Thursday, March 22, 2007

நான் கொஞ்சம் weird ! !

தன்னோட weird குணங்களை பத்தி சொல்லும்பொழுது போறபோக்குல எனக்கு ஒரு பாலை போட்டுட்டு போயிட்டாரு நம்ம சிறில். கிரிக்கெட் பத்தி மட்டும் எழுதிட்டு இருந்த எனக்கு என்னைப் பத்தியும் கொஞ்சம் எழுத களம் அமைச்சுக் குடுத்ததுக்காக அவருக்கு ஒரு நன்றி!

அஞ்சு குணங்களை சொன்னா போதுமாம். அதனால நான் weirdனு நினைக்கிற என்னோட அஞ்சு பெரிய விஷயங்கள் உங்களுக்காக (இதுலயும் ரெண்டு கிரிக்கெட் சம்பந்தப்பட்டது தான் )

1. சாப்பிடும் பொழுது எதாவது புக் படிக்கறது. படிக்க ஒரு புக் இல்லைன்னா சாப்பாடு இறங்காது. சாப்பாடு இல்லாம் புத்தகம் படிக்கலாம் ஆனா புத்தகம் இல்லாம சாப்பிட முடியாது நம்மால.என் அம்மா, அக்கா, மனைவி எல்லாரும் எவ்வளவோ சொல்லி பார்த்துடாங்க. நான் திருந்தற மாதிரி இல்லை. இப்பல்லாம் என் வீட்டுக்காரம்மாவும் சாப்பிடும் பொழுது புத்தகம் படிச்சிகிட்டே சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. என்னால முடிஞ்ச நல்ல காரியம் :) . படிச்சிகிட்டே சாப்பிட்டா ருசியே தெரியாதும்பாங்க. சிலசமயம் அது நல்லது தாங்க :). ஒரு தடவை பருப்பே போடாம பண்ண பொங்கலை கூட தெரியாம சாப்பிட்டுட்டு போயிருக்கேன்னா பார்த்துக்கோங்க :)

2. வண்டி ஓட்டிட்டு போகும்பொழுது முன்னால போற காரோட நம்பரை கூட்டி என்ன நம்பர் வருதுன்னு பார்க்கறது. அந்த காரோட நம்பர்ல எதாவது சிறப்பு இருக்கா (உதாரணமா எனக்கு தெரிஞ்ச யாரோட பிறந்தநாளாவது) அப்படின்னு யோசிக்கறது வழக்கம். இது எப்ப ஆரம்பிச்சுதுன்னு தெரியாது. ஆனா இன்னும் தொடர்ந்துகிட்டு இருக்கு. இதனால எந்த பயனும் இலலைன்னாலும், சில சமயம் கவனம் சிதறும். நானும் இதை நிறுத்தனும்னு பார்க்கறேன் முடியலை.

3. கொழுகொழுன்னு எதாவது குழந்தைய பார்த்தா உடனே அதோட கன்னத்தை கிள்ளனும்னு தோனும்( குழந்தை அழுகாத அளவுக்கு தான்). முன்னெல்லாம் சொந்தக்காரங்க குழந்தைங்க யாரையாவது கிள்ளிகிட்டு இருந்தேன். இப்பொ என் பையனை கிள்ளி அதனால் தெனமும் திட்டு வாங்கிட்டு இருக்கேன். இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு பையன் பெரியவனாகி உதைக்கப் போறான் :)

4. கிரிக்கெட் பார்க்கும்பொழுது எதாவது ஒரு இடத்துல உக்காந்து, இந்தியா நல்லா ஆட ஆரம்பிச்சிட்டா மேட்ச் முடியற வரைக்கும் கம் போட்டு ஒட்டுன மாதிரி அதே இடம் தான். அடுத்தடுத்த மேட்சுக்கும் அதே இடம் தான். இந்தியா தோக்கற மேட்ச் வரைக்கும் இது கண்டின்யூ ஆகும். அப்புறம் வேற இடம் தேட வேண்டியது தான். எனக்கு தெரிஞ்சி கிரிக்கெட் பார்க்கற முக்கால்வாசி பேரு கிட்ட இந்த சென்டிமென்ட் இருக்கும்னு நினைக்கிறேன். இதுல நான் மட்டுமில்லை, மத்தவங்களும் அவங்க இடதை விட்டு நகரக்கூடாது. அப்ப தான் ஒர்க் அவுட் ஆகும் :) . இதுனால் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கறத விட எனக்கு திட்டு கிடைக்கறது தான் அதிகம்.

