Friday, February 9, 2007

உலகக்கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் ஜொலிப்பார் - பிரையன் லாரா

மேற்கிந்தியத்தீவுகளின் தலைசிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவரான லாரா இவ்வாறு கூறியுள்ளார்.சச்சினைக் கண்டு நான் வியக்கிறேன்.இந்திய கிரிக்கெட்டுக்கு அவரின் பங்கு மகத்தானது.சச்சினின் சிறப்பான ஆட்டத்தை இந்த உலகக்கோப்பையில் மீண்டும் அனைவரும் கானப்போகிறார்கள்.சச்சின் மோசமாக விளையாடுவதாக் நான் கருதவில்லை.அவரை விட அதிகமாக கடினமான நேரங்களை நான் கடந்து வந்துள்ளேன்.இந்த உலகக்கோப்பையின் சிறந்த ஆட்டக்காரராக் அவர் விளங்குவார் என லாரா தெரிவித்துள்ளார்.

அவர் சொன்னது நடந்தா நல்லாதானிருக்கும்..

George Bush Plays Cricket

சென்ற ஆண்டு நடந்த பாகிஸ்தான் பயணத்தின் பொழுது இஸ்லாமாபாத்தில் புஷ் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள்இதுல ரொம்ப காமெடியா இருக்குறாரு..இதெல்லாம் நல்லாத்தான் பண்றாரு.ஈராக்கில தான் கோட்டை விட்டுடறாரு :)

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக Mike Hussey நியமனம்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக Mike Hussey நியமனம். நியூஸிலாந்தில் நடைபெறவிருக்கும் சாப்பல்--ஹேட்லி கோப்பைக்கான மூன்று ஒருநாள் போட்டிகளில் ஹஸ்ஸே கேப்டனாக இருப்பார் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதைப்பற்றி கூறிய தேர்வுக்குழுவின் தலைவர், காயம் காரணமாக ரிக்கி பான்ட்டிங் இந்த போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதுமட்டுமன்றி மேற்கிந்தியத்தீவுகளில் ந்டைபெற உள்ள உலகக்கோப்பைக்கு முன் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அணியின் தற்போதைய துணை கேப்டனான கில்கிறிஸ்டுக்கும் சுழற்சி முறையில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நியூஸிலாந்து செல்லும் அணியின் கேப்டனாக் ஹஸ்ஸேவும் துணை கேப்டனாக மைக்கேல் க்ளர்க்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றார். உலகக்கோப்பை போட்டிகளில் மீண்டும் ரிக்கி பான்ட்டிங் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொள்வார்.

**************************காமன்வெல்த் பேங்க் தொடரின் முதல் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது.இவ்வணியின் ஹெய்டன் 82 ரன்களும் பான்ட்டிங் 75 ரன்களும் எடுத்தனர்.தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 49.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றுள்ளது.காலிங்வுட் 120 ரன்களும் பெல் 65 ரன்களும் எடுத்தனர்.மொத்தம் மூன்று இறுதிப்போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி இது. அடுத்த இறுதிப்போட்டி வரும் ஞாயிறன்று ஸிட்னியில் நடைபெறும்.

**************************

பாகிஸ்தான் தென்னாப்பிரிக்க அணியிடையே மூன்றாவது ஒரு நாள் போட்டி தற்பொழுது நடந்து வருகிறது. டாஸில் ஜெயித்து களமிறங்கிய பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்துள்ளது.முகமது யூஸுஃப் 79 ரன்கள் எடுத்துள்ளார்.தென்னாப்பிரிக்கா இன்னும் பேட் செய்யவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணியினரும் ஒரு முறை வென்றுள்ளனர்.

**************************
உலகக்கோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் கய்ஃப் இடம்பெறாதது குறித்து தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் அஜித் வடேகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.சமீபத்திய போட்டிகளில் அவர் நன்றாகவே விளையாடியுள்ளார்.வாய்ப்புகள் கிடைத்தபொழுது தனது திறமையை நிரூபித்துள்ளார்.ஆகவே அவரை அணியில் சேர்ப்பதை பரீசிலிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். மேற்கிந்தியத்தீவுகளில் இந்தியா விளையாடிய பொழுது 5 போட்டிகளில் 3 அரை சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Thursday, February 8, 2007

மறக்க முடியுமா - 2ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு இந்தியா ஜெயிச்ச ஒரே உலகக்கோப்பை.இதுக்கு முன்னால நடந்த 2 உலகக்கோப்பையிலும் சேர்த்து இந்தியா ஒரே ஒரு போட்டியில தான் ஜெயிச்சிருந்துச்சு (1975ல கிழக்கு ஆப்பிரிக்கா அணியோட).

