வரும் மார்ச் மாதம் 11ம் தேதி மேற்கிந்திய தீவுகளில் தொடங்க இருக்கும் ஒன்பதாவது உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவே அதிகமான நாடுகள் பங்கேற்கும் போட்டியாகும். சென்ற முறை 14 நாடுகள் பங்கேற்றன. மொத்தம் 51 ஆட்டங்கள் நடக்கின்றன். இது சென்ற முறையை விட 3 போட்டிகள் குறைவாகும். மார்ச் 5 முதல் மார்ச் 9 வரை மொத்தம் 16 warm-up matches நடக்க உள்ளன. அவை இந்தக் கணக்கில் வரவில்லை.
போட்டியில் விளையாடும் 16 நாடுகளும் முறையே நான்கு நாடுகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்பபட்டுள்ளன.இந்த நான்கு குழுக்களும் முதல் சுற்று ஆட்டங்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தீவூகளில் விளையாடும்.
உலகக்கோப்பை போட்டிகளுக்கான குழுக்கள் பிரிப்பது 'Lot' முறையில் நடந்தாலும்,இந்தியா,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நான்கு அணிகள் மட்டும் அதிகமான ரசிகர்கள்,தங்குமிடம் மற்றும் போக்குவரத்து போன்ற காரணங்களுக்காக வெவ்வேறு குழுக்களில்(Group) சேர்க்கப்பட்டுள்ளது.
Group A (St Kitts & Nevis)
Australia
South Africa
Scotland
Netherlands
Group B (Trinidad & Tobago)
India
Srilanka
Bangladesh
Bermuda
Group C (St Lucia)
NewZealand
England
Kenya
Canada
Group D (Jamaica)
Pakistan
West Indies
Zimbabwe
Ireland
முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் தன் குழுவிலுள்ள மற்ற அணிகளை எதிர்த்து விளையாடும். முதல் சுற்றுப் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 முடிவடைகின்றன். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் அணிகள் 2 புள்ளிகள் பெறும்.டை அல்லது கைவிடப்படும் ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 1 புள்ளி பெறும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடத்தைப் பெறும் அணிகள் அடுத்த சுற்றான 'Super 8'க்கு தகுதி பெறும்.
இரண்டாவது சுற்றான 'Super 8'ல் ஒவ்வொரு அணியும் மற்ற குழுக்களில் முதல் இரண்டு இடத்தைப் பெற்ற அணியுடன் மோதுகின்றன. இரண்டாம் சுற்று ஆட்டங்கள் மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 21 முடிவடைகின்றன.
இந்தச் சுற்றில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். முதல் அரை இறுதி ஆட்டம் முதல் மற்றும் நான்காம் அணிகளுக்கு இடையே ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும். இரண்டாம் அரை இறுதி ஆட்டம் 2 மற்றும் 3ம் இடத்தை பிடித்த அணிகளுக்கிடையே ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் ஏப்ரல் 28ம் தேதி இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப் போகும் நாடு எது(மனசு இந்தியா தான்,இந்தியா தான்னு சொல்லுதுங்க!!) என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தகவல்கள் தொடரும்...
Monday, February 5, 2007
உலகக் கோப்பை - குழுக்களின் விபரம்
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 6:39 PM
Labels: உலகக்கோப்பை, கிரிக்கெட்
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
தங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றிங்க மணி. தாங்கள் அழைக்கவில்லை என்றாலும் நானே வந்திருப்பேன் மணிகண்டன். நன்றி சொல்லவேண்டுமல்லவா..
உலக கோப்பைக்காக தகவல் தரும் பக்கமா.. வளர வாழ்த்துக்கள் மணிகண்டன்
தங்கள் வருகை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்தி..
//இந்த முறையாவது இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா என ஏங்கும் இந்தியர்களில் ஒருவன்..
//
ஏற்கனவே ஒரு முறை வாங்கியது என்னவாயிற்று!
எனிவே உலகக் கோப்பைப் போட்டிகள் பற்றிய தகவல்களுக்காக தனி வலைப்பூ தொடங்கியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்!
////இந்த முறையாவது இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா என ஏங்கும் இந்தியர்களில் ஒருவன்..
//
ஏற்கனவே ஒரு முறை வாங்கியது என்னவாயிற்று! //
ஏற்கனவே ஒரு முறை வாங்கியது கணக்கில் இருக்கிறது சிபியாரே. அதன் பின் ஒவ்வொரு முறையும் இந்தியா வெல்லும் என எதிர்பார்த்து வெறுங்கையோடு திரும்பிய விரக்தியில் எழுதிய வரிகள் அவை. அதற்கு நீங்கள் இப்படியொரு அர்த்தம் கொள்வீர்கள் என்று நினைக்கவில்லை.
வந்து வாழ்த்தியதற்க்கும் கலாய்த்ததற்கும் நன்றி சிபியாரே.
என்ன வச்சு கமெடி கீமெடி ஒன்னும் பண்ணலயே :))
உங்கள் களப்பணி தொடர வாழ்த்துக்கள்!
//என்ன வச்சு கமெடி கீமெடி ஒன்னும் பண்ணலயே :))//
அட! என்னாங்க நீங்க! இன்னும் ஆரம்பிக்கவே இல்லை!
அதுக்குள்ளே இப்படி கேட்டுட்டீங்களே!
:))
விளையாடும் படதினோருபேரும் நாம் அனைவரும் இந்தியத்திருநாட்டிற்காக விளையாடுகிறோம் என்று உணர்வோடு ஆடினாலெ போதும் நாம் நிச்சயமாக வெல்லமுடியும். காசாசை பிடித்துவிள்யட்டைக் கோட்டை விட்டால் இவர்கள் அனைவரயும் கழுவில் ஏற்ற வேண்டும்
நன்றி பிரசாத் மற்றும் Fast Bowler
Post a Comment