இப்படை தோற்கின் எப்படை வெல்லும், சென்று வருக வென்று வருக, GOOD LUCK INDIAன்னு எல்லாரும் விதவிதமா வாழ்த்தி நம்ம பசங்களை வழியனுப்பி வச்சுட்டோம். நம்ம பசங்க கோப்பையோட வருவாங்களா இல்ல வெறுங்கையோட வருவாங்களானு பார்ப்போம்.
இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம், முந்தைய கோப்பைகளில் இந்தியாவின் வெற்றிகள், இந்த கோப்பைல இந்தியாவோட வெற்றி வாய்ப்புனு பலதையும் அலசவே இப்பதிவு. 4 இல்ல 5 பகுதியா வரும்.
முதல் பகுதில இந்திய அணியோட பலம் மற்றும் பலவீனத்தை பார்க்கலாம். இது முழுக்க, முழுக்க என்னோட கருத்து. இதுல எதிர்கருத்து இருக்கறவங்க தாராளமா பின்னூட்டத்தில துப்பிட்டு போங்க. எதையும் தாங்கும் இதயமும் முகமும் எங்கிட்ட இருக்கு :))
இப்போன்னு இல்லாம பலகாலமா (குறிப்பா சச்சின் காலத்துல இருந்து) இந்தியாவோட பலம் பேட்டிங் தான். அதுவும் இந்த தடவை உலகக்கோப்பை போற அணியில பேட்டிங்க் வரிசை ரொம்ப பலமா இருக்கு. சச்சின்,திராவிட்,கங்கூலி, யுவராஜ் சிங்,டோனி, ஷேவாக், உத்தப்பா,கார்த்திக்னு வரிசையா ஆட்டக்காரர்கள்.
சச்சின் கடந்த உலகக்கோப்பைகள் மாதிரி இந்த தடவையும் கலக்கினார்னா இந்தியாவுக்கு யானை பலம். ஆனா இவரோட ஃபிட்னஸ் தான் அப்பப்ப கால வாரி விடுது.அதுவுமில்லாம கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் விளையாடின தளர்ச்சியும் தெரியுது. இதுதான் இவர் ஆடர கடைசி உலகக்கோப்பையா இருக்கும். இன்னமும் இவர மட்டும் நம்பாம மத்தவங்களும் கொஞ்சம் பாரத்தை சுமந்தா நல்லாயிருக்கும். சமீபகால போட்டிகள்ல இவர் சீக்கிரம் அவுட்டாகியும் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், இவர் அவுட்டான உடனே அவ்வளவு தாண்டா இந்தியா, எல்லாரும் வரிசையா அவுட்டாகப் போறங்கன்னு எல்லாரோட(இல்லன்ன என் மனசில) மனசிலயும் தோணறது நெஜம். எல்லாராலயும் பாரட்டப்பெற்றவர், 10 பதிவு போட்டாலும் எழுதமுடியாத அளவுக்கு சாதனைகள் செஞ்சவர், தன் கிரிக்கெட் வாழ்க்கைல இந்தியா உலகக்கோப்பையை ஜெயிக்கறத பார்க்காம போனா மிகவும் வருந்தவேண்டிய விஷயம். அதுக்காகவாவது இவர் இந்த தடவை நமக்கு உலகக்கோப்பையை வாங்கித் தருவாருன்னு நம்புவோம். COME ON,SACHIN.
