நெஜமாவே இந்த முதல் சுற்று போட்டிகள் தேவை தானானு தோனுது. போறவர அணிகளையெல்லாம் புடிச்சு போட்டு முதல் சுற்றை ஒரு சுவாரசியமே இல்லாம பண்ணிட்டாங்களோனு தோனுது. எப்படியும் (99.99%) எட்டு பெரிய அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாக்கிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து அடுத்த சுற்றுக்கு போகப்போகுது. எதாவது ஒன்னு ரெண்டு போட்டிகள்ல சிறு அணிகள் ஜெயிச்சாலும், அடுத்த சுற்றுக்கு போறது கஷ்டம் தான்.
எந்த முறையும் இல்லாம் இந்த முறை ஐசிசி மினோஸ்னு சொல்லப்படும் 8 பலம் குறந்த அணிகளை சேர்த்திருக்கு. பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதியை பெற்றவர்கள் (தாற்காலிகமாக ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிகளில் விளயாடுவதை நிறுத்தி வைத்துள்ளது) . அதுவுமில்லாம சிலமுறை பெரிய அணிகளையும் தோற்கடிச்சிருக்காங்க. கென்யாவும் அதே மாதிரி சில ஆச்சரியங்களை நிகழ்த்தி இருக்காங்க. போன முறை நடந்த சில குளறுபடிகளால அரை-இறுதி வரைக்கும் வந்தாங்க. அவங்களை கணக்கில சேர்க்காம பார்த்தா மீதி இருக்க ஐந்து அணிகளான கனடா, நெதர்லாந்து, அயர்லாந்து, பெர்முடா, ஸ்காட்லாந்து ஆகியவை சும்மா ஒப்புக்கு சப்பாணியா சேர்க்கப்பட்ட மாதிரியே தெரியுது.
பங்களாதேஷும், கென்யாவும் மட்டும் தான் பெரிய அணி எதையாவது தோற்கடிச்சு ஆச்சரியத்தை தரக்கூடிய மாதிரி இருக்காங்க. மத்த அணி எதுவும் அவ்வளவு திறமை வாய்ந்ததா தெரியல. ஃப்ளவர் பிரதர்ஸ், கேம்ப்பெல், ஸ்ட்ரீக், ப்ராண்டிஸ், நீல் ஜான்சன்னு ஒருகாலத்துல நல்ல நிலைமைல இருந்த ஜிம்பாப்வே அணியும் இப்போ உள்நாட்டு பிரச்சனைகள்,சம்பளப் பிரச்சனை போன்ற காரணங்களால பலவீனமா இருக்கு. இவங்களால பெரிய அணி எதையும் தோற்கடிக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
இவ்வளவு பலம் குறைந்த அணிகள சேர்த்துக்கு காரணமா ஐசிசி சொல்றது அந்த நாட்டுல கிரிக்கெட்ட வளர்க்கனும், அவங்களுக்கும் பெரிய நாடுகளோட விளையாடற அனுபவம் கிடைக்கனும். இது நல்ல காரணம்னாலும், அதுக்காக இவ்வளவு அணிகளுக்கு வாய்ப்புதரனுமாங்கறது தான் கேள்வி. தற்பொழுது ODI Status இல்லாத நாடுகளுக்கு நடத்தப்படும் ஐசிசி ட்ராஃபில முதல் அஞ்சு இடத்தை பிடிக்கற அணிகளுக்கு உலகக்கோப்பைல ஆடுற வாய்ப்பும் அடுத்த ஐசிசி ட்ராஃபி வரைக்கும் ODI Status-ம் தரப்படுது. அதுக்கு பதிலா முதல் இரண்டு இடத்தை பிடிக்கற அணிகளுக்கு மட்டும் உலககோப்பைல வாய்ப்பு வழங்கலாம். முதல் ஐந்து அணிகளுக்கு ODI Status மட்டும் கொடுக்கலாம். அதோட டெஸ்ட் போட்டி தகுதி இருக்கற பத்து அணிகளும்,கென்யாவும் வருஷத்துக்கு ஒருதடவையாவது இந்த ஐந்து அணிகள்ல எதாவது ஒரு அணியோட ஒருநாள் போட்டித்தொடர் கண்டிப்பா விளையாடனும்னு சொல்லலாம். இதனால் அந்த அணிகளுக்கு பெரிய அணிகளோட விளையாடற அனுபவமும் கிடைக்கும், அவங்க நாட்டுல கிரிக்கெட் பிரபலமும் அடையும்.