அதனால 1983ல நடந்த உலகக்கோப்பையில அவ்வளவா எதிர்பார்ப்பு இல்லாத ஒரு அணியாதான் நுழைஞ்சுது.ஆனா யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு விளையாடி, இறுதி வரைக்கும் வந்துது. இறுதிப் போட்டியில அப்போதைய ஜாம்பவானான மேற்கிந்தியத்தீவுகளை
140 ரன்னுக்கு சுருட்டி 43 ரன் வித்தியாசத்துல ஜெயிச்சு கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணியின் அப்போதைய கேப்டன் கபில்தேவ் கோப்பையை வாங்கும் காட்சி..இந்தியா மறுபடியும் ஜெயிக்க ஒரு + போட்டுட்டு போங்க..புண்ணியாமா போவும்.

நினைவுகள் தொடரும்..

கங்காருவுக்கு மணி கட்டப்போவது யார் ?சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பான்ட்டிங் அளித்துள்ள பேட்டியின் விபரம்..

ஆஸ்திரேலிய அணிக்கு சரிசமமான போட்டியாளர்கள் இல்லாதது போல் தெரிகிறதே?

நான் அவ்வாறு நினைக்கவில்லை.நாங்கள் வங்காளதேசத்திடம் கூட ஒருமுறை தோற்றுள்ளோம். கிரிக்கெட் என்பது எதிர்பாராத ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு விளையாட்டு. ஆனால் எனது அணி தன் முழுபலத்துடன் விளையாடுகையில் எங்களை வெல்வதற்கு சிறப்பான முயற்சி செய்யவேண்டும். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் தனக்கான பணி என்ன என்பதை அறிந்து அதை தேவையான தருணத்தில் செய்கிறார்கள். 1999 மற்றும் 2003 இருமுறை தொடர்ந்து உலகக்கோப்பையை வென்றுள்ளோம்.இம்முறையும் அதை தக்க வைத்துக்கொள்ள முயல்வோம்.

சிறப்பான முயற்சி என்றால்?

உதாரணமாக சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணி நாங்கள் அடித்த 434 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டியது போல.அது ஒரு அசாதாரணமான் வெற்றி. நாங்கள் எப்பொழுதும் நம்பிக்கையை இழப்பதில்லை. ஆகவே எதிரணியினர் 100 சதவிகித ஈடுபாட்டுடன் முயற்சிக்க வேண்டியுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள வேகம் குறைவான ஆடுகளங்கள் எதிரணியினருக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறீர்களா?

அனைத்து விதமான ஆடுகளங்களிலும் நாங்கள் வென்றுள்ளோம். அதுதான் எங்கள் அணியின் சிறப்பு. கடந்த ஐ.சி.சி. சேம்பியன்ஸ் கோப்பை இந்தியாவில் ந்டைபெற்ற பொழுது,அனைத்து ஆடுகளங்களும் மிகவும் கடினமாகவே இருந்தன. ஆனாலும் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். இந்திய துணைகண்டம்,இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் என அனைத்து இடங்களிலும் வென்றுள்ளோம். இதை நாங்கள் பெருமையாகவே கருதுகிறோம்.

ஆஸ்திரேலிய அணிக்கு வயதாகி வருவதாக எழுந்துள்ள விமர்சனம் பற்றி?

நானும் இதை கேள்விப்பட்டேன். நன்றாக விளையாடுவதுதான் முக்கியம். 20 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளி வீழ்த்துபவருக்கு, 40 வயதாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை.

'Defending Champions' என்ற நிலை அணியினரிடையே மனஅழுத்தத்தை உருவாக்கியுள்ளதா?

அழுத்தம் என்பது எப்பொழுதும் இருக்கும் ஒன்று. அதை எவ்வாறு கையாள்கிறோம் என்பதே முக்கியம். சிலருக்கு அதுவே எதிராக அமையலாம், சிலருக்கு அதுவே ஊக்குவிக்கும் அம்சமாக இருக்கலாம்.

Mike Hussey பற்றி ?

சமீப காலமாக வெகு சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் ஒரு மிகச் சிறந்த வீரர். மேற்கிந்தியத்தீவுகளிலும் இதேபோல் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன்.