இவருக்கு அடுத்து 'தாதா'கங்கூலி. எனக்கு மிகவும் பிடித்தவர்கள்ல ஒருத்தர். விடாமுயற்சி, நம்பிக்கை வெற்றி தரும்னு ரெண்டு தடவை நிருபிச்சவரு. முதல்முதலா ஆஸ்திரேலியாவுக்கு எதிரா 1991ல் ஒரெஒரு ஒருநாள் போட்டில விளையாடினாரு. அதுக்கப்புறம் தேர்வுக்குழுவோட வழக்கமான கூத்தால கழட்டி விடப்பட்டார். அதுக்கப்புரம் 1996-97 இந்கிலாந்துக்கு எதிரா மறுபடியும் விளையாடி முதல் டெஸ்ட்லய 100 அடிச்சு அணியில நிரந்தரமா இடம்பிடிச்சாரு. திரும்பவும் அக்டோபர் 2005ல மோசமான பேட்டிங் காரணமா நீக்கப்பட்டாரு. இப்போ மறுபடியும் லோக்கல் போட்டிகள்ல தன் திறமைய நிருபிச்சு அணிக்குள்ள வந்தாரு. இலங்கக்கு எதிரான தொடரில ஆட்டநாயகன் விருதையும் வாங்கி அசத்துனாரு. இப்போ இருக்கற ஃபார்ம் உலகக்கோப்பைலயும் தொடர்ந்தா நமக்கு நல்ல வாய்ப்பு இருக்கு. முன்னமாதிரி விலகிப்போற பந்தை அடிக்க முயற்சிக்காம, கொஞ்சம் பொறுமையா கட்டுப்பாட்டோட ஆடர மாதிரி தோனுது. இந்த தடவை இவர் கண்டிப்பா நல்ல ஆடுவாரு, ஆடனும், ஏன்னா திரும்ப அணிக்குள்ள வரது நடக்காத காரியம். நீளம் குறைவா தோளளவுக்கு எழும்பி வர பந்துகள் தான் இந்தியா பேட்ஸ்மென்களுக்கு எப்பவுமே எதிரி. அதுபோன்ற பந்துகலையும் சிறப்பா ஆட பயிற்சி எடுத்துகிட்டாருன்னா ஏப்ரல் 29ம் தேதி 'இந்தியா உலகக்கோப்பையை வென்றது'னு பதிவ போட்டுடலாம்.
அடுத்து வருவது நம்ம 'WALL' திராவிட். உலகளவுல டெக்னிகலி சிறந்த பேட்ஸ்மென்கள்ல இவர் ஒருத்தர். கங்கூலியும் இவரும் ஒன்னா அறிமுகமானங்க. ரெண்டு பேரும் கலக்கிட்டு இருக்காங்க. ஒருநாள் போட்டிக்கெல்லாம் இவரு லாயக்கில்லை, டெஸ்டுக்கு தான் சரின்னும் பலரும் சொன்னப்ப அதை உடைச்சு தன்னால் ஒருநாள் போட்டிலயும் சாதிக்க முடியும்னு நிருபிச்சாரு. இவர் மிடில் ஆர்டர்ல ஆடறது அணிக்கு ஒரு ஸ்திரத்தன்மைய தரும். முதல் 15 ஓவர் அடிச்சு ஆடனப்புரம் பொறுமையா அதே சமயம் சரியான அளவு ரன்களும் சேகரிக்க இவர் மாதிரி ஆளுங்க தேவை. தேவைப்பட்டா அடிச்சும் ஆடறது இவரோட பெரிய பலம். கடந்த தொடரில 10,000 ரன்னை கடந்து சாதனை பண்ணாரு. உலகளவுல 10,000 ரன்கள் அடிச்ச ஆறு பேரில மூனு பேர்(சச்சின், கங்கூலி, திராவிட்) நம்ம அணில இருக்கறதே நம்ம அணியோட பேட்டிங் திறமைக்கு சாட்சி. இருந்தாலும் எல்லாரும் ஒரு அணியா சேர்ந்து விளையாடினால் தான் வெற்றிபெற முடியுங்கறதுக்கும் நம்ம அணியே சாட்சி :)).
ஏனோ அடிக்கடி சித்து வர்ணனைல சொன்னதா எங்கேயோ படிச்சது ஞாபகத்துக்கு வருது. இந்திய அணி சைக்கிள் ஸ்டாண்ட் மாதிரி.ஒரு சைக்கிள் விழுந்தா வரிசையா எல்லா சைக்கிளும் விழுந்துடும். அந்த மாதிரி நெறைய தடவை நடந்தும் இருக்கு.அந்த மாதிரி இல்லாம எல்லாரும் ஒரு 30 இல்ல 40 அடிச்சாலே போதும். மீதிய பவுலர்கள் பாத்துக்குவாங்க.
