Wednesday, March 14, 2007

ஆஸ்திரேலியா Vs ஸ்காட்லாந்து வீடியோ

இன்று ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.

டாஸில் ஜெயித்த ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியாவை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு
334 ரன்கள் குவித்தது. கேப்டன் பாண்டிங் 113 ரன்கள் அடித்தார். இந்த உலகக்கோப்பையின் முதல் சதத்தை அவர் 85 பந்துகளில் அடித்தார். இன்று அவர் 9 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடித்தார். இதுவரை உலகக்கோப்பையில் அதிக ஸிக்ஸ்கள் அடித்த பெருமையை உடையவர் கங்கூலி (23 ஸிக்ஸ்கள்). இன்று 5 ஸிக்ஸ்கள் அடித்ததன் மூலம் பாண்டிங் அந்த சாதனையை முறியடித்தார் (24 ஸிக்ஸ்கள்). பாண்டிங் 23 ரன்கள் அடித்திருந்த பொழுது ஸ்காட்லாந்து அணியினர் அவர் கொடுத்த கேட்சை தவறவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் ஹெய்டன் 60 ரன்களும் கில்கிறிஸ்ட் 46 ரன்களும் அடித்தனர். மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. 300 ரன்களை 48.3 ஓவர்களில் அடைந்த ஆஸ்திரேலியா கடைசி 9 பந்துகளில் 34 ரன்கள் அடித்தது! அவ்வணியின் ஹாக் மின்னல் வேகத்தில் 15 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார்.

அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து 40.1 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி ஆட்டக்காரரான ப்ளைன் ஆடவில்லை. ஆஸ்திரேலியாவின் மெக்ராத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியின் வீடியோ (Highlights Runtime 30 Mins)












உலகக்கோப்பை பரிசுப்போட்டிகு நீங்கள் கூறிய பதில்களை சரி பார்க்க இங்கே செல்லவும்.

14 comments:

MyFriend said...

me the first today, sports ministare!!!

MyFriend said...

cricetle eedupaadu illai.. so, attendance maddumthaan. varrddaa!!!!

Anonymous said...

இந்த போட்டிக்கெல்லாம் ஒரு வீடியோ தேவையா?

Mani said...

மீண்டும் நன்றி மணி!

தென்றல் said...

"ஒலி ஒளி" க்கு நன்றி, மணிகண்டன்!

ஸ்காட்லாந்தை பார்க்க 'பாவமா'தான் இருக்கு!

ICC ஏன் தான் இப்படி காமடி பண்றாங்களோ? இந்த மாதிரி போட்டி மற்றும் சில விதி முறைகளால உலகக் கோப்பை (முதல் சுற்று) போட்டிகள பார்க்கிற ஆர்வம் குறையுது.

இந்த மாதிரி team லாம் கூப்புட்டு தனியா ஒரு "மினி மினி" உலகக் கோப்பையை நடத்த வேண்டியதான...?

மணிகண்டன் said...

//me the first today, sports ministare!!! //

செந்தித்துறை அமைச்சர் மாண்புமிகு மை ஃபிரண்ட் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன் :)

மணிகண்டன் said...

//இந்த போட்டிக்கெல்லாம் ஒரு வீடியோ தேவையா?

//
:( மோகன்தாஸ் பார்த்தா கோச்சுக்கப் போறாருங்க :)

மணிகண்டன் said...

வருகைக்கு நன்றி ஜெகன்

மணிகண்டன் said...

//"ஒலி ஒளி" க்கு நன்றி, மணிகண்டன்!

ஸ்காட்லாந்தை பார்க்க 'பாவமா'தான் இருக்கு!

ICC ஏன் தான் இப்படி காமடி பண்றாங்களோ? இந்த மாதிரி போட்டி மற்றும் சில விதி முறைகளால உலகக் கோப்பை (முதல் சுற்று) போட்டிகள பார்க்கிற ஆர்வம் குறையுது.

இந்த மாதிரி team லாம் கூப்புட்டு தனியா ஒரு "மினி மினி" உலகக் கோப்பையை நடத்த வேண்டியதான...?

//

வாங்க தென்றல், இதை பத்தி தான் ஒரு பதிவு எழுதிகிட்ட்டு இருக்கேன் !

தென்றல் said...

//
வாங்க தென்றல், இதை பத்தி தான் ஒரு பதிவு எழுதிகிட்ட்டு இருக்கேன் !
//
ஓ அப்படியா! நல்லது-ங்க!

