Tuesday, March 27, 2007

நாங்க ரொம்ப வியர்ட் -- இந்திய அணி


ஆளாளுக்கு அவங்களோட வியர்டான குணங்களை பத்தி எழுதறாங்க. எங்களைதான் யாருமே எழுத கூப்பிடலைனு ரொம்ப வருத்தப்படறாங்க இந்திய அணியினர். கூப்பிடலைன்னா என்ன நாங்க ரொம்பவே வியர்டுன்னு அவங்களோட வியர்ட் குணங்களை எனக்க்கு மெயில்ல அனுப்பியிருந்தாங்க. உங்களுக்காக அது..

ஏத்தி விடப்பா தூக்கி விடப்பா
பத்து மேட்ச் தொடர்ந்து டக் அடிச்சு ஃபார்மில இல்லாம தடுமாறுற பேட்ஸ்மேனையோ, விக்கெட்டே கெடைக்காம கவலைப்படர பவுலரையோ பார்த்தா எங்களுக்கு ரொம்ப பரிதாபமாயிடும். அதனால அவங்களுக்கு ரெண்டு செஞ்சுரியோ, 10 விக்கெட்டோ குடுத்து பெரிய நிலைமைக்கு கொண்டு வந்து விடுவோம். இந்த மாதிரி எங்களை நாயடி அடிச்சே பெரிய ஆள் ஆனவங்க நிறைய பேர் இருக்காங்க. அது என்னவோ தெரியலை, ஃபார்ம்ல இல்லாதவங்க எல்லாம் எங்க கிட்ட ஆடும்பொழுது ஃபார்முக்கு வந்துடறாங்க :)

தாய்மண்ணே வணக்கம்
எங்களுக்கு நம்ம தாய்மண்ணு ரொம்ப பிடிக்கும். அதனால தான் வெளில எங்க ஆடப்போனாலும் கீழே விழுந்து அந்த ஊரு மண்ணு எங்க உடம்பில ஒட்டிடாம பார்த்துக்கறோம். இது தெரியாத சில முட்டாளுங்க நாங்க கீழே விழுந்து புரண்டு ஃபீல்டிங்கே பண்றதில்லைனு சொல்றாங்க. அப்ப நம்ம ஊருல ஆடும்பொழுதும் ஏண்டா விழுந்து பிடிக்க மாட்டேங்கறீங்கனு நீங்க கேக்கறது தெரியுது. நம்ம ஊருல கீழே விழுந்து நம்ம பாரத மண்ணுக்கு அடிபட்டுட்டா..அதனால தான் :)

ஒற்றுமை
எங்களுக்குள்ள இருக்க ஒற்றுமை வேற யாருக்கும் வராதுங்க. ஒருத்தர் அவுட்டாயிட்டா மத்தவங்க எல்லாம் நிறைய அடிச்சு அவரை வருத்தப்பட வைக்க மாட்டோம். எல்லாரும் கடகடனு அவுட்டாயிட்டு வந்துடுவோம். டீம்ல ஒருத்தர் மனசு கஷ்டப்பட்டாலும் எங்களுக்கு தாங்காது. ஒருத்தன் அழும்போது மத்தவங்க சிரிக்க முடியுமா? அதனால் எப்பவும் எல்லாரும் ஒற்றுமையா ஒரே மாதிரி விளையாடுவோம்:). மேட்சுன்னா வெற்றி தோல்வி சகஜம் தான். அதுக்காக கூட ஆடுறவனை விட்டுக்குடுக்க முடியுமா?