அடுத்து ஷேவாக். ஆரம்ப காலங்கள்ல தன்னோட அதிரடி ஆட்டத்தால சச்சின் அளவுக்கு பரபரப்பா பேசப்பட்டவர். அதிரடி மட்டும் பத்தாது கொஞ்சம் புத்திசாலித்தனமும் வேணும்னு கொஞ்ச நாள்ல புரிஞ்சிகிட்டாரு. சச்சினும், கங்கூலியும், திராவிட்டும் நல்லா ஆடும் பட்சத்துல இவர் அதிரடியா ஆடினாலெ போதும். இவரும் உத்தப்பாவும் சேர்ந்து 15 ஓவர்ல ஒரு 90 இல்ல 100 ரன் அடிச்சுக் குடுத்தாங்கன்னா அணிக்கு பெரிய பலமா இருக்கும். சமீபகாலமா இவர் ஃபார்மில இல்லாதது கவலையான விஷயம். அனுபவமிக்கவர், தடபுடானு ஒரு 20 பந்துல 40 ரன் அடிச்சாலும் உபயோகமா இருக்கும் போன்ற காரணங்களால இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்குன்னு நினைக்கிறேன். செய்வாரா ஷேவாக் ??
பதிவோட நீளம் கருதி மீதி அடுத்த பாகத்துல..
உலகக்கோப்பை பரிசுப்போட்டி விவரங்கள் இங்கே. வாங்க நீங்களும் ஆடி 100 டாலர் பரிசு வாங்குங்க.
பி.கு. கேக்காம படத்தை சுட்டதுக்கு சிவபாலன் மன்னிக்கவும்
Thursday, March 1, 2007
வெல்லுமா இப்படை - 1 ???
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 2:32 PM
Labels: அலசல், இந்தியா, உலகக்கோப்பை, கிரிக்கெட்
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
நல்ல அலசல் மணிகண்டன். நான் வீட்ல போயி நீங்க எப்படி இந்திய அணியின் பலத்தையும் பலவீனத்தையும் அலசி, துவச்சு காயப்போட்டுருக்கீங்கன்னு படிக்கிறேன்..
சும்மா உள்ளேன் ஐயான்னு சொல்லிட்டு போக வந்தேன் மணிகண்டன்
வாங்க கார்த்தி. சீக்கிரமா வந்து துப்பிட்டு போங்க :)
மணிகண்டன்
நானும் படத்தை தினகரனில் இருந்து சுட்டதுதான்.. அதனால் அது பிரச்சனையே இல்லை.. :))
நல்ல அலசல்.
பொதுவா, சச்சின் உலக கோப்பை நன்றாக விளையாடக் கூடியவர். போன உலக கோப்பையின் போது கூட அவர் பெரிய பார்மில் இல்லை. இருந்தாலும் போட்டியில் நன்றாக விளையாடினார். நிச்சயம் அவர் மிகப் பெரிய பிளஸ்.
பேட்டிங் நம்மிடம் நன்றாக உள்ளது. பவுலிங் & பிஃல்டிங் தான் கை கொடுக்கனும்..
செய் அல்லது செத்துமடி... நிச்சயம் கோப்பையுடன் நமது அணி வரும் என நம்புவோமாக..
தொடருங்க.. நல்ல பதிவு!
//பேட்டிங் நம்மிடம் நன்றாக உள்ளது. பவுலிங் & பிஃல்டிங் தான் கை கொடுக்கனும்//
அதை பத்தி தாங்க அடுத்த ரெண்டு பதிவுல எழுதப்போறேன். படிச்சுட்டு சொல்லுங்க.
