என்னாத்த சொல்வேனுங்கோ, கேவலமா தோத்துட்டோங்கோம்னு பாட வச்சிட்டாங்க நம்ம பசங்க. இன்னுமாடா இவனுங்களை நம்புது இந்த ஊருனு நீக்க கேக்கறது தெரியுது. இதை விட கேவலமா தோக்க முடியாது தான். ஆனாலும் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை ஒட்டிகிட்டு இருக்குது.
இன்னைக்கு தோத்ததுக்கு முக்கியமான காரணங்கள்னு பார்த்தா முதலாவது, டாஸை ஜெயிச்சு பேட்டிங் எடுத்தது. எந்த காரணத்துக்காக திராவிட் அந்த முடிவை எடுத்தாருன்னு தெரியலை. ஒருவேளை பங்களாதேஷை underestimate பண்ணியிருக்கலாம். சின்ன பசங்க தான, முதல்ல ஆடி நேத்து தென்னாப்பிரிக்கா கலக்கின மாதிரி நாமளும் கலக்கிடலாம்னு நினைச்சாரோ என்னவோ. எந்த பிட்ச்சா இருந்தாலும் முதல்ல கண்டிப்பா ஸ்விங்க் இருக்கும். அதுலயும் மேற்கிந்தியத்தீவுகள் பிட்சுகள்ல கேக்கவே வேணாம். இதுவரைக்கும் நடந்த எல்லா மேட்சுலயும், முதல்ல ஆடின அணிகள் எல்லாரும் தடுமாறி தான் மேலே வந்தாங்க. அப்படி இருக்கறப்ப திராவிட் கொஞ்சம் சுதாரிச்சு பவுலிங் பண்ணியிருக்கலாம். இந்தியாவில இருக்க பிட்சுகள் வேற, அங்க நிலைமை வேற. டாஸ்ல ஜெயிச்ச அயர்லாந்து பாகிஸ்தானை பேட் பண்ண சொல்லி இப்ப் கிட்டத்தட்ட(80%) சூப்பர்8 வரைக்கும் போயிருக்கு.நேத்து 40 ஓவர்ல 353 ரன் அடிச்ச தென்னாப்பிரிக்கா கூட 5 ஓவர்ல 4/1 என்ற நிலைமைல தான் இருந்தாங்க. இது முதல் காரணம்.
அடுத்தது ஷேவாக். எல்லாரும் தான் சொதப்பினாங்க, ஏன் ஷேவாக்கை மட்டும் குறை சொல்லனும்னு கேட்டா அதுக்கான பதில் ... அவரோட ஃபுட்வொர்க், Body Language எதுவுமே கான்ஃபிடண்டா இல்லை. அப்ப்டி இருக்கப்ப நிச்சயமா அவரி எடுத்து ஒரு விக்கெட்டை வேஸ்ட் பண்ணியிருக்ககூடாது. அவர் இன்னைக்கு அவுட்டானத பார்த்த சுத்தமா ஃபார்ம்ல இல்லங்கறது தெரியுது. Rediffல போட்டிருந்த மாதிரி 'International Arena is no place to try and get back your form'. கங்கூலி மாதிரி கொஞ்ச நாளைக்கு லோக்கல் போட்டில ஆடுங்க, நல்ல நிலமைக்கு வாங்க, இந்திய அணியின் கதவுகள் திறந்தே இருக்கும் உங்களுக்கு. நம்ம ஆளுங்க ஒரு விக்கெட் போனா உடனே டிஃபென்ஸிவா ஆட ஆரம்பிச்சுடுவாங்க. அப்படி இருக்கறப்ப ஷேவாக் மாத்ரி ஒருத்தரை முதல்ல இறக்கறது மகா தப்பு.
