Wednesday, March 28, 2007

எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம் ?

இந்த பதிவுல வர எல்லாருமே கோடிகோடியா சம்பாதிச்சுட்டாங்க. அதனால் இந்த பதிவுல சொல்றது எல்லாம் கற்பனையே..நம்ம சிறில் கவி தந்த விதை எழுதற மாதிரி இது மெயில் தந்த விதை. மெயில்ல வந்த விஷயத்துக்கு கற்பனைய கலந்து எழுதியிருக்கேன்.

ஏப்ரல் ஆறாம் தேதி பிசிசிஐ குழு இந்திய அணியோட தோல்விக்கான காரணங்களை விவாதிக்க போறாங்களாம். அப்போ பெரிய தலைங்க சிலது உருளும்னு பேசிக்கறாங்க. ரொம்ப நாளாவே மேட்ச்ல ஆடறதை பொறுத்து தான் சம்பளம் கொடுக்கனும்னு ஒரு பேச்சு இருக்குது. ஒருவேளை அதை கட்டாயமாக்கினா என்னவெல்லாம் நடக்கலாம்னு ஒரு சின்ன கற்பனை.
இடம் : அகர்கர் வீடு

அகர்கர் மேட்சுல விளையாட (இன்னுமாடா நீ டீம்ல இருக்க ? ) புறப்பட்டுகிட்டு இருக்கார்..

அகர்கர் அம்மா : " தம்பி, இந்த தடவையாவது கொஞ்சம் உருப்படியா பந்து போட்டு ரெண்டு விக்கெட் எடுக்க பாருப்பா. நீ விக்கெட் எடுத்து சம்பாதிக்கர காசுல தான் உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும் :( ".

அகர்கர் : "நான் என்னம்மா பண்றது. எந்த பால் போட்டாலும் லெக் சைட்லயே போகுது. கஷ்டப்பட்டு ஆஃப் சைட்ல போட்டா அந்த பாழப்போன எதிர்டீம்காரங்க அடிச்சிடறாங்க"

அ. அம்மா : "அப்பப்ப ஸ்லோ பால் மாதிரி எதாவது போடேம்பா? "

அகர்கர் : "அந்த கூத்தை ஏம்மா கேக்கறீங்க. போன தடவை இப்படிதான் ஸ்லோபால் போடறேன்னு ரொம்ப ஸ்லோவா போட்டுட்டேன். பந்துக்கு முன்னால நான் பேட்ஸ்மேன் கிட்ட போயிட்டேன். அவன் என் சட்டைய பிடிச்சு என்னடா நீ மட்டும் வர? பந்து எங்கேடான்னு கேக்கறான். "

அ. அம்மா : "என்னவோப்பா.உன்னை நம்பி தான் இந்த குடும்பம் இருக்குங்கறதை மறந்துடாத "


இடம் : ஷேவாக் வீடு

ஷேவாக்கின் மனைவியும் பால்காரரும்...

பால்காரர் : "ஏம்மா எத்தினி தபாம்மா வர்ரது. எப்போ தான் பாக்கிய குடுப்ப? '

ஷேவாக் மனைவி : "கோச்சுக்காதீங்க. கொஞ்சம் பொறுத்துக்கோங்க. அடுத்த மேட்சுல அவர் அம்பதோ நூறோ அடிச்ச உடனே குடுத்துடறேன். "

பால்காரர் : "இத்தையேதான் ரெண்டு வருசமா சொல்லிகினுகீற. போன மேட்சுல தான் பெர்முடா கிட்ட நூறு அடிச்சாரே, அந்த காசு என்னாச்சு? "

ஷே. மனைவி : " அந்த காசு மளிகைக்கடை பாக்கிக்கே சரியா போச்சுப்பா"

பால்காரர் : "இதப்பாரும்மா எனக்கு அதெல்லாம் தெரியாது. நாளைக்கு காசு வரலை வூட்ல இருக்க பாத்திரம் பண்டம் எல்லாம் தெருவுக்கு வந்துடும் "

ஷே. மனைவி : கண்ணிருடன் மனதுக்குள் "இந்த விடியா மூஞ்சிய கட்டிகிட்டு இப்படி கஷ்டப்பட வேண்டியதா இருக்கு. ஒரு பாண்டிங்கையோ, ஜெயசூரியாவையோ கட்டியிருந்தா இந்நேரம் ராணி மாதிரி இருந்திருக்கலாம்"இடம் : மும்பை மைதானம்

ஜாகிரும் ஹர்பஜனும் பயிற்சி(?) முடிந்து பேசிகிட்டு இருக்காங்க..