//செய் அல்லது செத்துமடி... நிச்சயம் கோப்பையுடன் நமது அணி வரும் என நம்புவோமாக..
//
போனதடவையே ஒருமேட்ச் தோத்த உடனே எல்லார் வீட்டுக்கும் கல் பறந்தது. இந்த தடவை தோத்தா சங்குதான் :)
மணிகண்டன்,
பதிவ அழகா மறுவடிவமைப்பு செஞ்சிருக்கீங்க.. ரெம்ப நல்லாயிருக்கு.
இதுக்கு ஒரு 6.
:)
வாங்க சிறில். அப்படியே பதிவை பத்தின உங்க விமர்சனத்தையும் சொன்னா நல்லாயிருக்கும்.
நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்!
பேரை சொல்லியே வாழ்த்தலாமே அனானி!
வருகைக்கு நன்றி வா.எல்லை
nalla iruku continue pannuga ..inum specific a eluduhnga niraya thagavlagalai segartiththu eluthunga ..inaraya anadha vikatan parunga nallla eludhi irupaanga world cup pathi..
thodarndhu padikirane ..mm thirumbi parkama odditu irunga
ரொம்ப நன்றி கார்த்திக் பிரபு.இன்னும் நல்லா எழுத முயற்சி பண்றேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
//mm thirumbi parkama odditu irunga
//என்ன சொல்லவறிங்கன்னு புரியல.
//inum specific a eluduhnga niraya thagavlagalai segartiththu eluthunga//
எழுதலாங்க. ஆனா பதிவோட நீளம் கருதி சுருக்க வேண்டியதா இருக்கு. இதுக்கெ யாரும் வரமாட்டேங்கிறாங்க:)
இந்திய அணியியை ஒவ்வொருவராக
ஆரய்ந்தால் எல்லாம் இருக்கு!!!
"TEAM WORK" ????
kaif இல்லதது சின்ன கவலை.
எனக்கு பிடிச்ச ஒரு Player.
எழுதலாங்க. ஆனா பதிவோட நீளம் கருதி சுருக்க வேண்டியதா இருக்கு. இதுக்கெ யாரும் வரமாட்டேங்கிறாங்க:)
March 1, 2007 11:11 PM
//
try pannnunga nalal hit agum
//இதுக்கெ யாரும் வரமாட்டேங்கிறாங்க:) //
இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க தல..நாங்கள்லாம் இருக்கோம்ல பர்ட்னர்ஷிப்புக்கு ..
சும்மா அடிச்சு தூள் கிளப்புங்க..
100 கோடி இந்தியனில் 10 கோடிக்கு மேல் கோப்பையும், தட்டுமாக
தண்ணீருக்கும் உணவுக்குமாக தெருத் தெருவாக கையேந்துகின்றான்.
நீங்க என்னன்டா ஒரு உலகக் கோப்பைக்கு இந்தக் குதி குதிக்கீறிங்க.
வெள்ளைக்காரன் பட்டினியை ஒழிச்சிட்டுத்தான் உலகக் கோப்பைக்கு ஓடுறான். ஒரு நாள் பட்டினி கிடந்தா சொல்லுறது புரியும் கண்ணா.
புள்ளிராஜா
//100 கோடி இந்தியனில் 10 கோடிக்கு மேல் கோப்பையும், தட்டுமாக
தண்ணீருக்கும் உணவுக்குமாக தெருத் தெருவாக கையேந்துகின்றான்.
நீங்க என்னன்டா ஒரு உலகக் கோப்பைக்கு இந்தக் குதி குதிக்கீறிங்க.
வெள்ளைக்காரன் பட்டினியை ஒழிச்சிட்டுத்தான் உலகக் கோப்பைக்கு ஓடுறான். ஒரு நாள் பட்டினி கிடந்தா சொல்லுறது புரியும் கண்ணா.