இதோட இன்னொரு சிறப்பு என்னன்னா உலகக்கோப்பை மாதிரி ஒரு பெரிய போட்டில தேவையில்லாத கூட்டம் குறையும். இந்த மாதிரி அணிகள் ஆடறதால் 300 ரன் அடிக்கறது சாதாரனமா ஆயிடுச்சு. இதுவரைக்கும் உலகக்கோப்பைல 30 முறை 300 ரன்களுக்கு மேல அடிக்கப்பட்டிருக்கு. அதுல 21 முறை இது மாதிரி சிறு அணிகளுக்கு எதிரா அடிச்சதுதான்.இது நேத்து ஆஸ்திரேலியா அடிச்ச 334யும் இன்று இலங்கை அடிச்ச 321யும் சேர்க்காம. இதனால போட்டிகளுக்கு வர கூட்டமும் குறைஞ்சிடுச்சு. ஆளே இல்லாத ஸ்டேடியத்துல போட்டி நடத்தி என்னத்தையா கிரிக்கெட்ட வளர்க்க போறீங்க??
1975ல முதல் உலகக்கோப்பைல பார்த்திங்கன்னா இலங்கையும், கிழக்கு ஆப்பிரிகாவும் மட்டுமே இந்த மாதிரி சேர்க்கப்பட்டது. 1979ல இலங்கயும் கனடாவும். 1983ன் பொழுது இலங்கைக்கு 1981லயே டெஸ்ட் ஸ்டேட்டஸ் கிடைச்சதால் ஜிம்பாப்வே மட்டும் கூடுதலா சேர்க்கப்பட்டது. இந்த மூனு உலகக்கோப்பைலயும் 8 நாடுகள் தான் ஆடுனாங்க. 1987 உலகக்கோப்பைலயும் இதே நாடுகள் தான். 1992 உலகக்கோப்பைல தென்னாப்பிரிக்கா முதல்முறையா கலந்துகிட்டாங்க. ஜிம்பாப்வே டெஸ்ட் ஸ்டேட்டஸ் கிடைச்சதால் கலந்துகிட்டாங்க. முதல் தடவையா 8க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்ட உலகக்கோப்பை அதுதான்.
1996ல இருந்து தான் கூட்டம் சேர்க்க ஆரம்பிச்சாங்க. அப்போ கென்யா, நெதர்லாந்து மற்றும் UAE ஆகிய அணிகளோட சேர்த்து 12 ஆச்சு. 1999லயும் 12 அணிகள், 2003ல 14 அணிகள். அப்போ நிறைய அணிகள் இருந்தாலும் முதல் சுற்றுல இரண்டு குழுக்களாகவே பிரிக்கப்பட்டிருந்தது. அதனால் ஒன்னு ரெண்டு போட்டிகள் சொத்தையா இருந்தாலும், மத்த போட்டிகள் சுவாரசியமா இருந்தது. இந்த தடவை 16 அணிகள சேர்த்து அதையும் நாலு குழுவா பிரிச்சிட்டாங்க. ஒவ்வொரு குழுவுலயும் ரெண்டு சொத்தை அணிகள். அதுலயும் இந்தியாவுக்கு லக் இல்லை. கொஞ்சம் பலம் வாய்ந்த அணியான பங்களாதேஷை நம்ம பக்கம் தள்ளி விட்டுட்டாங்க. 17ம் தேதி வரைக்கும் நெருப்பை வயித்துல கட்டிகிட்டு இருக்கற மாதிரி ஆயிடுச்சு :) . நம்ம குழுவான் 'B'யை தான் இந்த முறை 'Group of Death'னு சொல்றாங்க.
மத்த குழுவுல எல்லாம் கண்டிப்பா ரெண்டு பெரிய அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது மாதிரி தான் இருக்கு. ஐசிசியே அடுத்த சுற்றோட அட்டவணைல A1,A2,B1,B2னு போடாம அணிகளோட பேரை போட்டிருக்காங்கன்னா பார்த்துக்கோங்க! இதுல அடுத்த காமெடி புள்ளிகள் அடிப்படைல முதல் சுற்றுல 1,2 முடிவு பண்ணாம, தரவரிசை அடிப்படைல முடிவு பண்றது. அதனால் இந்தியா எல்லா போட்டிலயும் ஜெயிச்சா கூட B2 தான். இது என்ன லாஜிக்னு தெரியலை? அப்படியே தரவரிசை படி பார்த்தாகூட போனா உலகக்கோப்பைல இருந்து இந்த உலகக்கோப்பை வரை பார்க்கலாம். அப்படி இல்லாம ஏப்ரல் 2005ல இருந்த தரவரிசைய கணக்கில எடுத்திருக்காங்க. அப்போ தான் உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதனால அந்த தேதில இருந்த தரவரிசையை கணக்குல எடுத்துகறாங்களாம்? ஐசிசிக்கு யாராவது எடுத்து சொல்லுங்கப்பா. போனதடவை ஃபைனல்ஸ் வரைக்கும் வந்த இந்தியா அந்த தரவரிசப்படி எட்டாவது இடம் :( .
