Thursday, March 22, 2007

நாளை நமதே !

ஒருவழியா கால்குலேட்டரை தூக்கிப் போட்டுட்டு, ஜெயிச்சா போதும் அடுத்த சுற்றுக்கு போயிடலாங்கற நிலைமைக்கு வந்திருக்கோம் இலங்கையோட புண்ணியத்தால. இலங்கை ஏற்கெனவே அடுத்த சுற்றுக்கு போயிட்டதால நாளைக்கு அவ்வளவு சீரியஸா விளையாடமாட்டாங்கன்னு சொல்லவும் முடியாது. ஏன்னா அவங்க நாளைக்கு தோத்தா, சூப்பர் 8க்கு 0 புள்ளிகளோட போகனும். இந்தியா 2 புள்ளிகளோட போகும். அடுத்த சுற்றுல இந்த 2 புள்ளிகள் ரொம்ப ரொம்ப முக்கியம். அதனால் இலங்கையும் நிச்சயமா ஜெயிக்கத்தான் பார்ப்பாங்க.

நாளைக்கு அணில உத்தப்பா இருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன். அவருக்கு பதிலா கார்த்திக் உள்ள வர வாய்ப்பிருக்கு. அதே மாதிரி அகர்கருக்கு பதிலா பதானை கொண்டு வந்தால் நல்லா இருக்கும். உத்தப்பாவுக்கு பதிலா பதானை கொண்டுவரவும் வாய்ப்பிருக்கு. அப்போ ஜாகிர்,முனாஃப்,பதான்,அகர்கர்,கும்ப்ளே/ஹர்பஜன்னு அஞ்சு பவுலர்கள் இருப்பாங்க. இந்தியா இந்த முடிவை எடுக்கவும் வாய்ப்புகள் அதிகம். ஏன்னா நாளைக்கு இலங்கை கிட்ட நாலு பவுலர்களையும், அஞ்சாவது 10 ஓவருக்கு ஷேவாக்,சச்சின்,யுவராஜ் எல்லாரையும் வச்சு ஒப்பெத்தறது ரொம்ப கஷ்டம். இருக்கற நாலு பவுலர்கள்ல யாராவது ஒருத்தர் சொதப்பினாலும் ரொம்ப சிக்கலாயிடும். அதனால அஞ்சு பவுலர்களோட போறது நல்லது. அப்போ பதானை சேர்த்துகிட்டா பேட்டிங்கும் கொஞ்சம் பலமாகும். உத்தப்பா 5 ரன் எடுத்து அவுட்டாகறத விட, பதான் 5 ரன் எடுத்து அவுட்டானாலும், பவுலிங்க்குக்கு உதவுவாரு. ஷேவாகே நான் ஆடமாட்டேன்னாலும் திராவிட் விடமாட்டாரு. போன போட்டில சதமடிச்சு நல்லா சிமெண்ட் போட்டு இடத்தை பிடிச்சிட்டாரு. அதனால கண்டிப்பா ஷேவாக் இருப்பார்.

ஜெய்வர்தனே டாஸ் ஜெயிச்சா கண்டிப்பா பவுலிங் தான் எடுப்பார். அதேசமயம் திராவிட் ஜெயிச்சால் பேட்டிங் எடுக்கனும்கறது என்னோட கருத்து. பிட்சுல ஸ்விங் இருக்கும், ஆடரது கஷ்டம்னாலும், முதல் பத்து ஓவரை தாக்கு பிடிச்சிட்டா கொஞ்சம் ஈஸி தான். நேத்து இலங்கை பங்களாதேஷ் கிட்ட பண்ண மாதிரி. முதல் பத்து ஓவர்ல 60,70 ரன் அடிக்கனும்னு அவசியமே இல்லை. ஒன்னு ரெண்டுன்னு ஸ்டைரைக்க ரொட்டேட் பண்ணாலே, ரன்னும் வரும் கான்ஃபிடன்ஸும் வரும். அதே சமயத்தில பவுலரையும் பதட்டப்படுத்தும். அஞ்சு பந்து டொக்கு வச்சிட்டு ஆறாவது பந்தை 4 அடிக்க போய் அவுட்டாகறதுக்கு பதில் ஸிங்கிள்,2ன்னு தட்டி தட்டி ஒரு ஓவருக்கு 4 ரன் எடுத்தா போதும். 10 ஓவருக்கு 40/0 இருக்கறது 10 ஓவருக்கு 60/3னு இருக்கறத விட நல்லது தான.