5. மேட்ச் ஃபிக்ஸிங், பெட்டிங், டைம் வேஸ்ட்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு சொன்னாக்கூட கிரிக்கெட் மேல வெறியா இருக்கறது. இந்தியா கேவலமா தோத்தாக்கூட கொஞ்ச நேரத்துக்கு எரிச்சலா இருக்கும்.இனிமே கிரிக்கெட்டே பார்க்கக் கூடாதுன்னு தோனும். ஆனா நைட்டே ஹைலைட்ஸ் பார்க்க உக்காந்திடுவேன். ஒரு படத்தை 10 தடவை 20 தடவை பார்க்கிற மாதிரி, இந்தியா ஜெயிச்ச மேட்சா இருந்தா முழு ரீப்ளேய கூட அலுக்காம பார்ப்பேன். காலைல பார்த்த மேட்ச் தானன்னு யாரவது எதாவது சொன்னா கூட இந்த காது to அந்த காது தான். இவ்வளவு வெறியா இருக்குறியே நீ பெரிய ப்ளேயரானு கேட்டு யாரும் மானத்தை வாங்கிடாதீங்க :( . போன உலகக்கோப்பை நடந்தப்போ சின்ன 6" டி.விய ஆஃபிசுக்கு எடுத்துட்டு போய், Requiremet Documents,technical Specification print out, அட்டை டப்பா எல்லாம் மூனு பக்கமும் வச்சு உள்ளே டி.வி வச்சு மேட்ச் பார்த்தேன்னா பார்த்துக்கோங்க :). என் ராசி இந்த தடவையும் பிடுங்க நிறைய ஆணி குடுக்காம நெட்ல மேட்ச் பார்க்க விட்டுட்டாங்க :)

அடுத்து என் பங்குக்கு நானும் அஞ்சு பந்து வீசனுமாமே..ஆறு பந்து வீசி ஒரு ஓவராக்கிடறேனே.இதோ என்னோட லிஸ்ட்

1. சிவபாலன்
2. SK ஐயா
3. கனவுலகம் கார்த்தி
4. தம்பி கதிர்
5. ஃபாஸ்ட் பவுலர் (உங்க உண்மையான் பேர் என்னங்க???? பிரெட் லீ, ஷேன் பாண்ட்னு எல்லாம் சொல்லாதீங்க :) )
6. சந்தோஷ்

இவங்க ஆறு பேரும் இந்த பதிவை படிப்பாங்களான்னு தெரியலை. படிக்கற யாராவது அவங்க கிட்ட சொன்னீங்கன்னா உங்களுக்கு 1000 பின்னூட்டம் பரிசாக தரப்படும்.

31 comments:

இராம் said...

/ வண்டி ஓட்டிட்டு போகும்பொழுது முன்னால போற காரோட நம்பரை கூட்டி என்ன நம்பர் வருதுன்னு பார்க்கறது. அந்த காரோட நம்பர்ல எதாவது சிறப்பு இருக்கா (உதாரணமா எனக்கு தெரிஞ்ச யாரோட பிறந்தநாளாவது) அப்படின்னு யோசிக்கறது வழக்கம். இது எப்ப ஆரம்பிச்சுதுன்னு தெரியாது. ஆனா இன்னும் தொடர்ந்துகிட்டு இருக்கு. இதனால எந்த பயனும் இலலைன்னாலும், சில சமயம் கவனம் சிதறும். நானும் இதை நிறுத்தனும்னு பார்க்கறேன் முடியலை.//

மணி,

இதை பத்தி நானும் பதிவு போட்டுருக்கிறேன்.... ஹி ஹி

தென்றல் said...

/படிச்சிகிட்டே சாப்பிட்டா ருசியே தெரியாதும்பாங்க. /

இத உங்க வீட்டுக்காரம்மா படிப்பாங்களா?

/ சின்ன 6" டி.விய ஆஃபிசுக்கு எடுத்துட்டு போய், Requiremet Documents,technical Specification print out, அட்டை டப்பா எல்லாம் மூனு பக்கமும் வச்சு உள்ளே டி.வி வச்சு மேட்ச் பார்த்தேன்னா பார்த்துக்கோங்க :)./

அடேங்கப்பா... ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு !

தென்றல் said...

/படிச்சிகிட்டே சாப்பிட்டா ருசியே தெரியாதும்பாங்க. சிலசமயம் அது நல்லது தாங்க :). /

இத உங்க வீட்டுக்காரம்மா படிப்பாங்களா?