இவ்வளவு அணிகள சேர்த்ததால உலகக்கோப்பையோட சுவாரசியமே குறஞ்சிடுச்சுன்னு நெறைய முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் சொல்லியிருக்காங்க. அதே தான் நம்ம கருத்தும். அவங்களுக்கு வாய்ப்பும் அனுபவமும் தேவைதான். அதுக்கு உலகக்கோப்பையை பலிகடா ஆக்கனுமா? யோசிக்குமா ஐசிசி 2011க்குள் ?
குறிப்பு : இந்த பதிவை எழுத ஆரம்பிச்சப்ப இலங்கைக்கு எதிரா பெர்முடா பேட் செய்ய ஆரம்பிச்சாங்க. இப்போ ஸ்கோர் 17 ஓவர்ல 44/7. எதுக்கு இலங்கை விழுந்து விழுந்து 321 ரன் அடிச்சாங்கன்னு தெரியலை. 100 ரன் அடிச்சிட்டு டிக்ளேர் பண்ணியிருக்கலாம்!!!
சிரமம் பார்க்காம நீங்களும் உங்க கருத்தை சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்!
Thursday, March 15, 2007
கடுப்படிக்கும் முதல் சுற்று போட்டிகள் :(
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 12:10 PM
Labels: உலகக்கோப்பை, முதல்சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
47 comments:
மணி
Biggest Upsets ஏதாவது இருந்தால் முதல் சுற்று சுவாரசியமாகும்..
பார்க்கலாம்.. ஏதாவது நடக்குதா என்று
முதல் பின்னூட்டம்னு நினைக்கிறேன், மணி
உங்க கருத்து சரி தான்.. அதுக்காக விளையாட வர்ற எல்லா அணிகளையும் ஒதுக்கிட முடியாதே.. அதுவும் இல்லாமே இந்த அணிகளோட போட்டிகள் நடத்துறதுல, கலெக்க்ஷன் வேற இருக்கே ICC-க்கு
//பார்க்கலாம்.. ஏதாவது நடக்குதா என்று //
நம்ம க்ரூப்ப தவிர வேற க்ரூப்ல நடக்கும்னு தோனலை. நடந்தா சுவாரசியாமாதான் இருக்கும் :)
You are missing the point here, Mr. Mani.
Think of the exposure these teams get to play at the international level.
This is a stepping stone for them and to the nation as well as more younsters will be interested to play this game in those nations.
I think it is a good move.
JUST HEARD!!
//23.6 Maharoof to Leverock, 1 run, and the crowd erupts in cheer as Leverock works a wide one past point to get off the mark !!//
Way to go BIG MAN!!
//முதல் பின்னூட்டம்னு நினைக்கிறேன், மணி
//
வாங்க கார்த்தி, முதல் இல்லை ரெண்டாவது. சி.பா முந்திகிட்டாரு :)
//அதுக்காக விளையாட வர்ற எல்லா அணிகளையும் ஒதுக்கிட முடியாதே//
ஒதுக்கனும்னு சொல்லலையேங்க. ஒவ்வொரு பெரிய அணியும் வருஷத்துக்கு ஒருதடவை கண்டிப்ப அவங்களோட விளையாடலாமே. ஐசிசி ட்ராஃபில முதல் ரெண்டு அணிகளை மட்டும் உலகக்கோப்பைல சேர்க்கலாம். அஞ்சு அணிகள் வேணாம்.
//இந்த அணிகளோட போட்டிகள் நடத்துறதுல, கலெக்க்ஷன் வேற இருக்கே ICC-க்கு
//
எங்கேங்க ஸ்டேடியமே காலியா இருக்கு. வர்ணனையாளரே சொல்றாரு, இன்னைக்கு கூட்டத்தை எதிர்பார்க்க முடியாது. ஒரு காரணம் பெர்முடா மாதிரி சின்ன டீம் ஆடரது. ரெண்டாவது வாரநாள்ல போட்டி நடக்கறது.
நல்ல அலசல், மணிகண்டன்!
ஏங்க, ICC WC Committe-ல இந்தியாவில இருந்து யாரும் இல்லையா?
//
எதுக்கு இலங்கை விழுந்து விழுந்து 321 ரன் அடிச்சாங்கன்னு தெரியலை. 100 ரன் அடிச்சிட்டு டிக்ளேர் பண்ணியிருக்கலாம்!!!
//
இத படிச்சிட்டு.... ரொம்ப நேரம் சிரிச்சேன்.
பிகு: Bermuda 78 (24.4 ov); Sri Lanka won by 243 runs
நல்ல அலசல், மணிகண்டன்!
அந்த படம்... நச் ...!!
ICC WC Committe-ல இந்தியாவில இருந்து யாரும் இல்லை யா?
//எதுக்கு இலங்கை விழுந்து விழுந்து 321 ரன் அடிச்சாங்கன்னு தெரியலை. 100 ரன் அடிச்சிட்டு டிக்ளேர் பண்ணியிருக்கலாம்!!!
