Thursday, March 15, 2007

நகம் கடிக்க வைத்த அயர்லாந்து ! !


காலையில தான் "கடுப்படிக்கும் முதல் சுற்று போட்டிகள்"னு ஒரு பதிவு போட்டேன். அதை படிச்சு தொலைச்சிட்டாங்களோ என்னமோ, ஜிம்பாப்வேக்கும் எனக்கும் சேர்த்து மூக்கறுத்துட்டாங்க அயர்லாந்து.

இந்த உலகக்கோப்பையின் முதல் பரபரப்பான ஆட்டத்தை குடுத்து எல்லாரையும் ஆச்சரியப்படுத்தி இருக்காங்க அயர்லாந்து அணியினர். இரண்டு அணியுமே "Underdogs" என்பதால் இந்த போட்டியின் முடிவு பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தாதுன்னாலும், எங்களாலயும் சுவாரசியமா ஆடமுடியும்னு நிரூபிச்சதுக்காக ரெண்டு அணிகளுக்கும் ஒரு ஷொட்டு! எதிர்பார்த்ததையும் விட மகாமோசமா விளையாடி தோத்ததுக்காக பெர்முடாவுக்கு ஒரு கொட்டு. (கொட்டு ஷொட்டு : நன்றி சாத்தான்குளத்தான்)





டாஸில் ஜெயித்த ஜிம்பாப்வே அயர்லாந்தை பேட் செய்ய சொல்லிட்டாங்க. முதல் ஓவரிலேயே துவக்க ஆட்டக்காரரான போர்டர்ஃபீல்ட் ஆட்டமிழந்து திரும்பினாலும் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ஜெர்மி ப்ரே நிலைத்து ஆடினார். மறுமுனையில் சீராக விக்கெட்டுகள் விழுந்துகிட்டே இருந்துது. 89/5 என்ற நிலையில் இருந்தது அயர்லாந்து. 150 ரன்னுக்கு சுருண்டுடுவாங்க, இதுவும் சப்பை மேட்சா தான் இருக்கப்போகுதுன்னு நினைச்சேன். ஆனா ப்ரேயும் ஒயிட்டும் 6வது விக்கெட்டுக்கு 56 ரன் அடிச்சு கொஞ்சம் நல்ல நிலமைக்கு கொண்டு வந்தாங்க. அதுக்கப்புறம் வந்தவங்க உதவியோட ப்ரே ஸ்கோரை 50 ஓவருக்கு 221 ரன்னுக்கு கொண்டு வந்தாரு. கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காம 115 ரன் வேற அடிச்சாரு. ஓபனிங்க் இறங்கின பேட்ஸ்மென் கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காம் இருக்குறது உலகக்கோப்பைல இது 12வது முறை. அதோட ஒரு தொடக்க ஆட்டக்காரர் டக் அவுட்டாகி, இன்னொருத்தர் சதமடிக்கறது உலகக்கோப்பைல 2வது முறை. முன்னால 1992ல நியூசிலாந்துக்கு எதிரா அமீர் ஷோகைல் டக்கும், ரமீஸ் ராஜா சதமும் அடிச்சாங்க! ஜிம்பாப்வேல மூனு பந்து வீச்சாளர்கள் தலா 2 விக்கெட் எடுத்தாங்க (அவங்க பேரெல்லாம் தமிழ்ல எழுதினா விரல் சுளுக்கிடும் போலிருக்கு :) )






