Friday, March 9, 2007

இந்த ஆட்டம் போதுமா?? இன்னும் கொஞ்சம் வேணுமா?சிங்கத்தை அதோட குகையிலய வீழ்த்துறதுனு சொல்ற மாதிரி இன்னைக்கு மேற்கிந்தியத்தீவுகளை அவங்க நாட்டுலயே கிழிச்சு நாராக்கி, துவச்சு காயப்போட்டு, அடிச்சு அலம்பல் பண்ணிட்டாங்க நம்ம பசங்க. அவங்க ஒரு 200,250 ரன் அடிச்சு இந்தியா அதை சேஸ் பண்ணியிருந்தா கூட இவ்வளவு பெரிசா இருந்திருக்காது. 85 ரன்னுக்கு சுருட்டி அதை 18 ஓவர்ல அடிச்சது தான் கலக்கல். ஆஸ்திரேலியா மாதிரி அவங்க பெரிய அணியில்லைன்னாலும் அவங்க ஊருல இப்படி தோற்கடிச்சது இந்தியாவுக்கு பெரிய சாதனை தான்.

டாஸ் வின் பண்ணி மேற்கிந்திய அணி முதல்ல பேட் பண்ண ஆரம்பிச்சாங்க. முதல்ல இருந்தே கொஞ்சம் தடவல் தான். தொடக்க ஆட்டக்காரர்களா களம் இறங்கின சந்தர்பாலும், கேலும் சீக்கிரமே அவுட்டாயி ரெஸ்ட் எடுக்க போயிட்டாங்க. அதுக்கப்புறம் சர்வானும் லாராவும் கொஞ்ச நேரம் தாக்கு பிடிச்சாங்க. ஆனா அவங்களாலயும் நம்ம பவுலிங்குக்கு ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க முடியலை. ஸ்கோர் 53 இருந்தப்ப லாரா அவுட்டானாரு. அதுக்கப்புறம் எல்லாரும் மடமடனு மொத்தமா 85 ரன்னுக்கு அவுட். இந்தியாவோட பேட்டிங் தான் பலம், பவுலிங் பலவீனம் தான்னு எல்லாருமே சொல்றப்ப (என்னையும் சேர்த்து) இன்னைக்கு இந்தியாவோட பவுலிங் மிகத் தரமானதா இருந்தது. இந்த அளவு வேணாம்,இதுல 70% போட்டாலே போதும். இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருக்கு. இதே மாதிரி எல்லா பிட்சும் கைகொடுக்குமானு தெரியலை. முனாஃப் படேல் 6 ஓவர் போட்டு 10 ரன் குடுத்து 4 விக்கெட் வீழ்த்தினாரு. அடுத்து பதான் 3 விக்கெட் எடுத்தாரு. மொத்தத்துல எல்லாருமே நல்லா போட்டாங்கனு தான் சொல்லனும்.

இந்தியா சுலபமா ஜெயிக்கும்னு தெரியும். அதே மாதிரி சுலபமா 18.3 ஓவர்ல 1 விக்கெட் இழப்போட ஜெயிச்சாங்க. அவுட்டானவர் ஷேவாக். இவரோட எதிர்காலம் இப்போ பயங்கர கேள்விக்குறியா இருக்கு. திராவிட் சொன்னதால தான் அணியில சேர்த்தோம்னு வெங்க்சர்கர் வேற சொல்லி சூட்டை கிளப்பியிருக்காரு. இது திராவிடுக்கு கூடுதல் தலைவலி. ஷேவாகை இப்போ முக்கியமான போட்டில சேர்க்கறதா வேண்டாமனு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க திராவிட்டும் சாப்பலும். அதே மாதிரி சமீப போட்டிகள்ல தினேஷ் கார்த்திக்கை மூனாவதா இறக்கி சோதனை பண்றாங்க. இதெல்லாம் பார்க்கும் போது அநேகமா உலகக்கோப்பை போட்டிகள்ல கங்கூலியும் உத்தப்பாவும் ஓபன் பண்ணுவாங்க, கார்த்திக் மூனாவதா வருவாருன்னு நினைக்கிறேன். ஷேவாக்குக்கு இன்னும் 2 வாய்ப்பு இருக்கு. பங்களாதேஷ், பெர்முடா அணிகளுக்கு எதிரான முதல் ரெண்டு போட்டில அவருக்கு வாய்ப்பு குடுத்து பார்க்கலாம். அப்பவும் ஆடலைன்னா ரிடர்ன் டிக்கெட் எடுத்து குடுக்க வேண்டியது தான். இலங்கைக்கு எதிராகவோ , சூப்பர் 8லயோ அவர வச்சு பரிசோதனை பண்ண முடியாது. இந்த பயிற்சி போட்டிகள் அவருக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பு. வீனாக்கிட்டாரு. Best of Luck Sehwag.


