மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பெர்முடா மற்றும் அயர்லாந்து அணிகள் முதன்முறையாக பங்கேற்கின்றன. அவ்வணிகள் பற்றிய சில தகவல்கள்.
ஐ.சி.சியில் நிரந்தர உறுப்பினரல்லாத நாடுகளில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐ.சி.சி ட்ராஃபி நடத்தப்படுகிறது. இதில் முதல் ஐந்து இடங்களைப் பெறும் அணிகள் உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பைப் பெறுகின்றன. கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் முதல் 5 இடங்களை பிடித்து 2007 உலக்கோப்பைக்கு தகுதி பெறும் அணிகள்
1.ஸ்காட்லாந்து
2.அயர்லாந்து
3.கனடா
4.பெர்முடா
5.ஹாலந்து
இதில் ஸ்காட்லந்து(1999),ஹாலந்து(1996 மற்றும் 2003) மற்றும் கனடா(1979 மற்றும் 2003) அணிகள் முந்தைய உலகக்கோப்பைகளில் பங்கேற்றுள்ளன. அயர்லாந்து மற்றும் பெர்முடா அணிகள் முதல்முறையாக விளையாட இருக்கின்றன.
பெர்முடா
ஐ.சி.சி ட்ராஃபியில் 4ம் இடத்தை பிடித்த பெர்முடா 65,000 மக்களை கொண்ட சிறு தீவாகும். இத்தீவின் முதல் போட்டி 1844ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெற்றுள்ளது. 1966ம் ஆண்டு ஐ.சி.சி.யின் துணை உறுப்பினராக சேர்ந்தது.
2006ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் நாள் கனடாவுக்கு எதிராக அடித்த 272 ரன்களே இவ்வணியின் அதிகபட்ச ஸ்கோராகும். அதே போட்டியில் இவ்வணியின் கேப்டனான இர்விங்க் ரோமைன் அடித்த 101 ரன்களே தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ரன்னாகும். இவ்வணியின் ட்வேன் லீவராக் கென்யாவுக்கு எதிராக 53 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தி சிறந்த பந்து வீச்சாளருக்கான பெருமையை பெறுகிறார். மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கஸ் லோகி, பெர்முடா அணியின் கோச்சாக பொறுப்பு வகிக்கிறார்.
இவ்வணி இந்தியா,இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் Group Bல் இடம்பெற்றுள்ளது. இவ்வணிகளை வென்று இரண்டாவது சுற்றான Super 8க்கு தகுதி பெறுமா என பார்ப்போம்.
அயர்லாந்து
1888 முதல் கிரிக்கெட் ஆடிவரும் நாடான அயர்லாந்து சில அரசியல் காரணங்களினால் 1993 வரை ஐ.சி.சி.யில் உறுப்பினராக முடியாமல் இருந்தது. அதன்பின் துணை உறுப்பினராக இடம்பெற்று முதல்முறையாக் 2007 உலகக்கோப்பையிலும் இடம்பிடித்துள்ளது. இவ்வணி ஆடிய முதல் முதல்-தர போட்டி 1902ம் ஆண்டு லண்டனுக்கு எதிரானதாகும். இப்போட்டியில் இவ்வணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2006ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி ஹாலந்து அணிக்கெதிரான போட்டியில் அடித்த 274 ரன்களே இவ்வணியின் அதிகபட்ச ஸ்கோராகும். ஸ்காட்லாந்துக்கு எதிராக் இவ்வணியின் இயான் மோர்கன் அடித்த 99 ரன்கள் தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும். அதே போட்டியில் டேவிட் ஸ்மித் 32 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி சிறந்த பந்து வீச்சாளருக்கான பெருமையை பெறுகிறார்.இவ்வணியின் கேப்டன் ட்ரென்ட் ஜான்ஸ்டன்.
2007 உலகக்கோப்பை போட்டிகளில் இவ்வணி பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டிஸ் மற்றுன் ஜிம்பாப்வே அணிகளுடம் Group Dல் இடம்பெற்றுள்ளது.
Tuesday, February 6, 2007
உலகக்கோப்பை - புது வரவுகள்
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 10:53 AM
Labels: உலகக்கோப்பை, கிரிக்கெட்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நமக்கு நாமே திட்டம்
//நமக்கு நாமே திட்டம்//
இதோ நானும் வந்துடேன்.
உலக கோப்பை போட்டி துவங்கும் முன்னே அலசல், ஆராய்சி, வர்ணனை மற்றும் துணுக்கு செய்திகள் தர துவங்கியமைக்கு நன்றி.
-இவன்.
நல்ல தகவல்கள் மணிகண்டன்.
//நமக்கு நாமே திட்டம்//
யாமிருக்க பயமேன்?
வருகைக்கு நன்றி இவன் மற்றும் fastbowler
//யாமிருக்க பயமேன்?//
உங்களை எல்லாம் நம்பி தாங்க கடைவிரிச்சிருக்கேன்.
Post a Comment