222 என்ற வெற்றி இலக்கோட ஆட வந்தாங்க ஜிம்பாப்வே. ஒருகட்டத்துல சுலபமா ஜெயிக்கற மாதிரி தான் இருந்தாங்க. தொடக்க ஆட்டக்காரரான் சிபாண்டவும், Matsikenyeri ( சத்தியமா எப்படி இவர் பேரை சொல்றதுன்னு தெரியலைங்க ) இருந்த வரைக்கும் ஈஸியா ஜெயிக்க போற மாதிரி தான் இருந்துது. 28 ஓவர்ல 128/3ங்கற வலுவான நிலையில் இருந்தாங்க. 22 ஓவர்ல 94 ரன் அடிச்ச போதும். கையில ஏழு விக்கெட் வேற. அப்போ சிபாண்டா அவுட்டாயி போனாரு. டெய்லரும்,Matsikenyeri யும் ஜோடி சேர்ந்து ஆறாவது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்து 203 ரன்னுக்கு கொண்டு வந்தாங்க. 6 ஓவர்ல 19 ரன், 4 விக்கெட்னு இருந்தது. யாருமே அந்த நிலைமைல ஜிம்பாப்வே ஜெயிச்சுடும்னு தான் நினைச்சிருப்பாங்க. பவுலர் கையில பட்டு பந்து ஸ்டம்ப்ல பட்டதுல துரதிர்ஷ்டவசமா டெய்லர் அவுட்டானாரு. 212 ரன் இருக்கும்பொழுது 7வது விக்கெட்டும் விழுந்தது. இனி ball-by-ball பார்க்கலாமா.





2 ஓவர்கள் 9 ரன்கள் 3 விக்கெட். 49வது ஓவரை போட்டவரு ப்ரையன்.
48.1 ஃபுல்டாஸா வந்த பந்தை அடிச்சு கவர்ச்ல கேட்ச் குடுத்து அவுட்டானாரு உட்செயா.
11 பந்துகள் 9 ரன்கள் 2 விக்கெட்
48.2 மெதுவா வந்த பந்தை மிட்-ஆனுக்கு அடிச்சாரு Mpofu.ரன் எதுவுமில்லை.
10 பந்துகள் 9 ரன்கள் 2 விக்கெட்
48.3 பவுலர்கிட்டயே திருப்பி அடிச்சாரு Mpofu.ரன் எதுவுமில்லை.
9 பந்துகள் 9 ரன்கள் 2 விக்கெட்
48.4 இன்சைட் எட்ஜ் வாங்கி கீப்பர் கிட்ட போன பந்து. ரன் எதுவுமில்லை
8 பந்துகள் 9 ரன்கள் 2 விக்கெட்
48.5 ஸ்டெரெயிட்ட திருப்பி அடிச்ச பந்தை திறமையா வலது காலால த்டுத்தாரு ப்ரையன். ரன் எதுவுமில்லை.
7 பந்துகள் 9 ரன்கள் 2 விக்கெட்
48.6 மிட்-ஆன் பகுதில வேகமா அடிச்சிட்டு ரன் எடுக்க முயற்சி பண்ணி ரன் அவுட் ஆனாரு Mpofu
6 பந்துகள் 9 ரன்கள் 1 விக்கெட்





அடுத்து கடைசி ஓவரை போட்டவரு ஒயிட்.
49.1 ஃபுல்டாஸா வந்த பந்தை கவர் பகுதில அடிச்சு 2 ரன் எடுத்தாரு Matsikenyeri.
5 பந்துகள் 7 ரன்கள் 1 விக்கெட்
49.2 அளவு குறைந்து வந்த பந்தை ஸ்கொயர் கட் பண்ணி 2 ரன்கள் எடுத்தாரு Matsikenyeri
4 பந்துகள் 5 ரன்கள் 1 விக்கெட்
49.3 ஃபுல்டாஸா வந்த பந்தை மிட்விக்கெட் பகுதிக்கு அடிச்சு 1 ரன் எடுத்தாரு Matsikenyeri. கேட்ச் ஆகியிருக்க வேண்டியது.
3 பந்துகள் 4 ரன்கள் 1 விக்கெட்
49.4 ரெயின்ஸ்ஃபோர்ட் கவருக்கு ட்ரைவ் பண்ணி 1 ரன் எடுத்தாரு.
2 பந்துகள் 3 ரன்கள் 1 விக்கெட்.
49.5 அளவு குறைந்து வைடா போன பந்தை கட் பண்ணி 2 ரன்கள் எடுத்தாரு Matsikenyeri
1 பந்து 1 ரன் 1 விக்கெட்
49.6 ட்ரைவ் பண்ணி பந்தை மிஸ் பண்ணாரு Matsikenyeri.பந்து கீப்பர் கிட்ட போனதால ரன் எதுவும் எடுக்க முடியாம ரன் அவுட் ஆயிட்டாரு ரெயின்ஸ்ஃபோர்ட்.




