Thursday, March 8, 2007

மறக்க முடியுமா - 3

சச்சினின் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கோகோ கோலா கோப்பைக்காக 1998ஆம் ஆண்டு ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய கடைசி லீக் போட்டி ஆகும். இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பங்கேற்ற இத்தொடரில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இப்போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இந்தியா. தோல்வியுற்றாலும் மிகக்குறைந்த வித்தியாசத்தில் தோற்றால், சிறந்த ரன்ரேட் விகிதப்படி இறுதிப்போட்டிக்கு நுழையமுடியும்(இது தான் எப்பவும் நடக்கறதாச்சே :-D ) என்ற இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா களமிறங்கியது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணியனர் தொடக்கம் முதலே அடித்து விளையாடி 50 ஓவர்களில் 284 ரன்கள் குவித்தனர். மார்க் வாஹ் 81 ரன்களும் பெவன் 101 ரன்களும் அடித்தனர். அடுத்து களமிறங்கிய இந்திய அணி, அடித்து ஆடிய போதிலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. 138 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பொழுதும், சச்சின் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய அணியினரை துவம்சம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராமல் வீசிய மனற்புயலால் ஆட்டம் தடைப்பட்டது.

பின்பு ஆட்டம் துவங்கியபொழுது இந்தியாவிற்கு 46 ஓவர்களில் 276 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் 237 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கியது. அதன் பின் சச்சின் ஆடிய ஆட்டம் ஆஸ்திரேலியாவை மிரள வைத்தது. பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பந்து நாலாதிசையிலும் பறந்தது. சச்சின் 143 ரன்கள் எடுத்து (131 பந்துகள்,ஒன்பது 4,ஐந்து 6), தனியொருவராக இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உதவினார்.அன்று சச்சின் ஆடிய ஆட்டம் 'DesertStorm' என அனைவராலும் பாராட்டப்பட்டது. அவரது ரசிகர்களால் மறக்க முடியாத ஆட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

அந்த ஆட்டத்தை பார்த்து ரசிக்க..இதுபோன்ற சிறந்த ஒரு ஆட்டத்தை இந்த உலகக்கோப்பையில் சச்சின் மீண்டும் தருவார் என்று நம்புவோம்!!

22 comments:

சிவபாலன் said...

மணிகண்டன்

அசாரும் ஜடேஜாவும் வெளியேறிய பிறகு சச்சினின் ஆட்டம் அதிக சூடி பிடித்ததை நன்கு உணரமுடிந்தது..

சச்சின் இந்த உலக கோப்பையிலும் ஒரு மாபெரும் சக்தியாக இருப்பார் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை.. அதற்குகான அச்சாரம் முதல் பயிற்சி ஆட்டத்திலேயே போட்டுவிட்டார்

மணிகண்டன் said...

//அசாரும் ஜடேஜாவும் வெளியேறிய பிறகு சச்சினின் ஆட்டம் அதிக சூடி பிடித்ததை நன்கு உணரமுடிந்தது..
//
ஆமாங்க சி.பா. நிஜமாவெ வெறி வந்த மாதிரி ஆடுன ஆட்டம்.

//சச்சின் இந்த உலக கோப்பையிலும் ஒரு மாபெரும் சக்தியாக இருப்பார் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை.. அதற்குகான அச்சாரம் முதல் பயிற்சி ஆட்டத்திலேயே போட்டுவிட்டார்
//
எனது நம்பிக்கையும் அதே :)

நாமக்கல் சிபி said...

//வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க //

ஒரு 10 பேரு வந்து ஆளுக்கு 4 அடிச்சா பதிவு காணாம பூடுமே!

நாமக்கல் சிபி said...

////சச்சின் இந்த உலக கோப்பையிலும் ஒரு மாபெரும் சக்தியாக இருப்பார் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை.. அதற்குகான அச்சாரம் முதல் பயிற்சி ஆட்டத்திலேயே போட்டுவிட்டார்
//

இதையே நானும் வழிமொழிகிறேன்.
விரும்புகிறேன்!

எல்லா ஆட்டத்திலும் சச்சின் தலையிலயே பாரத்தை வைப்பது அவரது ஆட்டத்தை பாதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது!

மணிகண்டன் said...

//ஒரு 10 பேரு வந்து ஆளுக்கு 4 அடிச்சா பதிவு காணாம பூடுமே!
//

ஒவ்வொருத்தரையும் ஒரு 4 இல்ல 6 தானங்க அடிக்க சொல்லியிருக்கேன். ஆக 40 பேர் வந்து பின்னூட்டத்தில 4 இல்ல 6 எழுதலாமே :)

மணிகண்டன் said...