ஒருவேளை வியாழக்கிழமை இரவு மழை அதிகமா இருந்தா டாஸ் ஜெயிச்சதும் பவுலிங் பண்றதை பத்தி யோசிக்கலாம். இல்லைன்னா முதல்ல பேட்டிங் பண்றது தான் நல்லது. 250 ரன்ன சேஸ் பண்ணா கூட திடீர்னு ரெண்டு விக்கெட் விழுந்துட்டா ப்ரெஷர் அதிகமாயிடும், ரன்ரேட் கம்மியாயிடும். அப்புறம் அடிச்சு ஆட முயற்சி பண்ணி இன்னும் கஷ்டம். இந்தியா சேஸ் பண்ணி வின் பண்ணதேயில்லைனு சொல்லலை. இந்த மாதிரி வாழ்வா சாவான்னு இருக்கற சூழ்நிலைல முதல்ல பேட்டிங் பண்றது பாதுகாப்பானது.

அடுத்தது பேட்டிங் ஆர்டர். நாளைக்கு கொஞ்சம் ஃபெளெக்ஸிபிளான பேட்டிங் ஆர்டர் இருக்கறது நல்லது. கங்கூலியும் ஷேவாக்கும் தான் தொடங்குவாங்க. அதுல எந்த மாற்றமும் இருக்காதுன்னு நினைக்கிறேன். ஒருவேளை முதல் விக்கெட் 2,3 ஓவருக்குள்ள போயிடுச்சுன்னா, ஒன்டவுனா திராவிடை இறக்கலாம். மறுபடியும் ஒரு விக்கெட் போகாம அடுத்த ஆறு ஏழு ஒவருக்காவது ஆட வேண்டியது முக்கியம். அதே சமயம் ரன்ரேட்டையும் ஒரு நாலு ரன்லயாவது மெயின்டெய்ன் பண்ணனும். ஒருவேளை 10 ஓவருக்கு மேல முதல் விக்கெட் போய், ரன் ரேட் கொஞ்சம் கம்மியா இருந்தா அடிச்சு ஆடற யாரையாவது இறக்கி ரன்ரேட்டை உயர்த்த முயற்சி பண்ணனும். முக்கியமானது நடந்ததை நினைக்காம பயப்படாம ஆடறது தான். முன்னால ஒரு பதிவுல சொன்ன மாதிரி 'Play your natural game.Be committed to the game'. அதிரடியா அடிச்சு ஆடனும்னு இல்லை ஆனா ஸாலிட்டா ஆடனும். பவுலரை செட்டில் ஆக விடக்கூடாது. அந்த தப்பை தான் பங்களாதேஷ் கிட்ட பண்ணோம். ஒரேயடியா தடவாம, அடிக்கடி பீட்டன் ஆகாம், ஸாலிட்டா பந்தை அடிச்சாலே பவுலருக்கு ஏதாவது வித்தியாசமா பண்ணனும்னு தோனும். அப்போ நிறைய லூஸ் டெலிவரி கிடைக்க வாய்ப்பிருக்கு. நாளைக்கு Mental Game தான் பலன் கொடுக்கும்.

ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து ஆடி 100 அடிச்சு மறுமுனைல ஆடறவங்க ஆளுக்கு ஒரு முப்பது ரன் அடிச்சு அவருக்கு ஸ்டேண்ட் குடுத்தாலே போதும். நல்ல ஸ்கோர் அடிச்சிடலாம்.கங்கூலி போன ரெண்டு மேட்சுலயும் ஒருமுனைல நிலைச்சு நின்னு ஆடுனாலும், கொஞ்சம் வேகமா ரன் எடுக்கவும் முயற்சி பண்ணனுங்கறது என்னோட அபிப்ராயம். விக்கெட்ட காப்பத்த வேண்டியது முக்கியம்னாலும், ஒண்ணு ரெண்டுன்னு எடுத்து ரன்ரேட்டை பாதுகாக்கறதும் முக்கியம்.

பவுலிங்கும், ஃபீல்டிங்கும் சுமார் தான். இதை வச்சு இலங்கைய சமாளிக்கறது கஷ்டம் தான். நாளைக்கு அநேகமா கும்ப்ளேக்கு பதில் ஹர்பஜன் மறுபடியும் வருவாருன்னு நினக்கிரேன். இலங்கைல இடதுகை ஆட்டக்காரர்கள் நெறைய பேர் இருக்கறதால ஹர்பஜன்னுக்கு தான் வாய்ப்பு அதிகம். பார்ப்போம் திராவிடும் சாப்பலும் என்ன முடிவு பண்றாங்கன்னு. நாளைக்கு ஆடப்போற பிட்ச்ல இதுவரைக்கும் எந்த போட்டியும் நடக்கலை. இந்த பிட்சுல முதல்ல, ஸ்விங்கும் பவுண்சும் இருந்தாலும், அதுக்கப்புறம் ஆடறதுக்கு ஈஸியா இருக்கும்னு சொல்றாங்க. எல்லாத்தையும் கவனத்தில எடுத்துக்கனும். கண்டிப்பா அஞ்சு பவுலர்க்ளோட போறது தான் நல்லது.