ஹர்பஜன் : "ஆமா ஜாகிர், என்ன இப்பல்லாம் பயிற்சிக்கு தினமும் லேட்டா ஏழு மணிக்கு மேலயே வர?"

ஜாகிர் : "அதையேன் கேக்கற. கிர்க்கெட்ல வர வருமானம் வாய்க்கும் வயித்துக்குமே சரியாயிருக்கு. அதான் பார்ட்-டைமா காலைல பேப்பர் போட்டுகிட்டு இருக்கேன்"

ஹர்பஜன் : "அட நாதாரி, உன்கிட்ட எவ்வளவு நாளா என்னையும் எதாவது வேலைக்கு சேர்த்து விடுன்னு சொல்லிகிட்டு இருக்கேன். என்னையும் சேர்த்து விட்டிருக்கலாம்ல? "

ஜாகிர் : "நான் அவங்க கிட்ட கேட்டேனே. அதுக்கு அவங்க இதுக்கெல்லாம் வேகமா ஓடறவங்களால தான் முடியும், ஸ்பின்னர்சை எல்லாம் சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க"

ஹர்பஜன் : "வேகமா ஓடனுமா? ஏன் சைக்கிள்ல தான எல்லாரும் போவாங்க? "

ஜாகிர் : "அது கரெக்டு. உன்னாலயோ என்னாலயோ சைக்கிள் எல்லாம் வாங்க முடியுமா?"

ஹர்பஜன் : "சரி பரவாயில்லை. வேர எதாவது வேலை இருந்தா சொல்லு"

ஜாகிர் : "தமிழ்மணம்னு ஒரு சைட்ல செந்தழல் ரவிங்கறவர் டெய்லி ஏதோ வேலைவாய்ப்பு செய்திகள் போடறாராம். அதை வேனா பாரேன்? "

ஹர்பஜன் : "அதெல்லாம் மண்டைல எதாவது இருக்கறவங்களுக்குப்பா. நமக்கு வேலைக்காவாது"இடம் : சச்சின் வீடு

சச்சினும் அவரது மகனும்...

சச்சின் : "ஏண்டா இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பலை?"

பையன் : "இல்லைப்பா ஸ்கூல் ஃபீஸ் கட்டாததால மிஸ் ஸ்கூலுக்கு வரவேணாம்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு மேட்சுலயாவது எதாவது அடிப்பியாப்பா?"

சச்சின் : "கவலைப்படாதடா, நாளைக்கு நல்லா ஆடி காசோட வீட்டுக்கு வரேன். எப்பவுமே நான் ஆடும்போது நீ உக்காந்து பாத்தா தான் எனக்கு ராசி. இப்பல்லாம் நீ உக்காந்து பார்க்கறதில்லையா?"

பையன் : "இல்லைப்பா மறக்காம உக்காந்து பார்க்கறேன். நீங்க ஆட வரும்போது எல்லாம் நீங்க நல்லா ஆடனுமேன்னு டென்ஷன்ல மூச்சா வந்துடுது. மூச்சா போக பாத்ரூம் போயிட்டு வரதுக்குள்ள நீங்க அவுட்டாயிடறீங்க :( "

சச்சின் : "சரி சரி, நாளைக்கு மூச்சா வந்தாலும் எந்திரிச்சு போகாம உக்காந்து பார்க்கனும். என்ன ?"

பையன் : "சரிப்பா."

இதுக்கு மேல இன்னைக்கு இவனுங்களை கலாய்ச்சா நல்லாயிருக்காதுன்னு நினைக்கிறேன். அதனால அடுத்த பதிவுல மற்றொரு கலாய்ப்பு. வேணாம் போதும் இத்தோட நிறுத்திக்கோனு [-X யாராவது மிரட்டினா கலாய்க்கறதை நிறுத்திடறேன். இப்போதைக்கு :-h :-h..

41 comments:

மு.கார்த்திகேயன் said...

இந்திய அணியின் அருமை பெருமைகளை எழுதிட்டு இப்போ காமெடி பண்றீங்களே, மணிகண்டன்..

எதுக்கும் இருங்க படிசிட்டு வர்றேன்

மு.கார்த்திகேயன் said...

//அகர்கர் மேட்சுல விளையாட (இன்னுமாடா நீ டீம்ல இருக்க ? ) புறப்பட்டுகிட்டு இருக்கார்..//

இங்க ஆரம்பிக்கிற நையாண்டி கடைசி பந்து..சாரி.. எழுத்து வரை இருக்குங்க மணி

மு.கார்த்திகேயன் said...