/ சின்ன 6" டி.விய ஆஃபிசுக்கு எடுத்துட்டு போய், Requiremet Documents,technical Specification print out, அட்டை டப்பா எல்லாம் மூனு பக்கமும் வச்சு உள்ளே டி.வி வச்சு மேட்ச் பார்த்தேன்னா பார்த்துக்கோங்க :)./

அடேங்கப்பா... ரொம்ப தைரியம்தான், உங்களுக்கு!

மு.கார்த்திகேயன் said...

எங்க திரும்பினாலும் வியர்டா.. அட சாமி! நானே வியர்ட் ஆகிடுவேன் போல

மு.கார்த்திகேயன் said...

/கிரிக்கெட் பத்தி மட்டும் எழுதிட்டு இருந்த எனக்கு என்னைப் பத்தியும் கொஞ்சம் எழுத களம் அமைச்சுக் குடுத்ததுக்காக அவருக்கு ஒரு நன்றி!
//

உங்க கிரிக்கெட் பதிவுகளுக்கு இடையில் இது புது பந்து மாதிரி நல்லாவே இருக்கு, மணி

மு.கார்த்திகேயன் said...

//இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு பையன் பெரியவனாகி உதைக்கப் போறான் //

இல்லைங்க மணி.. அவனும் திரும்பி உங்களை கிள்ளி கிள்ளி விளையாடப்போறான். அப்போ யாராவது வியர்ட் பத்தி எழுதச்சொன்னா அவன், வயசானவங்களை பாத்தா கிள்ளத் தோணும்..பாவம் என் அப்பான்னு பதிவு வேற எழுதப்போறான்..

மு.கார்த்திகேயன் said...

/கனவுலகம் கார்த்தி//

நான் இந்த டேக்-ஐ கவனிக்கவே இல்லை..

மணி.. கிட்டதட்ட ஐந்து மாதங்களுக்கு முன், இதே டேக்-ஐ நான் எழுதிய ஞாபகம்.. தேடிப்பார்த்து அப்பை எழுதலைனா எழுதுறேங்க மணிகண்டன்

Abul said...

ஏதோ நம்மால முடிஞ்சது..
தம்பி ஏற்கனவே எழுதிட்டதாலே மத்தவங்க வலைப்பக்கத்துல போய் உங்க அழைப்பை தண்டோரா போட்டுட்டு வந்த்திட்டேன்.

///சாப்பிடும் பொழுது எதாவது புக் படிக்கறது. படிக்க ஒரு புக் இல்லைன்னா சாப்பாடு இறங்காது. சாப்பாடு இல்லாம் புத்தகம் படிக்கலாம் ஆனா புத்தகம் இல்லாம சாப்பிட முடியாது ////

அப்படியே நம்ம கட்சி.. ஆனா இப்போ கொஞ்சம் திருந்த்திட்டேன்னு நினைக்கிறேன்..

இன்னொரு விஷயம் இப்போ எனக்கு 1000 பின்னூட்டம் போடறதுக்கு தேடாதீங்க.. பின்னால வலைப்பூ ஆரம்பிச்சு பதிவுகள் எழுதினா கண்டிப்பா சொல்றேன் :))

சந்தோஷ் aka Santhosh said...

மணி, சொல்லிட்டிங்க இல்ல போட்டுட்டாப்போச்சி :)).

மணிகண்டன் said...

//இதை பத்தி நானும் பதிவு போட்டுருக்கிறேன்.... ஹி ஹி
//

இராம், என்னங்க மனநோய், ஃபோபியான்னெல்லாம் போட்டு பயமுறுத்தறீங்க :(.

கார் நம்பரா, கூட்டுத்தொகையா அப்படின்னா என்ன? :)

மணிகண்டன் said...

//இத உங்க வீட்டுக்காரம்மா படிப்பாங்களா?
//

தென்றல், இதையெல்லாம் காண்பிச்சா அப்புறம் ஒரு வாரத்துக்கு மெக்டொனால்ட்ஸ் இல்ல ஸப்வே தான் :)

மணிகண்டன் said...

//அடேங்கப்பா... ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு !
//

ஆமாங்க, இப்ப நினைச்சு பார்க்கும் பொழுது அப்படித்தான் தோனுது..

மணிகண்டன் said...

//எங்க திரும்பினாலும் வியர்டா.. அட சாமி! நானே வியர்ட் ஆகிடுவேன் போல /

ஆமாம் கார்த்தி, ஒவ்வொருத்தரும் ஆம்வே மாதிரி அஞ்சு பேரை கூப்பிட்டு கூப்பிட்டு தமிழ்மணமே weirdமணம் ஆயிடுச்சு :)

மணிகண்டன் said...