அடுத்தது 2 விக்கெட்டோ மூனு விக்கெட்டோ போயிடுச்சுன்ன அடுத்த விக்கெட்டை இழக்காம ஆடவேண்டியது முக்கியம் தான். அதுக்காக ரன்னே எடுக்காம விக்கெட்டை மட்டும் காப்பாத்திக்கறது எந்த பயனும் தராது. இன்னைக்கு அது தான் நடந்தது. நிறைய விக்கெட் போயிடுச்சேன்னு ஒரேயடியா டொக்கு போட ஆரம்பிச்சுட்டாங்க. பந்து நல்லா ஸ்விங் ஆனுது, அடிக்கறது கஷ்டம் எல்லாம் சரிதான்னாலும், அடிக்க வேண்டிய சில பந்துகளையும் அடிக்காம வேஸ்ட் பண்ணாங்க. இதே தப்பை தான் மேற்கிந்தியத்தீவுகள் கிட்ட பாகிஸ்தான் பண்ணி தோத்தாங்க. நாமளும் அதையே பண்ணோம். சுழற்பந்து வீச்ச்சை நல்லா ஆடற சச்சின், கங்கூலி, திராவி கூட இன்னைக்கு தினறுனாங்க. கங்கூலி 66 ரன் அடிச்சாலும், எனக்கென்னவோ யுவராஜ் மட்டும் தான் கொஞ்சம் நம்பிக்கயோட ஆடன மாதிரி இருந்தது.
அடுத்தது எந்த ஒரு நேரத்துலயும் அட்டாக்கிங் கேம் ஆடாம டிஃபன்ஸிவ ஆடனது. பங்களாதேஷோட இக்பால் ஆடனது ஒரு உதாரணம். எல்லாரும் அப்படி அடிச்சு ஆடனும்னு சொல்லலை. ஆனா ஒரு பக்கத்துல ஒருததர் நிதானமாவும், இன்னொரு முனைல இன்னொருத்தர் கொஞ்சமாவது ரன்னடிக்கவும் முயற்சி பண்ணியிருக்கனும். கொட்ட கொட்ட குணியற மாதிரி, பயந்து பயந்து ஆட, அவங்களும் உற்சாகமா பந்து வீச ஆரம்பிச்சுட்டங்க. ஒரு ரெண்டு மூனு ஓவர் ரிஸ்க் எடுத்து அடிச்சிருந்தா, பவுலர் வித்தியாசமா முயற்சி பண்றேன்னு எதாவது தப்பு பண்ண ஆரம்பிச்சிருப்பாரு. அந்த சந்தர்ப்பத்தை உருவாக்கவேயில்லை. Its a mind gameனு சொல்ற மாதிரி.
அதே மாதிரி இன்னொன்னு, டீம் மேல இருக்கற Pressure. போட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி முன்னாள் பங்களாதெஷ் வீரர் சொன்னது 'Expectations on India are very big. It will put some pressure on them. whereas there is no such expectation on Bangladesh.They can play freely. Even if they loose this match, they really don't loose anything'. இது முற்றிலும் உண்மை. கோடிக்கணக்கான் ரசிகர்களோட எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய நிலைமைல இருக்கறதால Pressure அதிகம். அதுவுமில்லாம, தோத்தா வீட்டில கல்லடிக்கறதும், ஜெயிச்சா மறுநாளே மலை பேடறதும் இங்கே சகஜம். இதெல்லாம் இன்னைக்கு மோசமா தோத்ததுக்கு காரணங்கள்னு நினைக்கிறேன்.
நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். நடப்பவை நல்லதாக நடக்கட்டும். இனி அடுத்து என்ன? இந்தியா அடுத்த சுற்றுக்கு போகுமா? நிச்சயமா போகும்னு சொல்ல முடியாது ஆனா போகறதுக்கு வாய்ப்பிருக்கு. அடுத்து பெர்முடவோட ஜெயிச்சா இந்தியாவுக்கு 2 புள்ளிகள் கிடைக்கும். புதன்கிழமை நடக்கற மேட்சுலயும் பங்களதேஷ் இலங்கைய தோற்கடிச்சா, வெள்ளிக்கிழமை நடக்கப்போற இந்தியா-இலங்கை போட்டி டிசைடரா ஆயிடும். அதுல ஜெயிக்கற அணி சூப்பர்8க்கு போகும். இலங்கை பங்களாதேஷை தோற்கடிச்சு, இந்தியா இலங்கைய தோற்கடிச்சு, பங்களாதேஷ் பெர்முடாவை தோற்கடிச்சா மூனு டீமும் 4 பாயிண்டோட சமமா இருக்கும். அப்ப நெட் ரன்ரேட்படி அடுத்த சுற்றுக்கு போற அணிகள் தேர்ந்தெடுக்கப்படும். ஆக எப்படியும் இந்தியா அடுத்த ரெண்டு போட்டிகளையும் ஜெயிக்கனும், அதுவும் நல்ல முறையில ஜெயிக்கனும். அதாவது முதல்ல ஆடினா 60,70 ரன் வித்தியாசத்தில ஜெயிக்கனும், இரண்டாவதா ஆடி சேஸ் பண்ணா 35,40 ஓவர்ல அடிச்சு ஜெயிக்கனும். இன்னைக்கு பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலைமை அடுத்த வெள்ளிகிழமை நமக்கு வராம இருக்கனும்னா எல்லாத்தையும் மறந்துட்டு, மிகச் சிறப்பாக ஆடுனால் மட்டுமே முடியும்.
ஒருவேளை இந்தியா அடுத்தடுத்த சுற்றுக்கு போய் கோப்பையவே ஜெயிச்சாலும், இந்த தோல்வியோட தழும்பு ரொம்ப நாளைக்கு எல்லாரோட மன்சுலயும் இருக்கும்.
It's not the end of road INDIA, Come On. YOU CAN STILL DO IT ! !
Saturday, March 17, 2007
கவுத்திட்டீங்களே மக்கா..
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 8:55 PM
Labels: இந்தியா, உலகக்கோப்பை, பங்களாதேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
51 comments:
மணி,
நீங்க என்ன தான் சொன்னாலும் சேவாக்கின் பார்மை கருத்தில் கொண்டு அவரை எல்லாரையும் எதிர்த்துகொண்டு அணியில் சேர்த்தது டிராவிட்டின் தவறு. இப்ப எல்லாம் இளைஞர்களின் காலம் டிராவிட், டெண்டூல்கர், கங்கூலியை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இள ரத்தத்தை பாய்ச்ச வேண்டும். கொஞ்சம் கூட மாற்றி யோசிக்காமல் ஒரு variation கூட இல்லாமல் batting and bowling இல் சும்மா சொத சொத என்று விளையாடியது மிகப்பெரிய தவறு. நான் இதைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம்.
இப்பதாங்க சிபி பதிவுல கமெண்ட் போட்டுட்டு வரேன்.....கொஞ்சம் கூட commitment இல்லைங்க..... i feel betrayed......என்னவோ போங்க மனசே சரியில்ல.
ரொம்ப நாள் கழிச்சு L. Sivaramakrishnanஅ பாதேன்!!!
சந்தோஷ், இரண்டாவது காரணமா நான் சொல்லியிருக்கறது அதுதான். ஒரு சின்ன மிஸ்டெக்கால அதோட அர்த்தமே மறிடுச்சு, இப்ப் போய் பதிவை பாருங்க.
உலகக்கோப்பை அணிக்கு ஷேவக்கை எடுத்ததே தப்பு. நெத்து இந்த போட்டி பத்தி போட்ட பதிவுலயும் ஷேவக்குக்கு பதிலா கார்த்திக்க எடுக்கனும்னு தான் சொல்லியிருந்தேன். திராவிட்டால் ஷேவாக்கும் சச்சினாலே அகர்கரும் காலம் தளிகிட்டு இருக்காங்க. இப்படி தனிப்பட்ட ஒருத்தரோட விருப்பு வெறுப்புபடி அணிய தேர்ந்தெடுக்காம் உண்மையா திறமையுள்ளவர்கள எடுத்தா மட்டுமே அடுத்த போட்டிகள்ல வெற்றி பெற முடியும்.
