Friday, March 16, 2007

நாளை இந்தியாவின் முதல் போட்டி


கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோட எதிர்பார்த்துகிட்டு இருக்கிற இந்தியாவோட முதல் உலகக்கோப்பை போட்டி நாளைக்கு நடக்குது. இந்தியாவும் பங்களாதேஷும் ஆடுற இந்தப் போட்டி Port of Spain-ல் உள்ள Queen's Park Oval மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த மைதானம் பற்றிய தகவல்கள் இங்கே.

பங்களாதேஷ் கொஞ்சம் பலவீனமான டீம்னாலும் ஒரேயடியா ஒதுக்கிடவும் முடியாது. பயிற்சி போட்டில நியூசிலாந்தை தோற்கடிச்சு எல்லாரையும் ஆச்சரியப்படுத்தினாங்க. அதனால இந்தியா கவனமாகவே விளையாடனும். பங்களாதேஷ்லயும் திறமையான் வீரர்கள் இருக்காங்க. இந்தியாவோட பேட்டிங் தான் பெரிய பலம். இந்தியா முதல்ல விளையாடி ஒரு 300 ரன் எடுத்தா சந்தேகமே இல்லாம வின் பண்ணிடலாம்.

இந்தியாவும் பங்களாதேஷும் இதுவரைக்கும் 14 போட்டில விளையாடி இருக்காங்க. இந்தியா 13 தடவையும் பங்களாதேஷ் 1 தடவையும் ஜெயிச்சிருக்காங்க. உலகக்கோப்பை போட்டிகள்ல மோதறது இது தான் முதல் முறை.






உலகக்கோப்பை போட்டிகள்ல கலக்கும் சச்சின் இந்த உலகக்கோப்பையிலும் நிச்சயமா கலக்குவார். கங்கூலியும் போராடி அணிக்குள்ள வந்திருக்கறதால தன்னோட இடத்தை தக்க வச்சுக்க நல்லா ஆடுவாருன்னு தோனுது. அதே மாதிரி திராவிட், யுவராஜ், டோணி, உத்தப்பா, கார்த்திக்னு நல்ல தரமான பேட்டிங் இருக்குது.


பேட்டிங்ல இப்போதைக்கு இருக்க ஒரே பிரச்னை ஷேவாக். சமீபகாலமா மோசமா விளையாடிட்டு இருந்தாலும், திராவிட் இவர் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காரு. ஷேவாக்குக்கு இன்னும் இரண்டு வாய்ப்பிருக்கு ஃபார்முக்கு வர. பங்களாதேஷோடயும் பெர்முடாவோடயும் அவரை ஆடவிட்டு முயற்சி பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். என்னோட கருத்து, பெர்முடா கிட்ட மட்டும் ட்ரை பண்ணலாம். நாளைக்கு போட்டில கங்கூலியயும் உத்தப்பாவையும் ஓபனிங் இறக்கி, கார்த்திக்க ஒன்டவுனா இறக்கலாம்.

அதேமாதிரி பவுலிங்ல ரெண்டு ஸ்பின்னர்களை நாளைக்கு முயற்சி பண்ண வாய்ப்பிருக்கு. இந்த மைதானம் சுழற்பந்துக்கு சாதகமா இருக்கும். ஆனா ரெண்டு ஸ்பின்னர்ஸ் எடுத்தா வேகப்பந்து வீச்சாளர்கள்ல யாரையாவது கழட்டி விடனும். அதனால் கும்ப்ளேயவும் அடுத்த மேட்ச்ல ட்ரை பண்ணலாம். என்னோட 11 பேர்

கங்கூலி
உத்தப்ப்பா
கார்த்திக்
திராவிட்
சச்சின்
யுவராஜ் சிங்
டோணி
பதான்
ஹர்பஜன்
முனாஃப் படேல்
ஜாகிர் கான்

உங்க 11 பேரையும் சொல்லுங்க. யார் சொல்ற 11 பேர் நாளைக்கு ஆடறாங்கன்னு பார்க்கலாம் :) .

13 comments:

A Simple Man said...

நாளைக்கு உத்தப்பாவுக்குப் பதிலா சேவாக்கைத்தான் டிராவிட் சேர்ப்பார்னு எனக்குத் தோணுது.. அதிலயும் ஒழுங்கா ஆடனா ஒரேயடியா டிரஸ்ஸிங் ரூம்லதான் உட்காரனும். பௌலிங்லயும் ஹர்பஜனுக்குப் பதிலா கும்ப்ளே என்னோட சாய்ஸ்

Radha Sriram said...

