Monday, March 26, 2007

அப்படி என்ன தாண்டா பேசுவீங்க?

லோக்கல்ல தென்னை மட்டை வச்சு ஆடறவங்களா இருந்தாலும், சர்வதேச லெவல்ல ஆடறவங்களா இருந்தாலும், ஒவ்வொரு ஓவர் முடிஞ்சதும், நடந்து வந்து பேட்டை தட்டிகிட்டு எதாவது பேசறது வழக்கம். இது சம்பந்தமா மெயில்ல வந்த ஒரு ஜோக்கையும், நடந்து முடிந்த இந்தியா-இலங்கை போட்டியையும் கலந்த ஒரு கற்பனை :)

இலங்கை 254 ரன் அடிச்சு இந்தியா 255 ரன் அடிச்சா வெற்றிங்கற நிலைமைல உத்தப்பாவும், கங்கூலியும் ஆட வர்றாங்க. முதல் ஓவர் சமிந்தா வாஸ் போடறாரு. உத்தப்பா தடவு தவுனு தடவி ரன் எதுவும் எடுக்காம ஆறு பந்தையும் ஆடி முடிச்சுடறாரு.

கங்கூலி : ஏண்டா, ஃபோரு சிக்ஸுனு அடீப்பனு பார்த்தா இப்படி தடவிட்டு வந்து சிரிக்கறேயே. உனக்கு உத்தப்பானு பேர் வச்சதுக்கு சொத்தப்பானு பேர் வச்சிருக்கலாம்.

உத்தப்பா : பேசாத நீயி.அவன் ஓடி வர்றது தான் தெரியுது. பந்து எங்கே விழுந்து எங்கே போகுதுன்னே தெரியலை.நானே சின்னதம்பி கவுண்டமணி மாதிரி ஒருவழியா தடவி அவுட்டாகாம நிக்கறேன். அடுத்து அந்த பஞ்சுமிட்டாய் தலையன் மலிங்கா போடுவான். நீ என்ன பண்ரனு பார்க்கலாம்.

கங்கூலி : இந்த பெங்காலிக்கு அந்த ரங்கோலி மண்டையன் எல்லாம் தூசுடா. பாரு இப்ப என் ஆட்டத்தை.

அடுத்த ஓவர் கங்கூலி வழக்கம் போல பந்துக்கு ஒத்தடம் குடுத்து ஆடிட்டு வரார்.
உத்தப்பா: (நக்கலான சிரிப்போட :) ) என்னமோ நாலு பால்ல ஆறு சிக்ஸ் அடிக்கபோற மாதிரி பேசுனே மாங்கா மண்டையா. ஏண்டா அடிக்கலை?
கங்கூலி : ஹி.ஹி அடிக்கலாம்னு தான் பார்த்தேன். எப்படியும் நீங்க எல்லாம் சீக்கிரம் அவுட்டாயி போகப்போறீங்க. நான் ஒரு 100 பால்ல 40 ரன் அடிச்சா அடுத்த கேப்டன் ஆயிடுவேன்ல. அதான். இது நமக்குள்ளயே இருக்கட்டும். நான் கேப்டன் ஆனா உன்னை வைஸ் கேப்டன் ஆக்கிடுறேன்.
உத்தப்பா : (மனசுக்குள்ள "போகாத ஊருக்கு வழி சொல்லுது பாரு பொறம்போக்கு. இது மறுபடியும் கேப்டனாயி நான் வைஸ் கேப்டன் ஆகறதுக்குள்ள எனக்கு சங்கூதிடுவாங்க" ). ஆகா நல்லா திட்டம் போடுறீங்க. கலக்கிடலாம்.

கொஞ்ச நேரத்துல உத்தப்பா உலக்கோப்பையில தனது அதிகபட்ச ஸ்கோரான 18 ரன்னை அடிச்சு அவுட்டாயி போறாரு. இப்போ ஷேவாக்கும் கங்கூலியும் ஆடறாங்க.