இன்றைய கிரிக்கெட் செய்திகள்பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா இடையே ஞாயிறன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியின் பொழுது, ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்புகையில் தன்னை கேலி செய்த ரசிகரை மட்டையை காட்டி மிரட்டியதாக அஃப்ரிடியின் மேல் குற்றச்சாட்டு எழுந்தது. ஐ.சி.சி.யின் கிறிஸ் போர்ட் இதைப்பற்றி விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் அஃப்ரிடிக்கு 2 முதல் 4 டெஸ்ட் போட்டிகளிலும் 4 முதல் 8 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்படும்.

***************************
இந்தியா - இலங்கை இடையேயான கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக இடையிலேயே கைவிடப்பட்டது. டாசில் ஜெயித்த இந்தியா, இலங்கையை முதலில் பேட் செய்யுமாறு பணித்தது. இலங்கை 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. ஜெயசூர்யா 63 ரன்களும் அட்டபட்டு 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியாவின் முனாஃப் படேல் 2 விக்கெட்களையும் ஸ்ரீசாந்த் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இவ்விரு அணிகளிடையேயான இரண்டாவது போட்டி வரும் 11ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.

***************************கிரிக்கெட் புக்கி கொச்சாருடன், சாமுவேல்ஸ் தொலைபேசியில் உரையாடிய சம்பவம் குறித்த விசாரனையை பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி தொடங்கியுள்ளது. இது Match Fixing போல் தெரியவில்லையென்றாலும், தனது அணியின் தகவல்களை வெளியே சொல்லியது ஐ.சி.சி. யின் விதிகளை மீறியாதாகும். இதுபற்றிய விசாரனை அறிக்கை மேற்கிந்தியதீவுகளின் கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பப்படும், சாமுவேல்சின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை அவர்களே முடிவு செய்வார்கள் என்றும் ஐ.சி.சி. யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இத்தொலைபேசி உரையாடலில் ராபின் சிங் என்பவரின் பெயரும் உள்ளது. இது இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் சிங்கா என்பது தெரியவில்லை. ராபின்சிங் மேற்கிந்தியத்தீவுகளில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உரையாடலில் உள்ளது அவர்தானா என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், இவ்விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று மஹாராஷ்டிர மாநில டி.ஜி.பி. பஸ்ரிச்சா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனது மகன் சாமுவேல்சும், கொச்சாரும் ஆறு வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாக உள்ளனர்.இதுபோன்ற விஷயங்களில் நிச்சயமாக எனது மகன் ஈடுபட மாட்டான் என்று சாமுவேல்சின் தாயார் லுனன் சொல்லியிருக்கிறார்.

***************************

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன்வெல்த் பேங்க் தொடரின் முதல் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் நாளை மோதுகின்றன.

Wednesday, February 7, 2007

உலகக்கோப்பை - சில சுவாரசியமான தகவல்கள் - 4உலக்கோப்பையின் முதல் பந்தை வீசிய பெருமையை பெறுபவர் இந்தியாவின் மதன்லால். 1975ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி நடந்த முதல் போட்டியில் முதல் பந்தை இங்கிலாந்தின் டென்னிஸ் அமிஸுக்கு வீசினார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மொத்த 60 ஓவர்களிலும் ஆட்டமிழக்காமல் விளையாடி 36 ரன்களை சேர்த்த பெருமையை (பொறுமையை?) பெறுபவர் சுனில் கவாஸ்கர். இப்போட்டியில் இந்தியா 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

1979 உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த 139 ரன்களே இறுதிப்போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகும்.

பி.பி.சி.யின் வேலைநிறுத்தத்தினால், 1983 உலகக்கோப்பையில் ஜிம்ப்பாப்வேவுக்கு எதிராக கபில்தேவ் அடித்த 175 ரன்கள் பதிவு செய்யப்படாமல் போனது.

முதல்முறையாக 1987ல் உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தை விட்டு இந்திய துணைக்கண்டத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து மூன்று முறை ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற முதல் வீரர் இங்கிலாந்தின் கிரஹம் கூச்.

தொடர்ந்து ஆறு உலகக்கோப்பைகளில் பங்கேற்றவர் பாகிஸ்தானின் மியாண்டட். இவர் 1975 முதல் 1996 வரை நடந்த போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஒரே உலகக்கோப்பையில்(1996) 3 சதங்கள் அடித்தவர் ஆஸ்திரேலியாவின் மார்க் வாஹ்.