ரொம்ப நாள் கழிச்சு இந்திய அணி விளையாடரத பாக்க போரேங்க.....exciting ஆ இருக்கு.....
நம்ம சச்சு(செல்லமா நான் அப்படிதான் கூப்பட்ரது!!) நல்ல விளயாடணும்னு வேண்டிக்கோங்க. மத்தபடி நம்ம அணி நல்லா விளையாடி ஜெயிக்கணும்.....they should have a solid win so that they would have gained enough confidence to face better teams.....

தென்றல் said...

/என்னோட 11 பேர் /

என்னோடதும் இதுதான்...

கைஃபை எடுக்காதது எனக்கு வருத்தம்தான்...

GO INDIA!!

Avanthika said...

yes..altlast...இந்த நாள் வந்துருச்சு

All THE BEST INDIA...

மணிகண்டன் said...

//நாளைக்கு உத்தப்பாவுக்குப் பதிலா சேவாக்கைத்தான் டிராவிட் சேர்ப்பார்னு எனக்குத் தோணுது.. அதிலயும் ஒழுங்கா ஆடனா ஒரேயடியா டிரஸ்ஸிங் ரூம்லதான் உட்காரனும். பௌலிங்லயும் ஹர்பஜனுக்குப் பதிலா கும்ப்ளே என்னோட சாய்ஸ்

//

ஷேவாக்கை கழட்டி விடக்கூட வாய்ப்பி இருக்கு. ஆனா உத்தப்பா கண்டிப்ப டீம்ல இருப்பாருங்க அபுல்.

மணிகண்டன் said...

//ரொம்ப நாள் கழிச்சு இந்திய அணி விளையாடரத பாக்க போரேங்க.....exciting ஆ இருக்கு.....
நம்ம சச்சு(செல்லமா நான் அப்படிதான் கூப்பட்ரது!!) நல்ல விளயாடணும்னு வேண்டிக்கோங்க. மத்தபடி நம்ம அணி நல்லா விளையாடி ஜெயிக்கணும்.....they should have a solid win so that they would have gained enough confidence to face better teams.....

//
சச்சின் கண்டிப்பா ஜொலிப்பாருங்க மேடம். கவலை வேணாம். உங்க excitement disappointment ஆகிடாம இருக்க வேண்டிக்கறேன் :)

மணிகண்டன் said...

//கைஃபை எடுக்காதது எனக்கு வருத்தம்தான்...
//

வருத்தம் தான், அனுபவம் மற்றும் கடந்த கால சாதனைகளால ஷேவாக் குதிரை ரேஸில முந்திடுச்சு :)

மணிகண்டன் said...

//yes..altlast...இந்த நாள் வந்துருச்சு

All THE BEST INDIA...

//
நானும் சொல்லிடறேங்க..
ALL THE BEST INDIA !

Avanthika said...

அண்ணா ரெண்டு Spinners இருக்கலாம்.. பங்களாதேஷும் சாதாரண டீம் இல்லையே.. அதனால கும்ப்ளே இருக்கலாம்...

in the Warm up match New zeland was defeated...so one more spinner might be there...we will see

enRenRum-anbudan.BALA said...

Mani,
//கைஃபை எடுக்காதது எனக்கு வருத்தம்தான்...
//
Right now, only his fielding will be of some use, he is completely out of form and lacking confidence.

நானும் சொல்லிடறேங்க..
ALL THE BEST INDIA !

மணிகண்டன் said...

//அண்ணா ரெண்டு Spinners இருக்கலாம்.. பங்களாதேஷும் சாதாரண டீம் இல்லையே.. அதனால கும்ப்ளே இருக்கலாம்//

அவந்திகா, ரெண்டு ஸ்பின்னர்ஸ் எடுத்தா,பேட்ஸ்மென் இல்ல பேஸ் பவுலர் யாரையாவது தியாகம் பண்ணனும். பார்க்கலாம் என்ன பண்றாங்கன்னு

மணிகண்டன் said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாலா.

சிவபாலன் said...

மணி

என்னங்க நம்ம ஆளுங்க தினறுகிறார்கள்..?!! :(

Ind 28/2 11 overs