//பந்துக்கு முன்னால நான் பேட்ஸ்மேன் கிட்ட போயிட்டேன். அவன் என் சட்டைய பிடிச்சு என்னடா நீ மட்டும் வர? பந்து எங்கேடான்னு கேக்கறான். "
//

படிச்சுட்டு சிரிக்காம இருக்க முடியலப்பா மணி..

சிவபாலன் said...

மணிகண்டன்,

கலக்குறீங்க.. சூப்பர்..


எனக்கென்னமோ உ.தோ.முன் மணிகண்டனைவிட உ.தோ.பின் மணிகண்டனைத்தான் ரொம்ப பிடித்திருக்கு.. Ha Ha Ha..

இராம் said...

மணி,


இதெல்லாம் இந்த ஜென்மத்துக்கும் நடக்காது'ன்னு நினைக்கிறேன்...
எல்லா பயலுகளும் தலைமுறைக்கு சொத்து சேர்த்துடானுக, அதுவுமில்லாமே விளையாண்டுதான் அவனுக சம்பாரிக்கனுமின்னு இல்லாமே போச்சு, ஆளுக்காளு ஹோட்டலு, அதுஇது'ன்னு நிறைய தொழில் வேற செய்யுறானுக:(((

Nakkiran said...

//பந்துக்கு முன்னால நான் பேட்ஸ்மேன் கிட்ட போயிட்டேன். அவன் என் சட்டைய பிடிச்சு என்னடா நீ மட்டும் வர? பந்து எங்கேடான்னு கேக்கறான். "//

Too good... LoL

Nakkiran said...

//இந்த விடியா மூஞ்சிய கட்டிகிட்டு இப்படி கஷ்டப்பட வேண்டியதா இருக்கு. ஒரு பாண்டிங்கையோ, ஜெயசூரியாவையோ கட்டியிருந்தா இந்நேரம் ராணி மாதிரி இருந்திருக்கலாம்"//

Suuuppppppperrrrr..

தென்றல் said...

'இந்த கோடி வரணுங்களே' இப்படி கற்பனை பண்ணிகூட பார்க்கமுடியல-ங்க!

/ஜாகிர் : "தமிழ்மணம்னு ஒரு சைட்ல செந்தழல் ரவிங்கறவர் டெய்லி ஏதோ வேலைவாய்ப்பு செய்திகள் போடறாராம். அதை வேனா பாரேன்? "
/
ஒரே பந்துல ரெண்டு சிக்சர் அடிக்கிறிங்க...எப்படி, மணிகண்டன்!

இலவசக்கொத்தனார் said...

//இங்க ஆரம்பிக்கிற நையாண்டி கடைசி பந்து..சாரி.. எழுத்து வரை இருக்குங்க மணி//

மு.கா சொன்னதுக்கு ரிப்பீட்டு

//எனக்கென்னமோ உ.தோ.முன் மணிகண்டனைவிட உ.தோ.பின் மணிகண்டனைத்தான் ரொம்ப பிடித்திருக்கு..//

சி.பா. சொன்னதுக்கு ரிப்பீட்டு

//எல்லா பயலுகளும் தலைமுறைக்கு சொத்து சேர்த்துடானுக, அதுவுமில்லாமே விளையாண்டுதான் அவனுக சம்பாரிக்கனுமின்னு இல்லாமே போச்சு,//

ரா.ரா. சொன்னதுக்கு ரிப்பீட்டு

//ஒரே பந்துல ரெண்டு சிக்சர் அடிக்கிறிங்க...எப்படி, மணிகண்டன்!//

தென்றல் சொன்னதுக்கு ரிப்பீட்டு!!

{இதெல்லாம் ஒரு பின்னூட்டமான்னு திட்டக் கூடாது. நான் நினைச்சு இருந்தா இது எல்லாத்தையும் தனித் தனியா போட்டு உம்மை உயரெல்லைக்கு கிட்ட கொண்டு போயிருப்பேன்!! :))) }

மணிகண்டன் said...

//இந்திய அணியின் அருமை பெருமைகளை எழுதிட்டு இப்போ காமெடி பண்றீங்களே, மணிகண்டன்..
//

என்ன பண்றது கார்த்தி.. பார்த்த நம்மளை காமெடியன் ஆக்குனாங்கள்ள அதான் :)

மணிகண்டன் said...