ரெண்டு அணியும் 221 ரன்கள் எடுத்ததால் மேட்ச் டை ஆனாதா அறிவிக்கப்பட்டது. ஜிம்பாப்வேக்கு இது பெரிய ஏமாற்றம்னாலும் அயர்லாந்துக்கு வெற்றி தான். So near yet so farனு அடிக்கடி சொல்ற மாதிரி ஆயிடுச்சு இன்னைக்கு ஜிம்பாப்வேயோட நிலைமை. உலகக்கோப்பைல டை ஆகற மூனாவது மேட்ச் இது. 1999ல ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்க அரையிறுதிப் போட்டி டை ஆகி ஆஸ்திரேலியா ஃபைனல்ஸுக்கு போனாங்க. அலன் டொனால்ட் ரன் அவுட்டான அந்த காட்சி மறக்க முடியாதது. தென்னாப்பிரிக்கா ஜெயிக்க வேண்டிய கோப்பை அந்த ஒரு ரன்னால பறிபோனது. 2003ல இலங்கை-தென்னாப்பிரிக்கா போட்டி டை ஆகி தென்னாப்பிரிக்கா இரண்டாவது சுற்றுக்கு போக முடியாம் போச்சு. முதல் போட்டில டொனால்ட் வில்லன்னா இரண்டாவதுல டக்வொர்த்-லெவிஸ் விதிகளும், சரியான கம்யூனிகேஷன் இல்லாததும் வில்லனா அமைஞ்சது.





பயிற்சி போட்டில தென்னாப்பிரிக்காவுக்கு தண்ணி காட்டினதையும் இன்னைக்கு ஆடினதையும் பார்க்கும் பொழுது தோணறது..

WELL DONE IRELAND ! ! !

29 comments:

Anonymous said...

Sounds like Lagaan - part 2 ;-)
Malli

சிவபாலன் said...

மணி

நீங்க பாகிஸ்தானை குறைவாக எடை போடுடாதீங்க.. எனக்கு என்னமோ அவங்க கலக்கப் போறாங்கன்னு தோனுது :))

மு.கார்த்திகேயன் said...

ஆஹா.. அயர்லாந்து கில்லி மாதிரி விளையாடி இருக்காங்க.

மணி, நீங்க சொன்னது மாதிரி பாகிஸ்தானுக்கும் கொஞ்சம் தண்ணி காட்டட்டும் :-)

தென்றல் said...

படங்கள் நல்லா இருக்கு!

//
இனி ball-by-ball பார்க்கலாமா.
//
நீங்க எந்த அளவுக்கு ரசிச்சி பார்த்து இருக்கிறிங்க-னு தெரியுது..!

//
WELL DONE IRELAND !
//
வாழ்த்துக்கள்!!

//
KEEP GOING AND DEFEAT PAKISTAN ON SATURDAY !!
//
ஏங்க... நாமலாவது கென்யா, ஜிம்பாபே ... மாதிரி team கிட்டல்லாம் 'அல்வா' வாங்கி இருக்கோம்...
அதனால, 17ம் தேதியும் நாம கொ சம் tensionஆ பார்க்க வேண்டி இருக்கு!
பாகிஸ்தான் அது மாதிரி ஏதும் 'அல்வா' வாங்கி இருக்காங்களா? (தெரி சிகிறதுக்காக தான் கேட்குறேன்ங்க !)

Anonymous said...

http://www.tamilkavithai.de/CRI.htm

eng-nz live

Avanthika said...

அண்ணா

என்னோட பிளாக் எல்லாம் link குடுத்து இருக்கீங்க..i am very happy..thanks anna..

Ireland பிடிச்ச 3 கேட்ச் நல்ல கேட்ச்
fielding was very good இல்லனா?

this is ireland's first World cup.. பெரிய விஷயம் தானே?

மணிகண்டன் said...