//
இத படிச்சிட்டு... நல்லா சிரிச்சேன்..
//You are missing the point here, Mr. Mani.
Think of the exposure these teams get to play at the international level.
This is a stepping stone for them and to the nation as well as more younsters will be interested to play this game in those nations.
I think it is a good move.
//
இல்லை SK ஐயா. அதைதான் பதிவுல போட்டிருகேனே..
//டெஸ்ட் போட்டி தகுதி இருக்கற பத்து அணிகளும்,கென்யாவும் வருஷத்துக்கு ஒருதடவையாவது இந்த ஐந்து அணிகள்ல எதாவது ஒரு அணியோட ஒருநாள் போட்டித்தொடர் கண்டிப்பா விளையாடனும்னு சொல்லலாம். இதனால் அந்த அணிகளுக்கு பெரிய அணிகளோட விளையாடற அனுபவமும் கிடைக்கும், அவங்க நாட்டுல கிரிக்கெட் பிரபலமும் அடையும். //
If ICC follows this, those teams will get more exposure at international level than what they get now by playing in worldcup alone.
So far the highest margins for vicrtory in worldcup are
1. 256 Aus Vs Namibia in 2003
2. 202 Eng Vs Ind in 1975
The second highest margin record is getting broken everyday..
Aus defeated Scotland by 203 runs yesterday and Srilanka has defeated Bermuda by 243 runs today.
Because of these minnows, records are of no meaning.Thats my concern. Records are meant to be broken, but not like this.
//
ICC WC Committe-ல இந்தியாவில இருந்து யாரும் இல்லை யா?//
வாங்க தென்றல். ஐசிசில நெறைய இந்தியர்கள் இருக்காங்க. ஆனா அவங்க மட்டும் முடிவெடுக்க முடியாதே.
////நல்ல அலசல், மணிகண்டன்!
அந்த படம்... நச் ...!!
//
நன்றி கூகுள் :)
////எதுக்கு இலங்கை விழுந்து விழுந்து 321 ரன் அடிச்சாங்கன்னு தெரியலை. 100 ரன் அடிச்சிட்டு டிக்ளேர் பண்ணியிருக்கலாம்!!!
//
இத படிச்சிட்டு... நல்லா சிரிச்சேன்..
//
ரொம்ப சிரிக்காதிங்க. சனிக்கிழமை பங்களாதேஷ் நமக்கு ஆப்பு வச்சிடப் போறாங்க :)
இன்னிக்கு மேட்ச் பெரமுடா அணிய பாத்து பரிதாபம்தான் வருது. அதே சமயம் எரிச்சலாவும் இருக்கு. இவங்கள ஒதுக்கணும்னு சொல்ல வரல வேற ஏதாவது போட்டிகள்ல பங்கேற்க வைக்கலாம். ஒரேடியா உலககோப்பைல சேர்த்திருக்க வேணாம். ஆண்டுவிழா மேடைல குழந்தைகள் ஆளுக்கொரு பக்கம் டான்ஸ் ஆடுவதை போல இருக்கு.
என்னமோ போங்க இந்த நான்கு முனைப்போட்டில இந்தியா உலககோப்பை வாங்குச்சின்னா அதுதான் நிஜமான சாதனை.
//துக்கு இலங்கை விழுந்து விழுந்து 321 ரன் அடிச்சாங்கன்னு தெரியலை. 100 ரன் அடிச்சிட்டு டிக்ளேர் பண்ணியிருக்கலாம்!!!//
எளச்சவன் கிடைச்சா ஏறி உக்காந்து அடிப்பாங்களாம் அந்த கதையா இருக்கு. :))
//ரொம்ப சிரிக்காதிங்க. சனிக்கிழமை பங்களாதேஷ் நமக்கு ஆப்பு வச்சிடப் போறாங்க :)//
இந்தியா பற்றி இவ்வளவுதானா உங்களோட மதிப்பு??
அந்த மேட்சில கண்டிப்பா ஜெயிப்பாங்க மணிகண்டன்.
//ஆண்டுவிழா மேடைல குழந்தைகள் ஆளுக்கொரு பக்கம் டான்ஸ் ஆடுவதை போல இருக்கு.
//
வாங்க நட்சத்திரமே..நல்ல உதாரணம்.
//இன்னிக்கு மேட்ச் பெரமுடா அணிய பாத்து பரிதாபம்தான் வருது. அதே சமயம் எரிச்சலாவும் இருக்கு. இவங்கள ஒதுக்கணும்னு சொல்ல வரல வேற ஏதாவது போட்டிகள்ல பங்கேற்க வைக்கலாம். ஒரேடியா உலககோப்பைல சேர்த்திருக்க வேணாம். //
இதை தாங்க நானும் சொன்னேன். உலகக்கோப்பையை பலிகடா ஆக்கியிருக்க வேண்டாம் :(
I agree with your point to an extent. I personally feel u have underestimated Zimababwe. They are a good team esp in the conditions in W.Indies
Lets see how they fare agaistP Pak and we will know :P
//இந்தியா பற்றி இவ்வளவுதானா உங்களோட மதிப்பு??