வீட்டில புலி வெளியில எலி
எல்லாரும் எங்களை இந்தியால ஆடும்பொழுது மட்டும் தான் ஜெயிப்பீங்க. வெளில போய் ஆடுறப்ப உங்க பருப்பு வேகாதுங்கறாங்க. நீங்களே யோசிச்சு பாருங்க. நம்ம ஊருல நாங்க ஆடும்போடு நாங்க ஜெயிக்கனும்னு நீங்கல்லாம் எப்படி விரும்பறீங்களோ அதே மாதிரி தான் அந்த ஊரு மக்களும் அவங்க டீம் ஜெயிக்கனும்னு ஆசைப்படுவாங்க. அவங்க ஆசையை கெடுக்கலாமா? அப்படி கெடுத்ததுக்கப்புறம் அங்கேல்லாம் போய் சுத்திப்பார்க்க முடியுமா? அதனால தான் எந்த ஊருக்கு போய் ஆடுனாலும் தோத்துட்டு வரோம். இனியாவது எங்களை இப்படி சொல்லி கிண்டல் பண்றதை நிறுத்துங்க. இல்லைன்னா நாங்க எந்த நாட்டுக்கு போறோமா அந்த நாட்டோட பேரை இந்தியானு தற்காலிகமா மாத்தி வச்சிடுங்க. என்ன OKயா?


அச்சமில்லை அச்சமில்லை
எங்களுக்கு மேட்ச்ல தோக்கறதை பத்தி பயமே இல்லை. எப்படியும் எங்க ஊரு கேனைங்க எங்களை கைவிடாதுங்க. ஒரு மேட்ச் எதாவது சப்பை டீம் கிட்ட 100 அடிச்சிட்டா போதும் வாழ்க்கைல செட்டில் ஆயிடலாம். எங்களுக்கு பயமெல்லாம் எதிரணிய பார்த்து தான். பங்களாதேஷ்ல இருந்து ஆஸ்திரேலியா வரைக்கும் நாங்க பயப்படாத டீமே கிடையாது. அங்கே பவுலர் ஓடி வரும்போதே இங்கே எங்களுக்கு நடுங்க ஆரம்பிச்சுடும். என்னங்க பண்றது எங்க பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக் :). எல்லா டீமும் பெர்முடா மாதிரி ஆயிடுமா? அதனால நாங்க பயப்படாம விளையாட இனிமே பெர்முடவோட மட்டும் தான் ஆடரதுன்னு முடிவு பண்ணிட்டோம் :)

உங்களுக்கு தெரிஞ்ச வியர்டை நீங்களும் சொல்லிட்டு போங்க..


நாம இன்னும் இந்த அதிர்ச்சில இருந்து மீளாம இருக்கோம். இந்த வீனாப்போனதுங்க என்ன பண்ணுது பாருங்க..

கவலைப்படாட்டியும் பரவாயில்லை. கவலைப்படற மாதிரி நடிக்கவாவது செய்யலாம்ல?

38 comments:

சிறில் அலெக்ஸ் said...

//NORTH CHICAGO, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க //

6.

தொடர்ந்து ஆறு சிக்சர் (இதப் போல) போடுங்க பாப்போம்..

இது இரண்டாவது.

:))

சந்தோஷ் aka Santhosh said...

மணி எப்படி உங்களால் மட்டும் இப்படி பின்னி பெடல் எடுக்க முடியுது. கலக்குறீங்க போங்க. ரூம் போட்டு யோசிச்சி நானும் சொல்றேன்.

CVR said...

Good one!!
I really enjoyed reading it!!
Rock on!! :-)

VSK said...

வழக்கமா அஞ்சு பேரைக் கூப்பிடணுமாம்.

ஆனா, இதுலியும் நாங்க வியர்டுன்றதைக் காட்ட்றதுக்காக நம்ம அண்டையிலே இருக்கற பாகிஸ்தான் அணியை மட்டும் கூப்பிட்டு விடை பெறுகிறோம்!

:))))

மணிகண்டன் said...

//தொடர்ந்து ஆறு சிக்சர் (இதப் போல) போடுங்க பாப்போம்..
//

முயற்சி பண்றேன் சிறில். எல்லாரும் கிப்ஸ் ஆக முடியுமா?? :)

மணிகண்டன் said...

//மணி எப்படி உங்களால் மட்டும் இப்படி பின்னி பெடல் எடுக்க முடியுது. கலக்குறீங்க போங்க. ரூம் போட்டு யோசிச்சி நானும் சொல்றேன்.

//

எல்லா புகழும் இந்திய அணிக்கே !