/..கேவலமா தோத்துட்டோங்கோ.../
ம்ம்...என்ன கொடுமையிது, மணிகண்டன்..?!
//என்னவோ போங்க மனசே சரியில்ல.
//
எனக்கும் தாங்க மேடம். இன்னைக்கு பதிவு போட வேண்டாம்னுதான் முதல்ல இருந்தேன். ஆனாலும் மனசு கேக்கலை. இந்தியா அடுத்த சுற்றுக்கு பொகலைன்னா பதிவயெல்லாம் மூடை கட்டிட்டு வேற வேலைய பார்க்க போகவேண்டியதுதான் :)
மணிகண்டன், நான் நேற்று சொன்னேனா இல்லையா?
இவங்கள நம்ப முடியாது?
எப்ப இந்தியா டீம் திருந்தப்போகுது?
//. இந்தியா அடுத்த சுற்றுக்கு பொகலைன்னா பதிவயெல்லாம் மூடை கட்டிட்டு வேற வேலைய பார்க்க போகவேண்டியதுதான்///
yesssss....நான் ஆரம்பிச்ச நேரம்..ரொம்ப பந்தா விட்டு... போங்கண்ணா...இப்படி ஆயுருச்சே
நானும் போட வேண்டாம்னு இருந்தேன்..but still i hope they wont let us down ....pray anna
மணி
பாக் கிட்டதட்ட வெளியேறிவிட்டது.. இந்தியாவும் வெளியேறினால்.. இந்த உலகப்கோப்பை சுவாரசியமில்லாமல் போகும்..
வியாபர ரீதியாகவும் மிகப் பெரிய இளப்பே..
அநேகமாக உலக கோப்பை சம்மந்தமாக நான் இடும் கடைசி பின்னூடம் இதுவாக கூட இருக்கலாம்.. இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்லவில்லை என்றால்.
//நானும் போட வேண்டாம்னு இருந்தேன்..but still i hope they wont let us down ....pray anna
//
கவலைப்படாதீங்க அவந்திகா, இன்னும் நம்பிக்கை இருக்கிறது.
Be Positive, atleast until next friday :)
//அநேகமாக உலக கோப்பை சம்மந்தமாக நான் இடும் கடைசி பின்னூடம் இதுவாக கூட இருக்கலாம்.. இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்லவில்லை என்றால்.
//
நீங்க சொல்றது தான் என் முடிவும் சி.பா. அடுத்த சுற்றுக்கு போகலைன்னா மூட்டை கட்டிட்டு வேற எதாவ்து எழுத முயற்சி பண்ணணும் நான் :)
//ம்ம்...என்ன கொடுமையிது, மணிகண்டன்..?!
//
ஆமங்க தென்றல்.. வெற என்ன சொல்ரது. Totally Devastating :(
//மணிகண்டன், நான் நேற்று சொன்னேனா இல்லையா?
இவங்கள நம்ப முடியாது?
எப்ப இந்தியா டீம் திருந்தப்போகுது?
//
உங்களை தாங்க எதிபார்துகிட்டு இருந்தேன். எந்த நேரத்துல சொன்னீங்களோ இப்படி ஊத்திகிச்சு :)
இனி எல்லாம் ஜெயிக்கும்னு சொல்லுங்க.. நடக்குதா பார்க்கலாம்!