ஷேவாக் அவுட்டானதும் உத்தப்பாவும், கார்த்திக்கும், நிதானமா கவனிச்சு அதே சமயத்தில அடிக்க வேண்டிய பந்துகளை அடிச்சு இந்தியா 18.3 ஓவர்ல ஜெயிக்க உதவினாங்க. கார்த்திக் 38 ரன்னும் உத்தப்பா 35 ரன்னும் எடுத்து அவுட்டாகாமா இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில ஜெயிக்க வச்சாங்க. ஆக மொத்தம் இது பயிற்சி ஆட்டம்னாலும், மத்த அணிகளுக்கு இது இந்தியா அடிச்ச எச்சரிக்கை மணி

Come On Boys, Keep Going

15 comments:

இலவசக்கொத்தனார் said...

இந்த ஆர்பாட்டத்தில் பசங்க நிஜம் போட்டிகளில் கோட்டை விட்டுடக் கூடாது. :)

Arunkumar said...

potu thaakitaanunga namma pasanga :)

neenga ella matcheskum time kedacha review ezhudunga Mani !!

சிவபாலன் said...

மணிகண்டன்

இன்றைக்கு நம்ம ஆளுங்க கலக்கிட்டாங்க.. என்ன கொஞ்சம் சேவாக் பார்மிற்கு வந்திருந்தால் நல்லாயிருந்திருக்கும்.. ஏனென்றால் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறமை படைத்தவர் சேவாக்...

ப்ரியன் said...

இந்தியா நன்றாக விளையாடியது என்பதை விட மே.தீவுகள் அணி மிக மிக மோசமாக விளையாடியது என்பதே தகும்.

நேற்றைய மேட்சை பொறுத்தவரை :

பதான் - லக்கி
அகர்கர்,கான் - அருமை
மு.படேல் - அபாரம்
சேவாக் - மட்டம்

மணிகண்டன் said...

//இந்த ஆர்பாட்டத்தில் பசங்க நிஜம் போட்டிகளில் கோட்டை விட்டுடக் கூடாது. :)

//

கவலைப்படாதீங்க கொத்ஸ், நம்ம பசங்க நிச்சயம் கலக்குவாங்க!

மணிகண்டன் said...

//potu thaakitaanunga namma pasanga :)

neenga ella matcheskum time kedacha review ezhudunga Mani !!

//

நிச்சயமா இரை பண்றேன் அருண், உங்க ஆதரவுக்கு நன்றி!

மணிகண்டன் said...