மணிகண்டன் said...

//Good one!!
I really enjoyed reading it!!
Rock on!! :-)

//

நன்றி CVR

மணிகண்டன் said...

//வழக்கமா அஞ்சு பேரைக் கூப்பிடணுமாம்.

ஆனா, இதுலியும் நாங்க வியர்டுன்றதைக் காட்ட்றதுக்காக நம்ம அண்டையிலே இருக்கற பாகிஸ்தான் அணியை மட்டும் கூப்பிட்டு விடை பெறுகிறோம்!
//

அவங்களுக்கும் ஒன்னு போட்டுட்டா போச்சு :)

ஆதிபகவன் said...

மணிகண்டன் இன்னும் உங்களால் இந்தியாவோட தோல்வியில இருந்து வெளியில வரமுடியலையா?

விட்டுத்தள்ளுங்க. இன்னும் எவ்வளவோ நல்ல மாட்ச் இருக்கு.

இந்தியாவுக்கு பங்களாதேஷ் டூர் இருக்கு. அதுல நல்லா விளையாடுவாங்கன்னு நினைக்கிறேன்.

முத்துகுமரன் said...

சச்சின் டீஷர்ட் அழகா இருக்குல்ல...

ஊருக்கு போனவுடனே ஒரு செட்டு வாங்கணும்.

தென்றல் said...

/
நாம இன்னும் இந்த அதிர்ச்சில இருந்து மீளாம இருக்கோம்.
/
எப்ப நம்ம மக்கள் இந்தியா திரும்புறாங்க? நம்மதான் புலம்பிக்கிட்டு இருக்கோம். 'official'ஆ ஒரு புலம்பலையும் காணோம்னு பார்த்தேன்..?!

மணிகண்டன், மற்ற போட்டிகள் பத்தியும் interstingஆ இருந்தா எழுதுங்க.

மணிகண்டன் said...

//இந்தியாவுக்கு பங்களாதேஷ் டூர் இருக்கு. அதுல நல்லா விளையாடுவாங்கன்னு நினைக்கிறேன்.
//

என்னங்க ஆதிபகவன், கிண்டல் பண்றிங்களா ஆறுதல் சொல்ரிங்களானே புரியல :)

மணிகண்டன் said...

//சச்சின் டீஷர்ட் அழகா இருக்குல்ல...

ஊருக்கு போனவுடனே ஒரு செட்டு வாங்கணும். //

இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா சொல்லிட்டேன்!

மணிகண்டன் said...

//எப்ப நம்ம மக்கள் இந்தியா திரும்புறாங்க? நம்மதான் புலம்பிக்கிட்டு இருக்கோம். 'official'ஆ ஒரு புலம்பலையும் காணோம்னு பார்த்தேன்..?!

மணிகண்டன், மற்ற போட்டிகள் பத்தியும் interstingஆ இருந்தா எழுதுங்க.
//
அநேகமா இந்த வாரம் போவங்கன்னு நினைக்கிறேன். கண்டிப்பா எழுதறேங்க தென்றல். இன்னும் சூப்பர் 8 சூடு புடிக்கலையே..

காட்டாறு said...

நச்சுன்னு இருக்கு. கலக்கலா எழுதியிருக்கீங்க.

ஆதிபகவன் said...

சே, சே, கிண்டலெல்லாம் கிடையாது!!
ரொம்ப நொந்து போயிருக்கிறீங்களேன்னு
சொன்னேன்.:)))

-L-L-D-a-s-u said...

நன்றாய் உள்ளது .. சிக்ஸர்தான்..

நீங்களெல்லாம் அடிக்கிற கிரிக்கெட் பதிவுகளை அலுவலகத்தோழர்களுக்கு ஃபார்வர்ட் பண்ணி, பண்ணி கையெல்லாம் வழிக்குது, அவங்களுக்கெல்லாம் வாய் வலிக்குதாம்

மணிகண்டன் said...

//நச்சுன்னு இருக்கு. கலக்கலா எழுதியிருக்கீங்க.