அந்த மேட்சில கண்டிப்பா ஜெயிப்பாங்க மணிகண்டன்.
//
சும்மா ஒரு கிண்டலுக்கு சோன்னேங்க தம்பி. இந்தியா இந்த முறை உலகக்கோப்பையை வெல்லும்னு உறுதியா நம்பறேன்!
இந்தியாவோட சூப்பர்8 போட்டிகளுக்கான பதிவுகளுக்கு கூட தலைப்பு ரெடி பண்ணிட்டிருக்கேன்.
ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு!
பல்பு வாங்கிய பாகிஸ்தான்!
தெறித்து ஓடிய தென்னாப்பிரிக்கா!
நியூசிலாந்தை நொங்கெடுத்த இந்தியா!
மீதி யாராவது சொன்னா நல்லாயிருக்கும் :)
//I agree with your point to an extent. I personally feel u have underestimated Zimababwe. They are a good team esp in the conditions in W.Indies
Lets see how they fare agaistP Pak and we will know :P
//
வாங்க அருண், ஜிம்பாப்வேய குறைச்சு சொல்லலைங்க. போன உலகக்கோப்பைல ஆடின அணியவிட இந்த முறை அவர்களோட பலம் குறைஞ்சிருக்குன்னு தான் சொல்றேன். போன தடவை ஆடின அணியில இருந்து ஒரே ஒருத்தர் தான் இந்த தடவை ஆடறாரு. மத்தவங்க எல்லாம் புதுசு.
பாக்கிஸ்தானை அவங்க தோற்கடிச்சாங்கன்ன ஜிம்பாப்வேய விட அதிக சந்தோஷப்படற ஆளா நான் இருப்பேன் :)
//
பாக்கிஸ்தானை அவங்க தோற்கடிச்சாங்கன்ன ஜிம்பாப்வேய விட அதிக சந்தோஷப்படற ஆளா நான் இருப்பேன் //
மே.இ வெற்றி போடாம...பாகிஸ்தான் தோல்வினு நீங்க போடுறப்பவே நினச்சேன்.. இதுல ஏதோ 'உள்நாட்டு சதி' இருக்கு-னு..
பாகிஸ்தான் மோசமான team-ங்க...
அப்படியே ஜிம்பாப்வே-கிட்ட தோத்தாலும்... ;) இந்தியாவை எதிர்த்து விளையாடுறப்ப மட்டும் பின்னி பெடல் எடுப்பானுங்க.. எப்படிதான் ரோஷம் வருமோ? ம்ம்ம்ம்...
//ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு!
பல்பு வாங்கிய பாகிஸ்தான்!
தெறித்து ஓடிய தென்னாப்பிரிக்கா!
நியூசிலாந்தை நொங்கெடுத்த இந்தியா!//
அப்படி போட்றா என் சிங்கக்குட்டி...
இப்படிதான் இருக்கணும்...
நடக்கணும்னு நம்புவோம்.
//ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு!
பல்பு வாங்கிய பாகிஸ்தான்!
தெறித்து ஓடிய தென்னாப்பிரிக்கா!
நியூசிலாந்தை நொங்கெடுத்த இந்தியா!//
Room poottu yosippeengalo?
:)
உலகக்கோப்பை எனற பேருக்கு ஏற்ப உலகிலுள்ள நிறைய அணிகளுக்கு வாய்ப்பு வழங்கி (அதிகமான மேட்ச்களை) நடத்தி வருமானத்தைப் பெருக்க வேண்டுமென்பதுதான் ICCயின் முக்கியமான எண்ணம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
உண்மையை சொல்லப்போனால் முக்கியமான 8 அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லப் போகிறது..
இப்போதுள்ள தர வரிசைப்படி கால் இறுதிப் போட்டி, அரை இறுதி அப்புறம் இறுதிப்போட்டி என்று நடத்தினால் மொத்தமே 6 (4+1+1) மேட்ச்கள்தான் தேவைப்படும் கோப்பையை ஒரு அணிக்கு கொடுத்து விடலாம். ஆனால் காலிறுதிக்கு எந்தந்த அணிகளை மோதச் செய்வது??
அதனால் புதிய அணிகளைச் சேர்ப்பதில் தவறில்லை.. ஆனால் அதனை இந்த தடவை போலில்லாமல் சரியான குழுக்களாகப் பிரித்து விறுவிறுப்பாகப் போட்டிகளை நடத்தினால் நல்லது என நினைக்கிறேன்.