////அகர்கர் மேட்சுல விளையாட (இன்னுமாடா நீ டீம்ல இருக்க ? ) புறப்பட்டுகிட்டு இருக்கார்..//

இங்க ஆரம்பிக்கிற நையாண்டி கடைசி பந்து..சாரி.. எழுத்து வரை இருக்குங்க மணி //

நன்றி கார்த்தி..பதிவ எழுதும்போது எல்லாரும் ரசிப்பாங்களா இல்லை துப்புவாங்களான்னு யோசிச்சேன். பரவாயில்லை கொஞ்சம் ரசிக்கற மாதிரி தான் எழுதியிருக்கேன் போல :)

மணிகண்டன் said...

////பந்துக்கு முன்னால நான் பேட்ஸ்மேன் கிட்ட போயிட்டேன். அவன் என் சட்டைய பிடிச்சு என்னடா நீ மட்டும் வர? பந்து எங்கேடான்னு கேக்கறான். "
//

நான் ரொம்ப ரசிச்ச வரிகளும் இதுதான் :)

மணிகண்டன் said...

//எனக்கென்னமோ உ.தோ.முன் மணிகண்டனைவிட உ.தோ.பின் மணிகண்டனைத்தான் ரொம்ப பிடித்திருக்கு.. Ha Ha Ha..
//

மிக்க நன்றி சி.பா. அப்படின்னா இந்த ரூட்லயே கண்டின்யூ பண்றேங்க .. :)

மணிகண்டன் said...

//இதெல்லாம் இந்த ஜென்மத்துக்கும் நடக்காது'ன்னு நினைக்கிறேன்...
எல்லா பயலுகளும் தலைமுறைக்கு சொத்து சேர்த்துடானுக, அதுவுமில்லாமே விளையாண்டுதான் அவனுக சம்பாரிக்கனுமின்னு இல்லாமே போச்சு, ஆளுக்காளு ஹோட்டலு, அதுஇது'ன்னு நிறைய தொழில் வேற செய்யுறானுக:(((
//

கரெக்டுங்க ராயல், அதனால் தான் முதல் வரிலய அதை எழுதிட்டேன்..

மணிகண்டன் said...

////பந்துக்கு முன்னால நான் பேட்ஸ்மேன் கிட்ட போயிட்டேன். அவன் என் சட்டைய பிடிச்சு என்னடா நீ மட்டும் வர? பந்து எங்கேடான்னு கேக்கறான். "//

Too good... LoL

March 28, 2007 11:20 AM


Nakkiran said...
//இந்த விடியா மூஞ்சிய கட்டிகிட்டு இப்படி கஷ்டப்பட வேண்டியதா இருக்கு. ஒரு பாண்டிங்கையோ, ஜெயசூரியாவையோ கட்டியிருந்தா இந்நேரம் ராணி மாதிரி இருந்திருக்கலாம்"//

Suuuppppppperrrrr..

//

நன்றி நக்கீரன்..ரொம்ப ரசிச்சீங்க போல தெரியுது :)

மணிகண்டன் said...

//ஒரே பந்துல ரெண்டு சிக்சர் அடிக்கிறிங்க...எப்படி, மணிகண்டன்!
//

நம்ம பசங்க தான் அடிக்கலை, நாமளாவது அடிப்போமேன்னுதான் :)

மணிகண்டன் said...

////இங்க ஆரம்பிக்கிற நையாண்டி கடைசி பந்து..சாரி.. எழுத்து வரை இருக்குங்க மணி//

மு.கா சொன்னதுக்கு ரிப்பீட்டு

//எனக்கென்னமோ உ.தோ.முன் மணிகண்டனைவிட உ.தோ.பின் மணிகண்டனைத்தான் ரொம்ப பிடித்திருக்கு..//

சி.பா. சொன்னதுக்கு ரிப்பீட்டு

//எல்லா பயலுகளும் தலைமுறைக்கு சொத்து சேர்த்துடானுக, அதுவுமில்லாமே விளையாண்டுதான் அவனுக சம்பாரிக்கனுமின்னு இல்லாமே போச்சு,//

ரா.ரா. சொன்னதுக்கு ரிப்பீட்டு

//ஒரே பந்துல ரெண்டு சிக்சர் அடிக்கிறிங்க...எப்படி, மணிகண்டன்!//

தென்றல் சொன்னதுக்கு ரிப்பீட்டு!!