புள்ளிராஜா
//
வாங்க புள்ளிராஜா, நீங்க படற ஆதங்கத்தை ஒத்துக்கறேன். நாங்க அதுக்காக ஒன்னும் செய்யலை தான். இவ்வளவு கவலைப்படற நீங்க அவங்களுக்காக ஏதாவது செய்யாம ஏன் வெட்டியா இங்கே வந்து பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்கீங்க.
//வெள்ளைக்காரன் பட்டினியை ஒழிச்சிட்டுத்தான் உலகக் கோப்பைக்கு ஓடுறான்//
அப்படின்னு எப்படி சொல்றீங்க. எல்லா ஊரிலயும்,நாட்டுலயும் பசி,பட்டினி,வறுமை வன்முறை எல்லாம் இருக்கு. அதுக்காக எதுவும் நடக்காம இல்லை.நடந்துகிட்டு தான் இருக்கு. சுனாமி, குஜராத் நிலநடுக்கம் மாதிரி எவ்வளவோ விஷயங்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் விளையாடி நிதி திரட்டியும் தந்திருக்காங்க. அதையும் பாருங்க!
I STRONGLY WISH FOR WHICH I FAINTLY HOPE!
[JOHN DRYDEN]
//I STRONGLY WISH FOR WHICH I FAINTLY HOPE!
//
நல்ல கமெண்ட் SK ஐயா! வெல்வார்கள் என நம்புவோம். நம்பிக்கை தான வாழ்க்கை!
//இந்திய அணியியை ஒவ்வொருவராக
ஆரய்ந்தால் எல்லாம் இருக்கு!!!
"TEAM WORK" ????
kaif இல்லதது சின்ன கவலை.
எனக்கு பிடிச்ச ஒரு Player.
//
நீங்க சொல்றது சரி திலகன். "Team Work" பத்தி அடுத்த பதிவுல எழுதலாம்னு இருக்கேன்.
//try pannnunga nalal hit agum //
ட்ரை பண்றேன் அடுத்த பதிவுல!
//இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க தல..நாங்கள்லாம் இருக்கோம்ல பர்ட்னர்ஷிப்புக்கு ..
சும்மா அடிச்சு தூள் கிளப்புங்க..
//
வாங்க அபுல். உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி!!!
//kaif இல்லதது சின்ன கவலை.
எனக்கு பிடிச்ச ஒரு Player.
//
kaif,sehwag ரெண்டு பேருமே ஃபார்ம்ல இல்ல. ஷேவாகோட கடந்த கால சாதனைகள் மர்றும் அனுபவம் காரணமா அணியில இடம் பிடிச்சுட்டாருன்னு நினைக்கிறேன். கைஃப் நல்ல ஃபீல்டரும் கூட. அந்த வகையில அவர் இல்லாதது வருத்தம் தான்.
//இவரும்(சேவாக்) உத்தப்பாவும் சேர்ந்து 15 ஓவர்ல ஒரு 90 இல்ல 100 ரன் அடிச்சுக் குடுத்தாங்கன்னா அணிக்கு பெரிய பலமா இருக்கும்
//
ரெண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தர் தான் ஓபனிங் வருவாங்க. 'தல'யை மறந்துட்டு பேசாதீங்கண்ணா. :)
//ரெண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தர் தான் ஓபனிங் வருவாங்க. 'தல'யை மறந்துட்டு பேசாதீங்கண்ணா. :)
//
மறக்கலைங்க பவுலர். ரெண்டாவது பகுதில அதைப்பத்தி எழுதியிருக்கேன் பாருங்க.
vanakkam nanbaa!
Tamizmanam.com moolam ungal blog ai paarthen.. miga nanraaga ullathu..
enakkum ippadi tamilil oru blog thodanga aasai.. eppadi tamil ezhuthukkalai eluvathu endru teriyavillai..
ungalukku siramam illai enil enakku udhavi seyyungal..
enakku intha id il mail anuppavum
logyindian@hotmail.com
siramathirkku mannikavum..
Nanri!
Post a Comment