எனக்கு ஒரு சந்தேகம்...
power play னா என்னதுங்க?
power play1, power play2 -னு வேற சொல்லுறாங்க...??
(இதலாம் தெரியாம என்னத்த கிரிக்கெட் பார்க்கிறிங்க-னுலாம் கேட்ககூடாது..)

மணிகண்டன் said...

//power play னா என்னதுங்க?
power play1, power play2 -னு வேற சொல்லுறாங்க...??
//

முன்னெல்லாம் முதல் 15 ஓவர்களுக்கு ரெண்டு ஃபீல்டர்கள் தான் 30-யார்ட் வட்டத்துக்கு வெளியே நிக்கமுடியும். மீதி ஒன்பது பேரும் முதல் 15 ஓவர்களுக்கு 30-யார்ட் வட்டத்துக்குள்ள தான் நிக்கனும்.

2005ல ஐசிசி அதுல ஒரு மாற்றத்தை கொண்டு வந்தாங்க. அதன்படி இந்த Fielding Restrictions 20 ஓவர்களுக்கு இருக்கும். ஆனா தொடர்ந்து இருகனும்கர கட்டாயம் இல்லை. அதாவது முதல் பத்து ஓவர்களுக்கு கட்டாயமா ஒன்பது பேர் 30-யார்ட் சர்கிளுக்கு உள்ளே தான் நிக்கனும். இது PowerPlay1.

அதுக்கப்புறம் மீதி பத்து ஓவர்கள் Powerplay2, Powerplay3னு 5 ஓவர்கள் கொண்ட இரண்டு பகுதியா பிரிக்கப்படும். இந்த ரெண்டு பவர்ப்ளேயயையும் பவுலிங் அணியின் கேப்டன் எப்போ வேணாலும் உபயோகப்படுத்திக்கலாம்.

உதாரணமா ஒரு அணி முதல் 10 ஓவர்ல 90 ரன் அடிச்சு தூள் கிளப்பிகிட்டு இருக்காங்கனு வச்சுக்கோங்க. 11வது ஓவர்ல இருந்து 5 பேரை வெளியே நிக்க வச்சு ரன்ரேட்டை குறைக்க முயற்சி பண்ணலாம். எதாவது விக்கெட் விழுந்த உடனேயோ இல்ல சாதகமான நேரத்துலயோ பவுலிங் அணியின் கேப்டன் மீதி 2 பவர்ப்ளேயயையும் உபயோகிக்கலாம். ஆனா அது தொடர்ந்து 5 ஓவர்களுக்கு இருக்கனும். 16வது ஓவர்லயிருந்து 20வது ஓவர் வரைக்கும்கற மாதிரி. அதே மாதிரி மூனாவது பவர்ப்ளேயயையும் தேவைப்படும்பொழுது உபயோகிக்கலாம். ஆனா கண்டிப்பா 20 ஓவருக்கு 9 பேர் உள்ளெ நின்னு ஃபீல்டிங் பண்ணனும்.

இதனால் ரெண்டு அணிகளும் பயனடைய முடியும்.

இந்த விளக்கம் போதுமா???

VSK said...

JUST A MINUTE AGO!!

"23.6 Maharoof to Leverock, 1 run, and the crowd erupts in cheer as Leverock works a wide one past point to get off the mark"

WAY TO GO BIG MAN!
:))

மணிகண்டன் said...

//JUST A MINUTE AGO!!

"23.6 Maharoof to Leverock, 1 run, and the crowd erupts in cheer as Leverock works a wide one past point to get off the mark"

WAY TO GO BIG MAN!
:))

//

வாங்க SK ஐயா. இதே மாதிரி இலங்க ஆடும்பொழுது ஜெயவர்தனே கவர்ஸ்ல அட்இச்ச ஒரு பந்தை நம்ம ஆளு ஓடிப்போய் பிடிக்கறதுக்குள்ள ரெண்டு ரன் எடுத்திட்டாங்க. அப்பவும் பார்வையாளர்கள் ஒரே கூச்சல் தான். கிண்டல் பண்ணாங்களா, உற்சாகப்படுத்துனாங்களானு தெரியலை :)

தென்றல் said...

//
....
ஆனா கண்டிப்பா 20 ஓவருக்கு 9 பேர் உள்ளெ நின்னு ஃபீல்டிங் பண்ணனும்.

.....
இந்த விளக்கம் போதுமா???
//

தெளிவான விளக்கத்திற்கு நன்றி, மணிகண்டன்!