1996 உலக்கோப்பையில் கென்யாவுக்கு எதிராக இலங்கை அடித்த 398 ரன்களே ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இலங்கைக்கு எதிராக 1999 உலக்க்கோப்பையில் அடித்த 373 ரன்களே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும்.

சென்ற உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராக விளையாடிய கனடா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதுவே உலகக்கோப்பை வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோராகும்.

டேவிட் ஷெப்பர்ட் 46 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றிய பெருமையை பெறுகிறார். இவருக்கு அடுத்தபடியாக ஸ்டிவ் பக்னர் 34 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியுள்ளார்.

உலகக்கோப்பையில் அதிக கேட்ச் பிடித்தவர் ரிக்கி பான்ட்டிங்.இவர் மொத்தம் 18 கேட்ச்களை பிடித்துள்ளார்.

1999ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து 59 உபரி ரன்களை கொடுத்து முதல் இடத்தை பெறுகிறது. இதில் 5 பை 6 லெக்பை 33 வைட் மற்றும் 15 நோ-பால்கள் அடங்கும்.இரண்டாவது இடத்தில் வருவது இந்தியா. 1999ல் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 51 உபரி ரன்களைக் கொடுத்தது. இதில் 14 லெக்பை 21 வைட் மற்றும் 16 நோ-பால்கள் அடங்கும்.

தகவல்கள் தொடரும்..

Shane Warne's Magicஉலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஷேன் வார்ன். கடந்த ஜனவரி மாதம் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் மற்றும் பல சாதனைகளையும் புரிந்துள்ளார்.

தான் வீசிய பந்துகளில் சிறந்த 8 பந்துகளாக இவர் தேர்ந்தெடுத்துள்ள பந்துகளின் வீடியோ தொகுப்பு. பார்த்து மகிழுங்கள்

மீண்டும் Match Fixing ???இந்தியாவிற்கும் மேற்கிந்தியத்தீவுகளுக்கும் கடந்த மாதம் 21ம் தேதி நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் Match Fixing (சரியான தமிழ் பதம் என்னங்க?) நடந்திருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்கிந்தியத்தீவுகளின் மார்லோன் சாமுவேல்ஸ், அன்றைய போட்டியில் விளையாடப் போகும் தனது அணி பற்றிய ரகசிய தகவல்களை முன்கூட்டியே முகேஷ் கோச்சார் என்ற புக்கியிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது.இதுபற்றிய புகாரை நாக்பூர் காவல்துறையினர் பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.சி.சி.க்கு அனுப்பியுள்ளனர்.

இதைபற்றி பேட்டியளித்த நாக்பூர் உதவி ஆணையாளர் அமிதேஷ் குமார், சாமுவேல்சுக்கும் கோச்சாருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.பலமுறை இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், மேற்கிந்தியத்தீவுகளின் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆர்டர் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.இதில் பணப்பரிமாற்றம் ஏதும் நடந்ததா எனத் தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

பி.சி.சி.ஐ செயலாளர் நிரஞ்சன் ஷா 'நாக்பூர் காவல்துறையினரின் அறிக்கை இன்னும் எங்களிடம் வரவில்லை.அது கிடைத்ததும் அதைப்பற்றிய அறிக்கையை ஐ.சி.சி.க்கு அனுப்புவோம்' என தெரிவித்தார்.


இப்போட்டியில் இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

Harley Davidson

Rated 'R' for brief adult content

தொடர்ந்து ஒரு 10 பதிவு கிரிக்கெட்டை பத்தி போட்டாச்சுங்க. அதனால் ஒரு மாறுதலுக்காக இந்த பதிவு. வந்து பார்த்துட்டு போங்க.

நன்றி Google Videos

Tuesday, February 6, 2007

ஷேவாக் மீது புகார்

ஷேவாக் சர்ச்சைநடக்கவிருக்கும் இலங்கையுடனான ஒரு நாள் போட்டித்தொடரில் ஷேவாக் இடம்பிடித்திருக்கும் நிலையில் அவர் மீதான புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தென்னாப்பிரிக்கா சென்று திரும்பிய இந்திய அணியின் மேனேஜரான சேத்தன் தேசாய், பி.சி.சி.ஐ.க்கு சமர்பித்துள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் ஷேவாகின் ஒழுங்கீனம் மற்றும் நடத்தை பற்றிய புகாரை எழுப்பியுள்ளார். இதற்கு உதாரணமாக டர்பனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை கூறியுள்ளார்.

