Sunday, February 4, 2007

மறக்க முடியுமா - 1

ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் எவ்வளவோ இருக்கும். சேரன் மாதிரி ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பாடறதுக்கு ஒவ்வொருத்தரும் ஒரு லிஸ்ட்டே வச்சிருப்பாங்க. அதே மாதிரி தாங்க இந்தியாவோட கிரிக்கெட் வரலாற்றிலயும் அந்த மாதிரி ஒரு பெரிய பட்டியலே இருக்கு. அதை தொகுத்து வழங்கும் ஒரு சிறு முயற்சி தான் இந்த பதிவு.

1996 மார்ச் 9ம் தேதி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பெங்களூரில் நடந்த உலகக்கோப்பை கால் இறுதி ஆட்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது. பொதுவா இந்தியா பாகிஸ்தான் ஆடுதுன்னாலே தவழ்ற குழந்தையில இருந்து தள்ளாடுற பெரிசு வரைக்கும் ஒரு வெறி வந்துடும். ஏதோ மறியல் நடக்குற மாதிரி ரோடெல்லாம் வெறிச்சோடி போயிருக்கும். இவ்வளவு முக்கியமான போட்டி,அதுவும் பெங்களூரில நடக்குதுன்னா சும்மாவா?அன்னைக்கும் அப்படித்தான்.

முதல்ல ஆடின இந்திய அணி பாகிஸ்தானை கிழிச்சு காயப்போட்டிடுச்சு(50 ஒவர்ல 287 ரன்). அடுத்து பாகிஸ்தான் ஆட வந்ததும், சயீத் அன்வரும்,அமீர் சோஹைலும் பொளந்து கட்றாங்க. அவ்ளோதாண்டா இந்தியான்னு எல்லாரும் நெனைக்க ஆரம்பிச்சாங்க. 15வது ஒவரை நம்ம பிரசாத் வீசுனாரு. அந்த ஒவரோட 5வது பந்துல சோஹைல் ஒரு 4 அடிச்சுட்டு,பிரசாத்தைப் பார்த்து நக்கலா பேசுவாரு. அடுத்த பந்துல நம்ம பிரசாத் குடுப்பாரு பாருங்க ஒரு ஆப்பு.அடாடா..மறக்க முடியாத நினைவு.அதுக்கப்புறம் இந்தியா அந்த மேட்சை 39 ரன் வித்தியாசத்தில ஜெயிச்சுது.இந்திய ரசிகர்கள் மட்டுமில்லை பாகிஸ்தான் ஆளுங்களாலயும் மறக்க முடியாத ஆட்டத்துல அதுவும் ஒன்னு.

அந்த வீடியோவை நீங்களும் பார்த்து ரசியுங்க..



நினைவுகள் தொடரும்..

3 comments:

podakkudian said...

மறக்க முடியாத ஆட்டம் பாக்கிஸ்தானுக்கு சரியான ஆப்பு

மணிகண்டன் said...

வருகைக்கு நன்றி பொதக்குடியான்.

Naufal MQ said...

சூப்பர் மேட்ச்! சூப்பர் பதிவு!!