Friday, February 2, 2007

உலகக் கோப்பை - சில சுவாரசியமான தகவல்கள் - 1



மார்ச் 11 2007ல் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்க இருக்கும் 9வது உலகக் கோப்பை போட்டிகளில் வெல்லும் அணிக்கு வழங்கப்பட இருக்கும் இக்கோப்பை வடிவமைக்கப்பட்ட ஆண்டு 1999.லண்டணில் இருக்கும் 'Garrard & Co' என்ற கம்பெனியால் வடிவமைக்கப்பட்டது.முழுக்க முழுக்க வெள்ளி மற்றும் 'கில்ட்'ஆல் (கில்ட்க்கு தமிழ்ல என்னங்க??) ஆன இக்கோப்பை 60 செ.மீ உயரமும் 11 கிலோ எடையும் கொண்டது.

இதில் உள்ள மூன்று வளைவான வடிவங்கள் மூன்று Stumpகளையும், கிரிக்கெட்டின் மூன்று முக்கிய அம்சங்களான 'Batting,Bowling & Fielding'யும் குறிப்பிடுவன ஆகும்.அவைகளின் மேலே இருக்கும் உருண்டை கிரிக்கெட் பந்தையும்,உலகத்தையும் குறிப்பிடுகிறது.எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இந்தப் பந்து தெரியும்படி வடிவமைக்கப்பபட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

இதுவரை வெற்றி பெற்றுள்ள ஆறு நாடுகளின் பெயர்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன.மேலும் பத்து நாடுகளின் பெயர்களைப் பொறிப்பதற்க்கு இதில் இடமுள்ளது.இந்தக் கோப்பை I.C.Cன் வசமே இருக்கும்.வெற்றி பெறும் நாட்டிடம் இக்கோப்பையின் மாதிரியே வழங்கப்படும்.1999 வரை வெற்றி பெற்ற நாடுகளிடமே அசல் கோப்பைகள் இருந்தன.1999 உலகக் கோப்பை போட்டிகளில் I.C.C இந்த முறையை மாற்றி தன்னிடமே அசல் கோப்பையை வைத்துக் கொண்டது.

இந்த முறை இந்தியா இக்கோப்பையை வெல்லுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

தகவல்கள் தொடரும்..