//இல்லைங்க மணி.. அவனும் திரும்பி உங்களை கிள்ளி கிள்ளி விளையாடப்போறான். அப்போ யாராவது வியர்ட் பத்தி எழுதச்சொன்னா அவன், வயசானவங்களை பாத்தா கிள்ளத் தோணும்..பாவம் என் அப்பான்னு பதிவு வேற எழுதப்போறான்..
//
ஓ இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கும்னு யோசிக்கவே இல்லை. சீக்கிரமே நிறுத்திடறேன் :)

மணிகண்டன் said...

//மணி.. கிட்டதட்ட ஐந்து மாதங்களுக்கு முன், இதே டேக்-ஐ நான் எழுதிய ஞாபகம்.. தேடிப்பார்த்து அப்பை எழுதலைனா எழுதுறேங்க மணிகண்டன் //

கண்டிப்பா எழுதுங்க கார்த்தி.

மணிகண்டன் said...

//இன்னொரு விஷயம் இப்போ எனக்கு 1000 பின்னூட்டம் போடறதுக்கு தேடாதீங்க.. பின்னால வலைப்பூ ஆரம்பிச்சு பதிவுகள் எழுதினா கண்டிப்பா சொல்றேன் :))
//

ரொம்ப நன்றி அபுல். சீக்கிரம் எழுத ஆரம்பிங்க. 1000 பின்னூட்டம் போடறேன் :)

மணிகண்டன் said...

//மணி, சொல்லிட்டிங்க இல்ல போட்டுட்டாப்போச்சி :)).

//

நன்றி சந்தோஷ். அப்ப சீக்கிரமே உங்க wierdபக்கங்களை பார்க்கலாம்னு சொல்லுங்க :) .

மணிகண்டன் said...

இது இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத கமெண்ட்னாலும், என்னோட போன பதிவுல பின்னூட்டம் நாற்பதுக்கு மேல போனதால, தமிழ்மணத்துல தெரியமாட்டேங்குது. அதனால போன பதிவுல ஒரு அனானி போட்ட பின்னூட்டத்தையும் அதற்கான என்னோட பதிலையும் இந்த பதிவுல போடறேன்.கமெண்ட் போட்ட அனானி நண்பரே எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் !

//////////////

//You copied the analysis from Cricinfo..... You should put thanks to Cricinfo on your post. People think that you did everything... not nice man.
//

Anony,

If you really have some sense, see the time this post was published and cricinfo article was published. i hv mentioned about the cricinfo article in my comments too. Also i have posted the same thing as comment in satrumun post when bangladesh were struggling by loosing 7 wickets. go here and check yourself.

// மணிகண்டன் said...
//I think that Bangladesh may get beaten really badly by the Sri Lankans. That will cause their run-rate to plummet, and they will need a mammoth win (even bigger than India's) to increase their run-rate. As of now, India and SL look good to go through"
//
This is right. Incase Bangladesh gets out for 75 today, their runrate will be -2.40. If India manages to win even by 10 runs or 2 wickest their runrate will be somewhere between 0.7 and 1.0.

To cross india's nrr bangladesh , for e.g if bangladesh bats first and score 300, they should dismiss bermuda below 0 !, to cross Indias nrr. If bermuda bats first and score 100 they should hit it in less than 1 over. So its really good for India. I hope my calculations are correct.

March 21, 2007 12:36 PM

//
This was posted at 12:31 pm when bangladesh were batting.You don't have to be a genius to calculate this. If you have some sense more than what you have now is enough.

http://satrumun.blogspot.com/2007/03/x_21.html


Think twice before criticising some one. And if you have guts, comment with your name hereafter.

///////

Abul said...

விடுங்க மணி, யாரோ ஒரு பெயரில்லாத அனானி போட்ட கமெண்ட்ட சீரியஸா எடுத்துக்காதீங்க‌.(உங்களுக்கும் தமிழ்மண வாடை அடிச்சிடுச்சா)
இதெல்லாம் அவுட் ஸைடு ஆஃப் போற பால் மாதிரி சும்மா லூஸ்ல விடுங்க :)

மணிகண்டன் said...

//விடுங்க மணி, யாரோ ஒரு பெயரில்லாத அனானி போட்ட கமெண்ட்ட சீரியஸா எடுத்துக்காதீங்க‌.(உங்களுக்கும் தமிழ்மண வாடை அடிச்சிடுச்சா)
இதெல்லாம் அவுட் ஸைடு ஆஃப் போற பால் மாதிரி சும்மா லூஸ்ல விடுங்க :)

//
உங்க அறிவுரைக்கு நன்றி அபுல். இனிமே நீங்க சொன்ன மாதிரி ஃப்ரீயா விட முயற்சி பண்றேன்.