//எல்லா ஆட்டத்திலும் சச்சின் தலையிலயே பாரத்தை வைப்பது அவரது ஆட்டத்தை பாதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது!
//

இந்த தடவை திராவிட்டும் கங்கூலியும் கொஞ்சம் பாரத்தை சுமப்பாங்கன்னு நம்பறேன். ஷேவாக் பத்தி ஒன்னும் சொல்றதிக்கில்லை.

இலவசக்கொத்தனார் said...

அந்த நாளும் வந்திடாதோ!!

மணிகண்டன் said...

//அந்த நாளும் வந்திடாதோ!!

//

வாங்க கொத்ஸ்.

அந்த நாள் வரப்போகுது பாருங்க. இந்த போட்டிக்கு அடுத்து நடந்த ஃபைனல்ஸ்ல சச்சின் 134 ரன் அடிச்சு இந்தியா கப் ஜெயிக்க வச்சாரு. அது நடந்த தேதி ஏப்ரல் 24 1998. ஏப்ரல் 24 சச்சினோட பிறந்த நாள்!

இந்த உலகக்கோப்பைல இந்தியா நல்லா விளையாடி சூப்பர் 8ல இரண்டாவதோ மூனாவதோ வந்தா நமக்கு செமி-ஃபைனல்ஸ் நடக்க போற தேதி ஏப்ரல் 24 !!!

எப்படி கணக்கு? கூட்டி கழிச்சு பாருங்க சரியா வரும் :)

சீனு said...

//அப்பொழுது எதிர்பாராமல் வீசிய மனற்புயலால் ஆட்டம் தடைப்பட்டது.//

அட! அப்போ கூட மற்ற வீரர்கள் உடம்பை வளைத்து கீழே படுத்துக் கொண்டார்கள். ஆனால், தல மட்டும் அந்த புயலுக்கு முகம் கொடுக்காமல், ஒற்றை காலை மடக்கி, மட்டையை ஊன்றி கொண்டு மறு திசை பார்த்துக் கொண்டிருந்தார், தெரியுமா?

//இதுபோன்ற சிறந்த ஒரு ஆட்டத்தை இந்த உலகக்கோப்பையில் சச்சின் மீண்டும் தருவார் என்று நம்புவோம்!!//

உங்களுக்கு தெரியுமா? சச்சின் என்ன தான் ஃபார்மில் இல்லையென்றாலும், ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் சாதிப்பான். ஒரே வருத்தம், சச்சின் இருந்து எந்த உலகக் கோப்பையையும் இந்தியா வாங்கவில்லை என்பது.இதற்கு நிச்சயம் சச்சின் காரணம் இல்லை. இப்படி ஒரு ஆட்டக்காரரை வைத்து கொண்டும் உலகக் கோப்பௌ வாங்கவில்லை என்பது நம் அணிக்கு தான் அவமானம்.

சச்சினை பற்றின என் பதிவு இங்கே.

//ஒரு 10 பேரு வந்து ஆளுக்கு 4 அடிச்சா பதிவு காணாம பூடுமே!//

யாருப்பா அது மேத்தமெட்டீஷியன்...4 X 10 எல்லாம் போயிடுச்சு போல. உஷாவோட 50+ஏ தெரிஞ்சுதே...

மணிகண்டன் said...

வாங்க சீனு,

//ஒரே வருத்தம், சச்சின் இருந்து எந்த உலகக் கோப்பையையும் இந்தியா வாங்கவில்லை என்பது//

நெஜமாவே இது வருத்தப்பட வேண்டிய விஷ்யம். இதை என்னோட "வெல்லுமா இப்படை -1" பதிவுலயும் எழுதியிருக்கேன்.

உங்க பதிவு ரொம்ப நல்லா இருந்தது.குறிப்பா கடைசில எழுதியிருந்த கீழுள்ள வரிகள்..

//சுருங்கச் சொன்னால், லாராவின் back lift power, டிராவிட்டின் style, கில்கிறிஸ்ட்டின் consistent, க்ளூஸ்ணரின் அதிரடி, ஒரு mathematician-ன் முடிவெடுக்கும் திறன், மெக் கிராத் - வாசிம் அக்ரமின் துல்லியம், கங்குலியின் sixer, ஷாட்டை அழகாக முடிக்கும் அந்த perfection, தாமஸ் ஆல்வா எடிசனின் அர்ப்பனிப்பு, ஷாஜகானின் காதல், பாலே நடனக்காரரின் foot work, ஹன்சி கிரோனியேவின் பெருந்தண்மை ஆகியவையின் கலவை தான் சச்சின். சும்மாவா சொல்வோம், "If Cricket is our religion, then Sachin is our GOD"-னு.//

Arunkumar said...

