சென்ற உலகக்கோப்பையின் பொழுது 'Extra Innings' என்ற நிகழ்சியின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த(??) மந்திரா பேடி மீண்டும் இம்முறை கிரிக்கெட்ட ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இம்முறை புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான சத்யா பால் வடிவமைத்துள்ள சேலைகளை அணிந்து பங்குபெறுவார். இதற்காக உலகக்கோப்பையில் பங்குபெறும் அணிகள், வீரர்களின் கையெழுத்துக்கலள்,கிரிக்கெட் பந்து போன்றவை கொண்ட 5 பிரத்யேக சேலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உலகக்கோப்பை போட்டிகள் முடிந்தபின் இச்சேலைகள் eBayன் மூலம் ஏலத்தில் விடப்படும். ஏலத்தில் கிடைக்கும் தொகை 'Mouth and Foot Painting Artists (MFPA)' என்ற உடல் ஊனமுற்ற கலைஞர்களுக்கான் சேவை அமைப்பிற்க்கு வழங்கப்படும். இச்சேலைகள் நேற்று புதுடெல்லியில் பார்வைக்கு வைக்கப்பட்டன.
"முதல் முறையாக் கிரிக்கெட்டை தழுவி வடிவமைக்கப்பட்ட சேலைகளை அணியப்போகிறேன். இதன் மூலம் கிடைக்கும் தொகை நல்ல காரியத்திற்க்கு பயன்படுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" என மந்திரா பேடி தெரிவித்துள்ளார்.
அவரின் மேலும் சில புகைப்படங்கள்
இப்ப தெரியுதப்பு நீ ஏன் சரியா ஆடறதில்லைனு
இந்த படம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா :)))
உலகக்கோப்பைக்கான பரிசுப் போட்டியில் பங்குபெற இங்கே க்ளிக்கவும்
Friday, February 23, 2007
மீண்டும் வருகிறார் மந்திரா பேடி
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
என்னய்யா இது காலையிலயே!
அம்மிணி வந்தா மேட்ச் பாப்பாய்ங்களா இல்ல அம்மிணிய பாப்பாய்யங்களா?
//என்னய்யா இது காலையிலயே!
அம்மிணி வந்தா மேட்ச் பாப்பாய்ங்களா இல்ல அம்மிணிய பாப்பாய்யங்களா?//
நமக்கு இங்கே வெள்ளிக்கிழமை நைட்டுங்க.அதான் ஒரு இது ஹி.ஹி.
போன தடவ மேட்ச் எங்கே பாத்தோம்,அம்மணிய தான் பாத்தோம். இந்த தடவையாவது மேட்ச் பார்க்கலாம்னு பாத்தா..விடமாட்டானுங்க போல :))
மணிகண்டன், கிரிக்கட் பத்தி போடுறேன்னு சொல்லிட்டு இதென்னா சில பல மசாலா ஐட்டங்கள்..
ஏற்கனவே முத தடவ யாரும் மேட்ச் பாக்கல.. இந்த தடவையுமா..
ஆமா.. வயசாகி இருக்காது அம்மணிக்கு
உலகக் கோப்பை களை கட்டினா சரிதான்.
//மணிகண்டன், கிரிக்கட் பத்தி போடுறேன்னு சொல்லிட்டு இதென்னா சில பல மசாலா ஐட்டங்கள்..
//
கொஞ்சம் மாறுதலுக்காக கார்த்தி..
//வயசாகி இருக்காது அம்மணிக்கு //
ஒல்ட் இஸ் கோல்ட் :)
//உலகக் கோப்பை களை கட்டினா சரிதான். //
அதுல என்னங்க சந்தேகம் பவுலரே ?நிச்சயம் களைகட்டும்
Post a Comment