Tuesday, March 6, 2007

நியூசிலாந்து பங்களாதேஷிடம் அதிர்ச்சி தோல்வி


'சற்றுமுன்'இல் வெளியான இப்பதிவு தமிழ்மணத்தில் தெரியாததால் மீண்டும் எனது பதிவில்..


இன்றைய பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணி, நியூஸிலாந்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த உலகக்கோப்பை, இம்முறை பயிற்சி ஆட்டங்களிலேயெ ஆச்சரியங்களை தர ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் தொடர்ந்து 3 முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, உலகக்கோப்பையை வெல்லும் என் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான நியூஸிலாந்து தோற்றிருப்பது ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியே!

மேலதிக விவரங்களுக்கு

10 comments:

Anonymous said...

அதுவும் இப்போதுதான் காயத்தால் ஏற்பட்ட ஓய்விலிருந்து அணிக்குத்திரும்பிய விளாசல் மன்னன் Oram 88 ஓட்டங்கள் எடுத்திருக்கிறார். ஆனால் இதில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடித்திருக்கிறார். என்றால் எதிர்த்தரப்புப் பந்துவீச்சைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

துளசி கோபால் said...

4 இல்லே 6 எல்லாம் அடிக்கமுடியாது.

தோல்வியின் சோகத்தில் ஒரு 'டக்'வேணுமுன்னா அடிச்சுட்டுப்போறேன்.

மணிகண்டன் said...

வாங்க அனானி,சரியா சொல்லியிருக்கிங்க. நியூஸிலாந்து மொத்தமா 7 பவுண்டரி தான் அடிச்சிருக்காங்க. பங்களாதேஷ் 19 பவுண்டரியும் 5 சிக்ஸும் அடிச்சிருக்காங்க.

ஆக இந்தியா முதல் சுற்றுல கொஞ்சம் கவனமா தான் ஆடனும் போல:)

மணிகண்டன் said...

//தோல்வியின் சோகத்தில் ஒரு 'டக்'வேணுமுன்னா அடிச்சுட்டுப்போறேன்.
//

வாங்க துளசி மேடம்.பயிற்சி போட்டிதான?

"தோல்வியின்றி வரலாறா
துக்கமென்ன என்தோழா"னு பாடலாமே :)

Mani said...

நியூசிலாந்துக்கு அதிர்ச்சியான தோல்வி தான்!

வடுவூர் குமார் said...

சும்மா விட்டுகொடுத்துட்டு,அப்புறம் தாக்கலாமே! என்ற எண்ணமோ!

Naufal MQ said...

http://bouncypitch.blogspot.com/2007/03/blog-post_06.html

மேலேயுள்ள தொடுப்பிற்கு இந்த தோல்விக்கும் தொடர்பிருக்குமோ?

கெளம்பிட்டாய்ங்கய்யா..கெளம்பிட்டாய்ங்க.. :)

மணிகண்டன் said...

//நியூசிலாந்துக்கு அதிர்ச்சியான தோல்வி தான்!

//
ஆமாங்க ஜெகன்

மணிகண்டன் said...

//சும்மா விட்டுகொடுத்துட்டு,அப்புறம் தாக்கலாமே! என்ற எண்ணமோ//

குமார், அப்படி விட்டுக்குடுக்கறதா இருந்த அடுத்த பயிற்சி போட்டில இலங்கை கிட்ட விட்டுக் குடுக்கலாமே. இப்படி பங்களாதெஷ் கிட்ட தோத்திருக்க வேணாம்:)

மணிகண்டன் said...

//http://bouncypitch.blogspot.com/2007/03/blog-post_06.html

மேலேயுள்ள தொடுப்பிற்கு இந்த தோல்விக்கும் தொடர்பிருக்குமோ?

கெளம்பிட்டாய்ங்கய்யா..கெளம்பிட்டாய்ங்க.. :)

//

இந்த முறை இ.வா பாகிஸ்தான் தாங்க.