Monday, March 5, 2007

முதல் சுற்றில் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு -- வெல்லுமா இப்படை - 4???



எனது இப்பதிவு இன்றைய தமிழோவியத்திலும் வெளியாகியுள்ளது. அதற்கான சுட்டி


முந்தைய பகுதிகளுக்கான தொடுப்பு

பகுதி 1

பகுதி 2

பகுதி 3




இந்தியா, இலங்கை, பெர்முடா மற்றும் பங்களாதேஷ் அணிகள் க்ரூப் Bல இருக்கு. முதல் சுற்றுல இந்த நாலு அணிகளும் தங்களுக்குள்ள விளையாடும். முதல் இரண்டு இடத்தை பிடிக்கிற அணிகள் அடுத்த சுற்றான Super 8க்கு தகுதிபெறும். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்.

இந்தியாவின் முதல் சுற்று போட்டிகளின் விவரம்
மார்ச் 17 - India Vs Bangladesh
மார்ச் 19 - India Vs Bermuda
மார்ச் 23 - India Vs Srilanka

எல்லா க்ரூப்புமே ரெண்டு பலமான அணி, ரெண்டு சற்றே அனுபவம் குறைந்த அணின்னு பிரிக்கப்பட்டிருக்கு. நம்ம க்ரூப்புல இந்தியாவும் இலங்கையும் பலம் வாய்ந்த அணிகள். பங்களாதேஷ் சமீபகாலமா நெறைய போட்டிகள்ல ஆடினாலும் சற்று பலவீனமான அணிதான். இருந்தாலும் இவங்களை அப்படி ஒரேயடியா ஒதுக்கிடவும் முடியாது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கைன்னு பலம் வாய்ந்த அணிகளை இவங்க ஜெயிச்சும் இருக்காங்க.

பெர்முடா இந்த உலகக்கோப்பைக்கு புதுவரவு. இவங்களை பத்தி அவ்வளவா ஒன்னும் தெரியாது. புதுவரவு தானேன்னு இவங்களையும் ஒதுக்க முடியாது. 1983 உலகக்கோப்பைல இதேமதிரி புதுவரவான ஜிம்பாப்வே முதல் போட்டிலயே ஆஸ்திரேலியாவை தோக்கடிச்சாங்க. இந்தியாவுக்கும் தண்ணி காட்டுனதை மறக்கமுடியாது. கபில்தேவ் 175 அடிச்சிருக்காட்டி நாமளும் தோத்திருப்போம். சமீபத்தில திராவிட் பேட்டில சொன்ன மாதிரி எந்த ஒரு அணியையும் சுலபமா எடைபோடக் கூடாது. கிரிக்கெட்ல என்னைக்கு எது நடக்கும்னு தெரியாது. 1996 உலகக்கோப்பைல கென்யா மேற்கிந்தியத்தீவுகளை 93க்கு சுருட்டினாங்க, 2003 உலகக்கோப்பைல அரைஇறுதி வரைக்கும் வந்தாங்க.

அதனால எந்த ஒரு அணியையும் சுலபமா எடைபோடக்கூடாது. இன்னோரு முக்கியமான் விஷயம், இந்த உலகக்கோப்பைல புது விதிகளின்படி முதல் சுற்றுல தகுதி பெறும் மற்ற அணிக்கு எதிரா எடுக்கற புள்ளிகள் இரண்டாவது சுற்றுக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். சூப்பர் 8ல முதல் நாலு அணிகள் தான் அரைஇறுதிக்கு போகமுடியும். அதனால் முதல்சுற்றுல எல்லா போட்டிலயும் ஜெயிக்கறது ரொம்ப முக்கியம். ஒருபோட்டில தோற்கறதால் இழக்கற 2 புள்ளிகள் கோப்பைக் கனவையே கலைக்க வாய்ப்பிருக்கு. வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் 2 புள்ளிகளும், டை அல்லது கைவிடப்படும் போட்டிகளுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படும். முதல் சுற்றின் இறுதியில் இரு அணிகள் சமமான் புள்ளிகள் பெற்றிருந்தால் கீழ்கண்ட வரிசையில் தகுதி பெறும் அணி தேர்ந்தெடுக்கப்படும்

1. அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணி
2. அதிக னெட் ரன்ரேட் உள்ள அணி
3. அதிகமான விக்கெட் சராசரி (எடுத்த விக்கெட்கள்/வீசிய பந்துகள்) உள்ள அணி
4. அவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற்ற அணி
5. இவை எல்லாவற்றிலும் சமமாக இருப்பின் 'லாட்' முறை


அதேமாதிரி புதுவிதிகளின்படி இரண்டாம் சுற்றுக்கு போகும் அணிகளின் எண்கள் ஐசிசியின் தரவரிசைப்படியே தீர்மானிக்கப்படும். அதாவது இந்தியா முதல் சுற்றுல எல்லா போட்டிலயும் ஜெயிச்சு புள்ளிகள் பட்டியல்ல முதல் இடத்தை பிடிச்சாலும், சூப்பர் 8 சுற்றுக்கு B2 ஆகவே செல்லமுடியும். ஏன்னா இலங்கை தரவரிசைல நம்மள விட முன்ன இருக்காங்க. சூப்பர் 8ல எப்படியிருந்தாலும் மத்த 6 அணிகளோடயும் விளையாடனும்னாலும், இந்த சிஸ்டத்தால போட்டிகளின் நாளும் இடமும் மாறும். இதுவும் ஒரு போட்டியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்கறதால் கவனிக்கனும். இப்போதைய தரவரிசைப்படி இலங்கை B1, இந்தியா B2. இதில் ஏதவது ஒருநாடு தகுதி பெறலைன்னா, தகுதிபெறும் நாடு அந்த இடத்தை எடுத்துக்கும். உதாரணமா இந்தியாவும், பங்களாதேஷும் சூப்பர் 8க்கு தகுதி பெற்றால், பங்களதேஷ் B1 எனவும் இந்தியா B2 எனவும் கருதப்படும். இலங்கையும் பங்களதெஷும் தகுதி பெற்றால் இலங்க B1 எனவும் பங்களாதேஷ் B2 எனவும் கருதப்படும்.

அடுத்ததா இந்தியா முதல்சுற்று போட்டிகளை ஆடப்போற மைதானம் பற்றி பார்ப்போம். முதல் சுற்றுல ஒவ்வொரு க்ரூப்பும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தீவில் மட்டுமே ஆடுகின்றன. அதன்படி இந்தியா தனது அனைத்து முதல் சுற்று ஆட்டங்களையும் Trinidad & Tobago தீவில் உள்ள Port of Spain'ன் Queen's Park Oval மைதானத்தில் விளையாட உள்ளது.




இது மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள பழமையான மைதானமாகும். அதிக டெஸ்ட் போட்டிகளை நடத்தியுள்ள பெருமையும் உடையது. 25,000 மக்கள் அமர்ந்து பார்க்கும் வசதியுடைய இம்மைதானம் இயற்கை அழகு கொஞ்சும் அழகான மைதானமாக கருதப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் ராசியான மைதானம் இது. இதுவரை இங்கு 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்தியா 3 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பெற்றுள்ளது. 1976ல் இங்கு நடந்த டெஸ்ட் போடியின் இறுதி நாளில் இந்தியா 406 ரன்கள் அடித்து வென்று சாதனை படைத்தது.

ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரையில் இந்தியா இங்கு 8 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது வருத்தமான விஷயம். இங்கு முதலாவதாக விளையாடி இந்தியா அடித்த அதிகபட்ச ஸ்கோர் 217 மட்டுமே என்பது அதைவிடவும் வருத்தமான விஷயம் இரண்டாவதாக விளையாடி இந்தியா அடித்த அதிகபட்ச ஸ்கோர் 236. மொத்தமாக இங்கு நடந்துள்ள 50 போட்டிகளில் 10 வீரர்கள் சதமடித்துள்ளனர். இதில் இந்தியர் யாரும் இல்லை. 16 பவுலர்கள் 4 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர்.
இதில் நான்கு பேர் சுழல்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