{இதெல்லாம் ஒரு பின்னூட்டமான்னு திட்டக் கூடாது. நான் நினைச்சு இருந்தா இது எல்லாத்தையும் தனித் தனியா போட்டு உம்மை உயரெல்லைக்கு கிட்ட கொண்டு போயிருப்பேன்!! :))) }

//

கொத்ஸ்,
இவங்க எல்லாருக்கும் சொன்ன பதி பின்னூட்டங்கள் உங்களுக்கு ரிப்பீட்டு :)

சந்தோஷ் aka Santhosh said...

//பையன் : "இல்லைப்பா மறக்காம உக்காந்து பார்க்கறேன். நீங்க ஆட வரும்போது எல்லாம் நீங்க நல்லா ஆடனுமேன்னு டென்ஷன்ல மூச்சா வந்துடுது. மூச்சா போக பாத்ரூம் போயிட்டு வரதுக்குள்ள நீங்க அவுட்டாயிடறீங்க :( "

சச்சின் : "சரி சரி, நாளைக்கு மூச்சா வந்தாலும் எந்திரிச்சு போகாம உக்காந்து பார்க்கனும். என்ன ?"

பையன் : "சரிப்பா."//
மணி கலக்கி இருக்கிங்க. நம்ம சிபா சொன்ன மாதிரி உ.கோ முன்ன விட உ.கோ பின்னாடி தான் கலக்குறீங்க. :)) இப்படியே தொடருங்க.

சிறில் அலெக்ஸ் said...

//அவன் என் சட்டைய பிடிச்சு என்னடா நீ மட்டும் வர? பந்து எங்கேடான்னு கேக்கறான். "//

ha ha ha ha
:)))))
வாய் விட்டு சிரிச்சுட்டேன்..

மூணாவது 6 போட்டாச்சு.. அடுத்த மூணும் போட்டுட்டா ரெக்கார்ட்

:))

ஆதிபகவன் said...

எப்படி மணிகண்டன்?!!!!

//"தமிழ்மணம்னு ஒரு சைட்ல செந்தழல் ரவிங்கறவர் டெய்லி ஏதோ வேலைவாய்ப்பு செய்திகள் போடறாராம். அதை வேனா பாரேன்? "//:))))

அருமையா எழுதுறீங்க. உ.கோப்பையைவிட நீங்க எழுதுறது சுப்பர்.:))))

ஆதிபகவன் said...

எப்படி மணிகண்டன்?!!!!

//"தமிழ்மணம்னு ஒரு சைட்ல செந்தழல் ரவிங்கறவர் டெய்லி ஏதோ வேலைவாய்ப்பு செய்திகள் போடறாராம். அதை வேனா பாரேன்? "//:))))

அருமையா எழுதுறீங்க. உ.கோப்பையைவிட நீங்க எழுதுறது சுப்பர்.:))))

மணிகண்டன் said...

//மணி கலக்கி இருக்கிங்க. நம்ம சிபா சொன்ன மாதிரி உ.கோ முன்ன விட உ.கோ பின்னாடி தான் கலக்குறீங்க. :)) இப்படியே தொடருங்க.
//

நன்றி சந்தோஷ். கண்டிப்பாக தொடருகிறேன்..

மணிகண்டன் said...

//ha ha ha ha
:)))))
வாய் விட்டு சிரிச்சுட்டேன்..

மூணாவது 6 போட்டாச்சு.. அடுத்த மூணும் போட்டுட்டா ரெக்கார்ட்
//

நன்றி சிறில்.. முதல் மூனு அடிச்சது சந்தோஷம் தான் . அடுத்த மூனு தான் கஷ்டம். பார்க்கலாம்.

மணிகண்டன் said...

//அருமையா எழுதுறீங்க. உ.கோப்பையைவிட நீங்க எழுதுறது சுப்பர்.:))))
//

ரொம்ப நன்றி ஆதிபகவன்..ஒரு ரசிகனை காமெடியனா ஆக்கிடுச்சு நம்ம அணி :)

SurveySan said...

:))))))))))))))))))))

everything alright?

muthiduchaa?
seekkaram doctor paathurunga.

மணிகண்டன் said...

//:))))))))))))))))))))

everything alright?

muthiduchaa?
seekkaram doctor paathurunga.

//
எவ்ரிதிங் இஸ் ஆல்ரைட்.
இப்பதான் தெளிஞ்சிருக்கு :)

ஜெகன் said...

கலக்கிட்டிங்க மணி, விழுந்து விழுந்து சிரிச்சேன் :)

Nakkeeran said...

office-l ellam oru mathiriya parkkuranga thaniya sirikkirennu.
ithaiym parkka
http://www.indianexpress.com/(enna arumaiyana photo)
http://cricket.expressindia.com/fulleistory.php?type=ei&content_id=83865

Fast Bowler said...

