Sunday, February 25, 2007

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-பங்களாதேஷ்


என்னங்க நம்ப முடியலையா? ஆனா இது கண்டிப்பா நடக்கப்போகுதுன்றாரு ஒரு கிரிக்கெட் ரசிகர்.எப்படின்னு காரணத்தையும் அவரே சொல்றாரு பாருங்க

1996 உலகக்கோப்பை ஃபைனல்ல ஆஸ்திரேலியாவும் இலங்கயும் மோதினாங்க.அதுல இலங்கை ஜெயிச்சு கப்பையும் வின் பண்ணாங்க. அதுக்கடுத்து 1999 ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் விளையாடி ஆஸ்திரேலியா வின் பண்ணாங்க.போன உலகக்கோப்பை இருதி ஆட்டத்துல ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஆடுனாங்க. இதெல்லாம் தெரிஞ்ச விஷயந்தான்.ஆக கடைசி மூணு இறுதி ஆட்டத்திலயும் ஆஸியும் தெற்காசிய அணி ஒன்னும் தான் மோதியிருக்கு.அதுபடி பாக்கியிருக்கற தெற்காசிய அணி பங்களாதேஷ் தான். அதனால இந்த தடவை இறுதி ஆட்டத்தில இந்த ரெண்டு அணியும் தான் ஆடப்போகுதுன்னு சொல்றாரு. யாரு ஜெயிப்பாங்கன்னு சொல்லலை :))

இந்த காரணம் மட்டுமில்லாம் இன்னொரு காரணமும் சொல்றாரு இங்கே

ஆளாளுக்கு அவங்க யூகத்த சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நீங்களும் இங்கே வந்து சொல்லிட்டு போங்க!!

15 comments:

Naufal MQ said...

உமக்கே இது நல்லாயிருக்கா?

மணிகண்டன் said...

//உமக்கே இது நல்லாயிருக்கா? //

என்னங்க பவுலர், யாரோ சொன்னத நான் எழுதியிருக்கேங்க அவ்ளவுதான். ந்மக்கு இந்தியா ஜெயிக்கனும் அவ்வளவுதான்:))

மு.கார்த்திகேயன் said...

மணிகண்டன், உங்களுக்கே இதெல்லாம் நல்லா இருக்கா.. இப்படி வயிற்றில புளியை கரைக்கிறீங்களே..

மணிகண்டன் said...

கார்த்தி,

இது ஒரு மாசத்துக்கு முன்னால போட்ட பதிவு. அப்ப ஒரு காமெடிக்காக போட்டேன். இப்போ காமெடி ட்ராஜடி ஆயிடுச்சு :(

Boston Bala said...

இப்பொழுதுதான் படித்தேன் :)

சிவபாலன் said...

மணி

நகைச்சுவை என வகைப்படுத்தியிருக்க வேண்டிய பதிவு!! Ha Ha Ha..

VSK said...

Manikantan down, down!!

:))

[just kidding!]

மணிகண்டன் said...

//இப்பொழுதுதான் படித்தேன் :) //

வாங்க பாலா, அப்போ இந்த பதிவுக்கு யாரும் அவ்வளவு முக்கியத்துவம் குடுக்கலை :) இப்போ இது நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை :))

மணிகண்டன் said...

//நகைச்சுவை என வகைப்படுத்தியிருக்க வேண்டிய பதிவு!! //

ஆமாம் சி.பா. ஆனா இப்போ இதை நகைச்சுவைனு வகைப்படுத்த முடியுமா? :)))

மணிகண்டன் said...

//Manikantan down, down!!

:))
//

Bangladesh down,down !!

கதிர் said...

அண்ணே வீடியோ போடலிங்களா??

கதிர் said...

அண்ணே வீடியோ போடலிங்களா??

மணிகண்டன் said...

//அண்ணே வீடியோ போடலிங்களா??//


தம்பி, முழுநீள வீடியோ எங்கேயும் கிடைக்கலை..உங்களுக்காக, இந்தியாவோடா விக்கெட்கள்,பவுண்டரிகள் மற்றும் ஸிக்ஸ்கள் அடங்கிய 3 நிமிட தொகுப்பு

http://youtube.com/watch?v=_yv5P8mZEqA

மற்றொன்று
http://www.youtube.com/watch?v=QVKwzluxTrE

Mani said...

இன்னைக்கு அங்கே வெயில் ரொம்ப அதிகமோ?

மணிகண்டன் said...

//இன்னைக்கு அங்கே வெயில் ரொம்ப அதிகமோ?

//
எப்படிங்க கண்டுபிடிச்சீங்க..