45.7% முதலில் ஆடியவர்கள் வெற்றி பெற்றுள்ளனர், 54.3% இரண்டாவதாக ஆடிய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஓவருக்கான சராசரி ரன்விகிதம் 4.69. ஒரு விக்கெட்டுக்கான சராசரி ரன் 29.44. பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்தியத்தீவுகள் ஒருமுறையும், இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்தியத்தீவுகள் ஒருமுறையும் ஆக இரண்டு முறை மட்டுமே 300 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள மைதானங்களிலேயே சுழற்பந்துக்கு அதிகம் உதவக்கூடிய மைதானமாக இது கருதப்படுகிறது. இலங்கையின் முரளிதரன் இந்திய அணியினருக்கு கடும் தலைவலியாக இருப்பார் என்றே தோன்றுகிறது. முதல் சுற்றில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

பதிவின் நீளம் கருதி, மீதம் அடுத்த பகுதியில்...


பி.கு. தட்டி தடவி நானும் 50 அடிச்சிட்டேங்க..இது எனது 50வது பதிவு!!





உலகக்கோப்பை பரிசுப்போட்டி விவரங்கள் இங்கே. வாங்க நீங்களும் ஆடி 100 டாலர் பரிசு வாங்குங்க.

34 comments:

Naufal MQ said...

தொடரட்டும் பணி!

Thillakan said...

50க்கு வாழ்த்துக்கள்!!!

"பக்க சார்பில்லாமல் புள்ளி விவரங்களுடன் நல்ல எழுதிறிங்கள்".

Team work ஐ பற்றி வாசிக்க வந்தன்,
நீங்கள் cupயே கொண்டு போட்டியள்.

நீங்கள் விருபியது நடக்கட்டும்

Thillakan said...

50க்கு வாழ்த்துக்கள் !!!!

"பக்க சார்பில்லமால் நேர்மைய புள்ளி விவரத்துடன் எழுதிறிங்கள் தொடரட்டும்"

team workக பற்றி வாசிக்க வந்தன்.
நீங்கள் கப்பைய வெண்டுட்டியள்.

நீங்கள் விரும்பும் அணி வெற்றி பெற வாழ்த்துகள்.
//திலகன்

மணிகண்டன் said...

வாந்த்துக்களுக்கு நன்றி திலகன்!

மணிகண்டன் said...

//team workக பற்றி வாசிக்க வந்தன்.
நீங்கள் கப்பைய வெண்டுட்டியள்.

நீங்கள் விரும்பும் அணி வெற்றி பெற வாழ்த்துகள்.
//

Team work பத்தி 3வது பகுதில எழுதியிருக்கேங்க.

நம்ம அணி எப்பவும் இந்தியா தான்!!

மணிகண்டன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி பவுலர்!

Mani said...

நல்ல அலசல் மணிகண்டன்.

தென்றல் said...

அரை சதத்துக்கு வாழ்த்துக்கள் !!!!

//
உதாரணமா இந்தியாவும், பங்களாதேஷும் சூப்பர் 8க்கு தகுதி பெற்றால், பங்களதேஷ் B1 எனவும் இந்தியா B2 எனவும் கருதப்படும். இலங்கையும் பங்களதெஷும் தகுதி பெற்றால் இலங்க B1 எனவும் பங்களாதேஷ் B2 எனவும் கருதப்படும்
//
ஓ! இது எனக்கு புதிய செய்தி!!

நல்ல விவரமான பதிவு!

மு.கார்த்திகேயன் said...

மணிகண்டன், செம்ம ஃபாஸ்ட் போல.. கிட்டதட்ட 35 பால்ல (நாள்ல ) 50 பதிவுகளா (ஓட்டங்களா)

வாழ்த்துக்கள் மணிகண்டன்.. மென்மேலும் வளர!

மணிகண்டன் said...

//அரை சதத்துக்கு வாழ்த்துக்கள் !!!!



நல்ல விவரமான பதிவு!

