Wednesday, February 28, 2007

விரலை வெட்டிக்கொள்ள தயார்!!!





நியூசிலாந்து அணியின் முன்னனி வீரர்களில் ஒருவரான் ஜேகப் ஓரம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகையில் காயமடைந்தார். இதனால் உலகக்கோப்பையில் இவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று அளித்த பேட்டியில் இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.கையுறைக்குள் அணியும் வகையில் காயத்தை ஆற்றும் பட்டைகள் உள்ளன. ஆகவே என்னால் நன்றாக விளையாடமுடியும் என்ற நம்பிக்கையுள்ளது. வேறெந்த வழியும் இல்லாத பட்சத்தில் என் விரலை வெட்டிக்கொள்வது பலனளிக்கும் என்றால் அதற்கும் தயாராக உள்ளேன். ஆனால் உலகக்கோப்பையில் ஆடும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கேட்ச் பிடிக்கும் பொழுது இவரின்ன் இடதுகை மோதிர விரல் காயமடைந்த காட்சி..







28 வயதான் இவர் இதுவரை 93 போட்டிகளில் விளையாடி 1382 ரன்கள் அடித்துள்ளார் மற்றும் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மருத்துவர்கள் இவர் முழுமையாக குணமடைய குறைந்தது நான்கு வாரங்களாவது ஆகும் எனத் தெரிவித்துள்ளனர்.நியூசிலாந்து தனது முதல் போட்டியில் மார்ச் 16ம் தேதி இங்கிலாந்துடன் மோதுகிறது.


விரலை வெட்டிக்கொண்டு விளையாடுவது சுலபமான காரியமில்லை எனினும் இவரது மன உறுதியையும் நம்பிக்கையையும் பாராட்டுவோம்.






உலகக்கோப்பை பரிசுப்போட்டி விவரங்கள் இங்கே


13 comments:

Naufal MQ said...

ஆ... ஊ என்றால் பொய்க் காயங்களுக்கு ஓய்வெடுக்கும் நம் வீரர்களை இவருடன் ஒப்பிடும் போது.....????

இந்த மாதிரி வெறி தான்யா எனக்கு புடிக்கும்.

மணிகண்டன் said...

வாங்க பவுலர்.

நீங்க சொல்றதும் சரிதான். இந்த மாதிரி வெறியும்,பங்களிப்பும் இருந்தா இந்தியா தான் நிரந்தர சாம்பியன்!

மு.கார்த்திகேயன் said...

என்னடா..ஏகலைவன் தலைப்பாய் இருக்கிறதே என்று பார்த்தேன் மணி..

இவரின் உள்ள உறுதியை பாராட்டியே ஆக வேண்டும்!

மணிகண்டன் said...

//இவரின் உள்ள உறுதியை பாராட்டியே ஆக வேண்டும்!
//

வாங்க கார்த்தி, நிச்சயமா இப்படி சொல்ரதுக்கு கூட நிறைய மன உறுதியும் தைரியமும் வேணும். அதுக்காகவே அவர பாரட்டலாம்.

மணிகண்டன் said...

சிறில், அது என்னங்க 4??

துளசி கோபால் said...

சரியாப்போச்சு. தமிழ்நாட்டு அரசியல்(வியாதி) வாதிகளின் அடிப்பொடிகளைப் பார்த்துக்
கத்துக்கிட்டாராமா இந்திய விஜயத்தின்போது?

விரல் எல்லாம் வெட்டிக்க வேணாம். அப்புறம் வாழ்க்கை ரொம்பக் கஷ்டமாபோயிருமுன்னு
நானே நேரில் போய் பார்த்துச் சொல்லிட்டு வரட்டுமா?


சிறில்,

இப்ப 40 பண்ணிட்டாங்க.:-)

சிவபாலன் said...

நியுசிலாந்து ஒரு முடிவோடதான் இருக்கும் போல.. mmmmm



//வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க//

அடிக்கறதும் அடிக்கிறோம் ஒரு "6" அடிப்போமுன்னு பார்த்த இப்படி பவுன்டரி லைன்ல கேச் ஆகிவிட்டதே.. :)

மணிகண்டன் said...

வாங்க மேடம்,

//நானே நேரில் போய் பார்த்துச் சொல்லிட்டு வரட்டுமா? //

உங்க ஊர்க்காரர்தான். இதெல்லாம் இந்திய,தமிழ்நாட்டு அரசியலுக்கு தான் சரியா வரும்,கிரிகெட்டுக்கு ஒத்து வராதுன்னு சொல்லிடுங்க :)

இருந்தாலும் நம்ம அணில இந்த மாதிரி சொல்ற உறுதியும் வெறியும் யாரிடமும் இல்ல மேடம்.

மணிகண்டன் said...

//அடிக்கறதும் அடிக்கிறோம் ஒரு "6" அடிப்போமுன்னு பார்த்த இப்படி பவுன்டரி லைன்ல கேச் ஆகிவிட்டதே.. :)
//

கவலைப்படாதீங்க இது நோ-பால்!

சிவபாலன் said...

//கவலைப்படாதீங்க இது நோ-பால்!//

அம்பெயர் என்றால் இப்படிதான் இருக்கனும்..

அம்பெயர் மணிகண்டன் வாழ்க.. :))

மணிகண்டன் said...

நீங்க குடுத்த காசுக்கு இது கூட பண்ணலைன்னா எப்படி சி.பா? :))

அப்படியே பரிசுப்போட்டி கேள்விகளுக்கு பதிலும் சொல்லிட்டு போங்க!

வைசா said...

ஸ்டேட்மெண்ட் விடுவதில் அரசியல்வாதிகளை மிஞ்சிவிட்டார் இவர். பேச்சுக்கு விரலை வெட்டிக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். விரலை நீக்கிய காயம் மாறுமுன் இவரால் விளையாட முடியுமா என்ன? பரபரப்பாக ஸ்டேட்மெண்ட் விட்டால் ஆகிவிடுமா?

வைசா

மணிகண்டன் said...

வாங்க வைசா, ரொம்ப நாள் கழிச்சு நம்ம பக்கம் வந்திருக்கிங்க.

//விரலை நீக்கிய காயம் மாறுமுன் இவரால் விளையாட முடியுமா என்ன? பரபரப்பாக ஸ்டேட்மெண்ட் விட்டால் ஆகிவிடுமா?//

விளையாட முடியாதுன்னாலும், தன்னோட ஈடுபாட்டை காமிக்க இப்படி சொன்னதாவும் எடுத்துக்கலாமே. எது எப்படியோ எல்லா வலைதளத்திலயும் விளையாட்டு செய்திகள் பகுதில முதலிடத்தை பிடிச்சுட்டாரு :)))