உலக்கோப்பையின் முதல் பந்தை வீசிய பெருமையை பெறுபவர் இந்தியாவின் மதன்லால். 1975ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி நடந்த முதல் போட்டியில் முதல் பந்தை இங்கிலாந்தின் டென்னிஸ் அமிஸுக்கு வீசினார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மொத்த 60 ஓவர்களிலும் ஆட்டமிழக்காமல் விளையாடி 36 ரன்களை சேர்த்த பெருமையை (பொறுமையை?) பெறுபவர் சுனில் கவாஸ்கர். இப்போட்டியில் இந்தியா 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
1979 உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த 139 ரன்களே இறுதிப்போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகும்.
பி.பி.சி.யின் வேலைநிறுத்தத்தினால், 1983 உலகக்கோப்பையில் ஜிம்ப்பாப்வேவுக்கு எதிராக கபில்தேவ் அடித்த 175 ரன்கள் பதிவு செய்யப்படாமல் போனது.
முதல்முறையாக 1987ல் உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தை விட்டு இந்திய துணைக்கண்டத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து மூன்று முறை ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற முதல் வீரர் இங்கிலாந்தின் கிரஹம் கூச்.
தொடர்ந்து ஆறு உலகக்கோப்பைகளில் பங்கேற்றவர் பாகிஸ்தானின் மியாண்டட். இவர் 1975 முதல் 1996 வரை நடந்த போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஒரே உலகக்கோப்பையில்(1996) 3 சதங்கள் அடித்தவர் ஆஸ்திரேலியாவின் மார்க் வாஹ்.
1996 உலக்கோப்பையில் கென்யாவுக்கு எதிராக இலங்கை அடித்த 398 ரன்களே ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இலங்கைக்கு எதிராக 1999 உலக்க்கோப்பையில் அடித்த 373 ரன்களே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும்.
சென்ற உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராக விளையாடிய கனடா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதுவே உலகக்கோப்பை வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோராகும்.
டேவிட் ஷெப்பர்ட் 46 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றிய பெருமையை பெறுகிறார். இவருக்கு அடுத்தபடியாக ஸ்டிவ் பக்னர் 34 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியுள்ளார்.
உலகக்கோப்பையில் அதிக கேட்ச் பிடித்தவர் ரிக்கி பான்ட்டிங்.இவர் மொத்தம் 18 கேட்ச்களை பிடித்துள்ளார்.
1999ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து 59 உபரி ரன்களை கொடுத்து முதல் இடத்தை பெறுகிறது. இதில் 5 பை 6 லெக்பை 33 வைட் மற்றும் 15 நோ-பால்கள் அடங்கும்.இரண்டாவது இடத்தில் வருவது இந்தியா. 1999ல் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 51 உபரி ரன்களைக் கொடுத்தது. இதில் 14 லெக்பை 21 வைட் மற்றும் 16 நோ-பால்கள் அடங்கும்.
தகவல்கள் தொடரும்..
Wednesday, February 7, 2007
உலகக்கோப்பை - சில சுவாரசியமான தகவல்கள் - 4
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 11:20 PM
Labels: உலகக்கோப்பை, கிரிக்கெட்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்ல ஒரு மீள்பார்வை மணிகண்டன்.
2003ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் அடித்த 140 ரன்களே இறுதி போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி, நிலாரசிகன்
Post a Comment