//நீங்க பாகிஸ்தானை குறைவாக எடை போடுடாதீங்க.. எனக்கு என்னமோ அவங்க கலக்கப் போறாங்கன்னு தோனுது :))
//

வாங்க சி.பா. பாக்கிஸ்தானை குறைவா எடை போடலைங்க. அயர்லாந்தை கொஞ்சம் அதிகமா எடை போட்டுட்டேன். அந்த கடைசி வரியை இப்போ மாத்திட்டேங்க!

மணிகண்டன் said...

//Sounds like Lagaan - part 2 ;-)
Malli

//
வருகைக்கு நன்றி அனானி.

மணிகண்டன் said...

//அயர்லாந்து கில்லி மாதிரி விளையாடி இருக்காங்க.
//

ஆமாம் தல, நிஜமாவே நேத்து அசத்திட்டாங்க. பெரிய அணிகளோடயும் இந்த மாதிரி ஆடுனாங்கன்ன நல்லா இருக்கும்.

மணிகண்டன் said...

//நீங்க எந்த அளவுக்கு ரசிச்சி பார்த்து இருக்கிறிங்க-னு தெரியுது..!
//
தென்றல், உண்மைய சொல்லனும்னா நான் ஜிம்பாப்வே பேட்டிங்க் முதல் 10,12 ஓவர் தான் பார்த்தேன். ball-by-ball எழ்துனது cricinfo-வ வச்சு ஒப்பேத்துனது :)

மணிகண்டன் said...

//ஏங்க... நாமலாவது கென்யா, ஜிம்பாபே ... மாதிரி team கிட்டல்லாம் 'அல்வா' வாங்கி இருக்கோம்...
அதனால, 17ம் தேதியும் நாம கொ சம் tensionஆ பார்க்க வேண்டி இருக்கு!
பாகிஸ்தான் அது மாதிரி ஏதும் 'அல்வா' வாங்கி இருக்காங்களா? (தெரி சிகிறதுக்காக தான் கேட்குறேன்ங்க !) //

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்க, நியூசிலாந்து எல்லாருமே பங்களாதெஷ் கிட்ட தோத்திருக்காங்க தென்றல்!

மணிகண்டன் said...

//http://www.tamilkavithai.de/CRI.htm

eng-nz live

//
இதில தாங்க இப்ப மேட்ச் பார்த்துகிட்டு இருக்கேன். தகவலுக்கு நன்றி!

மணிகண்டன் said...

//Ireland பிடிச்ச 3 கேட்ச் நல்ல கேட்ச்
fielding was very good இல்லனா?

this is ireland's first World cup.. பெரிய விஷயம் தானே?
//
வாங்க சகோதரி, நீங்க சொன்ன மாதிரி அயர்லாந்து நல்லா fielding பண்ணாங்க.குறிப்பா கடைசி 5 ஓவர்கள் ரொம்ப நல்லா பண்ணாங்க. பெரிய விஷயம் தான்.

சிவபாலன் said...

மணி,

விளையாட்டில் Upsets சாத்தியமே.. பாக் அணிக்கும் அது பொருந்தும்..

நான் சொல்ல வந்தது பாக் உலக்கோப்பையை வென்ற போது கூட இப்படிதான் சாதாரணமாகத்தான் ஆரம்பித்தார்கள்..

எனினும் அயர்லாந்து ஜிம்பாவே போன்ற அணியை தினரவைத்திருப்பது.. நீங்கள் சொல்வதிபோல் இன்னும் பல Upsets உலக கோப்பையில் வரலாம்..

எப்படியோ போட்டி சுவரசியமாக இருந்தால் சரி :)

கதிர் said...

அடங்க மறுத்த அயர்லாந்து
ஜுரம் வாங்கிய ஜிம்பாப்வே
:)

மணிகண்டன் said...

//விளையாட்டில் Upsets சாத்தியமே.. பாக் அணிக்கும் அது பொருந்தும்..
//

உண்மைதான் சிவபாலன். ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் ஒரு Upset நடந்திருக்கு. இந்த முறை யாருக்கு ஆப்புனு தெரியலை? :)

//எப்படியோ போட்டி சுவரசியமாக இருந்தால் சரி :)
//

என் விருப்பமும் அதே!

மணிகண்டன் said...