அன்று பேட்டிங் செய்யவிருந்த ஷேவாக் தனக்கு மேலும் சிறிது பேட்டிங் பயிற்சி தேவைப்படுகிறது என்றும் அதற்காக மைதானத்திற்கு காலை 6.30 மணிக்கு வருமாறும் அணியின் பயிற்சியாளர் சாப்பலிடம் தெரிவித்தார். அதன்படி காலை 6.30 மணிக்கு சாப்பலும் அவரின் உதவியாளர் ஃப்ரேசரும் வந்து காத்திருந்தனர். ஆனால் ஷேவாக் வரவில்லை.இதைப்ப்ற்றி கேட்டபொழுது தான் பயிற்சி செய்யும் மனநிலையில் இல்லையென்றும் அதனால் வரவில்லை என்றும் தெரிவித்தார். இது மிகவும் கண்டனத்துகுரிய செயலாகும். பி.சி.சி.ஐ.யிடம் சமர்ப்பித்துள்ள எனது அறிக்கையில் இதைப்பற்றி தெரிவித்துள்ளேன் என்றும் தேசாய் கூறியுள்ளார்.

இது தவிர வேறு ஏதும் புகாராக் தெரிவிக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை.

ஷேவாக் மீது ஒழுங்கீன நடவடிக்கை பாயுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

***********************இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான 4 ஒரு நாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் வரும் 8ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இதற்காக கொல்கத்தா வரும் இந்திய அணியின் பயிற்ச்சியாளர் க்ரெக் சாப்பலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல்துறை ஆணையர் முகர்ஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் புவனேஷ்வர் விமானநிலையத்தில் சாப்பலின் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

************************காமன்வெல்த் பேங்க் ஒரு நாள் போட்டித் தொடரின் இறுதி தகுதிச் சுற்றுப் போட்டியில் இங்கிலந்து அணி நியூசிலாந்தை 14 ரன்கள் வித்தியாசத்தி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது.இவ்வணியின் காலிங்வுட் 106 ரன்கள் அடித்தார். நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் கேப்டன் ஃபெளிமிஃங் 106 ரன்கள் குவித்தார். இத்தொடரின் முதல் இறுதிப்போட்டி மெல்போர்ன் மைதானத்தி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

**************************தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் ஒரு நாள் போட்டித்தொடரில் பங்கேற்க பாகிஸ்தானின் ராவ் இஃப்திகார் பயணம்.சமீபத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் 164 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இப்போட்டியில் காயமடைந்த(?) பாகிஸ்தான் வீரர்களான் அக்தர்,உமர் குல்,ஷப்பிர் அஹமத் தாயகம் திரும்பியதால்,இஃப்திகார் அங்கு சென்றுள்ளார்.

உலகக்கோப்பை - புது வரவுகள்

மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பெர்முடா மற்றும் அயர்லாந்து அணிகள் முதன்முறையாக பங்கேற்கின்றன. அவ்வணிகள் பற்றிய சில தகவல்கள்.

ஐ.சி.சியில் நிரந்தர உறுப்பினரல்லாத நாடுகளில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐ.சி.சி ட்ராஃபி நடத்தப்படுகிறது. இதில் முதல் ஐந்து இடங்களைப் பெறும் அணிகள் உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பைப் பெறுகின்றன. கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் முதல் 5 இடங்களை பிடித்து 2007 உலக்கோப்பைக்கு தகுதி பெறும் அணிகள்

1.ஸ்காட்லாந்து
2.அயர்லாந்து
3.கனடா
4.பெர்முடா
5.ஹாலந்து

இதில் ஸ்காட்லந்து(1999),ஹாலந்து(1996 மற்றும் 2003) மற்றும் கனடா(1979 மற்றும் 2003) அணிகள் முந்தைய உலகக்கோப்பைகளில் பங்கேற்றுள்ளன. அயர்லாந்து மற்றும் பெர்முடா அணிகள் முதல்முறையாக விளையாட இருக்கின்றன.