//மே.இ வெற்றி போடாம...பாகிஸ்தான் தோல்வினு நீங்க போடுறப்பவே நினச்சேன்.. இதுல ஏதோ 'உள்நாட்டு சதி' இருக்கு-னு..
//
என்னங்க சுப்ரமணிய சுவாமி ரேஞ்சுல 'சதி'ன்னெல்லாம் சொல்றிங்க. அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. Just an Indian mentality!
//இந்தியாவை எதிர்த்து விளையாடுறப்ப மட்டும் பின்னி பெடல் எடுப்பானுங்க.. எப்படிதான் ரோஷம் வருமோ? ம்ம்ம்ம்... //
மத்த கிரிக்கெட் போட்டிகள்ல வேணா அப்படி இருக்கலாம். உலகக்கோப்பைய பொறுத்த வரைக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியா பாடற பாட்டு..
"எங்க ஏரியா..உள்ள வராத.."
////ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு!
பல்பு வாங்கிய பாகிஸ்தான்!
தெறித்து ஓடிய தென்னாப்பிரிக்கா!
நியூசிலாந்தை நொங்கெடுத்த இந்தியா!//
Room poottu yosippeengalo?
:)
//
வாங்க அனானி நண்பரே.. பேரை சொல்லிட்டு அப்படியே மத்த போட்டிகளுக்கான தலைப்பையும் சொன்னிங்கன்ன நல்லாயிருக்கும்.
//அப்படி போட்றா என் சிங்கக்குட்டி...
இப்படிதான் இருக்கணும்...
நடக்கணும்னு நம்புவோம்.
//
ஆகா ரொம்ப நன்றி தம்பி. உங்க ப்ரெய்ன் கெளடவுன்ல இருந்து கொஞ்சம் தலைப்புகளையும் எடுத்து விட்டிங்கன்னா நல்லா இருக்கும் :)
ஆமாங்க மணிகண்டன் செம கடுப்பா இருக்கு! ஜிம்பாப்வே vs அயர்லாண்ட எல்லாம் பாக்க வேண்டியிருக்க்கு...$199
குடுத்திட்டோம்ல....நம்ம திருவிளையாடல் தருமி மாதிரி இந்த மாச்செல்லாம் நாங்க பாக்கல அதுக்கு தகுந்தாப்பல கொஞ்சம் fee கொறச்சுக்கோங்கன்னு சொல்லலாம்னு இருக்கேன்.....:)
(ஆமா david houghton ன்னு ஒருத்தர் இருந்தாரே அவரு ஜிம்பாப்வே தானே reverse sweep லாம் அடிச்சு தூள் கிளப்பினார் ஒரு சமயம்.....)
//உலகக்கோப்பை எனற பேருக்கு ஏற்ப உலகிலுள்ள நிறைய அணிகளுக்கு வாய்ப்பு வழங்கி (அதிகமான மேட்ச்களை) நடத்தி வருமானத்தைப் பெருக்க வேண்டுமென்பதுதான் ICCயின் முக்கியமான எண்ணம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
//
வருமானத்தை பெருக்கவே என்பது சரிதாங்க. ஆனா இந்த மாதிரி போட்டிகளால ஆட்டததை பார்க்கற ஈடுபாடே ரசிகர்கள் கிட்ட குறைஞ்சிடுமே. Putting too much of minnows will definitely backfire.
//ஆனால் அதனை இந்த தடவை போலில்லாமல் சரியான குழுக்களாகப் பிரித்து விறுவிறுப்பாகப் போட்டிகளை நடத்தினால் நல்லது என நினைக்கிறேன்.
//
சரிதாங்க. போன தடவை 14 அணிகள் ஆடினாலும், ஏழு அணிகள் கொண்ட 2 குழுக்களா பிரிச்சு, அதுலயிருந்து மூனு அணிகள் சூப்பர்6க்கு போகும்னு வச்சாங்க. ஏழுல ரெண்டு தான சிறிய அணிகளா இருந்தது.அதனால சுவாரசியமா இருந்தது. இந்த முரை முதல் சுற்று ஏறக்குறைய Pre-Determined-ஆ ஆயிடுச்சு.
manikandan ireland tied the match with zimbabwe !!!! awesome.....nailbiting finish.hats off to Ireland......great !!! iam so thrilled
feel bad for my previous comment!!!!
//இப்போதுள்ள தர வரிசைப்படி கால் இறுதிப் போட்டி, அரை இறுதி அப்புறம் இறுதிப்போட்டி என்று நடத்தினால் மொத்தமே 6 (4+1+1) மேட்ச்கள்தான் தேவைப்படும்////
தவறு .. மொத்தம் 7 (4+2+1) மேட்ச்கள்
அப்புறம் பார்த்தீங்களா,
ஜிம்பாப்வே ஈசியா ஜெயிக்கறதை கோட்டை விட்டுட்டு மேட்ச் 'டை' ஆயிடிச்சி..
