Monday, February 26, 2007

பாகிஸ்தான் அணியினருக்கு ஊக்கப்பரிசுகள் அறிவிப்பு



உலகக்கோப்பையில் பங்கேற்கவிருக்கும் பாகிஸ்தான் அணியினருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஊக்கப்பரிசுகளை அறிவித்துள்ளது.பாகிஸ்தான் கோப்பையை வென்றால் அணியிலுள்ள 15 வீரர்களுக்கும் தலா 50 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்படும்.

அணியில் உள்ள வீரர்களை உற்சாகப்படுத்தவே இந்நடவடிக்கை.மேலும் பாகிஸ்தான் அரைஇறுதிக்கு தகுதி பெற்றால் ஒவ்வொரு வீரருக்கும் 20,000 டாலர்களும், அரையிறுதியில் வெற்றி பெற்றால் 25 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சலீம் அட்லஃப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரான அக்தர் மூட்டு வலி காரணமாக் தான் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமே என தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் இது போன்ற பரிசுத்தொகை எதையும் இதுவரை அறிவிக்கவில்லை.

நீங்களும் பரிசு பெற இங்கே ஒரு வாய்ப்பு..

5 comments:

A Simple Man said...

இந்திய கிரிக்கெட் வாரியமும் பரிசுத்தொகை அறிவிக்கப் போகிறது. இந்திய அணி கோப்பையை வென்றால் இந்திய அணி வீரர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் பரிசு. (மார்ச் 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிட உள்ளது)

மணிகண்டன் said...

//இந்திய அணி வீரர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் பரிசு.//

ஒரு கோடியா??கலக்கறாங்க..

தகவலுக்கு நன்றி அபுல்.

Anonymous said...

I wish the indian cricket team to win 2007 WORLD CUP

Naufal MQ said...

பாகிஸ்தானுக்கு ஊக்கப்பரிசாக ஊக்க மருந்தும் கொடுப்பாங்களா?

மணிகண்டன் said...

//ஊக்க மருந்தும் கொடுப்பாங்களா?
//

அது கண்டிப்ப உண்டுங்க பவுலர்:))