கங்கூலி : என்ன ஷேவாக், இன்னைக்கு எவ்வளவு அடிக்கறதா உத்தேசம்?
ஷேவாக்: நிச்சயமா இன்னைக்கும் செஞ்சுரி அடிச்சிடாலம்னு தோனுது.
கங்கூலி : இவனுங்களை என்ன அந்த பெர்முடா தலையனுங்கனு நினனச்சியா 114 அடிக்கறதுக்கு. நேத்து அடிச்சதை விட ஒரு ரன் கம்மியா அடிப்பனு தோனுது.
ஷேவக் : என்ன 113ஆ?
கங்கூலி : இல்லை 14.

10 ஓவர்ல இந்தியா 42 ரன் அடிச்சிருக்கு.
கங்கூலி : இந்த ரெண்டு பன்னாடைங்களும் போடறதை பார்த்தா அடிக்க முடியும்னு தோனலை. பேசாம இன்னும் 6 ஓவருக்கு டொக்கு வச்சிட்டு ஸ்பின்னர்ஸ் வந்தோன அடிக்கலாம்.
ஷேவாக் : போன ஓவர் வாஸ் போடும்போது கொஞ்சம் சோர்வா இருந்தான். அதனால் இந்த ஓவர்ல நீ அடிச்சு ஆடு, நான் அடுத்த ஓவரை பார்த்துக்கறேன். (மனசுக்குள்ளே "எப்படியும் இந்த நாயி அடிச்சு ஆடறேன்னு அவுட்டாயி போயிடும். அடுத்த கேப்டன் நாந்தான்" )

அவர் எதிர்பார்த்த மாதிரியே கங்கூலி அடிச்சு ஆட ட்ரை பண்ணி அவுட்டாயிடறாரு. ஸ்கோர்போர்ட்ல இருந்து கங்கூலி பேரை எடுத்துட்டு சச்சின் பேரை போடறதுக்குள்ள அவரும் அவுட்டாயி திரும்பராரு. அப்போ எதிர்ல உள்ள வர திராவிட்,

திராவிட் : ஏய் மூதேவி, அதான் ரெண்டு பாலை தொடாம விட்டில்ல.இந்த பாலையும் விடவேண்டியது தான?
சச்சின் : நானும் அப்படித்தான் நினைச்சேன். மூனாவது பால் ஆடுறப்ப பூஸ்ட் விளம்பரம் ஞாபகம் வந்துடுச்சு. அதுல ஆடர மாதிரி நினைச்சுகிட்டு பாலை தொட்டேன். அவுட்டாயிடுச்சு.அடுத்த மேட்சுல அடிக்கறேன்.
திராவிட் : அடுத்த மேட்ச் உன் பையனோட உங்க வீட்டு கிரவுண்ட்ல தான் ஆடப்போற. உன்னையெல்லாம் தலையில கட்டி என் கழுத்த அறுக்கறாங்க. அப்படி என்ன அவசரம் உனக்கு?
சச்சின் : பின்ன. போன மேட்சுல கொஞ்ச நேரம் நின்னு ஆடிட்டு போறதுக்குள்ள, ஃப்ரிட்ஜ்ல இருந்த பீரையெல்லாம் காலி பண்ணிடுச்சுங்க பரதேசிங்க. அதான் அவசரமா போறேன். ரேண்டு பீராவது தேத்தனும்ல.
திராவிட் ; ஓ இதுல இப்படி ஒன்னு இருக்கா. நீ சொல்றதும் சரிதான். அப்படியே எனக்கு ரெண்டு எடுத்து ஒளிச்சு வை.

திராவிடும், ஷேவாக்கும் எதிர்பார்த்ததை விட கொஞ்ச நேரம் தாக்கு பிடிச்சு ஆடறாங்க.ஸ்கோர் 20 ஓவர்ல 89 ரன்.