நாளைக்கு இந்தியா ஜெயிச்சா, உடனே மேட்ச் ஃபிக்ஸிங்னு சொல்றதுக்கு நிறைய பேர் கிளம்பிடுவாங்க. அவங்களுக்கு எல்லாம் சொல்றது இதுதான். மேட்ச் ஃபிக்ஸிங் நடந்திருக்கு, இல்லைன்னு சொல்லலை. அதுக்காக இந்தியா தோத்தா உடனே காசு வாங்கிட்டாங்கன்னு சொல்றதும், ஜெயிச்சா காசு குடுத்து ஜெயிக்க வச்சாங்கன்னு சொல்லாதீங்க. சில மேட்சுல நடந்ததுக்காக எல்லா மேட்சையும் சந்தேகப்பட்டா, அப்புறம் க்ரிக்கெட்டோட சுவாரசியமே போயிடும். இந்தியா நாளைக்கு தோத்து வெளியேறினா, அதுக்காக இந்தியால எல்லாரும் பார்க்காம இருக்கப்போறதில்லை. கிரிகெட்ட ரசிக்கறவங்க இந்தியா ஆடுனாலும் ஆடாட்டியும் பார்ப்பாங்க. இந்தியா ஆடுனா த்ரில் அதிகம் அவ்வளவு தான். ஆக எல்லாத்தையும் மறந்துட்டு இந்தியா நாளைக்கு ஜெயிக்கனுங்கறதை மட்டும் நினைப்போம். கடவுள் சோதிச்சாலும் கைவிட மாட்டாரு :)

14 comments:

Anonymous said...

என்னைப் பொறுத்தவரை, இந்தியா இந்தப் போட்டியில தோற்கணும், நாட்டுப்பற்று..தேசப்பற்று இதெல்லாம் காட்டி இப்படிச் சொல்றதுக்காக துரோகின்னு சொல்லாதீங்க, ஆடுற இவனுங்களுக்கு இந்தப் பற்றெல்லாம் இருக்கா, ஏனோதானோன்னு ஆடுற இவனுங்க எல்லாம் சீக்கிரம் வூட்டுக்கு அனுப்போனும்.

Anonymous said...

பங்களாதேஷ் பெர்முடாவை நல்லா ஜெயிச்சுதுன்னா ? அப்போ என்ன நடக்கும் ?

நந்தா said...

//நாளைக்கு இந்தியா ஜெயிச்சா, உடனே மேட்ச் ஃபிக்ஸிங்னு சொல்றதுக்கு நிறைய பேர் கிளம்பிடுவாங்க. அவங்களுக்கு எல்லாம் சொல்றது இதுதான். மேட்ச் ஃபிக்ஸிங் நடந்திருக்கு, இல்லைன்னு சொல்லலை. அதுக்காக இந்தியா தோத்தா உடனே காசு வாங்கிட்டாங்கன்னு சொல்றதும், ஜெயிச்சா காசு குடுத்து ஜெயிக்க வச்சாங்கன்னு சொல்லாதீங்க. //

அருமையா சொன்னீங்க. ஏன்னா இங்க இப்பயே இந்த டயலாக்கை சொல்லிக்கிட்டு நிறைய பேரு திரியறாங்க. கூட இருந்து பார்த்த மாதிரி 120 கோடி, 275 கோடின்னு புள்ளி விவரமெல்லாம் சொல்றானுங்க.

//கிரிகெட்ட ரசிக்கறவங்க இந்தியா ஆடுனாலும் ஆடாட்டியும் பார்ப்பாங்க. இந்தியா ஆடுனா த்ரில் அதிகம் அவ்வளவு தான்.//

பின்ன நாம எல்லாம் டேவிஸனுக்காக கனடா ஆடற மேட்சையே பார்க்கறவங்க. சூப்பர் எய்ட் மேட்சஸை கூடவா பார்க்க மாட்டோம்.

Avanthika said...

What happens to India if they lose?" Rahul Dravid was asked the day before. "We're not even thinking about the possibility

-Cricinfo

அண்ணா டைம் ஆக ஆக எந்த possibilitya சொன்னார்னு நினச்சு பயமா இருக்கு...:-))...