//
ரொம்ப நன்றி காட்டாறு!

மணிகண்டன் said...

//சே, சே, கிண்டலெல்லாம் கிடையாது!!
ரொம்ப நொந்து போயிருக்கிறீங்களேன்னு
சொன்னேன்.:))) //

அப்ப சரி :) நொந்து போயிருந்தேன். இப்ப் இல்லை. இப்ப கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா எல்லம் ஆடறதை பார்க்கறப்ப, பங்களாதெஷ் கிட்டய தடவுன நாம் இந்த ரவுண்டுக்கு வந்திருந்தோம்னா, குனிய வச்சு கும்மியிருப்பாங்க :)

மணிகண்டன் said...

//நீங்களெல்லாம் அடிக்கிற கிரிக்கெட் பதிவுகளை அலுவலகத்தோழர்களுக்கு ஃபார்வர்ட் பண்ணி, பண்ணி கையெல்லாம் வழிக்குது, அவங்களுக்கெல்லாம் வாய் வலிக்குதாம்
//

ஓ இது வேரயா.. எப்படியோ எல்லாரும் சிரிச்சு சிரிச்சு இதை மறந்தா சரி தான். இல்லைன்னா ஏர்போர்ட்ல வச்சே நம்ம பசங்களை பிரிச்சு மேஞ்சுடுவாங்க :)

SurveySan said...

அடுத்த world cup எப்பங்க?

2011?

worldcup2011.blogspot.com இப்படி ஓண்ணு ஆரம்பிங்க, அதுவும் வெளங்கிடும்.

எனக்கென்னமோ, நீங்க ப்ளாக் ஆரம்பிச்சது நம்ம டீமுக்கு ராசியில்லாம ஆகிடுச்சோன்னு தோணுது.
யாரங்கே? இவருக்கு ஒரு தடா போடுங்க :))))

இந்த சர்வேக்கு #1 தான பதில்?

-L-L-D-a-s-u said...

மணிகண்டன் ,

உலகக்கோப்பைக்காகத்தான் இங்கு வந்ததாகச் சொன்னீர்கள்..கிரிக்கெட் பதிவுகளைப் போலவே நகைச்சுவைப் பதிவுகளிலும் கலக்குகிறீர்கள் ..தொடருங்கள்..

மணிகண்டன் said...

//எனக்கென்னமோ, நீங்க ப்ளாக் ஆரம்பிச்சது நம்ம டீமுக்கு ராசியில்லாம ஆகிடுச்சோன்னு தோணுது.
யாரங்கே? இவருக்கு ஒரு தடா போடுங்க :))))
//

யாருய்யா இவரை உள்ள விட்டது? கொஞ்சம் விட்டா உலகக்கோப்பை ஆரம்பிச்ச வாரம் தம்பி கதிர் நட்சத்திரமானதால தான் இந்தியா தோத்துது, சற்றுமுன்ல சிறில் கிரிக்கெட் செய்திகள் போட ஆரம்பிச்சதால் தான் தோத்துதுனு எல்லாம் சொல்வாரு போல இருக்கு?

( அப்பாடா எப்படியோ எனக்கு வந்த பந்தை ஹூக் பண்ணி வேற பக்கமா திருப்பி விட்டுட்டேன் :) )

மணிகண்டன் said...

//இந்த சர்வேக்கு #1 தான பதில்?
///

அதுல சந்தேகம் வேறயா? நோண்டி நோண்டி எரிச்சலை கிளப்பி விடறதுல என்னய்யா சந்தாஷம் உனக்கு?

சந்தோஷ் aka Santhosh said...

இந்திய அணியின் வியர்டு மேட்டர் இன்னொன்று.

பீல்டிங் பண்ணும் பொழுது ball கைல நிக்காது. பேட்டிங்க பண்ணும் பொழுது கால் தன்னால pavilionஜ நோக்கி போகும். Groundஜ விட பெவிலியன் தான் ரொம்ப புடிக்குது.

மணிகண்டன் said...