//
வாழ்த்துக்களுக்கு நன்றி வசந்தம்.




//
உதாரணமா இந்தியாவும், பங்களாதேஷும் சூப்பர் 8க்கு தகுதி பெற்றால், பங்களதேஷ் B1 எனவும் இந்தியா B2 எனவும் கருதப்படும். இலங்கையும் பங்களதெஷும் தகுதி பெற்றால் இலங்க B1 எனவும் பங்களாதேஷ் B2 எனவும் கருதப்படும்
//
ஓ! இது எனக்கு புதிய செய்தி!!//

ஆமாங்க, இத வச்சுதான் ஏப்ரல் 15 இந்தியா பாகிஸ்தான் போட்டினு போட்டது!

மணிகண்டன் said...

//மணிகண்டன், செம்ம ஃபாஸ்ட் போல.. கிட்டதட்ட 35 பால்ல (நாள்ல ) 50 பதிவுகளா (ஓட்டங்களா)

வாழ்த்துக்கள் மணிகண்டன்.. மென்மேலும் வளர!

//
வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்தி!
உங்களை மாதிரி கலக்கலா கதை,கவிதை,அனுபவம்னு யோசிச்சு எழுதினா இந்நேரம் 5 கூட தாண்டியிருக்க மாட்டேன் :)).

சும்மா அங்க இங்க நடக்கற கிரிக்கெட் நிகழ்வுகளை எழுதறதால சீக்கிரமா 50 அடிக்க முடிஞ்சிடுச்சு :)

மணிகண்டன் said...

//நல்ல அலசல் மணிகண்டன்.

//

நன்றி ஜெகன் மற்றும் வா.எல்லை

மணிகண்டன் said...

நெதர்லாந்துக்கு எதிரான் போட்டியில் இந்தியா ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள்

சிவபாலன் said...

மணிகண்டன்

இந்த செய்தியை பாருங்க..

ஆச்சர்யமும் அதிர்ச்சியும்..

எந்த அடிப்படையில் இவ்வாறு தரம் பிரித்தார்கள் என தெரியவில்லை

http://satrumun.blogspot.com/2007/03/blog-post_8360.html

மணிகண்டன் said...

அதிர்ச்சியும் ஆச்சரியமும் நிறைந்த தகவல் தான். நடப்பு ஒருநாள் தரவரிசைப்படி இந்தியா இலங்கைக்கு மேல இருக்கு. ஆனாலும் இந்தியா B2னு போட்டிருந்தப்பவே எல்லா தளங்களிலும் தேடினேன். இதற்கான சரியான காரணம் எங்கேயும் இல்ல. இப்ப இந்தியாவுக்கு 8வது இடம்னு பார்க்கும் பொழுது அதிர்ச்சியா இருக்கு.

மணிகண்டன் said...

கண்டிபிடிச்சுட்டேங்க..

இந்த பக்கத்துல இருக்க தகவலை கீழே Paste பண்ணியிருக்கேன் பாருங்க
http://www.ecb.co.uk/news/world/icc-table-provides-basis,3325,EN.html

//Australia, England, India and West Indies were pre-seeded into separate groups in July 2004 to ensure that transport, accommodation and other logistical issues in West Indies could be effectively managed.

Subject to this pre-seeding, the 11 teams with current one-day international status will be seeded in the four ICC Cricket World Cup groups according to their official position in the LG ICC ODI Championship on 1 April 2005.

//

அதன்படி 2005 ஏப்ரல் 1ம் தேதி பட்டியல் கீழே

ICC One-Day International Championship Table [ as at end of March 2005 ] Team Rating
1 Australia 140
2 Sri Lanka 117
3 New Zealand 116
4 Pakistan 109
5 South Africa 107
6 West Indies 105
7 England 103
8 India 98
9 Zimbabwe 50
10 Kenya 26
11 Bangladesh 11


இப்போ சரியா?

Syam said...

50 க்கு வாழ்த்துக்கள் மணிகண்டன்...சீக்கிரம் செஞ்சுரி அடிக்கவும் வாழ்த்துக்கள் :-)

மணிகண்டன் said...