//அடங்க மறுத்த அயர்லாந்து
ஜுரம் வாங்கிய ஜிம்பாப்வே
:)

//

போட்டுத் தாக்கும் தம்பி :)

A Simple Man said...

SA 353 in 40 overs.
மொத்தம் 15 ஸிக்ஸர்கள்..ஹாலந்து டாஸ் ஜெயிச்சி ஃபீல்டிங் பண்ணிருக்காங்க.. தேவையா இதெல்லாம்??

என்னமோ நடக்குதுங்க..

மணிகண்டன் said...

//SA 353 in 40 overs.
மொத்தம் 15 ஸிக்ஸர்கள்..ஹாலந்து டாஸ் ஜெயிச்சி ஃபீல்டிங் பண்ணிருக்காங்க.. தேவையா இதெல்லாம்??

என்னமோ நடக்குதுங்க..

//

ஆமாங்க அபுல்,என்னமோ நடக்குது. எதுக்கு ஸவுத் ஆஃப்ரிக்காவை ஆடச்சொன்னாங்கன்னு புரியலை. இந்த உலகக்கோப்பை முடியும்பொழுது எல்லா ரெகார்டும் ப்ரேக் ஆகிடும்னு நினைக்கிறேன் :)

தென்றல் said...

//ஹாலந்து டாஸ் ஜெயிச்சி ஃபீல்டிங் பண்ணிருக்காங்க.. தேவையா இதெல்லாம்??

என்னமோ நடக்குதுங்க..//

அதான...

//இந்த உலகக்கோப்பை முடியும்பொழுது .... //

இந்த உலகக்கோப்பை முடியும்பொழுது எல்லா 'bet' (உண்மை) யும் தெரிய வந்தா சரிதான். ;(

A Simple Man said...

தல, இப்போதான் side link பார்த்தேன்.. கிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்ஸராமே..
Thanks for the link..
என்னோட ஆசையெல்லாம் கிப்ஸ் (ஏன் மத்த‌ பேட்ஸ்மெனும்கூட) ஆஸ்திரேலியாக்கு எதிரா இப்படி அடிக்கணும்...
பார்த்திட்டே இருங்க‌ .. இந்த‌ வேர்ல்ட்கப் முடியறதுக்குள்ள இருக்கு அவங்களுக்கு

மணிகண்டன் said...

//இந்த உலகக்கோப்பை முடியும்பொழுது எல்லா 'bet' (உண்மை) யும் தெரிய வந்தா சரிதான். ;(
//

Match Fixing எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்க மாதிரி தெரியலைங்க தென்றல். ஐசிசி இப்போ ரொம்ப கடுமையா கண்கானிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

மணிகண்டன் said...

//ஆஸ்திரேலியாக்கு எதிரா இப்படி அடிக்கணும்...
பார்த்திட்டே இருங்க‌ .. இந்த‌ வேர்ல்ட்கப் முடியறதுக்குள்ள இருக்கு அவங்களுக்கு
//

அவங்களுக்கு ஆப்பு இருக்குங்கறது உறுதி தான் ஆனாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரா ஆறு சிக்ஸ் அடிக்கறதெல்லாம் சான்ஸே இல்லங்க அபுல்.

தென்றல் said...

/போட்டுத் தாக்கும் தம்பி .../

இந்த மாதிரி நமக்கு தெரிந்ததையும் எடுத்து விட்டேனே...;), மணி!
கிடைக்கலையா?

மணிகண்டன் said...

//
இந்த மாதிரி நமக்கு தெரிந்ததையும் எடுத்து விட்டேனே...;), மணி!
கிடைக்கலையா?
//

கிடைச்சுதுங்க தென்றல், பதில் கமெண்ட் போட்டேனே பார்க்கலையா..

Avanthika said...

//என்னோட ஆசையெல்லாம் கிப்ஸ் (ஏன் மத்த‌ பேட்ஸ்மெனும்கூட) ஆஸ்திரேலியாக்கு எதிரா இப்படி அடிக்கணும்...
பார்த்திட்டே இருங்க‌ .. இந்த‌ வேர்ல்ட்கப் முடியறதுக்குள்ள இருக்கு அவங்களுக்கு ///

ஆமா..வாழ்க்கையில மறக்க முடியாத மாதிரி அடி வாங்கனும்..i am waiting for that occasion....இருக்கு பாருங்க அவங்களுக்கு...thanks Abul Anna...