தென்றல் said...

/அவங்க நாளைக்கு தோத்தா, சூப்பர் 8க்கு 0 புள்ளிகளோட போகனும்/

NRR-படி சொல்லிறீங்களா? புரியலேயே?!

/ஷேவாகே நான் ஆடமாட்டேன்னாலும் திராவிட் விடமாட்டாரு. /
;) :)

mind readerஆ இருக்கிறீங்க, மணிகண்டன்!

மு.கார்த்திகேயன் said...

நீங்க சொன்ன மாதிரியே நடக்குதுங்க மணிகண்டன்..

முதல்ல ஃபீல்டிங்.. கும்ளேவுக்கு பதிலா ஹர்பஜன்.. அப்படியே நீங்க சொன்ன மாதிரி இந்தியா ஜெயிச்சா நல்லாயிருக்கும் போங்க..

பேசாம சேப்பலுக்கு பக்கத்துல உங்களுக்கும் ஒரு நாற்காலி போடச்சொல்லலாம்

மணிகண்டன் said...

//என்னைப் பொறுத்தவரை, இந்தியா இந்தப் போட்டியில தோற்கணும், நாட்டுப்பற்று..தேசப்பற்று இதெல்லாம் காட்டி இப்படிச் சொல்றதுக்காக துரோகின்னு சொல்லாதீங்க, ஆடுற இவனுங்களுக்கு இந்தப் பற்றெல்லாம் இருக்கா, ஏனோதானோன்னு ஆடுற இவனுங்க எல்லாம் சீக்கிரம் வூட்டுக்கு அனுப்போனும்.

//
உங்க ஆதங்கம் புரியுது சக்தி. கவலைப்பாடாதிங்க. இந்தியா ஜெயிச்சு ஆறுதல் தருவாங்க.

மணிகண்டன் said...

//பங்களாதேஷ் பெர்முடாவை நல்லா ஜெயிச்சுதுன்னா ? அப்போ என்ன நடக்கும் ?

//
அது ரொம்ப கஷ்டம் அனனி. அவங்க 700 ரன் அடிச்சா க்கூட பெர்முடாவை 100 ரன்னுக்கு சுருட்டனும். 100 ரன்னுக்கு சுருட்டலாம், 700 ரன் அடிக்க முடியுமா??

மணிகண்டன் said...

//பின்ன நாம எல்லாம் டேவிஸனுக்காக கனடா ஆடற மேட்சையே பார்க்கறவங்க. சூப்பர் எய்ட் மேட்சஸை கூடவா பார்க்க மாட்டோம்.
//
அதான, நிச்சயமா பார்ப்போம்..

மணிகண்டன் said...

//அண்ணா டைம் ஆக ஆக எந்த possibilitya சொன்னார்னு நினச்சு பயமா இருக்கு...:-))... //

NO TENSION PLEASE :)
கண்டிப்பா ஜெயிப்பொம் சகோதரி.

மணிகண்டன் said...

///அவங்க நாளைக்கு தோத்தா, சூப்பர் 8க்கு 0 புள்ளிகளோட போகனும்/

NRR-படி சொல்லிறீங்களா? புரியலேயே?!

/ஷேவாகே நான் ஆடமாட்டேன்னாலும் திராவிட் விடமாட்டாரு. /
;) :)

mind readerஆ இருக்கிறீங்க, மணிகண்டன்!

//

சூப்பர் 8க்கு தகுது பெறும் அணிகள், அவங்களுக்குள்ள நடந்த மேட்சுக்கான புள்ளிகளை மட்டும் அடுத்த சுற்றுக்கு எடுட்துட்டு போலாம். அதனால் இந்தியா ஜெயிச்ச, இந்தியா 2 புள்ளிகளும், இலங்கை 0 புள்ளிகளும் அடுத்த சுற்றுக்கு எடுட்துட்டு போகும்.

மணிகண்டன் said...

//பேசாம சேப்பலுக்கு பக்கத்துல உங்களுக்கும் ஒரு நாற்காலி போடச்சொல்லலாம்
//

என் கழுத்து நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா கார்த்தி :)

தென்றல் said...

/சூப்பர் 8க்கு தகுது பெறும் அணிகள், அவங்களுக்குள்ள நடந்த மேட்சுக்கான புள்ளிகளை மட்டும் அடுத்த சுற்றுக்கு எடுட்துட்டு போலாம்/

தெளிவுபடுத்தியதறகு நன்றி, மணிகண்டன்!

Radha Sriram said...

எல்லாம் முடிஞ்சிருச்சு மணி !! ப்ச் !