings only with the consent of the opposing captain. If he fails to resume his innings, he recorded as being Retired - out.

Only two players in Test history have ever been given out in this manner, Marvan Atapattu and Mahela Jayawardene - both in the same innings of the same match playing for Sri Lanka against Bangladesh in September 2001."

6. என்ன இது தப்புன்னு சொல்லிட்டீங்க? Most Consecutive Test Match Appearances - 153 by AR Border (Aus) starting from Melbourne 1978/79 to Durban 1993/94

மணிகண்டன் said...

கொத்ஸ்,

6 சரி, சின்ன குழப்பம் ஆயிடுச்சு
3. rules எல்லாம் காண்பிக்கிறீங்க. அதனால சரி.

2 தவறுங்க. என்னோட கேள்வில முதல் சர்வதேச போட்டினுதான் கேட்டிருக்கேன். பதிலுக்கான போட்டி நடந்தப்ப 'Test Match'ங்கற format உபயோகத்தில் இல்ல. நீங்க சொன்ன பதில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிக்கு சரி.

மணிகண்டன் said...

8வது கேள்விக்கு க்ளு
அவுட்டானவர் : சுனில் கவாஸ்கர்
வருடம் : சமீபத்தில் 1987 :)

இலவசக்கொத்தனார் said...

8. க்ளூவிற்கு நன்றி. இல்லைன்னா பிடிச்சு இருக்க முடியாது. சவாய் மான்சிங் அரங்கம், ஜெய்ப்பூர். இங்கு இது வரை ஒரே ஒரு போட்டிதான் நடந்து இருக்கு.

மணிகண்டன் said...

க்ளு குடுத்த உடனே கண்டுபிடிச்சிட்டீங்களே கொத்ஸ்.வாழ்த்துக்கள்.
ஆக 9/10 கரெக்டா சொல்லி கலக்கியிருக்கீங்க.

இலவசக்கொத்தனார் said...

1859ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி ஒன்று வட அமெரிக்கா சென்றது. இதுதான் முதல் சர்வதேச போட்டியா?

மணிகண்டன் said...

கொத்ஸ், 2வது பதிலுக்கு கொஞ்சம் நெருங்கி வந்திட்டிங்க. உங்க பதில்ல இருக்க ஒரு நாடு சரி,இன்னொன்னு தப்பு :)

இலவசக்கொத்தனார் said...

சரி கடைசி முயற்சி. அதே 1859ஆம் வருடம் இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும்.

ஆனால் அவர்கள் அவுஸ்திரேலியா போகும் முன் வட அமெரிக்காவும் சென்றதாக தகவல்கள் உள்ளன!

மணிகண்டன் said...

நல்லா முயற்சி பண்றீங்க கொத்ஸ்..ஆனா சாரிங்க பதில் தவறு.

கூகுளாண்டவரை கேளுங்க, முதல் பதிலே சரியா சொல்றாரு :)

இலவசக்கொத்தனார் said...

//The first international game took place between England and XXII of the United States at Hoboken, New Jersey, on 3, 4 and 5 October 1859, England scoring 156 and dismissing the USA XXII for 38 and 54.//

இதைப்பாருங்க. cricinfo சுட்டி - http://content-usa.cricinfo.com/usa/content/story/261614.html

மணிகண்டன் said...

கொத்ஸ்,

நீங்க சொல்றதுல இங்கிலாந்துக்கும் அமெரிக்காவின் XXII நடந்த போட்டி தொடரை பத்தி சொல்லியிருக்காங்க.

என்னோட கேள்விக்கான பதில்
1844 First official international match: Canada v United States

அதற்கான சுட்டி அதே cricinfoல இங்கே இருக்கு. இந்த பக்கத்தில ஒவ்வொரு வருஷமும் கிரிக்கெட்ல நடந்தத பத்தி போட்டிருக்காங்க. அதுல 1844ல முதல் அதிகாரபூர்வமான சர்வதேச போட்டி நடந்ததா சொல்லியிருக்காங்க.

விடாமல் முயன்றதற்க்கு வாழ்த்துக்கள்.

இலவசக்கொத்தனார் said...

பதிலைச் சொன்னதிற்க்கு நன்றி. (இல்லைன்னா தூங்கி இருக்க மாட்டோமில்ல!) :))

மணிகண்டன் said...

//பதிலைச் சொன்னதிற்க்கு நன்றி. (இல்லைன்னா தூங்கி இருக்க மாட்டோமில்ல!) :)) //

நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க.நாளைக்கு இன்னொரு போட்டி இருக்குல்ல :)

மணிகண்டன் said...

வாங்க அனானி,

6,9ம் சரி.

மணிகண்டன் said...

வாங்க பதிவுலக நண்பர்களே,

வந்து உங்க திறமைய காட்டுங்க !!

இலவசக்கொத்தனார் said...

//வாங்க கொத்ஸ், மொத தடவையா வந்திருகீங்க.//

மொத தடவை எல்லாம் இல்லீங்க. அடிக்கடி வரதுதான். இப்போதான் கேள்வி கேட்டீங்க.பதில் சொல்லியாச்சு.

(இப்போ எதுக்கு இந்த பதில்ன்னு கேட்கறீங்களா? எல்லாம் ஒரு பி.க.தான்)

மணிகண்டன் said...

விடைகள் இங்கே