//இன்றைக்கு நம்ம ஆளுங்க கலக்கிட்டாங்க.. என்ன கொஞ்சம் சேவாக் பார்மிற்கு வந்திருந்தால் நல்லாயிருந்திருக்கும்.. ஏனென்றால் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறமை படைத்தவர் சேவாக்... //

வாங்க சி.பா, பதிவுல சொன்ன மாதிரி கெடைச்ச ரெண்டு வாய்ப்பை கோட்டை விட்டுட்டாரு. இன்னம் ரெண்டு வாய்ப்பு கிடைக்கும்னு நம்பறேன். அதுக்கப்புறம் அவரை ஆண்டவன் தான் காப்பாத்தனும். என்னைக் கேட்டா அவர கொஞ்சம் கீழ இறக்கி நின்னு ஆட வாய்ப்பு தரலாம். ஓபனிங் இறங்கி அடிச்சு ஆட முயற்சி பண்ணி சொற்ப ரன்னுக்கு அவுட்டாகறத விட அது கொஞ்சம் பலன் தரும்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க?

மணிகண்டன் said...

//நிச்சயமா இரை பண்றேன் அருண்//

நிச்சயமா ட்ரை பண்றேன் ..ஸ்பெல்லிங் மிஷ்டேக் :)

மணிகண்டன் said...

//இந்தியா நன்றாக விளையாடியது என்பதை விட மே.தீவுகள் அணி மிக மிக மோசமாக விளையாடியது என்பதே தகும்.

நேற்றைய மேட்சை பொறுத்தவரை :

பதான் - லக்கி
அகர்கர்,கான் - அருமை
மு.படேல் - அபாரம்
சேவாக் - மட்டம்

//

அப்படின்னும் ஒரேயடியா சொல்ல முடியாதேங்க ப்ரியன்.

//மு.படேல் - அபாரம்
சேவாக் - மட்டம்
//
இது 100% சரி!

மு.கார்த்திகேயன் said...

வாவ்! இன்பத் தேன் வந்து பாயுதே காதிலே..

மணி.. நீங்க சொல்றதை பார்த்த பசங்க கோப்பையோட வன்துடுவாங்க போல.. இருந்தாலும் வெயிட்டிங்

Avanthi said...

avanthikav@gmail.comஅண்ணா...

சூப்பரா விளையாடினாங்க...

உங்க பிளாக் நான் daily படிச்சுட்டு வர்ரேன்..ரொம்ப நல்லா இருக்கு... நானும் இன்னைக்கு ஒரு புது பிளாக் ஓபன் பண்ணி இருக்கேன்..எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்...

மணிகண்டன் said...

//மணி.. நீங்க சொல்றதை பார்த்த பசங்க கோப்பையோட வன்துடுவாங்க போல.. இருந்தாலும் வெயிட்டிங்
//

ஆமாங்க கார்த்தி, 28ம் தேதி நம்ம பசங்க கப் வாங்கப்போறாங்க பாருங்க!

மணிகண்டன் said...

//avanthikav@gmail.comஅண்ணா...

சூப்பரா விளையாடினாங்க...

உங்க பிளாக் நான் daily படிச்சுட்டு வர்ரேன்..ரொம்ப நல்லா இருக்கு... நானும் இன்னைக்கு ஒரு புது பிளாக் ஓபன் பண்ணி இருக்கேன்..எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்...

//

நன்றி அவந்தி, தங்கள் வரவு நல்வரவாகுக!

தம்பி said...

தல

நேத்துக்கு மேட்ச் பாக்க முடியாம போச்சு. நம்ம ஆளுங்க பட்டைய கெளப்புனத பாக்கலன்றதுதான் வருத்தமே.

மணிகண்டன் said...

//நேத்துக்கு மேட்ச் பாக்க முடியாம போச்சு. நம்ம ஆளுங்க பட்டைய கெளப்புனத பாக்கலன்றதுதான் வருத்தமே.
//

அதனால் என்னங்க தம்பி, பயிற்சி போட்டி தான. 17ம் தேதிலருந்து நிஜப்போட்டிகள்ள கலக்க போறதை மிஸ் பண்ணாம பாருங்க :) உங்க ஊரு நேரப்படி மாலை 4 மணிக்கு மேட்ச் ஆரம்பிக்குமா??