உலகக்கோப்பை பரிசுப் போட்டியோட கடைசி நாள் மார்ச் 12ம் தேதியோட முடிஞ்சிடுச்சு. இதுவரைக்கும் 22 பேர் பதில் சொல்லி இருக்கீங்க. நீங்க சொன்ன பதிலை எல்லாம் தொகுது ஒரு Spreadsheet-ஆ போட்டிருக்கேன். பதில் சொன்ன எல்லாரும் உங்க பதில்களை சரி பார்த்துக்கோங்க. எதாவது பதில் தப்பா இருந்தா இல்லை உங்க பதில்களே இல்லைன்னா, பின்னூட்டத்தில சொல்லுங்க. முன்னால நீங்க போட்ட பதில்களின் பின்னூட்டத்தோட சரிபார்த்து திருத்திடறேன்.
ஏப்ரல் 28 இல்லை 29 வெற்றி பெற்றவர் யாருன்னு தெரியும்.
பதில் சொன்ன 22 பேருல இந்தியா கோப்பையை ஜெயிக்கும்னு சொல்லியிருக்கறவங்க 14!
ஆஸ்திரேலியா 4, பாக்கிஸ்தான்,இங்கிலாந்து,தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து தலா 1.
இந்தியா சம்பந்தப்பட்ட 3 கேள்விகள் (கேள்வி 5,6,7) தவிர மீதி எல்லா கேள்விகளுக்கும் ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களின் பேரை சொல்லியிருக்கார் தீவிர ஆஸ்திரேலிய ரசிகரான மோகன்தாஸ்!
எந்த கீப்பர் அதிக கேட்ச் பிடிப்பாருங்கற 10வது கேள்விக்கு 15 பேர் கில்கிறிஸ்ட்னு சொல்லியிருக்காங்க. நம்ம தோனிக்கு கிடைச்ச ஓட்டு 4 தான் :(
எந்த மட்டையாளர் இந்த உலகக்கோப்பையில் அதிக ஸிக்ஸ்கள் அடிப்பார் என்ற 9வது கேள்விக்கு ரிக்கி பாண்டிங்னு பதில் சொன்னவங்க மு.கார்த்திகேயனும், ஜி-zயும். அவங்க ரெண்டு பேரும் சந்தோஷப்பட்டுக்கலாம். இன்னைக்கு நடந்த ஒரு போட்டியிலேயே பாண்டிங் 5 ஸிக்ஸ் அடிச்சிட்டாரு!
பார்கலாம் யாரு ஜெயிக்கறாங்கன்னு!!
உங்கள் பதில்கள்
Wednesday, March 14, 2007
நீங்கள் சொன்னவை ! ! !
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 4:28 PM
Labels: உலகக்கோப்பை, போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
என்னோட பதிகள் எல்லம் சரியா இருக்குங்க.
நாளயில இருந்து இங்க மைச் பாக்கலாம். முடிந்தால் இதையும் உங்க பக்கத்தில இணையுங்க.
http://tharsan29.th.funpic.de/CRI.htm
//என்னோட பதிகள் எல்லம் சரியா இருக்குங்க.
//
நன்றி ஜெகன்
//நாளயில இருந்து இங்க மைச் பாக்கலாம். முடிந்தால் இதையும் உங்க பக்கத்தில இணையுங்க.
http://tharsan29.th.funpic.de/CRI.htm
//
காண்டிப்பா இணைக்கிறேங்க அனானி!
கேள்விகளையும் இதனோடு சேர்த்துப் போட்டிருக்கலாமே மணி,
நேற்று மேட்சில் ஸ்காட்லாந்து டாஸ் ஜெயித்து ஏன் முதலில் ஃபீல்டிங் செய்தார்கள்?
ஒருவேளை ஆஸ்திரேலியா 300க்கு மேல் எடுத்தாலும் ஈஸியா சேஸ் பண்ணிடலாம்னு நினைச்சிருப்பாங்களோ :))
எப்படியோ இதனால் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல ரன் வேட்டை.
அப்புறம் என்னோட பதிலகளும் சரியா இருக்குதுங்க..
//கேள்விகளையும் இதனோடு சேர்த்துப் போட்டிருக்கலாமே மணி,
நேற்று மேட்சில் ஸ்காட்லாந்து டாஸ் ஜெயித்து ஏன் முதலில் ஃபீல்டிங் செய்தார்கள்?
ஒருவேளை ஆஸ்திரேலியா 300க்கு மேல் எடுத்தாலும் ஈஸியா சேஸ் பண்ணிடலாம்னு நினைச்சிருப்பாங்களோ :))
எப்படியோ இதனால் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல ரன் வேட்டை.
//
வாங்க அபுல்.
கேள்விகளை போடறேன் சீக்கிரமா.
எனக்கும் அத்தாங்க புரியலை. ஆஸ்திரேலியாவோட பலம் தெரிஞ்சும் எதுக்கு முதல்ல பௌலிங் போட முடிவு பண்ணாங்கன்னு. ஒருவேளை ஸ்காட்லாந்து முதல்ல ஆடி 30,40 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, ஆஸ்திரேலியா அதை 5 ஓவர்ல அடிச்சு மேட்சே 2 மணிநேரத்துல முடிஞ்சுடக் கூடான்னும் இருக்கலாம் :)
You are doing a GREAT JOB, Manikandan !
//You are doing a GREAT JOB, Manikandan !
//
ரொம்ப நன்றி பாலா. அடிக்கடி நம்ம பக்கம் வந்துட்டுப் போங்க :)
Mani,
All Correct.. Thanks..
( If you allow, I will give 100% correct answers at the end of the tournament.. :)):)):))
//Mani,
All Correct.. Thanks..
( If you allow, I will give 100% correct answers at the end of the tournament.. :)):)):))
//
எப்படிங்க இதெல்லாம் சி.பா ? ரொம்ப குறும்புங்க உங்களுக்கு :)
மணி
அந்த 100$ எனக்கே கிடைக்கு மாறு அருள் புரியவேண்டும்.. அதற்குதான் இந்த ஏற்பாடு.. :))
//அந்த 100$ எனக்கே கிடைக்கு மாறு அருள் புரியவேண்டும்.. அதற்குதான் இந்த ஏற்பாடு.. :))
//
அதனால என்னங்க சி.பா, டேபிளுக்கு கீழே லஞ்சமா ஒரு 200 லாலரை தள்ளி விட்டிங்கின்னா நீங்களே ஜெயிக்கற மாதிரி ஏற்பாடு பண்ணிடலாம் :(
Post a Comment