திராவிட் : ஆமா போன உலகக்கோப்பைல சிக்ஸா அடிச்ச,இப்ப என்ன ஆச்சு?
ஷேவாக்: அப்போ ஒவ்வொரு சிக்ஸ் அடிக்கரதுக்கு முன்னாலயும் எங்கம்மா ரிலையன்ஸ் ஃபோன்ல கூப்பிடுவாங்க. இந்த தடவை அவங்க ஃபோன்ல சார்ஜ் இல்லை. அதான்.
திராவிட் : த்த்த்தூதூ. இதெல்லாம் ஒரு பொழப்பு?
ஷேவாக் : (மனசுக்குள்ள என்னை பார்த்து துப்பிட்டியா? இந்த ஓவர்ல அவுட்டாயி உன்னை என்ன பண்றேன் பாரு)

ஷேவாக் அவுட்டாகி போறரு. திராவிட் அவரை கூப்பிட்டு,

திராவிட் : ஏண்டா அவன் தான் ஸ்லிப்ல ஒருத்தனை நிக்க வச்சிருக்கானே அப்புறம் ஏண்டா அவன்கிட்டயே தூக்கி குடுக்கறே.
ஷேவாக் : இல்லைண்ணே ஸ்லிப்ல நின்னு தூங்கிகிட்டு இருக்கான் அந்த பன்னாடை. என்னை டைவர்ட் பண்ற மாதிரி கொட்டாவி வேற விடுறான். அதான் அவனை அலர்ட்டா ஆக்கறதுக்கு கேட்ச் குடுத்தேன்.
திராவிட் : எல்லாரும் சொல்லி வச்சு எனக்கு குழி பறிக்கறீங்களா? போங்கடா நானே பார்த்துக்கறேன்.

அடுத்து வர யுவராஜும் தேவையில்லாம ரன் அவுட்டாயி போறாரு. அப்போ

திராவிட் : டேய் ப்ரில்கிரீம் மண்டையா, அதான் பால் நேரா ஃபீல்டர் கிட்ட போகுதே அப்புறம் ஏண்டா ஓடி வந்து ரன் அவுட்டான?
யுவராஜ் : இந்த பேச்சுக்கும் ஒன்னும் குறைச்சலில்லை. நான் தான் ஓடிவந்தேன்ல நீயும் வரவேண்டியது தான்?உனக்கு சுவருன்னு பேரு வெச்சதுக்கு குட்டிச்சுவருன்னு பேர் வச்சிருக்கலாம்
திராவிட் : நீ ஓடி வந்தது எங்கேடா தெரியுது. மண்டைல பூசியிருக்கர க்ரீம்ல க்ளேர் அடிச்சு கண்ணே தெரிய மாட்டேங்குது.

அடுத்து வர நட்சத்திர ஆட்டக்காரர் டோணி முதல் பால்ல அவுட்டாகி போறாரு. மகா கடுப்பான திராவிட் அவரை கூப்பிட்டு,

திராவிட் : டேய் சடையாண்டி, அவன் தான் ஸ்டம்புக்கு நேர பாலை போடறான்ல. கையில அவ்வளவு பெரிய பேட் வச்சிருக்கியே, அதால ஆடாம ஏண்டா காலை குறுக்கால விட்ட?
டோணி : இல்லன்னே, பேட்ட வைக்கலாம்னு தான் குனிஞ்சேன். அதுக்குள்ள முடி முன்னால் விழுந்து கண்ணை மறைச்சிடுச்சு
திராவிட் : போடி மாவு, ஏற்கனவே வீட்டு சுவத்தை எல்லாம் இடிச்சுட்டானுங்க. இனி உனக்கு சங்கு தான். முடிய வெட்டு முடிய வெட்டுனு எவ்வளவு தடவை சொன்னேன் கேட்டியாடா முள்ளம்பன்றி தலையா.
டோணி : கவலைப் படாதீங்கண்ணே, அதான் அகர்கர் இருக்கான்ல.
திராவிட் : யாரு அவனா? முப்பது யார்ட் சர்கிளுக்கு வெளியே அடிச்சா சிக்ஸ் இல்லைடா, பவுண்டரிக்கு வெளியே அடிக்கனும்னு எவ்வளவோ தடவை சொல்லிட்டேன். கேக்க மாட்டேங்கறான். அவனை வெச்சு உருப்பட்டாப்ல தான்.
டோணி : அப்புறம் ஏன்னே அவனை டீம்ல சேர்த்தீங்க?
திராவிட் : நான் எங்கேடா சேர்த்தேன். அந்த சச்சின் தான் அடம் பிடிக்கறான். ஒட்டடைக் குச்சிக்கு, துடைப்பகட்டை ரெகமண்டேஷன்.