//
இதுபோன்ற சிறந்த ஒரு ஆட்டத்தை இந்த உலகக்கோப்பையில் சச்சின் மீண்டும் தருவார் என்று நம்புவோம்!!
//
கண்டிப்பா தருவாரு மணி.
நான் அதுக்கு தான் வெய்ட்டிங் !!!

அம்பதுக்கு வாழ்த்துக்கள் மணி :-)

மணிகண்டன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி அருண்!

////
இதுபோன்ற சிறந்த ஒரு ஆட்டத்தை இந்த உலகக்கோப்பையில் சச்சின் மீண்டும் தருவார் என்று நம்புவோம்!!
//
கண்டிப்பா தருவாரு மணி.
நான் அதுக்கு தான் வெய்ட்டிங் !!!
//

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாரோட ஆசையும் அதுதாங்க!!

ஜெகன் said...

////
இதுபோன்ற சிறந்த ஒரு ஆட்டத்தை இந்த உலகக்கோப்பையில் சச்சின் மீண்டும் தருவார் என்று நம்புவோம்!!
//
உங்க நம்பிக்கை வீண்போகாதுங்க !

வசந்தம் said...

சச்சின் பின்னி எடுக்கிறாரு-ங்க!
இந்த மாதிரி சச்சின் ஆட்டத்த பார்த்து எவ்வளவு நாள் ஆச்சிங்க !!

ரொம்ப நன்றி, மணிகண்டன்!

சரிங்க ... இந்த போட்டியில யாருங்க ஜெயிச்சதது...?

மணிகண்டன் said...

நன்றி ஜெகன்

மணிகண்டன் said...

//சரிங்க ... இந்த போட்டியில யாருங்க ஜெயிச்சதது...?
//

வாங்க வசந்தம்..இந்த போட்டில ஆஸ்திரேலியா 26 ரன் வித்டியாசத்தில ஜெயிச்சாங்க. இருந்தாலும் சிறந்த னெட் ரன்ரேட் மூலமா நியூசிலாந்து பின்னால தள்ளிட்டு இந்தியா இறுதிப்போட்டிக்கு போச்சு.அதில ஆஸ்திரேலியாவ ஜெயிச்சு கப்பும் வாங்கினாங்க. அதுலயும் சச்சின் 134 ரன் அடிச்சாரு!

Anonymous said...

That Desert Storm match was just a replica of the exibition match he played against Pak in his debut series under Srikanth. i still can remember that one particular over from Mushtaq cost him 23 runs. IF crik is religion ... - 100% true!!!

மணிகண்டன் said...

//That Desert Storm match was just a replica of the exibition match he played against Pak in his debut series under Srikanth. i still can remember that one particular over from Mushtaq cost him 23 runs. IF crik is religion ... - 100% true!!!

//

ஆமாம் அனானி, அந்த போட்டிக்கு முன்னால பாகிஸ்தான் ரசிகர்கள் அவரை "பால் குடிக்க போகலையானு" கிண்டல் பண்ணாங்க. அதுக்கு சரியான் பதிலடியை தனது ஆட்டத்தால குடுத்தார்!

தென்றல் said...

//
அதில ஆஸ்திரேலியாவ ஜெயிச்சு கப்பும் வாங்கினாங்க. அதுலயும் சச்சின் 134 ரன் அடிச்சாரு!
//

சச்சின் ஒரு level-ஆ தான் இருந்திருக்காரு-னு சொல்லுங்க...

~ தென்றல் ("முன்னால் வசந்தம்")

மணிகண்டன் said...

தென்றலாக வந்த வசந்தமே!

சச்சின் அப்ப உச்சத்துல இருந்தாருங்க!

Avanthi said...

அண்ணா..இது தான் சச்சினின் second highest...wooww...what a play it was..i saw this a few days back only..

Anna your blog is very nice

மணிகண்டன் said...

//அண்ணா..இது தான் சச்சினின் second highest...wooww...what a play it was..i saw this a few days back only..

Anna your blog is very nice

//

வாங்க அவந்தி, ரொம்ப நன்றி. அடிக்கடி வாங்க :)