Thursday, February 8, 2007

கங்காருவுக்கு மணி கட்டப்போவது யார் ?



சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பான்ட்டிங் அளித்துள்ள பேட்டியின் விபரம்..

ஆஸ்திரேலிய அணிக்கு சரிசமமான போட்டியாளர்கள் இல்லாதது போல் தெரிகிறதே?

நான் அவ்வாறு நினைக்கவில்லை.நாங்கள் வங்காளதேசத்திடம் கூட ஒருமுறை தோற்றுள்ளோம். கிரிக்கெட் என்பது எதிர்பாராத ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு விளையாட்டு. ஆனால் எனது அணி தன் முழுபலத்துடன் விளையாடுகையில் எங்களை வெல்வதற்கு சிறப்பான முயற்சி செய்யவேண்டும். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் தனக்கான பணி என்ன என்பதை அறிந்து அதை தேவையான தருணத்தில் செய்கிறார்கள். 1999 மற்றும் 2003 இருமுறை தொடர்ந்து உலகக்கோப்பையை வென்றுள்ளோம்.இம்முறையும் அதை தக்க வைத்துக்கொள்ள முயல்வோம்.

சிறப்பான முயற்சி என்றால்?

உதாரணமாக சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணி நாங்கள் அடித்த 434 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டியது போல.அது ஒரு அசாதாரணமான் வெற்றி. நாங்கள் எப்பொழுதும் நம்பிக்கையை இழப்பதில்லை. ஆகவே எதிரணியினர் 100 சதவிகித ஈடுபாட்டுடன் முயற்சிக்க வேண்டியுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள வேகம் குறைவான ஆடுகளங்கள் எதிரணியினருக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறீர்களா?

அனைத்து விதமான ஆடுகளங்களிலும் நாங்கள் வென்றுள்ளோம். அதுதான் எங்கள் அணியின் சிறப்பு. கடந்த ஐ.சி.சி. சேம்பியன்ஸ் கோப்பை இந்தியாவில் ந்டைபெற்ற பொழுது,அனைத்து ஆடுகளங்களும் மிகவும் கடினமாகவே இருந்தன. ஆனாலும் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். இந்திய துணைகண்டம்,இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் என அனைத்து இடங்களிலும் வென்றுள்ளோம். இதை நாங்கள் பெருமையாகவே கருதுகிறோம்.

ஆஸ்திரேலிய அணிக்கு வயதாகி வருவதாக எழுந்துள்ள விமர்சனம் பற்றி?

நானும் இதை கேள்விப்பட்டேன். நன்றாக விளையாடுவதுதான் முக்கியம். 20 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளி வீழ்த்துபவருக்கு, 40 வயதாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை.

'Defending Champions' என்ற நிலை அணியினரிடையே மனஅழுத்தத்தை உருவாக்கியுள்ளதா?

அழுத்தம் என்பது எப்பொழுதும் இருக்கும் ஒன்று. அதை எவ்வாறு கையாள்கிறோம் என்பதே முக்கியம். சிலருக்கு அதுவே எதிராக அமையலாம், சிலருக்கு அதுவே ஊக்குவிக்கும் அம்சமாக இருக்கலாம்.

Mike Hussey பற்றி ?

சமீப காலமாக வெகு சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் ஒரு மிகச் சிறந்த வீரர். மேற்கிந்தியத்தீவுகளிலும் இதேபோல் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன்.

3 comments:

VSK said...

அதீத நம்பிக்கை ஆபத்தை விளைவிக்கும் என்பதை இவர்கள் உணராதவரை நம்க்கு நல்லதே!

மணிகண்டன் said...

நிச்சயமாக SK ஐயா.

இந்த முறை பலத்த அடி வாங்கப் போகிறார்கள் என்று தோன்றுகிறது.

ப்ரியன் said...

இப்போதே அடி ஆரம்பித்துவிட்டதெனத் தோன்றுகிறது..கடைசி இரு போட்டிகளை பார்க்கும்போது