வரும் 28ம் தேதி உலகக்கோப்பையில் பங்குபெற மேற்கிந்தியத்தீவுகளுக்கு செல்லும் இந்திய அணியில் இர்ஃபான் பதான் இடம்பெறுவாரா என்பது வரும் ஞாயிறன்று தெரியும். உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் பதான் இடம்பெற்றிருந்தாலும், ஞாயிறன்று தியோதர் கோப்பையில் அவர் விளையாடுவதைப் பொறுத்தே அவர் அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.
இத்தகவலை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் வெங்சர்க்கார் நேற்று மும்பையில் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியதீவகளுடனான ஒருநாள் போட்டித்தொடரின் முதல் ஆட்டத்தில் விளையாடிய பதான், பின் தோள்பட்டை வலி காரணமாக தானாக முன்வந்து விலகினார். இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டித்தொடரிலும் விளையாடவில்லை. சில நாட்களுக்கு முன் தன் வலி சரியாகிவிட்டதாகவும், தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் பதான் தெரிவித்தார்.
வரும் ஞாயிறன்று அகமதாபத்தில் நடைபெற இருக்கும் தியோதர் கோப்பைக்கான போட்டியில் அவரின் உடல்தகுதி கண்கானிக்கப்படும் என்றும், திருப்திகரமாக் இருந்தால் மட்டுமே அவர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார் என்றும் வெங்சர்கார் தெரிவித்தார். ஒருவேளை பதான் தகுதிபெறத் தவறினால், தேர்வுக்குழுவும், அணியின் கேப்டன் திராவிட்டும், பயிற்சியாளர் சாப்பலும் மாற்று ஆட்டக்காரரை தேர்வு செய்வார்கள்.
பதான் முழு உடல்தகுதி பெற்று உலகக்கோப்பையில் சாதனைகள் புரிவார் என நம்புவோம்!!
உலகக்கோப்பைக்கான பரிசுப் போட்டியில் பங்குபெற இங்கே க்ளிக்கவும்
Friday, February 23, 2007
உலகக்கோப்பை அணியில் பதான் இடம்பெறுவாரா?
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 4:58 PM
Labels: இந்தியா, உலகக்கோப்பை, கிரிக்கெட், செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பாவம்யா! அவனையும் ஆட்டைல சேத்துக்குங்க.
//பாவம்யா! அவனையும் ஆட்டைல சேத்துக்குங்க.
//
நாங்க சேத்துக்க மாட்டோம்னா சொல்றோம். வரவரு நல்லா ஃபிட்டா வரணும்ல..
Post a Comment