பெர்முடாஐ.சி.சி ட்ராஃபியில் 4ம் இடத்தை பிடித்த பெர்முடா 65,000 மக்களை கொண்ட சிறு தீவாகும். இத்தீவின் முதல் போட்டி 1844ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெற்றுள்ளது. 1966ம் ஆண்டு ஐ.சி.சி.யின் துணை உறுப்பினராக சேர்ந்தது.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் நாள் கனடாவுக்கு எதிராக அடித்த 272 ரன்களே இவ்வணியின் அதிகபட்ச ஸ்கோராகும். அதே போட்டியில் இவ்வணியின் கேப்டனான இர்விங்க் ரோமைன் அடித்த 101 ரன்களே தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ரன்னாகும். இவ்வணியின் ட்வேன் லீவராக் கென்யாவுக்கு எதிராக 53 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தி சிறந்த பந்து வீச்சாளருக்கான பெருமையை பெறுகிறார். மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கஸ் லோகி, பெர்முடா அணியின் கோச்சாக பொறுப்பு வகிக்கிறார்.

இவ்வணி இந்தியா,இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் Group Bல் இடம்பெற்றுள்ளது. இவ்வணிகளை வென்று இரண்டாவது சுற்றான Super 8க்கு தகுதி பெறுமா என பார்ப்போம்.

அயர்லாந்து1888 முதல் கிரிக்கெட் ஆடிவரும் நாடான அயர்லாந்து சில அரசியல் காரணங்களினால் 1993 வரை ஐ.சி.சி.யில் உறுப்பினராக முடியாமல் இருந்தது. அதன்பின் துணை உறுப்பினராக இடம்பெற்று முதல்முறையாக் 2007 உலகக்கோப்பையிலும் இடம்பிடித்துள்ளது. இவ்வணி ஆடிய முதல் முதல்-தர போட்டி 1902ம் ஆண்டு லண்டனுக்கு எதிரானதாகும். இப்போட்டியில் இவ்வணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி ஹாலந்து அணிக்கெதிரான போட்டியில் அடித்த 274 ரன்களே இவ்வணியின் அதிகபட்ச ஸ்கோராகும். ஸ்காட்லாந்துக்கு எதிராக் இவ்வணியின் இயான் மோர்கன் அடித்த 99 ரன்கள் தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும். அதே போட்டியில் டேவிட் ஸ்மித் 32 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி சிறந்த பந்து வீச்சாளருக்கான பெருமையை பெறுகிறார்.இவ்வணியின் கேப்டன் ட்ரென்ட் ஜான்ஸ்டன்.

2007 உலகக்கோப்பை போட்டிகளில் இவ்வணி பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டிஸ் மற்றுன் ஜிம்பாப்வே அணிகளுடம் Group Dல் இடம்பெற்றுள்ளது.

Monday, February 5, 2007

உலகக்கோப்பை 2007 மைதானங்கள்

நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகள் மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள 9 மைதானங்களில் நடைபெற உள்ளன.அவை பற்றிய தகவல்கள்..

நன்றி : www.icc-cricket.com

Sir Vivian Richards Stadium, AntiguaCapacity: 20,000 of which 10,000 will be permanent

Location: the stadium is to be conveniently built between the city and the airport.

Status: New stadium under construction in partnership with Peoples Republic Of China.

Matches: Super-8.

Kensington Oval, BarbadosHistory: hosted its first Test in 1929-30 and first ODI in 1984-85

Capacity: 32,000

Status: Major upgrade to be undertaken to add additional seats, player, media and sponsor facilities.

Matches: Super-8 & Finals.

Queens Park, GrenadaBuilt: 1998

Capacity: present capacity of 13,000 to increase to 20,000 through temporary stands

Status: minor upgrade required

Matches: Super-8.

Providence Stadium, GuyanaCapacity: 20,000

Status: to be built on a completely new site

Sabina Park, JamaicaCapacity: 30,000

History: hosted its first Test in 1929-30 and first ODI in 1983-84

Status: major upgrade to be undertaken

Matches: Opening Match; Opening Round; Semi Final.

Warner Park Stadium, St Kitts and NevisCapacity: increase from 4000 to 10,000 with the addition of temporary stands

Status: the stadium is to be completely renovated and rebuilt with new facilities for media, spectators and players

Beausejour Stadium, St LuciaBuilt: 2001-02

Capacity: increase existing capacity of 12,000 to 20,000 with the addition of temporary stands

Status: relatively new stadium – minor upgrade required

Arnos Vale, St. Vincent & the GrenadinesCapacity: 12,000 Seats

Status: Major renovation under construction.

Matches: Warm up.

Queens Park Oval, Trinidad and TobagoThe oldest ground in the Caribbean

Capacity: 25,000

Status: minor upgrade required

Matches: Opening round.