வாழ்த்துகளுக்கு நன்றி நாட்டாமை!!

Thillakan said...

'லாட்' முறை எண்ட என்னங்க?

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், கிரிக்கெட் பத்தி மட்டுமே எழுதி இருக்கீங்க போல்.நான் முழுதும் படிக்கலை. கார்த்தி பதிவைப் பார்த்துட்டு வந்தேன். 50-க்கு வாழ்த்துக்கள்.

Bharani said...

Congrats Mani...Half adichum steady adareenga....vaazhthukal :)

மணிகண்டன் said...

//'லாட்' முறை எண்ட என்னங்க? //

ரெண்டு அணிகளோட பெயரையும் சீட்டு குலுக்கிப் போட்டு எடுப்பாங்க!

மணிகண்டன் said...

//ம்ம்ம்ம், கிரிக்கெட் பத்தி மட்டுமே எழுதி இருக்கீங்க போல்.நான் முழுதும் படிக்கலை. கார்த்தி பதிவைப் பார்த்துட்டு வந்தேன். 50-க்கு வாழ்த்துக்கள்.

//
வாங்க கீதா மேடம், சீக்கிரமே மத்த விஷயங்களையும் எழுத்றேன்.

வாழ்த்துக்களுக்கு நன்றி!

மணிகண்டன் said...

//Congrats Mani...Half adichum steady adareenga....vaazhthukal :)

//
நன்றி பரணி. நாங்கள்ளாம் ஃபுல் அடிச்சும் ஸ்யாடெடி இப்போரும்..

VSK said...

WI 62 for 8 in 18.1 overs
Pathan and MM Patel 3 wickets each and Agarkar and Zahir khan 1 wicket each!

Dhoni took 3 catches behind the wicket

Way to go India!.

Mani, Why no post on this?

மணிகண்டன் said...

SK ஐயா,

குடும்பத்டுடன் ஊர் சுற்ற கிளம்பிட்டேன்!

அதனால் அப்பப்ப நேரம் கிடைக்கும் பொழுது பின்னூட்டம் போட மட்டுமே முடியுது.இன்னைக்கும் பொட்டி தட்டினா வீட்டில விவாகரத்து பண்ணிடுவாங்க :)

VSK said...

Have a gala time!
India is going to win this one even without you!

41/1 in 11 overs!
:))

மணிகண்டன் said...

//India is going to win this one even without you!
//

SK ஐயா அதுக்குதான் நீங்கள்லாம் இருக்கீங்களே!!

செல்லி said...

நல்ல தகவல்கள்.
பகிர்ந்தமைக்கு நன்றி.தொடரட்டும் உங்க சேவை!

Anonymous said...

கைப்புள்ள இந்தியன் டீம் மேல நம்பிக்கை வச்சிருக்க அனைவருக்கும் நன்றி - டிராவிட்
(இன்னுமாட நம்புது ஊரு, இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளபடுத்துறாய்ங்க)

தல கைப்பு ரசிகர்கள்

மணிகண்டன் said...

நன்றி செல்லி,

தொடர்ந்து வாங்க!

சிறில் அலெக்ஸ் said...

மணி 50க்கு வாழ்த்துக்கள் கலக்குங்க.
:)

மணிகண்டன் said...

//கைப்புள்ள இந்தியன் டீம் மேல நம்பிக்கை வச்சிருக்க அனைவருக்கும் நன்றி - டிராவிட்
(இன்னுமாட நம்புது ஊரு, இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளபடுத்துறாய்ங்க)

தல கைப்பு ரசிகர்கள் //

பேரை சொல்லுங்க அனானி, இந்தியா ஜெயிச்சோன உங்களுக்கு சேதி சொல்லி விடறதுக்கு வசதியா இருக்கும்ல..

இன்னைக்கு நடந்த மேட்ச் பார்த்தீங்கள்ள??

மணிகண்டன் said...

//மணி 50க்கு வாழ்த்துக்கள் கலக்குங்க.
:)

//

வாழ்த்துக்களுக்கு நன்றி சிறில்!