Friday, February 9, 2007

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக Mike Hussey நியமனம்





ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக Mike Hussey நியமனம். நியூஸிலாந்தில் நடைபெறவிருக்கும் சாப்பல்--ஹேட்லி கோப்பைக்கான மூன்று ஒருநாள் போட்டிகளில் ஹஸ்ஸே கேப்டனாக இருப்பார் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதைப்பற்றி கூறிய தேர்வுக்குழுவின் தலைவர், காயம் காரணமாக ரிக்கி பான்ட்டிங் இந்த போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதுமட்டுமன்றி மேற்கிந்தியத்தீவுகளில் ந்டைபெற உள்ள உலகக்கோப்பைக்கு முன் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அணியின் தற்போதைய துணை கேப்டனான கில்கிறிஸ்டுக்கும் சுழற்சி முறையில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நியூஸிலாந்து செல்லும் அணியின் கேப்டனாக் ஹஸ்ஸேவும் துணை கேப்டனாக மைக்கேல் க்ளர்க்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றார். உலகக்கோப்பை போட்டிகளில் மீண்டும் ரிக்கி பான்ட்டிங் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொள்வார்.

**************************



காமன்வெல்த் பேங்க் தொடரின் முதல் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது.இவ்வணியின் ஹெய்டன் 82 ரன்களும் பான்ட்டிங் 75 ரன்களும் எடுத்தனர்.தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 49.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றுள்ளது.காலிங்வுட் 120 ரன்களும் பெல் 65 ரன்களும் எடுத்தனர்.மொத்தம் மூன்று இறுதிப்போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி இது. அடுத்த இறுதிப்போட்டி வரும் ஞாயிறன்று ஸிட்னியில் நடைபெறும்.

**************************

பாகிஸ்தான் தென்னாப்பிரிக்க அணியிடையே மூன்றாவது ஒரு நாள் போட்டி தற்பொழுது நடந்து வருகிறது. டாஸில் ஜெயித்து களமிறங்கிய பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்துள்ளது.முகமது யூஸுஃப் 79 ரன்கள் எடுத்துள்ளார்.தென்னாப்பிரிக்கா இன்னும் பேட் செய்யவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணியினரும் ஒரு முறை வென்றுள்ளனர்.

**************************




உலகக்கோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் கய்ஃப் இடம்பெறாதது குறித்து தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் அஜித் வடேகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.சமீபத்திய போட்டிகளில் அவர் நன்றாகவே விளையாடியுள்ளார்.வாய்ப்புகள் கிடைத்தபொழுது தனது திறமையை நிரூபித்துள்ளார்.ஆகவே அவரை அணியில் சேர்ப்பதை பரீசிலிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். மேற்கிந்தியத்தீவுகளில் இந்தியா விளையாடிய பொழுது 5 போட்டிகளில் 3 அரை சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

4 comments:

VSK said...

ஒரு பரபரப்புக்காக அப்படி தலைப்பு வைத்தீர்களோ!!

தாற்காலிக நியமனம்தானே இது!
:))

மு.கார்த்திகேயன் said...

அஜித் சொன்னது சரிதான், மணிகண்டன்..

கைஃப் தொடர்ந்து நன்றாகவே விளையாடிவருகிறார்..

மணிகண்டன் said...

//ஒரு பரபரப்புக்காக அப்படி தலைப்பு வைத்தீர்களோ!! //

கண்டுபிடிச்சிட்டீங்களே ஹி...ஹி..

மணிகண்டன் said...

//அஜித் சொன்னது சரிதான், மணிகண்டன்..//

நம்ம 'தல' அஜித்தா? ஹி..ஹி.. காமெடி :)