//உலகக்கோப்பைக்காகத்தான் இங்கு வந்ததாகச் சொன்னீர்கள்..கிரிக்கெட் பதிவுகளைப் போலவே நகைச்சுவைப் பதிவுகளிலும் கலக்குகிறீர்கள் ..தொடருங்கள்..//

ரொம்ப நன்றி -L-L-D-a-s-u

ஆமாங்க. அந்த முடிவுல தான் வந்தேன். சூப்பர் 8 இன்னும் சூடி பிடிக்காததால இந்த வாரம் இந்திய அணியை கலாய்க்கும் வாரமா ஆயிடுச்சு..உலகக்கோப்பை புடியற வரைக்கும் அப்பப்ப எதாவது கிரிக்கெட் பதிவு வருங்க. அதுக்கப்புறம் தான் வேற எதாவது எழுதனும்.

Anonymous said...

most teams are playing like a single unit but Indian team didn't play like a single unit. They were also arrogant and underestimated other teams thats why they got kicked out. Why would they think that they could beat the gifted sri lankan team. anyway its good that Indian team is out... they will try harder next time. :):)

மணிகண்டன் said...

//இந்திய அணியின் வியர்டு மேட்டர் இன்னொன்று.

பீல்டிங் பண்ணும் பொழுது ball கைல நிக்காது. பேட்டிங்க பண்ணும் பொழுது கால் தன்னால pavilionஜ நோக்கி போகும். Groundஜ விட பெவிலியன் தான் ரொம்ப புடிக்குது.//

இன்னொன்னு..யாராவது ஒரு காரை கொண்டு வந்து கிரவுண்டுக்குள்ள நிறுத்தனாதான் நாங்க அடிக்கவே ஆரம்பிப்போம் :)

மணிகண்டன் said...

//most teams are playing like a single unit but Indian team didn't play like a single unit. They were also arrogant and underestimated other teams thats why they got kicked out. Why would they think that they could beat the gifted sri lankan team. anyway its good that Indian team is out... they will try harder next time. :):)

//
yeah..its true anony. they underestimated bangladesh and played complacently..

ஜெகன் said...

கலக்கல் மணி. ரொம்ப நல்லா இருக்கு.

Nakkeeran said...

Mani
Indian cricket team's arrival in airport
http://varietiescorner.blogspot.com/2007/03/indian-cricket-team-arrival-in-indian.html
ha!Ha.!

Fast Bowler said...

//முத்துகுமரன் said...

சச்சின் டீஷர்ட் அழகா இருக்குல்ல...

ஊருக்கு போனவுடனே ஒரு செட்டு வாங்கணும்.
//

ஹி ஹி. எனக்கும் படத்தை பார்த்தவுடனே தொன்றியது அதுதான். :)

Fast Bowler said...

மணி,
நைஸ் நக்கல்ஸ்.... தொடரவும்...

மணிகண்டன் said...

//கலக்கல் மணி. ரொம்ப நல்லா இருக்கு.

//
நன்றி ஜெகன்.

மணிகண்டன் said...

//Mani
Indian cricket team's arrival in airport
http://varietiescorner.blogspot.com/2007/03/indian-cricket-team-arrival-in-indian.html
ha!Ha.!

//

பார்த்தேங்க நக்கீரன். இது நடந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை :)

மணிகண்டன் said...

////முத்துகுமரன் said...

சச்சின் டீஷர்ட் அழகா இருக்குல்ல...

ஊருக்கு போனவுடனே ஒரு செட்டு வாங்கணும்.
//

ஹி ஹி. எனக்கும் படத்தை பார்த்தவுடனே தொன்றியது அதுதான். :)

March 27, 2007 9:58 PM


Fast Bowler said...
மணி,
நைஸ் நக்கல்ஸ்.... தொடரவும்...
//

கண்டிப்பா பவுலர். நாளைக்கு ஒன்னு ரெடியா இருக்கு :)

இராம் said...

மணி,

சூப்பரப்பு :))

மணிகண்டன் said...

//மணி,

சூப்பரப்பு :))

//

நன்றி ராயல் அவர்களே!