உலகக் கோப்பை - குழுக்களின் விபரம்

வரும் மார்ச் மாதம் 11ம் தேதி மேற்கிந்திய தீவுகளில் தொடங்க இருக்கும் ஒன்பதாவது உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவே அதிகமான நாடுகள் பங்கேற்கும் போட்டியாகும். சென்ற முறை 14 நாடுகள் பங்கேற்றன. மொத்தம் 51 ஆட்டங்கள் நடக்கின்றன். இது சென்ற முறையை விட 3 போட்டிகள் குறைவாகும். மார்ச் 5 முதல் மார்ச் 9 வரை மொத்தம் 16 warm-up matches நடக்க உள்ளன. அவை இந்தக் கணக்கில் வரவில்லை.போட்டியில் விளையாடும் 16 நாடுகளும் முறையே நான்கு நாடுகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்பபட்டுள்ளன.இந்த நான்கு குழுக்களும் முதல் சுற்று ஆட்டங்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தீவூகளில் விளையாடும்.

உலகக்கோப்பை போட்டிகளுக்கான குழுக்கள் பிரிப்பது 'Lot' முறையில் நடந்தாலும்,இந்தியா,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நான்கு அணிகள் மட்டும் அதிகமான ரசிகர்கள்,தங்குமிடம் மற்றும் போக்குவரத்து போன்ற காரணங்களுக்காக வெவ்வேறு குழுக்களில்(Group) சேர்க்கப்பட்டுள்ளது.

Group A (St Kitts & Nevis)
Australia
South Africa
Scotland
Netherlands

Group B (Trinidad & Tobago)
India
Srilanka
Bangladesh
Bermuda

Group C (St Lucia)
NewZealand
England
Kenya
Canada

Group D (Jamaica)
Pakistan
West Indies
Zimbabwe
Ireland

முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் தன் குழுவிலுள்ள மற்ற அணிகளை எதிர்த்து விளையாடும். முதல் சுற்றுப் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 முடிவடைகின்றன். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் அணிகள் 2 புள்ளிகள் பெறும்.டை அல்லது கைவிடப்படும் ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 1 புள்ளி பெறும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடத்தைப் பெறும் அணிகள் அடுத்த சுற்றான 'Super 8'க்கு தகுதி பெறும்.

இரண்டாவது சுற்றான 'Super 8'ல் ஒவ்வொரு அணியும் மற்ற குழுக்களில் முதல் இரண்டு இடத்தைப் பெற்ற அணியுடன் மோதுகின்றன. இரண்டாம் சுற்று ஆட்டங்கள் மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 21 முடிவடைகின்றன.

இந்தச் சுற்றில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். முதல் அரை இறுதி ஆட்டம் முதல் மற்றும் நான்காம் அணிகளுக்கு இடையே ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும். இரண்டாம் அரை இறுதி ஆட்டம் 2 மற்றும் 3ம் இடத்தை பிடித்த அணிகளுக்கிடையே ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் ஏப்ரல் 28ம் தேதி இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப் போகும் நாடு எது(மனசு இந்தியா தான்,இந்தியா தான்னு சொல்லுதுங்க!!) என்று பொறுத்திருந்து பார்ப்போம்.தகவல்கள் தொடரும்...

திராவிட் உலகக்கோப்பையை வெல்ல மாட்டார்..

இத நான் சொல்லலைங்க. அப்புறம் வேற யாருங்கறிங்களா?மேல (கீழே??) படிங்க..

உலகப் புகழ் பெற்ற பிரபல ஜோதிட நிபுனரான Bejan Daruwalla சொன்னது.இவர் சொன்ன கணிப்புகள்
திராவிடின் கிரக நிலைகளின்படி இவர் உலகக்கோப்பையை வெல்வதற்க்கு வாய்ப்பே இல்லை.இவர் இன்னும் 12 முதல் 18 மாதங்களுக்கு கேப்டனாக பொறுப்பு வகிப்பார்.அதன் பின் இந்திய அணியில் பெரும் மாற்றங்கள் ஏற்படும்.

கங்கூலி மீண்டும் பிரகாசிப்பார்.இவரின் சமீபத்திய ஆட்டம் ஒரு தொடக்கமே.மேலும் பல சாதனைகள் புரிவார்.

சச்சின் மற்றும் பதானுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.பதான் கபில்தேவை போல் புகழ் பெறுவார்.

2007 உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும்.

எனது அறிவுரையின்படி தனது எண்ணை 10லிருந்து 33 ஆக மாற்றிக் கொண்ட பிறகே சச்சின் மீண்டும் சிறப்பாக விளையாட தொடங்கியுள்ளார்.