அடுத்து வரும் அகர்கர் அதிசயமாக தாக்கு பிடித்து ஆறு ரன்கள் அடிச்சிருக்கார்.

திராவிட் : டேய் அதான் ஆறு ரன் அடிச்சு கலக்கிட்டியே, அப்புறம் ஏண்டா இப்படி பொனம் மாதிரி மூஞ்சிய வச்சிருக்க?
அகர்கர் : உங்க கிட்ட சொல்றதுக்கென்ன. நானே விழுந்து புரண்டு ஒரு ஃபிகரை செட் பண்ணி வச்சிருந்த்தேன், அது இப்போ நம்ம முனாஃபோட சுத்துது.
திராவிட் : ஏண்டா, அந்த ஃபிகர் கிட்டயே கேக்க வெண்டியது தான?
அகர்கர் : கேட்டேனே. என்னை விட முனாஃப் நல்லா போடறானாம். நிறைய விக்கெட் எடுக்கறானாம். அதான் என்னை கழட்டி விட்டுடுச்சு.
திராவிட் : நீயும் நல்லா போட்டு விக்கெட் எடுக்க வேண்டியது தான?
அகர்கர் : எண்ணன்னே என்னை பத்தி தெரிஞ்சு தான் பேசுறீங்களா? அதெல்லாம் நம்ம கையிலயா இருக்குது. என்னால முடிஞ்ச விஷ்யம்னா பண்ணலாம். விக்கெட் எடுக்கறதெல்லாம் நம்ம சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம்னே.

சிறிது நேரத்தில் அகர்கரும் அவுட்டாகிப் போக, திராவி தனியாளாக வீரத்துடன் போராடுகிறார் :). மலிங்கா வீசும் ஓவரில் நான்கு பவுண்டரி அடிச்சுட்டு சங்கக்கராவை பெருமையாக பார்க்கிறார்.

சங்கக்கரா ; அடிச்சதெல்லாம் ஓசி ஃபோரு. இது பார்க்கறதை பாரு. இதைத்தான் அணையப்போற விளக்கு பிரகாசம எரியுதுன்னு சொல்லுவாங்க. அடுத்த ஓவர்ல இருக்குதுடி உனக்கு ஆப்பு.

வழக்கம் போல் சைக்கிள் ஸ்டாண்டாக அனைத்து ஆட்டக்காரர்களும் அவுட்டாக, முனாஃபும், ஹர்பஜனும் கடைசி விக்கெட்டுக்கு ஆடுகிறார்கள்.

சங்கக்கரா : ஏண்டா பன் தலையா, அதான் எல்லாரும் அவுட்டாயி பொயிட்டாங்கள்ல, நீங்க மட்டும் எதுக்குடா துள்ளுறீங்க?
ஹர்பஜன் : எங்களையெல்லாம் யாரும் விளம்பறத்துல நடிக்க கூப்பிடறதில்லை. இப்படி எதாவது அடிச்சாலாவது கூப்பிடுவாங்கள்ல.அதான்.
சங்கக்கரா : நீங்க திருந்த மாட்டீங்களாடா? உங்களுக்காக சிகாகோல இருந்து சிறில்னு ஒருத்தர் ஃபேக்ஸ் அனுப்பியிருக்காரு.
ஹர்பஜன் : என்னவாம்?
சங்கக்கரா : போய் விவசாயத்தை பாருங்கடா!னு சொல்லியிருக்காரு.
ஹர்பஜன் : இது கூட நல்ல யோசனை தான். நாங்க விவசாயம் பண்ற அழகை பார்த்துட்டு சுகுனா பம்ப், ஸ்பிக் யூரியானு எதாவது விளம்பரத்துல நடிக்க கூப்பிடுவாங்களா?

சங்கக்கரா மயங்கி விழுகிறார்!!

போட்டி முடிந்தபின், சிவராமகிருஷ்ணன் திராவிடிடம் கேள்விகள் கேட்கிறார்.

சிவா: திராவிட், இன்னைக்கு தோத்ததை பத்தி என்ன சொல்ல விரும்பறீங்க?
திராவிட் : hmm..It's a disappointing day for us. Our bowlers didn't bowled well, batsmen didn't bat well and fielder's didn't field well.
சிவா: ஏண்டா, பவுலிங்கும் போடமாட்டிங்க, ரன்னும் அடிக்க மாட்டிங்க, விழுந்து ஃபீல்டிங்கும் பண்ண மாட்டிங்க! அப்புறம் என்ன ம....க்குடா கிளம்பி வந்தீங்க?
திராவிட் : ஹி.ஹி.. போன வருஷம் ஆட வந்தப்ப சில கரீபியன் தீவுகளை சுத்தி பார்க்க நேரமில்லாம போச்சு.அதுக்கு தான் சுத்தி பார்க்கலாம்னு கம்பைண்ட் ட்ரிப்பா இங்கே வந்தோம்.
சிவா : வந்தது தான் வந்தீங்க. 12 பேர் மட்டும் வந்திருக்கலாம்ல. எதுக்குடா சும்மா பெஞ்சுல உக்கார்ரதுக்கு பதான்,ஸ்ரீசாந்த், கார்த்திக் மூனு பேரையும் கூட்டிகிட்டு வந்தீங்க?
திராவிட் : ஆறு டிக்கெட் வாங்கினா ஒன்னு ஃப்ரீன்னு சொன்னாங்க. அதான் 12 டிக்கெட்டுக்கு 2 டிக்கெட் ஃப்ரீயா கிடைக்குதேன்னு கூட்டிகிட்டு வந்தோம்.
சிவா : அப்படி பார்த்தாலும் ஒரு டிக்கெட் செலவு தானடா?
திராவிட் : அது ஒன்னும் பெரிய விஷயமில்லை. இந்தியாக்கு போன உடனே அஞ்சால் அலுப்பு மருந்து விளம்பரத்துல நடிச்சு அந்த காசை சம்பாதிச்சுடலாம் :)

சிவராமகிருஷ்ணனும் சுருண்டு விழுகிறார் ! !

46 comments:

சிவபாலன் said...

//திராவிட் : hmm..It's a disappointing day for us. Our bowlers didn't bowled well, batsmen didn't bat well and fielder's didn't field well. //

Excellent!!

கலக்கிடீங்க.. வாய்விட்டு சிரிக்க வைத்துவிட்டீர்கள்..

டிவியில் பார்த்த ஜோக்..

நீதிபதி குழ்ந்தையை பார்த்து: நீ அம்மா கூட இருக்கிறியா இல்லை அப்பா கூடவா..

குழந்தை : இந்திய கிரிகெட் அணியிடம். (BCoz, They never beat anybody)

பரணீ said...

:-)))))

செல்வன் said...

//இரண்டாவது முறையாக இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா என ஏங்கும் இந்தியர்களில் ஒருவன்.. //


Time to change this description in your profile:)))

சந்தோஷ் aka Santhosh said...

கலக்கிட்டிங்க மணி. ஆகா செம ஓட்டு ஓட்டி இருக்கிங்க :)).. சூப்பர்

ஆதிபகவன் said...

மணிகண்டன்,

சூப்பர்.....

இப்படியெல்லாம் எழுத உட்காந்து யோசிப்பீங்களோ!!!

இனி உங்க சாய்ஸ் எந்த டீம்?

சிறில் அலெக்ஸ் said...

புண்பட்ட இதயத்த புன்னகையால ஆத்திட்டீங்க..

செம காமெடி
:))

மணிகண்டன் said...

நன்றி சிவபாலன்.

//நீதிபதி குழ்ந்தையை பார்த்து: நீ அம்மா கூட இருக்கிறியா இல்லை அப்பா கூடவா..

குழந்தை : இந்திய கிரிகெட் அணியிடம். (BCoz, They never beat anybody) //

இதுவும் கலக்கல். எங்கே பார்த்தாலும் இந்திய அணியை அட்டாக் பண்ணி தான் பதிவு போட்டு தாக்குறாங்க:)

மணிகண்டன் said...

வருகைக்கு நன்றி பரணீ.

மணிகண்டன் said...

////இரண்டாவது முறையாக இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா என ஏங்கும் இந்தியர்களில் ஒருவன்.. //


Time to change this description in your profile:)))

//
நன்றி செல்வன். மாத்திட்டேன்.

மணிகண்டன் said...

//கலக்கிட்டிங்க மணி. ஆகா செம ஓட்டு ஓட்டி இருக்கிங்க :)).. சூப்பர் //

சந்தோஷ், பொழப்பத்து போய் உக்காந்து பார்த்த நம்மளை அவங்க ஓட்டுன ஓட்டை விடவா?

மணிகண்டன் said...

//மணிகண்டன்,

சூப்பர்.....

இப்படியெல்லாம் எழுத உட்காந்து யோசிப்பீங்களோ!!!

இனி உங்க சாய்ஸ் எந்த டீம்?

//
வாங்க ஆதிபகவன்.
ஆஸ்திரேலியாவை சப்போர்ட் பண்ண வேண்டியது தான். நம்ம குதிரை தோத்துடிச்சின்னா ஜெயிக்கற குதிரை மேல பணம் கட்ட வேண்டியதுதான்

மணிகண்டன் said...

//புண்பட்ட இதயத்த புன்னகையால ஆத்திட்டீங்க..//

ஆமாம் சிறில், வேற என்னத்த பண்ரது?

தென்றல் said...

மணிகண்டன்,

கலக்கிடீங்க.. ;)
சத்தமா officeல சிரிக்க முடியாது... அதனால வீட்டுக்கு போய் முழுவதும் படிச்சிட்டு மீண்டும் வரேன்...

இப்போதைக்கு..
/என்னமோ நாலு பால்ல ஆறு சிக்ஸ் அடிக்கபோற மாதிரி பேசுனே மாங்கா மண்டையா/
என்ன இருந்தாலும், உத்தப்பாக்கு நேரம் சரியில்லதான்...

Radha Sriram said...

டாப் fஆர்ம்ல இருக்கீங்க போல மணி??!!

துன்பம் வரும் நேரத்துல சிரிங்கன்னு சொல்லிட்டீங்க......சரி அப்படியே செஞ்சிடரேன்!!!

சரி இவங்கதான் இப்படி பண்ணிட்டாங்கன்னா இங்க லேக்கர்ஸும் அப்பப்ப heart beatஅ அதிகரிச்சிடராங்க!!:):) but iam able to maintain a aesthetic distance from this unlike some people in my family...hi hi hi!!

மணிகண்டன் said...

//கலக்கிடீங்க.. ;)
சத்தமா officeல சிரிக்க முடியாது... அதனால வீட்டுக்கு போய் முழுவதும் படிச்சிட்டு மீண்டும் வரேன்...
//
மெதுவா வாங்க தென்றல்.இது மாதிரி பதிவு இனி நிறைய வரும் :)

மணிகண்டன் said...

//டாப் fஆர்ம்ல இருக்கீங்க போல மணி??!!

துன்பம் வரும் நேரத்துல சிரிங்கன்னு சொல்லிட்டீங்க......சரி அப்படியே செஞ்சிடரேன்!!!
//

ஆமாங்க மேடம், ஏதோ நம்மால முடிஞ்சது இதுதான்.

தென்றல் said...

/சிவா: ஏண்டா, பவுலிங்கும் போடமாட்டிங்க, ரன்னும் அடிக்க மாட்டிங்க, விழுந்து ஃபீல்டிங்கும் பண்ண மாட்டிங்க! அப்புறம் என்ன ம....க்குடா கிளம்பி வந்தீங்க?
/
'சிவா'-வுக்கு "மணிகண்டன்" இருந்தா ரொம்ப பொருத்தமா இருந்துக்கும்...

/இது மாதிரி பதிவு இனி நிறைய வரும் :)
/
CNN-IBNக்கு தெரிஞ்சா 'LOC' programmeல உங்களுக்கு வாய்ப்பு உறுதி.

வடுவூர் குமார் said...

அப்பாடி, இப்ப தான் மனசு கொஞ்சம் லேசானது.
இப்பவெல்லாம் சிங்கப்பூரில் கூட இதைப்பற்றி விவாதிக்கிறார்கள்.இன்று காலை இதைப்பற்றிய நிகழ்சி.நம்ம பத்ரி கூட காரணம் சொல்லியிருந்தார்.

Fast Bowler said...

//உனக்கு சுவருன்னு பேரு வெச்சதுக்கு குட்டிச்சுவருன்னு பேர் வச்சிருக்கலாம்
//

டாப் க்ளாஸ்.

//யாரு அவனா? முப்பது யார்ட் சர்கிளுக்கு வெளியே அடிச்சா சிக்ஸ் இல்லைடா, பவுண்டரிக்கு வெளியே அடிக்கனும்னு எவ்வளவோ தடவை சொல்லிட்டேன். கேக்க மாட்டேங்கறான். அவனை வெச்சு உருப்பட்டாப்ல தான்.
//
எப்படி உங்களால மட்டும்.....

//அகர்கர் : எண்ணன்னே என்னை பத்தி தெரிஞ்சு தான் பேசுறீங்களா? அதெல்லாம் நம்ம கையிலயா இருக்குது. என்னால முடிஞ்ச விஷ்யம்னா பண்ணலாம். விக்கெட் எடுக்கறதெல்லாம் நம்ம சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம்னே.
//

:)

//ஹர்பஜன் : இது கூட நல்ல யோசனை தான். நாங்க விவசாயம் பண்ற அழகை பார்த்துட்டு சுகுனா பம்ப், ஸ்பிக் யூரியானு எதாவது விளம்பரத்துல நடிக்க கூப்பிடுவாங்களா?
//
:)

மணி கற்பனை சூப்பர். சில இடங்களில் சுல்லுனு உறைக்கிற மாதிரி இருக்கு.

அவந்திகா said...

சூப்பர்...

running commentry விட இது நல்லா இருக்கு..:-)))

மணிகண்டன் said...

//CNN-IBNக்கு தெரிஞ்சா 'LOC' programmeல உங்களுக்கு வாய்ப்பு உறுதி.
//

தென்றல், அந்த அளவுக்கு எல்லாம் நம்மகிட்ட சரக்கு ஒன்னும் இல்லைங்க..

மணிகண்டன் said...

//அப்பாடி, இப்ப தான் மனசு கொஞ்சம் லேசானது.
//

எனக்கும் தான் குமார். இவங்களை இப்படி திட்டியாவது கோபத்தை குறைச்சுக்கலாம்.

மணிகண்டன் said...

////யாரு அவனா? முப்பது யார்ட் சர்கிளுக்கு வெளியே அடிச்சா சிக்ஸ் இல்லைடா, பவுண்டரிக்கு வெளியே அடிக்கனும்னு எவ்வளவோ தடவை சொல்லிட்டேன். கேக்க மாட்டேங்கறான். அவனை வெச்சு உருப்பட்டாப்ல தான்.
//
எப்படி உங்களால மட்டும்.....
//

இதுல கற்பனை எதுவும் இல்லைங்க பவுலர். முழுக்க முழுக்க உண்மை. அகர்கர் அதை தாண்டி அடிச்சு நான் பார்த்த்தே இல்லை :)

மணிகண்டன் said...

//சூப்பர்...

running commentry விட இது நல்லா இருக்கு..:-)))

//

நன்றி தங்கச்சி. உங்க வியர்ட் பதிவு பார்த்தேன். நல்லா எழுதியிருக்கீங்க.

Anonymous said...

Super Mani.

Ravi

Prabu Raja said...

hayyo hayyo..
:)

இராமநாதன் said...

:)))))))))))))))

அவங்க அடிக்கலேன்னா என்ன நீங்கதான் சிரிப்பு சிக்ஸரா பின்னிருக்கீங்க.

எத quote பண்றதுன்னே தெரியல. மொத்தப் பதிவும் சூப்பரு..

Anonymous said...

You too Mani??????????????

Dravid ;)

Dubukku said...

பட்டயக் கிளப்பியிருக்கீங்க....:))

தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி

http://www.desipundit.com/2007/03/27/kirikettu/

மணிகண்டன் said...

//Super Mani.

Ravi


Prabu Raja said...
hayyo hayyo..
:) //

நன்றி ரவி மற்றும் பிரபு.

மணிகண்டன் said...

//அவங்க அடிக்கலேன்னா என்ன நீங்கதான் சிரிப்பு சிக்ஸரா பின்னிருக்கீங்க.

எத quote பண்றதுன்னே தெரியல. மொத்தப் பதிவும் சூப்பரு..
//

ரொம்ப நன்றி இராமநாதன்.

மணிகண்டன் said...

//பட்டயக் கிளப்பியிருக்கீங்க....:))

தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி

http://www.desipundit.com/2007/03/27/kirikettu/

//
மிக்க நன்றி டுபுக்கு அவர்களே!

தம்பி said...

செம காமெடி, சூப்பர் மணி
கலக்கிட்டிங்க.

மணிகண்டன் said...

//செம காமெடி, சூப்பர் மணி
கலக்கிட்டிங்க.

//
வாங்க தம்பி. சிறில் சொன்ன மாதிரி புண்பட்ட மனசை இப்படியெல்லாம் ஆத்திக்க வேண்டியது தான்.

இராம் said...

மணி,

ultimate பதிவுங்க....

இந்த புரோட்டா மண்டையனுகளை கவுண்டர்'கிட்டே மாட்டிவிட்டு டெவில் ஷோ போட சொல்லணும்..... ;)

மணிகண்டன் said...

//மணி,

ultimate பதிவுங்க....

இந்த புரோட்டா மண்டையனுகளை கவுண்டர்'கிட்டே மாட்டிவிட்டு டெவில் ஷோ போட சொல்லணும்..... ;)

//
கரெக்டா சொன்னீங்க இராம். இவனுங்களுக்கு ஒரு டெவில் ஷோ போட்டுடுங்க. சிரிச்சு சிரிச்சு வேதனையை மறப்போம் :)

Dinesh said...

kalakkiteenga. Apdiye translate panni ella Indian Players kitteyum kattanum. Waste pasanga!

Anonymous said...

கலக்கீட்டீங்க பாஸ். படிசிட்டு, சிரிச்சு சிரிச்சு வயிரே வலிச்சு போச்சு.

-பிரபு

மணிகண்டன் said...

//kalakkiteenga. Apdiye translate panni ella Indian Players kitteyum kattanum. Waste pasanga!

//

தினேஷ், அப்படியே அனுப்பிச்சாலும் அவங்க திருந்த மாட்டாங்க.

மணிகண்டன் said...

//கலக்கீட்டீங்க பாஸ். படிசிட்டு, சிரிச்சு சிரிச்சு வயிரே வலிச்சு போச்சு.

-பிரபு

//
அடுத்த பதிவுகளையும் படிச்சு சிரிச்சுட்டு போங்க பிரபு :)

தேவ் | Dev said...

SUPER O SUPER maa

ROFTL :-)

பெஸ்ட் கிரிக்கெட் ஓட்டல்ஸ் போஸ்ட் :-)

மணிகண்டன் said...

//SUPER O SUPER maa

ROFTL :-)

பெஸ்ட் கிரிக்கெட் ஓட்டல்ஸ் போஸ்ட் :-)

//
வாங்க நட்சத்திரமே, ரொம்ப நன்றி..

Anonymous said...

Mani

I laughed non stop for 10 minutes after reading this. 200USD for subscription an 2500 USD for big screen tv. Nalla vatchanga da appu.

Senthil Kumaran

மணிகண்டன் said...

//Mani

I laughed non stop for 10 minutes after reading this. 200USD for subscription an 2500 USD for big screen tv. Nalla vatchanga da appu.

Senthil Kumaran

//
வாங்க செந்தில். எனக்கு 200 டாலர் தான் நஷ்டம். நல்லவேளை பெரிய டி.வி எல்லாம் வாங்கலை :)

Arunkumar said...

சூப்பருங்க. நான் இப்போ தான் படிக்கிறேன். கலக்கல் காமெடியா எழுதியுருக்கீங்க.
நல்ல ரசிச்சேன்

மணிகண்டன் said...

//சூப்பருங்க. நான் இப்போ தான் படிக்கிறேன். கலக்கல் காமெடியா எழுதியுருக்கீங்க.
நல்ல ரசிச்சேன்

//
நன்றி அருண், மீதி பதிவுகளையும் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..