Tuesday, February 20, 2007

உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் ஏப்ரல் 15ம் தேதி மோதல்?



நடக்கவிருக்கும் உலகக்கோப்பையில் இந்தியா Group Bயிலும் பாகிஸ்தான் Group Dயிலும் இடம்பெற்றுள்ளன. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பெர்முடா அணிகள் 'B' குழுவில் உள்ளன. இந்தியா மற்றும் இலங்கையை தவிர மீதி இருஅணிகளும் சற்று பலவீனமான,அனுபவம் குறைந்த அணிகள். ஆதலால் இந்தியா கண்டிப்பாக இரண்டாவது சுற்றான Super 8க்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது(??). முதல் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட, புதிய விதிகளின்படி இந்தியா இலங்கையைவிட ரேட்டிங்கில் குறைவாக உள்ளதால் B2ஆகவே Super 8 சுற்றுக்கு செல்ல முடியும்.

அதேபோல் Group Dயில் பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், ஜிம்பாப்பே மற்றும் அயர்லாந்து அணிகள் உள்ளன. மேற்கிந்தியத்தீவுகளும் பாகிஸ்தானும் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றால், ரேட்டிங்கின்படி பாகிஸ்தானே D1 ஆக கருதப்படும்( மேற்கிந்தியத்தீவுகளை விட குறைந்த புள்ளிகள் பெற்றிருந்தாலும்).

இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றால், D1 Vs B2 வுக்கான Super 8 போட்டி வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி நடக்கவுள்ளது. அப்போட்டியில் இவ்விரு அணிகளும் மோதும். இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்காத இந்தியா மீண்டும் அச்சாதனையை படைக்கும் என நம்புவோமாக..

2 comments:

VSK said...

ஏதாவது ஒரு போட்டிக்கு போகலாமா?
வர்றீங்களா?
:))

மணிகண்டன் said...

//ஏதாவது ஒரு போட்டிக்கு போகலாமா?
வர்றீங்களா?
:)) //

அதுக்கென்ன SK ஐயா, போயிட்டா போச்சு. நீங்க ஸ்பான்சர் பண்ண மாட்டிங்களா என்ன??