தம்பி said...

ஒண்ணாவதும் நாலாவதும் அரே மாதிரி இருக்கு. எங்க வீட்டுலதான் பத்து பதினஞ்சு பேரு ஒண்ணு கூடி மேட்ச் பாப்போம் எவனாச்சும் வெளில போய்ட்டு வரும்போது எதிரணிக்கு விக்கெட் விழுந்துச்சின்னா அடிக்கடி அவன வெளில போய் வரச்சொல்லுவேன். :))


என்னையும் மதிச்சி கூப்பிட்டதுக்கு ரொம்ப தேங்கீஸ். ஆனா பாருங்க
என்னை ஏற்கனவே ரெண்டு பேரு Weird போட கூப்பிட்டாங்க இன்னும் எத்தனை பேரு கூப்பிடுறாங்கன்னு பாப்போம் :(

ஏற்கனவே weird எழுதிட்டேன்.
இன்னொருக்கால்லாம் எழுத முடியாது ஆமா..

தென்றல் said...

//You copied the analysis from Cricinfo..... //

என்னங்க... no ballலாம் கணக்குல எடுத்துகிட்டு...

அபுல சொன்ன மாதிரி, லூஸ்ல விடுங்க.....

மணிகண்டன் said...

//ஒண்ணாவதும் நாலாவதும் அரே மாதிரி இருக்கு. எங்க வீட்டுலதான் பத்து பதினஞ்சு பேரு ஒண்ணு கூடி மேட்ச் பாப்போம் எவனாச்சும் வெளில போய்ட்டு வரும்போது எதிரணிக்கு விக்கெட் விழுந்துச்சின்னா அடிக்கடி அவன வெளில போய் வரச்சொல்லுவேன். :))

//
தம்பி நீங்களும் நம்ம குட்டைல ஊறுன மட்டை தானா?


//என்னையும் மதிச்சி கூப்பிட்டதுக்கு ரொம்ப தேங்கீஸ். ஆனா பாருங்க
என்னை ஏற்கனவே ரெண்டு பேரு Weird போட கூப்பிட்டாங்க இன்னும் எத்தனை பேரு கூப்பிடுறாங்கன்னு பாப்போம் :(
//ஏற்கன்ன்வே ரெண்டு பேர் கூப்பிட்டது எனக்கு தெரியாது. யார் கூப்பிட்டா என்ன, எழுதினா சரி தான் :)

மணிகண்டன் said...

////You copied the analysis from Cricinfo..... //

என்னங்க... no ballலாம் கணக்குல எடுத்துகிட்டு...

அபுல சொன்ன மாதிரி, லூஸ்ல விடுங்க.....

//
நன்றி தென்றல். அப்ப அதை படிச்சோன வந்த கோபத்துல எழுதிட்டேன். இனிமே லூஸ்ல விட கத்துக்கறேன் .

இலவசக்கொத்தனார் said...

நல்ல வியர்ட் ஆட்டங்கள்தாங்க. :))

மணிகண்டன் said...

//நல்ல வியர்ட் ஆட்டங்கள்தாங்க. :))

//
கொத்ஸ், உங்களுக்கும் ஒரு பந்து போடலாம்னு இருந்தேன். ஏர்கன்வே ரெண்டு பேர் போட்டி நீங்க அவுடானதால விட்டுட்டேன் :)

கார்த்திக் பிரபு said...

nalla eludhi irukeenga mani valthukal

சிவபாலன் said...

மணி

என்னை அழைத்தற்கு மிக்க நன்றி!

உங்கள் அன்பினால் மிக்க மகிழ்ச்சியுற்றேன்..

இவ்வார இறுதியில் பதிவிடுகிறேன்.

நன்றி

மணிகண்டன் said...

//nalla eludhi irukeenga mani valthukal //
ரொம்ப நன்றி கா.பி

மணிகண்டன் said...

//மணி

என்னை அழைத்தற்கு மிக்க நன்றி!

உங்கள் அன்பினால் மிக்க மகிழ்ச்சியுற்றேன்..

இவ்வார இறுதியில் பதிவிடுகிறேன்.

நன்றி

//

அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி சி.பா

Fast Bowler said...

மணிகண்டன்,

உங்களுக்கு இருக்கு வியர்ட் பழக்கங்கள் நல்லதாத்தான் இருக்கு. :) ஆனா கார் மட்டும் கொஞ்சம் கவனமா ஓட்டுங்க.

என்னை அழைத்ததுக்கு நன்று. விரைவில் பதிவிட முயற்சி செய்கிறேன். நம்ம அபிஅப்பா கூட அழைத்திருந்தார்.