*********************************

ஜோதிடம் உண்மையோ பொய்யோ இவர் சொன்னதுல இருக்கிற நல்ல விஷயங்கள் மட்டும் நடந்தா நல்லது தான்.

உலகக் கோப்பை - சில சுவாரசியமான தகவல்கள் - 3நடக்கவிருக்கும் 9வது உலகக்கோப்பை போட்டிகளுக்காக ஆஸ்திரேலியாவிலிருந்து 828 கிரிக்கெட் பந்துகள் மற்றும் 184 ஸ்டம்ப் செட்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன.

ஆஸ்திரேலியா தொடர்ந்து 18 உலகக்கோப்பை போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது. இதில் 18வது வெற்றி 2003 உலகக்கோப்பையின் இறுதி ஆட்டமாகும்.ஆகவே சாதனை தொடர வாய்ப்புள்ளது.

ஜிம்பாப்வே தொடர்ந்து 18 போட்டிகளில் தோற்ற பெருமையை? பெற்றுள்ளது.

2007 முதல் 2015 வரையிலான ஐ.சி.சி போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை ESPN-Star Sports நிறுவனம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு பெற்றுள்ளது(சுமார் 4600 கோடி ரூபாய்).

உலகக்கோப்பை போட்டிகளுக்கான குழுக்கள் பிரிப்பது 'Lot' முறையில் நடந்தாலும்,இந்தியா,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நான்கு அணிகள் மட்டும் அதிகமான ரசிகர்கள்,தங்குமிடம் மற்றும் போக்குவரத்து போன்ற காரணங்களுக்காக வெவ்வேறு குழுக்களில்(Group) சேர்க்கப்பட்டுள்ளது.

Sunday, February 4, 2007

மறக்க முடியுமா - 1

ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் எவ்வளவோ இருக்கும். சேரன் மாதிரி ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பாடறதுக்கு ஒவ்வொருத்தரும் ஒரு லிஸ்ட்டே வச்சிருப்பாங்க. அதே மாதிரி தாங்க இந்தியாவோட கிரிக்கெட் வரலாற்றிலயும் அந்த மாதிரி ஒரு பெரிய பட்டியலே இருக்கு. அதை தொகுத்து வழங்கும் ஒரு சிறு முயற்சி தான் இந்த பதிவு.

1996 மார்ச் 9ம் தேதி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பெங்களூரில் நடந்த உலகக்கோப்பை கால் இறுதி ஆட்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது. பொதுவா இந்தியா பாகிஸ்தான் ஆடுதுன்னாலே தவழ்ற குழந்தையில இருந்து தள்ளாடுற பெரிசு வரைக்கும் ஒரு வெறி வந்துடும். ஏதோ மறியல் நடக்குற மாதிரி ரோடெல்லாம் வெறிச்சோடி போயிருக்கும். இவ்வளவு முக்கியமான போட்டி,அதுவும் பெங்களூரில நடக்குதுன்னா சும்மாவா?அன்னைக்கும் அப்படித்தான்.

முதல்ல ஆடின இந்திய அணி பாகிஸ்தானை கிழிச்சு காயப்போட்டிடுச்சு(50 ஒவர்ல 287 ரன்). அடுத்து பாகிஸ்தான் ஆட வந்ததும், சயீத் அன்வரும்,அமீர் சோஹைலும் பொளந்து கட்றாங்க. அவ்ளோதாண்டா இந்தியான்னு எல்லாரும் நெனைக்க ஆரம்பிச்சாங்க. 15வது ஒவரை நம்ம பிரசாத் வீசுனாரு. அந்த ஒவரோட 5வது பந்துல சோஹைல் ஒரு 4 அடிச்சுட்டு,பிரசாத்தைப் பார்த்து நக்கலா பேசுவாரு. அடுத்த பந்துல நம்ம பிரசாத் குடுப்பாரு பாருங்க ஒரு ஆப்பு.அடாடா..மறக்க முடியாத நினைவு.அதுக்கப்புறம் இந்தியா அந்த மேட்சை 39 ரன் வித்தியாசத்தில ஜெயிச்சுது.இந்திய ரசிகர்கள் மட்டுமில்லை பாகிஸ்தான் ஆளுங்களாலயும் மறக்க முடியாத ஆட்டத்துல அதுவும் ஒன்னு.

அந்த வீடியோவை நீங்களும் பார்த்து ரசியுங்க..நினைவுகள் தொடரும்..