Monday, February 5, 2007

உலகக் கோப்பை - சில சுவாரசியமான தகவல்கள் - 3



நடக்கவிருக்கும் 9வது உலகக்கோப்பை போட்டிகளுக்காக ஆஸ்திரேலியாவிலிருந்து 828 கிரிக்கெட் பந்துகள் மற்றும் 184 ஸ்டம்ப் செட்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன.

ஆஸ்திரேலியா தொடர்ந்து 18 உலகக்கோப்பை போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது. இதில் 18வது வெற்றி 2003 உலகக்கோப்பையின் இறுதி ஆட்டமாகும்.ஆகவே சாதனை தொடர வாய்ப்புள்ளது.

ஜிம்பாப்வே தொடர்ந்து 18 போட்டிகளில் தோற்ற பெருமையை? பெற்றுள்ளது.

2007 முதல் 2015 வரையிலான ஐ.சி.சி போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை ESPN-Star Sports நிறுவனம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு பெற்றுள்ளது(சுமார் 4600 கோடி ரூபாய்).

உலகக்கோப்பை போட்டிகளுக்கான குழுக்கள் பிரிப்பது 'Lot' முறையில் நடந்தாலும்,இந்தியா,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நான்கு அணிகள் மட்டும் அதிகமான ரசிகர்கள்,தங்குமிடம் மற்றும் போக்குவரத்து போன்ற காரணங்களுக்காக வெவ்வேறு குழுக்களில்(Group) சேர்க்கப்பட்டுள்ளது.

0 comments: