Friday, March 23, 2007

ஒரு இந்திய ரசிகனின் புலம்பல்


கோடிக்கணக்கான ரசிகர்களோட கனவை கனவாவே ஆக்கிட்டாங்க இந்திய அணியினர். நான் இப்போ வேண்டிக்கறதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் ஜெயிக்கனும்னு தான். எல்லாரோட எதிர்பார்ப்பை, ஆசையை, கனவை கிழிச்சு குதறிப்போட்டுட்டாங்க. இந்திய அணியை வெறித்தனமா சப்போர்ட் பண்ண நான் இந்தியா அடுத்த சுற்றுக்கு போகக்கூடாதுன்னு தான் இப்போ நினைக்கிறேன். You don't deserve it guys.உங்களை பத்தி பெருமையா எழுதினதுக்காக வெக்கப்படறேன்,வருத்தப்படறேன்.

பங்களாதேஷ் கிட்ட தோத்தப்ப எதோ பேட் ல்க் அதனால் தான் தோத்தோம், நிச்சயமா இலங்கைய ஜெயிச்சு அடுத்த சுற்றுக்கு போவோங்கற நம்பிக்கை இருந்துச்சு. இன்னுமாட எங்களை நம்பறீங்கன்னு இன்னைக்கு நிரூபிச்சுட்டாங்க. இதுக்கு மேல கேவலமா ஒரு அணி, அதுவும் பத்தாயிரம் ரன் அடிச்ச மூனு பேர் இருக்கற அணி ஆட முடியுமான்னு தெரியலை. தயவு செய்து மேட்ச் ஃபிக்ஸிங் செஞ்சாவது பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு போக வைக்கனும். அவங்களே நம்மளை விட நல்லா ஆடுவாங்கங்கற நம்பிக்கை இருக்கு. ஒருநாள் தோத்தா பரவாயில்லை. மறுபடியும் மறுபடியும் அதே மாதிரி தோக்குறப்போ வெறுப்பு தான் வருது. இன்னைக்கு ஆடின விதத்தை பார்க்கறப்போ இவங்களை பத்தி பெருமையா சொல்றதெல்லாம் just hypeனு தோனுது. இப்பவாவது உனக்கு புத்தி வந்துதேனு சந்தோஷ்,சிறில் எல்லாம் சிரிக்கறது கேக்குது. என்னங்க பண்றது..நான் கொஞ்சம் ஸ்லோ..






இவ்வளவு பணம் குவிக்கறிங்களேடா, அதுக்கு கொஞ்சமாவது பொறுப்பா விளையாடனும்னு தோனலையா உங்களுக்கு. உங்களை சொல்லி குத்தமில்ல. உங்களை நம்பி இன்னும் உக்காந்து பார்க்கறோமே எங்களை சொல்லனும். திரும்ப பெர்முடா, ஸ்காட்லாந்துனு எதாவது அணி கிடைச்சா வெளுத்து வாங்குங்க.கேன மாதிரி கைதட்டி ரசிக்க நாங்க இருக்கோம். எப்படியும் உங்களுக்கு பணம் கிடைக்க போகுது, உங்களுக்கு என்ன கவலை. டி.வில காண்பிக்கறப்ப மட்டும் இஞ்சி திண்ண குரங்கு மாதிரி மூஞ்சிய வச்சிகிட்டு சோகமா இருக்கற மாதிரி போஸ் குடுங்க. இனிமே மேட்ச் பார்த்து நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்கடானு நல்ல பாடம் கத்து குடுத்துட்டிங்க.

தயவு செஞ்சு நீங்க இதுவரைக்கும் சம்பாதிச்ச காசுல கொஞ்சத்தை எதாவது புக்கி கிட்ட குடுத்து பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு போக வைங்க. கிரிக்கெட்டுக்கு கொஞ்சம் நல்லது பண்ன புண்ணியமாவது கிடைக்கும்.

பி.சி.சி.ஐ கிட்ட கேக்கறது எல்லாம் ஒன்னே ஒன்னு தான். தயவு செஞ்சு வயசான காலி பெருங்காய டப்பாக்களை எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு இளம் வீரர்களை கொண்டு வாங்க. அதனால் தொடர்ந்து 15, 20 மேட்ச் தோத்தாலும் பரவாயில்லை. அணில ஒரு புத்துணர்சியாவது வரும். இப்ப இருக்கவங்க ஆடினாலும் தோத்து தான் போறோம். அதுக்கு புது ஆளுங்களை முயற்சி பண்ணி அவங்களுக்காவது வாய்ப்பு கொடுக்கலாம். சச்சின் அவர்களே, நீங்க நிறையா சாதனை பண்ணியிருக்கீங்க. பெரிய ப்ளேயர் தான். ஆனா every good thing should come to an endனு சொல்ற மாதிரி உங்களுக்கான நேரம் வந்துடுச்சு. நீங்களாவே ரிடையர் ஆகறது உங்க கடந்த கால சாதனைகளுக்கு மரியாதை. உங்களை அணிய விட்டு தூக்க வேண்டிய தர்மசங்கடமான் நிலைமைய குடுக்காதீங்க. இதே தான் இன்னைக்கு சொதப்பின எல்லா பெரிய ப்ளேயர்களுக்கும். நீங்க பண்ண நல்லதெல்லாம் போதும். புதுசா வரவங்க பாத்துப்பாங்க. நீங்க எல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. வேறா ஏதாவது அணில பயிற்சியாளர் பதவி காலியாகும், இல்லைன்னா வர்ணனையாளர் பதவி காலியாகும். You guys are fit to talk cricket, not to play cricket. இன்னைக்கு ஒரு மேட்சுல தோத்ததை வச்சு இதை சொல்லலை. சமீபகாலமா நீங்க ஆடறதை வச்சு சொல்றேன். I really feel ashamed for writing about you in my previous posts.

எப்பவும் இந்தியா தோத்த இந்த மாதிரி திட்டிட்டு, புலம்பிட்டு அடுத்த நாளே அவங்க ஆடறதை பார்க்க உக்காந்திடுவேன். ஆனா இந்த முறை அவங்க குடுத்த அதிர்ச்சி ரொம்ப அதிகம். இனியாவது நல்ல திறமையான, கிரிக்கெட்ட பணம் காய்க்கும் மரமா பார்க்காம கிரிக்கெட்டா பார்க்கற அணிய சப்போர்ட் பண்ணுவோங்கற முடிவுக்கு வந்துட்டேன்.

WELL DONE SRILANKA FOR KICKING A...HOLES OUT OF WORLDCUP! ! !

64 comments:

மணிகண்டன் said...

போதும் இவனுங்களை நம்பி புலம்புனது :)

இந்தியாவின் இந்த தோல்வியை கொண்டாட ஒரு கிரிக்கெட் நகைச்சுவை பதிவு விரைவில்...

இராம்/Raam said...

மணி ஒங்களுக்கு எதும் ஆணி பிடுங்கிற வேலை இல்லையான்னு கேட்கவந்தேன் .....


ஆனா.......

//இந்தியாவின் இந்த தோல்வியை கொண்டாட ஒரு கிரிக்கெட் நகைச்சுவை பதிவு விரைவில்... //

இந்த பதிவுக்காக ஆவலா நான் காத்துக்கிட்டு இருக்கேன், அதுவரைக்கும் உங்க டேமேஜர் எந்த பெரிய ஆணியயும் புடுங்க சொல்ல கூடாது'ன்னு வேண்டிக்கிறேன் :)))

மணிகண்டன் said...

//மணி ஒங்களுக்கு எதும் ஆணி பிடுங்கிற வேலை இல்லையான்னு கேட்கவந்தேன் .....

//
ஏன் இல்லாம போச்சுனு இப்ப கவலைப்படறேன்..ஒழுங்கா வேலை வெட்டியாவது பார்த்திருக்கலாம்.

சீக்கிரமா போடறேங்க இராம்..ஞாயிறு இல்லைன்னா திங்கள்..இனிமே னக்கல் னையாண்டி தான்..நோ சீரியஸ் போஸ்ட்

நாகை சிவா said...

//நான் இப்போ வேண்டிக்கறதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் ஜெயிக்கனும்னு தான். //

ஆமாம் மணி, என்கூட இருக்குற பயபுள்ளங்க பெர்மூடா ஜெயிச்சானு ஆரம்பிச்சானுங்க...

டேய், ஏன் சூப்பர் 8 போயும் நம்ம பி.பி ய ஏத்தவா? நம்மள விட பங்காளதேஷ் போன நல்லா தான் விடுவான் சொல்லி வாய அடைச்சு இருக்கேன்.

தென்றல் said...

/இனிமே னக்கல் னையாண்டி தான்..நோ சீரியஸ் போஸ்ட்
/

இதுதான் 'blog' spiritகிறது. கலக்கங்க வாங்க, மணிகண்டன்!

Anonymous said...

well there is always a next time :)

Yes, I too feel even if Bermuda wins (courtesy bookies :) ) , we dont deserve to be in super8 :)

Bring in Kenya, bermuda, zimbabwe (cant add Bangladesh anymore) and lets trash them and call ourselves world beaters.

Atleast now the semi-finalists are clear (Aus, SA, Nz and Lanka). We can enjoy good cricket for next few weeks rather than just hyped cricket.

Unfortunately matches with Ireland and Bangladesh are going to be onesided :(

Moral of the story : Indian cricket, don't believe the hype. Enjoy good cricket :)

மணிகண்டன் said...

//டேய், ஏன் சூப்பர் 8 போயும் நம்ம பி.பி ய ஏத்தவா? நம்மள விட பங்காளதேஷ் போன நல்லா தான் விடுவான் சொல்லி வாய அடைச்சு இருக்கேன்.
//

ஆமாம் சிவா. இந்தியா சூப்பர் 8க்கும் போய் கப்பலேறின மானத்தை ஃப்ளைட்ல ஏத்தாம இருந்தா சரி.

மணிகண்டன் said...

//இதுதான் 'blog' spiritகிறது. கலக்கங்க வாங்க, மணிகண்டன்!
//

ஆமாம் தென்றல்..இவனுங்களை நம்பி நாறுனது போதும். மேட்ச் ஃபிக்ஸிங் பண்ணி இவனுங்க அடுத்த சுற்று போனாலும் இவனுங்கள கலாய்ச்சாதான் மனசு நிம்மதியாகும். எவ்வளவு கோடி பேரு ஏமாந்திருக்காங்க இவனுங்களால.

மணிகண்டன் said...

//we dont deserve to be in super8 :)//

Yes anony, if bangladesh goes to Super 8, atleast it will help their country to promote the game. These suckers are fit for playing in indias's flat pitches only.

Nakkiran said...

I felt releived.. otherwise these suckers somehow wud have entered in Super8 and suck every match and increase our tension...

Now its cool ma.. can concentrate on work and follow cricket with good game attitude...

Anonymous said...

//திரும்ப பெர்முடா, ஸ்காட்லாந்துனு எதாவது அணி கிடைச்சா வெளுத்து வாங்குங்க.கேன மாதிரி கைதட்டி ரசிக்க நாங்க இருக்கோம்.//

:-)

மணிகண்டன் said...

//I felt releived.. otherwise these suckers somehow wud have entered in Super8 and suck every match and increase our tension...

Now its cool ma.. can concentrate on work and follow cricket with good game attitude... //

ஆமாங்க நக்கீரன். நாளைக்கு ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா மேட்சையாவது ரசிச்சு பார்க்கலாம். இவனுங்க சூப்பர் 8க்கு போய் அங்கேயும் நம்ம கழுத்தறுக்கரதுக்கு போகாம இருக்கறதே மேல்.

ஆதிபகவன் அப்பவே சொன்னாரு, இவனுங்களை நம்பாதீங்கன்னு. எங்கே கேட்டேன். நம்பிகைல மண் அள்ளி போட்டுட்டானுங்க :)

Radha Sriram said...

தனியா புலம்பரிங்க போல இருக்கு!!
நானும் வரேன்...

//சச்சின் அவர்களே, நீங்க நிறையா சாதனை பண்ணியிருக்கீங்க. பெரிய ப்ளேயர் தான். ஆனா every good thing should come to an endனு சொல்ற மாதிரி உங்களுக்கான நேரம் வந்துடுச்சு. நீங்களாவே ரிடையர் ஆகறது உங்க கடந்த கால சாதனைகளுக்கு மரியாதை. உங்களை அணிய விட்டு தூக்க வேண்டிய தர்மசங்கடமான் நிலைமைய குடுக்காதீங்க. இதே தான் இன்னைக்கு சொதப்பின எல்லா பெரிய ப்ளேயர்களுக்கும்//

it is high time!!

மணிகண்டன் said...

//தனியா புலம்பரிங்க போல இருக்கு!!
நானும் வரேன்...
//

ஆமாம் மேடம்..கூட சேர்ந்து புலம்ப வந்ததுக்கு நன்றி.

ஆனா இனிமே புலம்பல் எல்லாம் கிடையாது. அவனுங்க காசை வாங்கி பாக்கெட்ல போட்டுட்டு போயிகிட்டே இருப்பானுங்க. நாம் தான் நம்பி மோசம் போறோம். இனி ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்துன்னு நல்ல டீம்கள் ஆடற மேட்சை ரசிக்க வேண்டியது தான்.

Santhosh said...

//சச்சின் அவர்களே, நீங்க நிறையா சாதனை பண்ணியிருக்கீங்க. பெரிய ப்ளேயர் தான். ஆனா every good thing should come to an endனு சொல்ற மாதிரி உங்களுக்கான நேரம் வந்துடுச்சு. நீங்களாவே ரிடையர் ஆகறது உங்க கடந்த கால சாதனைகளுக்கு மரியாதை. உங்களை அணிய விட்டு தூக்க வேண்டிய தர்மசங்கடமான் நிலைமைய குடுக்காதீங்க. இதே தான் இன்னைக்கு சொதப்பின எல்லா பெரிய ப்ளேயர்களுக்கும்//

மணி சரியா சொல்லி இருக்கிங்க. புதுசா வந்து இருக்கிற டீம் எல்லாத்தையும் பாருங்க எப்படி பீல்டிங்க் பண்றாங்க நம்ம ஆளுங்க இன்னும் திருந்தவே இல்லை. இது மாதிரி எல்லா துறைகளிலும் சொல்லாம். விடுங்க அடுத்த கப்பு நமக்கு தான் :))..
//இந்தியாவின் இந்த தோல்வியை கொண்டாட ஒரு கிரிக்கெட் நகைச்சுவை பதிவு விரைவில்...//
இதை இதைத்தான் எதிர்பார்க்கிறோம்.

Anonymous said...

//டி.வில காண்பிக்கறப்ப மட்டும் இஞ்சி திண்ண குரங்கு மாதிரி மூஞ்சிய வச்சிகிட்டு சோகமா இருக்கற மாதிரி போஸ் குடுங்க.//
உண்மையாவே மைதானத்தில் அப்படித்தான் உட்காந்துட்டு இருந்தாங்க, இன்னிக்கு மேட்ச் பாத்தது பெவிலியனுக்கு பக்கத்துல இருந்து. நமக்கு இருக்கும் கவலை , வருத்தம், சோகத்தில் கொஞ்சம் கூட இல்லை, எல்லாரும் நல்ல சிரிச்சுட்டுதான் இருந்தாங்க. டிவி கேமரா வந்தா மட்டும் நீங்க சொல்ற மாதிரி மூஞ்சிய வச்சுக்கராங்க.

மணிகண்டன் said...

//விடுங்க அடுத்த கப்பு நமக்கு தான் :))..
//

ஐயா ராசா போதும்யா ரீல் அந்து ரொம்ப நேரம் ஆச்சு, திரும்ப கடுப்பை கிளப்பாதீர்.

சிவபாலன் said...

இந்தியாவில் கிரிகெட் என்பது ஒரு மதமாகவே கருதப்படுகிறது. அதனாலேயே அதில் அரசியலும் புகுந்து விளையாடுகிறது. அதற்கு பலிகடா கோடான கோடி இரசிகர்கள்.

இனி இந்திய கிரிகெட் புதிய பரிமாணத்தை அடைந்தால் ஒழிய முன்னேறாது.

கிழட்டு சிங்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்படவேண்டும்.

புண்பட்ட மனதை இப்படி புலம்பிதான் ஆற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.. ம்ம்ம்ம்ம்

மணிகண்டன் said...

//உண்மையாவே மைதானத்தில் அப்படித்தான் உட்காந்துட்டு இருந்தாங்க, இன்னிக்கு மேட்ச் பாத்தது பெவிலியனுக்கு பக்கத்துல இருந்து. நமக்கு இருக்கும் கவலை , வருத்தம், சோகத்தில் கொஞ்சம் கூட இல்லை, எல்லாரும் நல்ல சிரிச்சுட்டுதான் இருந்தாங்க. டிவி கேமரா வந்தா மட்டும் நீங்க சொல்ற மாதிரி மூஞ்சிய வச்சுக்கராங்க.
//

வாங்க பரணீ..மேட்ச் ஃபிக்ஸிங் மாதிரி இது ஃபேஸ் ஃபிக்ஸிங்கோ என்னவோ.

டிஷ் நெட்வொர்க்குக்கு கட்டின 200 டாலர் எள்ளாயிடுச்சேன்னு கவலைப்பட்டேன். இந்த மாட்சை செலவு பண்ணி நேரில போய் அதுவும் பெவிலியன் பக்கத்துல உக்கார்ந்து பார்த்தேன் நீங்க சொன்னதை கேட்டு நாமளே பரவாயில்லை போலன்னு ஆறுதல் படறேன்.
Just kidding..don't take it serious barani :)

Anonymous said...

அப்புறம் என்னங்க மணிகண்டன், வலைப்பூ 2011 க்கு மாத்திடுங்க...இல்ல உங்க profile உள்ள வாக்கியத்த மாத்திடுங்க...என்ன நான் சொல்றது அதான் நாறிப் போச்சுல்ல..

மணிகண்டன் said...

//இந்தியாவில் கிரிகெட் என்பது ஒரு மதமாகவே கருதப்படுகிறது. அதனாலேயே அதில் அரசியலும் புகுந்து விளையாடுகிறது. அதற்கு பலிகடா கோடான கோடி இரசிகர்கள்.

இனி இந்திய கிரிகெட் புதிய பரிமாணத்தை அடைந்தால் ஒழிய முன்னேறாது.

கிழட்டு சிங்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்படவேண்டும்.

புண்பட்ட மனதை இப்படி புலம்பிதான் ஆற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.. ம்ம்ம்ம்ம்

//

வாங்க சி.பா. அரசியலும், கோடிக்கணக்கான் பணமும் புரள்றது நிக்கற வரைக்கும் உருப்படாது. ஒரு ப்ளேயர் தொடர்ந்து சில வருஷாமாவது நிலைச்சு ஆடினால் தான் விளம்பரங்கள்ல நடிக்கனும்னு சட்டம் கொண்டு வரனும்..

மணிகண்டன் said...

//அப்புறம் என்னங்க மணிகண்டன், வலைப்பூ 2011 க்கு மாத்திடுங்க...இல்ல உங்க profile உள்ள வாக்கியத்த மாத்திடுங்க...என்ன நான் சொல்றது அதான் நாறிப் போச்சுல்ல..

//

வாங்க ஜான்..ப்ரொஃபைள மாத்ததான் போறேன். பதிவோட தலைப்பு அதே தான் உலகக்கோப்பை முடியற வரைக்கும். நாம் தான வெளியேறினோம்..உலகக்கோப்பைய உண்மையாவே ஒரு திறமையான் அணி வெல்ல தான போகுது. அதுவரைக்கும் நிஜமாவே பரபரப்பான, சுவாரசியாமான போட்டிகளை பற்றிய பதிவு வரும். அப்பபோ மனசை தேத்தற மாதிரி நம்ம அணியை கலாய்ச்சு பதிவு வரும்.

சிறில் அலெக்ஸ் said...

ஹா.. ஹா.. ஹா..

:))

என்னத்தச் சொல்லி என்னத்த செய்ய..

தேவர் மகன் கமல் ஸ்டைல்ல சொல்லணும்னா..

"எல்லாரும் போய் வெவசாயம் பாருங்கடா"

:)))

மணிகண்டன் said...

//ஹா.. ஹா.. ஹா..

:))

என்னத்தச் சொல்லி என்னத்த செய்ய..

தேவர் மகன் கமல் ஸ்டைல்ல சொல்லணும்னா..

"எல்லாரும் போய் வெவசாயம் பாருங்கடா"

:)))

//

கலக்கல் சிறில்..இன்னைக்கு தான் சச்சின், திராவிட், கங்கூலி எல்லாம் விதை போட்டிருக்காங்க. நாளைக்கு அவங்க பசங்க பழத்தை அனுபவிப்பாங்க, அதுக்கப்புறம் அவங்க பேரப்புள்ளைங்க அனுபவிப்பாங்க.. உடனே பழம் கிடைக்கனுமா எப்படி. விதை போடறது மட்டும் தான் அவங்க வேலை :)

Unknown said...

The better team won. Congratulations to Srilankans.

1987 - அரை இறுதியில் தோல்வி
1992 - கேவலமான தோல்விகள்
1996 - அரை இறுதியில் தோல்வி
1999 - கேவலமான தோல்விகள்
2003 - இறுதி போட்டியில் தோல்வி
2007 - முதல் சுற்றில் தோல்வி
2011 - இறுதி போட்டியில் தோல்வியா?

அவ்வள்வு நம்பிக்கை நமது அணியின் மீது!

Sack every body and build the team right from scratch for the future.

Raja

Raveendran Chinnasamy said...

அப்போ 20/20 மாட்ச் ப்ளோக் கிடையாதா?
இந்த பிரசவ வைராக்கியததை ஏந்தினி நாளைக்குன்னு போர்ப்போம்

Raveendran Chinnasamy said...

அப்போ 20/20 மாட்ச் கோப்பை ப்ளோக் கிடையாதா?
இந்த பிரசவ வைராக்கியததை ஏந்தினி நாளைக்குன்னு பார்ப்போம்

SurveySan said...

அச்சச்சோ பாவம்.

விளையாட்டுங்க, பரவால்ல விடுங்க.

எல்லாரும் ராஜீவ் காந்தி ஆக முடியுமா?
எல்லா டீமும் ஜெயிக்க முடியுமா.

நம்ம சர்வே போடரதுக்குள்ள ஆட்டமா களாஸ் ஆயிடுச்சே :)

ஆதிபகவன் said...

மணிகண்டன்,

இலங்கை நன்றாக விளையாடி இந்தியா தோற்கவில்லை. இந்தியா மோசமாக விளையாடியதால் தோற்றது.

இலங்கை முக்கியமான விக்கட்டுகளை இழந்து இந்தியாவிற்க்கு உதவியே செய்தது. ஆனால் இந்தியா அதை பயன்படுத்தி கொள்ளவில்லை.

இதற்க்கு மேல் என்ன செய்யலாம்.

இது போன்ற தோல்விகளே கனவுலகில் மிதக்கும் இந்திய அணியை தரைக்கு கொண்டுவரும்.

கவலைப்படாதீர்கள், இனி நடப்பவை நல்லவையாகவே நடக்கட்டும்.

ஆதிபகவன் said...

//இன்னைக்கு தான் சச்சின், திராவிட், கங்கூலி எல்லாம் விதை போட்டிருக்காங்க. நாளைக்கு அவங்க பசங்க பழத்தை அனுபவிப்பாங்க, அதுக்கப்புறம் அவங்க பேரப்புள்ளைங்க அனுபவிப்பாங்க.. உடனே பழம் கிடைக்கனுமா எப்படி. விதை போடறது மட்டும் தான் அவங்க வேலை :) //

இப்படி தோல்வி விதையா போட்டா நாளைக்கு பசங்களும் தோல்வி பழமாவே அனுபவிக்கப் போறாங்க!!

விதைய பார்த்துப் போடுங்க.

Anonymous said...

இந்திய புக்கிகள் யாரக் கொல்லுவாங்க ?

நாகு (Nagu) said...

நம் காகிதப்புலிகள்(best batting lineup on paper)காகிதப்புலிகள்தான் என்று நிரூபித்துவிட்டார்கள். கொஞ்சமாவது இந்தியக்கிரிக்கட்டில் அக்கறை இருந்தால், சச்சின் ரிடையர் ஆகிறாரா என்று பார்ப்போம். பாண்டிங் விரைவில் இவருடைய டெஸ்ட் சாதனையையும் முறியடிக்கப் போகிறார்.

சச்சின், கங்குலி, சேவாக், அகார்கர் மற்றும் ஜாகீர் போன்ற முதியவர்களையெல்லாம் வீட்டுக்கனுப்பி விட்டு இள ரத்தங்களை கொண்டுவந்தால், யாரோ சொன்ன மாதிரி கொஞ்சநாள் உதை வாங்கினாலாவாது(இப்பமட்டும் என்ன கிழிகிறது) டீம் கொஞ்சம் உருப்படும் என நினைக்கிறீர்களா? இதில் யாரும் வீட்டுக்குப் போக மாட்டார்கள் :-)

ஜெய்ஹிந்த்!

Anonymous said...

நாளைக்கு பங்ளாதேஷ பெர்மூடா தோக்கடிக்கப் போகுது. நாம உள்ள போறோம், கப்ப ஜெயிக்கிறோம்.

Anonymous said...

போங்கயா....போயி புள்ளைங்கள படிக்க வைங்க.....கப்பித் தனமா கிரிக்கெட் பாத்துக்கிட்டு.....

கார்த்திக் பிரபு said...

unga kanavellam waste a poche

parava ilai neenga thodarndhu elduhunga nama austrlia ku support pannlam

Naufal MQ said...

//well there is always a next time :)

Yes, I too feel even if Bermuda wins (courtesy bookies :) ) , we dont deserve to be in super8 :)

Bring in Kenya, bermuda, zimbabwe (cant add Bangladesh anymore) and lets trash them and call ourselves world beaters.

Atleast now the semi-finalists are clear (Aus, SA, Nz and Lanka). We can enjoy good cricket for next few weeks rather than just hyped cricket.

Unfortunately matches with Ireland and Bangladesh are going to be onesided :(

Moral of the story : Indian cricket, don't believe the hype. Enjoy good cricket :)
//
Well Said Anony.

Yes, this is the reality my fellow Indian Fans. Forget the Indian team. enjoy the upcoming good matches. Its going to be good worldcup. 2 teams, which are only good for hypes & bookies are thrown out. here after u can see CLEAN matches. :)

enRenRum-anbudan.BALA said...

//
Anonymous said...
நாளைக்கு பங்ளாதேஷ பெர்மூடா தோக்கடிக்கப் போகுது. நாம உள்ள போறோம், கப்ப ஜெயிக்கிறோம்.
//
Anony,

This is weird ;-)

http://balaji_ammu.blogspot.com/2007/03/india.html

துளசி கோபால் said...

தேவைக்கு அதிகமாத் தலையிலே வச்சுக்கிட்டு கூத்தாடுனாங்கல்லே. அதான் இப்படிக்
காமிச்சுட்டுப் போயிருச்சுங்க.(-:

இனி எல்லாரும் மூடிக்கிட்டுப்போய் வேலைவெட்டி இருந்தாப் பாக்கட்டும்னு பெரிய மனசு
பண்ணிட்டாங்க.

வருது வாயிலே நல்லா................

சரி. இனிமே ஆகவேண்டியதைப் பார்ப்போம். நியூஸிக்காவது வரட்டும் அந்த உ.கோ.

Anonymous said...

There is a temporary end on Big Hype on our Cricket Team. Key players are earning crores in Advts. They have no interest in playing as a team and intention to win the match. Waste o time and Waste of money.

podakkudian said...

///ி.சி.சி.ஐ கிட்ட கேக்கறது எல்லாம் ஒன்னே ஒன்னு தான். தயவு செஞ்சு வயசான காலி பெருங்காய டப்பாக்களை எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு இளம் வீரர்களை கொண்டு வாங்க. அதனால் தொடர்ந்து 15, 20 மேட்ச் தோத்தாலும் பரவாயில்லை. அணில ஒரு புத்துணர்சியாவது வரும். இப்ப இருக்கவங்க ஆடினாலும் தோத்து தான் போறோம். அதுக்கு புது ஆளுங்களை முயற்சி பண்ணி அவங்களுக்காவது வாய்ப்பு கொடுக்கலாம்.///

ரொம்பா நல்லா சொல்லி இருக்கீங்க.

கேவலமான தோல்வி

Ram Ravishankar said...

Very simple guys: We dont possess that killer instinct. I doubt if we will ever acquire that instinct. For the folks who claim to have that sporting spirit and say 'we should take win or loss in strides', my one word: LOSERS! These kind of statements are for a team or an individual that puts in effort before losing graciously; not for these kind of people that are born to lose.

Simply put, these morons should be severely punished. I think Indian penal system should allow for class action suit against the players to recover from what they earned from their flash-in-the-pan performances.

I am sure the ever forgiving Indian fans will start their poojaas and yagnas for 2011.

On a lighter side, Pak had that killer instinct - they took that 'killer' part literally and got Ulmer down. They use that same killer instinct across the border as well ;-(

..ram

Santhosh said...

மணி இங்க நீங்க சொன்ன மாதிரி weired இருக்கேன் :)).

Anonymous said...

http://holyox.blogspot.com/2007/03/258.html

மணிகண்டன் said...

//அப்போ 20/20 மாட்ச் ப்ளோக் கிடையாதா?
இந்த பிரசவ வைராக்கியததை ஏந்தினி நாளைக்குன்னு போர்ப்போம்//

ரவீந்திரன், இனிமே கிரிக்கெட் பத்தி பதிவு போட்டாலும், இந்தியா பத்தி இருக்காது. இந்திய அணிய கிண்டல் பண்ணி வேணா பதிவு வரலாம். பார்க்கலாங்க எவ்வளவு நாள் இந்த பிரசவ வைராக்கியம்னு.

மணிகண்டன் said...

//நம்ம சர்வே போடரதுக்குள்ள ஆட்டமா களாஸ் ஆயிடுச்சே :)
//

ஆமாம் சர்வேசன், இந்திய அணியில் மோசமாக சொதப்பியது யார்னு வேனா ஒரு சர்வே போடுன்களேன் :)

மணிகண்டன் said...

//மணிகண்டன்,

இலங்கை நன்றாக விளையாடி இந்தியா தோற்கவில்லை. இந்தியா மோசமாக விளையாடியதால் தோற்றது.

இலங்கை முக்கியமான விக்கட்டுகளை இழந்து இந்தியாவிற்க்கு உதவியே செய்தது. ஆனால் இந்தியா அதை பயன்படுத்தி கொள்ளவில்லை.

இதற்க்கு மேல் என்ன செய்யலாம்.

இது போன்ற தோல்விகளே கனவுலகில் மிதக்கும் இந்திய அணியை தரைக்கு கொண்டுவரும்.

கவலைப்படாதீர்கள், இனி நடப்பவை நல்லவையாகவே நடக்கட்டும். //

ஆதிபகவன்,
நீங்க சொல்ற எல்லாமே சரி. கிடைச்ச வாய்ப்பையெல்லாம் கோட்டை விட்டு வெற்றியை இலங்கைக்கு தூக்கிக் குடுத்தாங்க.இனியாவது கனவுலகத்தில இருந்து யதார்த்தத்துக்கு வரட்டும்/வருவோம்

மணிகண்டன் said...

//இந்திய புக்கிகள் யாரக் கொல்லுவாங்க ?//

பாவப்பட்ட இந்திய ரசிகர்களை :(

மணிகண்டன் said...

//சச்சின், கங்குலி, சேவாக், அகார்கர் மற்றும் ஜாகீர் போன்ற முதியவர்களையெல்லாம் வீட்டுக்கனுப்பி விட்டு இள ரத்தங்களை கொண்டுவந்தால், யாரோ சொன்ன மாதிரி கொஞ்சநாள் உதை வாங்கினாலாவாது(இப்பமட்டும் என்ன கிழிகிறது) டீம் கொஞ்சம் உருப்படும் என நினைக்கிறீர்களா? இதில் யாரும் வீட்டுக்குப் போக மாட்டார்கள் :-)
//

நிச்சயம் ரெண்டு தலையாவது உருளும் நாகு..பாருங்க.

மணிகண்டன் said...

//நாளைக்கு பங்ளாதேஷ பெர்மூடா தோக்கடிக்கப் போகுது. நாம உள்ள போறோம், கப்ப ஜெயிக்கிறோம்.

//
இப்படி உசுப்பேத்து ப்சுப்பேதியே அடி வாங்க வைக்கிறாங்கப்பா :)

மணிகண்டன் said...

//போங்கயா....போயி புள்ளைங்கள படிக்க வைங்க.....கப்பித் தனமா கிரிக்கெட் பாத்துக்கிட்டு.....

//

யாரோட புள்ளைங்கள வடிவேலு ?

மணிகண்டன் said...

//unga kanavellam waste a poche

parava ilai neenga thodarndhu elduhunga nama austrlia ku support pannlam

//
என் கனவு மட்டுமில்ல கா.பி, கோடிக்கணக்கான ரசிகர்களோட கனவு.

நம்ம குடிரை தோத்துப்போச்சுன்னா, இனி ஜெயிக்கற குடிரை மேல பணம் கட்டவேண்டியது தான்.ஆஸ்திரேலியாவை சப்போர்ட் பண்ணுவோம் !

மணிகண்டன் said...

//2011 - இறுதி போட்டியில் தோல்வியா?
//

இப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா ராஜா?

மணிகண்டன் said...

//Yes, this is the reality my fellow Indian Fans. Forget the Indian team. enjoy the upcoming good matches. Its going to be good worldcup. 2 teams, which are only good for hypes & bookies are thrown out. here after u can see CLEAN matches.//

வாங்க பவுலர், இனிமேலாவது டென்சன் இல்லாம கிரிக்கெட்டை ரசிக்கலாம்!

மணிகண்டன் said...

//
This is weird ;-)

http://balaji_ammu.blogspot.com/2007/03/india.html //

வாங்க பாலா, உங்க பதிவு பார்த்தேன்..நீங்க சொன்னதை நானும் ஒத்துக்கறேன்

இப்படை வென்றால் கிரிக்கெட்டுக்கு அவமானம் !

மணிகண்டன் said...

//இனி எல்லாரும் மூடிக்கிட்டுப்போய் வேலைவெட்டி இருந்தாப் பாக்கட்டும்னு பெரிய மனசு
பண்ணிட்டாங்க.

வருது வாயிலே நல்லா................
//

டென்சனாகதீங்க மேடம், நியூசிலாந்து நிச்சயமா அரை-இறுதி வரைக்கும் வருவாங்க. கோப்பைய ஜெயிப்பாங்களான்னு தெரியலை. எனக்கென்னவோ இறுதிப்போட்டி இலங்கை-ஆஸ்திரேலியானு தோனுது. நியூசிலாந்து ஜெயிக்க வாழ்த்துக்கள்.

மணிகண்டன் said...

//There is a temporary end on Big Hype on our Cricket Team. Key players are earning crores in Advts. They have no interest in playing as a team and intention to win the match. Waste o time and Waste of money.

//
நன்றி அனானி

மணிகண்டன் said...

//ரொம்பா நல்லா சொல்லி இருக்கீங்க.

கேவலமான தோல்வி
//

நன்றி பொதக்குடியான்.கேவலம்னு சொல்றதை விட கேவலமான வார்த்தை எதாவது இருந்தா இதுக்கு பொருந்தும்

மணிகண்டன் said...

//Very simple guys: We dont possess that killer instinct. I doubt if we will ever acquire that instinct. For the folks who claim to have that sporting spirit and say 'we should take win or loss in strides', my one word: LOSERS! These kind of statements are for a team or an individual that puts in effort before losing graciously; not for these kind of people that are born to lose.
//
Well said Ram, losing is part of the game.someone has to loose in every match. But the way we lost to bangladesh and srilanka was unpardonable. Something serious has to be done soon.

மணிகண்டன் said...

//மணி இங்க நீங்க சொன்ன மாதிரி weired இருக்கேன் :)).

//
பார்த்து பின்னூட்டமும் போட்டுட்டேங்க சந்தோஷ்!

மணிகண்டன் said...

//http://holyox.blogspot.com/2007/03/258.html

//
Thanks anony.

Arunkumar said...

mani
work-la kooda concentrate pannama leave potu match paakure nammala maathiri pasangalukku idhu thevaithaan.. sema kadi aayiten esp the way sachin got out. if a team that has such a good batting attack (yes,in paper only) cant play 50 overs in a do-or-die match, what to say..

when situation demands, none performed. i donno when the mentality will change. i felt really ashamed too by just blindly supporting these folks :(

eagerly waiting for ur nakkal posts. thats the best thing to do in blogsville as far as i know :-)

and yeah, bangladesh is not as bad as india when it comes to satisfying their countrymen's hope. so they sure will go a good distance in this WC !!!

Anbe-Shivam said...

Hi Mani,
How is your mood now?
Expecting a Bermuda's win?
I am sure you have changed a bit in the last 2 days.

Anbu

மணிகண்டன் said...

//mani
work-la kooda concentrate pannama leave potu match paakure nammala maathiri pasangalukku idhu thevaithaan.. sema kadi aayiten esp the way sachin got out. if a team that has such a good batting attack (yes,in paper only) cant play 50 overs in a do-or-die match, what to say..

when situation demands, none performed. i donno when the mentality will change. i felt really ashamed too by just blindly supporting these folks :(

eagerly waiting for ur nakkal posts. thats the best thing to do in blogsville as far as i know :-)

and yeah, bangladesh is not as bad as india when it comes to satisfying their countrymen's hope. so they sure will go a good distance in this WC !!!

//
விடுங்க அருண், இனி வேற ரூட்ல போக வேண்டியது தான் !

மணிகண்டன் said...

//Hi Mani,
How is your mood now?
Expecting a Bermuda's win?
I am sure you have changed a bit in the last 2 days.

Anbu

//
Hi Anbu,
I am still in the same mood. I am not a stupid any more to pray for India to come to super 8.Such a humiliating defeat cannot be digested in 2 days..it may take months !