முத்துகுமரன் said...

பலவீனமான சிறு அணிகள் ஏன் முதலில் பீல்டீங்கை தேர்வு செய்கிறார்கள் என்று ஆச்சர்யப்படத் தேவையில்லை. அவர்களுக்கான சர்வதேஎச வாய்ப்புகள் குறைவு. கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அந்த அணியின் பந்து வீச்சாளர்களுக்கு களம் அமைத்து கொடுக்கிறார்கள். முழுமையான 50 ஓவர்கள் வீசுவது என்பது அவர்கள் திறனை அறிய மேம்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. முதலில் பேட் செய்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து மிகச் சொற்பமான ஓவர்களிலே வெற்றியை பறி கொடுக்கும் போது அவர்களின் எந்த துறைக்கும் முழு வாய்ப்பு கிடைக்காது போய்விடும்.

அயர்லாந்து சிறப்பான அணியாக உலக அரங்கில் வலம் வரும் இன்றில்லாவிட்டாலும் சில ஆண்டுகள் கழித்தாவது. அவர்களின் போராட்ட குணம் மதிக்கத்தக்கது

மணிகண்டன் said...

//ஆமா..வாழ்க்கையில மறக்க முடியாத மாதிரி அடி வாங்கனும்..i am waiting for that occasion....இருக்கு பாருங்க அவங்களுக்கு...thanks Abul Anna...
//

நானும் ஆஸ்திரேலியா மரண அடி வாங்கறதுக்காக தான் காத்துகிட்டு இருக்கேன் அவந்திக. ஆனா ஒரு ஓவர்ல ஆறு ஸிக்ஸ் எல்லம் நடக்க வாய்ப்பில்லை :(

மணிகண்டன் said...

//பலவீனமான சிறு அணிகள் ஏன் முதலில் பீல்டீங்கை தேர்வு செய்கிறார்கள் என்று ஆச்சர்யப்படத் தேவையில்லை. அவர்களுக்கான சர்வதேஎச வாய்ப்புகள் குறைவு. கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அந்த அணியின் பந்து வீச்சாளர்களுக்கு களம் அமைத்து கொடுக்கிறார்கள். முழுமையான 50 ஓவர்கள் வீசுவது என்பது அவர்கள் திறனை அறிய மேம்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. முதலில் பேட் செய்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து மிகச் சொற்பமான ஓவர்களிலே வெற்றியை பறி கொடுக்கும் போது அவர்களின் எந்த துறைக்கும் முழு வாய்ப்பு கிடைக்காது போய்விடும்.

//

வாங்க முத்துக்குமரன். நல்ல தெளிவான பார்வை. இது மாதிரி அப்பப்ப வந்து எதாவது சொன்னிங்கன்ன நல்லாயிருக்கும்.

நீங்க சொன்ன்னதை வேற ஒரு பதிவுல நான் வேற கண்ணோட்டத்துல சொல்லியிருந்தேன்..அது..
"ஒருவேளை அவங்க முதல்ல ஆடி 30 40 ரன்னுக்கு அவுட்டாயி, எதிரணி அதை 10 ஓவர்ல அடிச்சிடுச்சின்னா 2 மணிநேரத்துல மேட்சே முடிஞ்சிடுமே.அதுக்காக தான் முதல்ல பந்து வீசறாங்க"

ஆனா நீங்க சொல்றது தான் சரியான் காரணமா இருக்க முடியும். ரொம்ப நன்றி.

//அயர்லாந்து சிறப்பான அணியாக உலக அரங்கில் வலம் வரும் இன்றில்லாவிட்டாலும் சில ஆண்டுகள் கழித்தாவது. அவர்களின் போராட்ட குணம் மதிக்கத்தக்கது //

நிச்சயமா எனக்கும் அந்த நம்பிக்கை இருக்குங்க. வேற எதாவது பெரிய அணிய தோற்கடிச்சு ஆச்சரியத்தை தருவாங்களன்னு பார்க்கலாம்.