//ஆமாங்க மணிகண்டன் செம கடுப்பா இருக்கு! ஜிம்பாப்வே vs அயர்லாண்ட எல்லாம் பாக்க வேண்டியிருக்க்கு...$199
குடுத்திட்டோம்ல....நம்ம திருவிளையாடல் தருமி மாதிரி இந்த மாச்செல்லாம் நாங்க பாக்கல அதுக்கு தகுந்தாப்பல கொஞ்சம் fee கொறச்சுக்கோங்கன்னு சொல்லலாம்னு இருக்கேன்.....:)
//
வாங்க மேடம்.. நீங்களும் நம்ம கட்சியா? நானும் 199$ குடுத்த பாவத்துக்காக காலைல ஆறு மணிக்கு எந்திரிச்சு இந்த மேட்ச் எல்லாம் பார்க்கறேன் :)
//(ஆமா david houghton ன்னு ஒருத்தர் இருந்தாரே அவரு ஜிம்பாப்வே தானே reverse sweep லாம் அடிச்சு தூள் கிளப்பினார் ஒரு சமயம்.....)
//
ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி மேடம். ஆமாங்க. 87 உலகக்கோப்பைல நியூசிலாந்துக்கு எதிரா 142 ரன் அடிச்சு கிட்டத்தட்ட ஜெயிக்கற நிலைமைக்கு கொண்டு வந்தாரு. அப்புரம் அப்போதைய கேப்டன் ட்ரைகாஸ் சொதப்பி 3 ரன் வித்தியாசத்துல தோத்து போனாங்க..நல்ல ப்ளேயருங்க அவரு..
//manikandan ireland tied the match with zimbabwe !!!! awesome.....nailbiting finish.hats off to Ireland......great !!! iam so thrilled
feel bad for my previous comment!!!! //
ரொம்ப பரபரப்பா ஆக்கிட்டாங்க கடைசில.. ஒருவேளை இந்த பதிவை படிச்சிருப்பாங்களோ ? எழுதுன சூடு ஆறுறதுக்குள்ள நோஸ்கட் குடுக்கறாங்க :(
//ஜிம்பாப்வே ஈசியா ஜெயிக்கறதை கோட்டை விட்டுட்டு மேட்ச் 'டை' ஆயிடிச்சி..
//
எப்படியோ ஒரு பரபரப்பான் ஆட்டம் கிடைச்சா சரிதான். இருந்தாலும் ரெண்டு அணியும் அடுத்த சுற்றுக்கு போறது கஷ்டம்தான்னு தோனுது.
//
என்னங்க சுப்ரமணிய சுவாமி ரேஞ்சுல 'சதி'ன்னெல்லாம் சொல்றிங்க. அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. Just an Indian mentality!
//
;) ;)
இந்த போட்டி tie ஆனதால, group D ல் ஏதும் ஆச்சியம் காத்து இருக்கா?
வெளுக்கப்பட்டது வெஸ்ட் இண்டீஸ்.
இஞ்சி தின்றது இங்கிலாந்து.
இடுப்பொடிந்தது இலங்கை..
மணி,
உலகக்கோப்பையில் சிறுநாடுகள் கட்டாயம் வேண்டும்தான். விரிவான என் கருத்து இங்கே
http://domesticatedonion.net/tamil/?p=662
//இந்த போட்டி tie ஆனதால, group D ல் ஏதும் ஆச்சியம் காத்து இருக்கா? //
அப்படி எதுவும் ஆகும்னு தோனலைங்க. பாகிஸ்தான் அயர்லாந்து கிட்டயோ ஜிம்பாப்வே கிட்டயோ தோத்தா எதாவது நடக்கலாம்!
//வெளுக்கப்பட்டது வெஸ்ட் இண்டீஸ்.
இஞ்சி தின்றது இங்கிலாந்து.
இடுப்பொடிந்தது இலங்கை..
//
ஆகா நக்கீரன்..கலக்கிட்டீங்க. எல்லா தலைப்பும் உபயோகப்படும்னு நினைக்கிறேன் :)
//மணி,
உலகக்கோப்பையில் சிறுநாடுகள் கட்டாயம் வேண்டும்தான். விரிவான என் கருத்து இங்கே
http://domesticatedonion.net/tamil/?p=662
//
மிக்க நன்றி வெங்கட். உங்க பதிவுல நானும் பின்னூட்டம் போட்டிருக்கேங்க.
////ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு!
பல்பு வாங்கிய பாகிஸ்தான்!
தெறித்து ஓடிய தென்னாப்பிரிக்கா!
நியூசிலாந்தை நொங்கெடுத்த இந்தியா!//
பிடிங்க..மீதி தலைப்புகள்...
