Thursday, February 8, 2007

இன்றைய கிரிக்கெட் செய்திகள்பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா இடையே ஞாயிறன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியின் பொழுது, ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்புகையில் தன்னை கேலி செய்த ரசிகரை மட்டையை காட்டி மிரட்டியதாக அஃப்ரிடியின் மேல் குற்றச்சாட்டு எழுந்தது. ஐ.சி.சி.யின் கிறிஸ் போர்ட் இதைப்பற்றி விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் அஃப்ரிடிக்கு 2 முதல் 4 டெஸ்ட் போட்டிகளிலும் 4 முதல் 8 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்படும்.

***************************
இந்தியா - இலங்கை இடையேயான கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக இடையிலேயே கைவிடப்பட்டது. டாசில் ஜெயித்த இந்தியா, இலங்கையை முதலில் பேட் செய்யுமாறு பணித்தது. இலங்கை 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. ஜெயசூர்யா 63 ரன்களும் அட்டபட்டு 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியாவின் முனாஃப் படேல் 2 விக்கெட்களையும் ஸ்ரீசாந்த் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இவ்விரு அணிகளிடையேயான இரண்டாவது போட்டி வரும் 11ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.

***************************கிரிக்கெட் புக்கி கொச்சாருடன், சாமுவேல்ஸ் தொலைபேசியில் உரையாடிய சம்பவம் குறித்த விசாரனையை பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி தொடங்கியுள்ளது. இது Match Fixing போல் தெரியவில்லையென்றாலும், தனது அணியின் தகவல்களை வெளியே சொல்லியது ஐ.சி.சி. யின் விதிகளை மீறியாதாகும். இதுபற்றிய விசாரனை அறிக்கை மேற்கிந்தியதீவுகளின் கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பப்படும், சாமுவேல்சின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை அவர்களே முடிவு செய்வார்கள் என்றும் ஐ.சி.சி. யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இத்தொலைபேசி உரையாடலில் ராபின் சிங் என்பவரின் பெயரும் உள்ளது. இது இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் சிங்கா என்பது தெரியவில்லை. ராபின்சிங் மேற்கிந்தியத்தீவுகளில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உரையாடலில் உள்ளது அவர்தானா என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், இவ்விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று மஹாராஷ்டிர மாநில டி.ஜி.பி. பஸ்ரிச்சா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனது மகன் சாமுவேல்சும், கொச்சாரும் ஆறு வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாக உள்ளனர்.இதுபோன்ற விஷயங்களில் நிச்சயமாக எனது மகன் ஈடுபட மாட்டான் என்று சாமுவேல்சின் தாயார் லுனன் சொல்லியிருக்கிறார்.

***************************

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன்வெல்த் பேங்க் தொடரின் முதல் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் நாளை மோதுகின்றன.

3 comments:

Anonymous said...

Good blog. I have got some ideas from your blog:-)
Thank you..
Make money from your blog

SK said...

நல்ல தொடக்கம்.

அயர்ந்து விடாமல், உலகக்கோப்பை முடியும் வரையாவது, இது தொடர்ந்து சூடான செய்திகளை சுவையாக, 'இட்லிவடை' தேர்தல் நேரத்தில் செய்தது போல் வழங்கினால் நன்றாக இருக்கும்.

வாழ்த்துகள்!

மணிகண்டன் said...

வாழ்த்துகளுக்கு நன்றி SK ஐயா.

நிச்சயமாக உலகக்கோப்பை முடியும் வரை பதிவுகள் தொடரும்.