மணி,

கலக்குறீங்க சார். பாவம் செத்த பாம்பை எத்தனை நாளுக்குத்தான் அடிப்பது? ஹி ஹி

மணிகண்டன் said...

//கலக்கிட்டிங்க மணி, விழுந்து விழுந்து சிரிச்சேன் :)

//
பார்த்துங்க ஜெகன், விழுந்து அடிபட்டுடப் போவுது :)

மணிகண்டன் said...

//office-l ellam oru mathiriya parkkuranga thaniya sirikkirennu.
ithaiym parkka
http://www.indianexpress.com/(enna arumaiyana photo)
http://cricket.expressindia.com/fulleistory.php?type=ei&content_id=83865

//

படிச்சேன் நக்கீரன். முதல் லின்க் வேலை செய்யலை. ரெண்டாவது படிச்சப்ப ஒரு மாதிர் மிக்ஸட் ஃபீலிங் தான் வருது. என்ன சொல்றதுன்னு தெரியலை.

மணிகண்டன் said...

//மணி,

கலக்குறீங்க சார். பாவம் செத்த பாம்பை எத்தனை நாளுக்குத்தான் அடிப்பது? ஹி ஹி

//
வாங்க பவுலர், எனக்கும் இப்போ அப்படிதான் தோனுது. கொஞ்சம் கேப் விடலாம்னு பார்க்கற்றேன்.

Nakkeeran said...

indianexpress.com (front page)
try pannunga.

Thillakan said...

ஒரு கரை காணுறது தான் எண்டு இருகிறியள்.

நல்ல நக்கல் !!!

மையிலில் ஒரு ரவுண்டு வர வைத்திடுவம்!!

Anonymous said...

//பந்துக்கு முன்னால நான் பேட்ஸ்மேன் கிட்ட போயிட்டேன். அவன் என் சட்டைய பிடிச்சு என்னடா நீ மட்டும் வர? பந்து எங்கேடான்னு கேக்கறான். "
//

Ultimate!!!kalkkunga!

Mani enna mattum vuttruppaa - Dravid!!!

-L-L-D-a-s-u said...

மணிகண்டன்,

நீங்க அடிச்சு ஆடுறத பார்த்தா, இந்திய அணி தோற்றதும் நல்லதுதான் என்று தோன்றுகிறது .

இன்னும் 3 சிக்ஸ்தான். 'வலையுலக் கிப்ஸ்' என பட்டம் கொடுக்க வாய் துடிக்கிறது ..

அகர்கர் மேட்டர் வாய்ய்ய்ய்ய் விட்டு சிரித்தேன் ..

(குறிப்பு: இன்னும் சில நாட்களில், உங்களின் பதிவு உங்கள் மெயிலுக்கு வரும், சாத்தான்குளத்தானுக்குபோல)

மணிகண்டன் said...

//indianexpress.com (front page)
try pannunga.

//
நன்றி நக்கீரன். பார்த்தேன். ஷேவக்கோட அப்பா சொல்லியிருக்கறதை படிச்சீங்களா??

மணிகண்டன் said...

//ஒரு கரை காணுறது தான் எண்டு இருகிறியள்.

நல்ல நக்கல் !!!

மையிலில் ஒரு ரவுண்டு வர வைத்திடுவம்!!
//

நன்றி திலகன். தமிழ்மணத்துல நாறுற நம்ம அணி மெயில் மூலமா உலகம் முழுக்க நாறணுமா? :)

மணிகண்டன் said...

//Mani enna mattum vuttruppaa - Dravid!!!
//

திராவிடுக்கு சுடச்சுட தயாராகிக் கொண்டிருக்கிறது.

மணிகண்டன் said...

//நீங்க அடிச்சு ஆடுறத பார்த்தா, இந்திய அணி தோற்றதும் நல்லதுதான் என்று தோன்றுகிறது .
//

நாம வச்சா குடுமி சிரைச்சா மொட்டை கேசுங்க. ஒரேயடியா தலைல தூக்கி வச்சு ஆடுவேன் இல்லைன்னா மிதிமிதினு மிதிப்பேன் :)

உண்மைத் தமிழன் said...

நல்லதொரு கிண்டல்.. மணிகண்டன் ஸார்.. தவறாம டெய்லி வந்து இது மாதிரி ஏதாவது எழுதுங்க..