Tuesday, March 6, 2007

இந்தியா 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


இன்று நடந்த பயிற்சி போட்டியில் இந்தியா நெதர்லாந்தை 182 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.





டாஸில் ஜெயித்த நெதர்லாந்ந்து இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஷேவாக்கும் கங்கூலியும் தொடக்க ஆட்டக்கரார்களாக களமிறங்கினர்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 300 ரன்கள் அடித்தது. கேப்டன் திராவிட் 92 பந்துகளில் 74 ரன்கள் அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இவருக்கு அடுத்தபடியாக சச்சின் 59 பந்துகளில் 61 ரன்கள் அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். அடுத்தபடியாக 33 உதிரிகளே ! வேறு யாரும் 30 ரன்களை தாண்டவில்லை.





ஸ்ரீசாந்தும், முனாஃப் படேலும் பேட்டிங் செய்யவில்லை எனினும் பயிற்சி போட்டிகளின் சிறப்பு விதிகளின்படி பந்து வீச அனுமதிக்கப்பட்டனர்.118 ரன்களில் நெதர்லாந்து அணியினரின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி, 182 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சுலபமாக வென்றது. யுவராஜ் சிங் 12 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

முழு ஸ்கோர் விவரம்


மார்ச் 8ம் தேதி அடுத்த பயிற்சி போட்டியில் இந்தியா மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் மோதுகிறது.

7 comments:

மணிகண்டன் said...

//மார்ச் 8ம் தேதி அடுத்த பயிற்சி போட்டியில் இந்தியா மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் மோதுகிறது.//

சிறு திருத்தம். இப்போட்டி மார்ச் 9ம் தேதி நடைபெறுகிறது.

Mani said...

இந்திய அணி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

வடுவூர் குமார் said...

நெதர்லாந்தில் இன்று "தேசிய விடுமுறையா?"

மணிகண்டன் said...

//இந்திய அணி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

//
நன்றி ஜெகன்

மணிகண்டன் said...

//நெதர்லாந்தில் இன்று "தேசிய விடுமுறையா?" //

வாங்க குமர். என்ன சொல்ல வறிங்கன்னு புரியலையே?

கார்த்திக் பிரபு said...

come on india

மணிகண்டன் said...

வாங்க கார்த்திக்

Ramesh Powar interview என்னாச்சு?