சிரிப்பாய் சிரித்த சிறீலங்கா
இடி வாங்கிய இங்கிலாந்து
வேட்டையாடப் பட்ட வெஸ்ட் இண்டீஸ்
//சிரிப்பாய் சிரித்த சிறீலங்கா
இடி வாங்கிய இங்கிலாந்து
வேட்டையாடப் பட்ட வெஸ்ட் இண்டீஸ்
//
கலக்கல் அனானி. நல்லாயிருக்கு தலைப்பெல்லாம்
மணிகண்டன்,
இது மாதிரி அணிகள் இருந்தால்தான் இந்தியா ஜெயிக்க முடியும்.
டெஸ்ட் விளையாடும் தகுதி கொண்ட நாடுகளில் மோசமான பீல்டிங் உள்ள நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும்தான்.
//எதுக்கு இலங்கை விழுந்து விழுந்து 321 ரன் அடிச்சாங்கன்னு தெரியலை. 100 ரன் அடிச்சிட்டு டிக்ளேர் பண்ணியிருக்கலாம்!!!//
இது போல எதிரணிய குறைத்து மதிப்பிடுவதும் தோல்விக்கு ஒரு காரணம்.
//ரொம்ப சிரிக்காதிங்க. சனிக்கிழமை பங்களாதேஷ் நமக்கு ஆப்பு வச்சிடப் போறாங்க :)//
நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!!
ஆதிபகவன்,
ஒரேயடியா இந்திய அணிக்கு எதிரா இறங்கியிருக்கீங்க போலிருக்கு. இந்தியாவோட ஃபீல்டின் மோசம் என்பது உண்மை தான். அதை நானும் எழுதியிருக்கேன்.
அதுக்காக இந்த மாதிரி சின்ன அணிகள் இருந்தால் தான் இந்தியா ஜெயிக்கும் அப்படிங்கரது கொஞ்சம் கடுமையாவெ தெரியுது. நீங்க என்ன அர்த்தத்துல சொன்னிங்கன்னு தெரியலை (கிண்டல்?கோபம்?)
////ரொம்ப சிரிக்காதிங்க. சனிக்கிழமை பங்களாதேஷ் நமக்கு ஆப்பு வச்சிடப் போறாங்க :)//
நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!!
//
இது நான் ஒரு நகைச்சுவைக்காக சொன்னேனெ தவிர இது நடக்க வாய்ப்பில்லை!
பட்டய கிளப்பின பாகிஸ்தான்
இல்லனா..
பட்டய கிளப்பின பங்களாதேஷ்.
..ச்சும்மா...உங்களை வெறுப்பேத்த தான்.. ;)
இரும்படி குடுத்த இந்தியா..
(இது எப்படி இருக்கு..?!)
//பட்டய கிளப்பின பாகிஸ்தான்
இல்லனா..
பட்டய கிளப்பின பங்களாதேஷ்.
..ச்சும்மா...உங்களை வெறுப்பேத்த தான்.. ;)
இரும்படி குடுத்த இந்தியா..
(இது எப்படி இருக்கு..?!)
//
கடைசி ஒன்னு மட்டும் தான் நல்லாயிருக்கு :)
////ரொம்ப சிரிக்காதிங்க. சனிக்கிழமை பங்களாதேஷ் நமக்கு ஆப்பு வச்சிடப் போறாங்க //
நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!!
//
இது நான் ஒரு நகைச்சுவைக்காக சொன்னேனெ தவிர இது நடக்க வாய்ப்பில்லை!//
சொல்ல முடியாது, நியூசீலந்திற்க்கு என்ன நடந்தது??
இந்தியா மீது ஒன்றும் வெறுப்பில்லை,
ஆத்திரம்......எல்லா பிளேயர்களும் கெட்டிக்காரர்கள்தான்.
ஆனால் தனித்தனியாக நன்றாக விளையாடுவார்கள். டீமாக சேர்ந்து விளையாடமாட்டார்கள்.
//சொல்ல முடியாது, நியூசீலந்திற்க்கு என்ன நடந்தது??
//
ஏங்க எல்லாரும் இப்படி சொல்லி சொல்லியே பயமுறுத்தறிங்க :)
//
இந்தியா மீது ஒன்றும் வெறுப்பில்லை,
ஆத்திரம்......எல்லா பிளேயர்களும் கெட்டிக்காரர்கள்தான்.
ஆனால் தனித்தனியாக நன்றாக விளையாடுவார்கள். டீமாக சேர்ந்து விளையாடமாட்டார்கள்.
//
உங்க கருத்தை தெளிவுபடுத்தியதற்கு நன்றி ஆதிபகவன். சமீபகாலமா அந்த மாதிரி சுயநலமா ஆடறது குறைஞ்சிருக்கறதாகவே எனக்கு தோனுது.
I think this opinion has to be changed after the exit of Pakistan after just two matches.....
This seems to be the worst format.....
One upset and a team gets into the next stage
Like what happened during Last World Cup when the Super Six and Semifinals were boring
I agree with you Dr.bruno
Post a Comment