நம்மவர்கள் மனம் தளர்ந்து விட்டார்கள். பாடிலேங்வேஜ்'ஏ சரியில்லை. 130 அடித்துவிட்டு பௌல் செய்த பாகிஸ்தான் அணியினரின் பந்துவீச்சு நன்றாக இருந்தது. உமர் குல்லின் பந்துவீச்சு ப்ரமாதம். பிட்சில் ஒரு சின்ன வட்டம் வரைந்திருக்கலாம் அவர் பிட்ச் செய்த இடங்களை வைத்து. நம்மவர்களின் பந்துவீச்சு மகா மோசம். பாகிஸ்தான் ஸ்பின்னர்கள்கூட முகத்தில் என்ன வெறியோடு பந்து வீசினார்கள்?
ஆனால் ஒன்று. இன்னும் ஒரு ஆட்டத்தில் சேவாக்கை சேர்த்தால், தலைவர் சொன்னதுபோல - இந்திய அணியை அந்த ஆண்டவன் வந்தால்கூட காப்பாத்த முடியாது.
இந்த அணி அந்த அணியிடம் தோத்து, நாம இந்த அணியை இப்படி ஜெயித்தால் அடுத்த ரவுண்ட் போகும்னு கனவு காணும் மக்களே - உங்களுக்கெல்லாம் இரண்டே வார்த்தைகள் - GET REAL!!!
கவலைப்படாதீங்க ம்க்கா! நம்ம பெனாத்தலார் டீம் போய்கிட்டே இருக்கு மே.இ.க்கு:-)
நாகு,
நீங்க சொல்றது சரிதான். பங்களாதேஷோ பாகிஸ்தானோ பந்து வீசின அளவுக்கு கண்ட்ரோல்டா நாம வீசியிருந்தா இன்னைக்கு ஜெயிச்சிருக்கலாம். ஆனா அங்க தான் நான் சொன்ன மாதிரியான் Mind Game ஆடுனாரு இக்பால். அதிரடியா அடிச்சு பந்துவீச்சாளர்களை சிட்டில் ஆக விடாம பண்ணாரு. அதயும் நாம பண்ண தவறினோம்.
//இந்த அணி அந்த அணியிடம் தோத்து, நாம இந்த அணியை இப்படி ஜெயித்தால் அடுத்த ரவுண்ட் போகும்னு கனவு காணும் மக்களே - உங்களுக்கெல்லாம் இரண்டே வார்த்தைகள் - GET REAL!!!
//
என்னங்க பண்ரது..மனசு கேக்கலையே..
//கவலைப்படாதீங்க ம்க்கா! நம்ம பெனாத்தலார் டீம் போய்கிட்டே இருக்கு மே.இ.க்கு:-)
//
இந்த ரத்தபூமிலயும் உங்களுக்கு காமெடி ஹ்ம்ம் :)
இது எதிர்பார்த்ததுதானே!!
நான் சொன்னதால தோற்றுப்போகல,
அவங்க விளையாடுறதை வச்சே சொல்லலாம்.
முதலாவது டீம் ஸ்பிரிட் கிடையாது,
மோசமான பீல்டிங், பதற்றம், இப்படி நிறைய சொல்லலாம்.
இது எல்லாம் சரி பண்ணினால் வெல்லலாம்.
அண்ணா என்ன எல்லாரும் பயமுறுத்தறாங்க..அவ்வளவுதானா..:-((
மணி,
இன்னைக்கு பங்களாதேஷ், ஐயர்லாந்து (தப்பான இடத்தில் அழுத்தம் குடுத்துப் படிச்சு இவங்களுக்கு முத்திரை எல்லாம் குத்தக் கூடாது!) வெற்றி. நீங்க அந்த சின்னப் பசங்களை ஆட்டத்துல சேக்காதேன்னு சொன்னாலும் சொன்னீங்க. ரொம்பவே ரோஷம் வந்திருச்சு போல!
//இன்னும் ஒரு ஆட்டத்தில் சேவாக்கை சேர்த்தால், தலைவர் சொன்னதுபோல - இந்திய அணியை அந்த ஆண்டவன் வந்தால்கூட காப்பாத்த முடியாது.//
இப்படி ஒரு நினைப்பே தப்பு.
ஒழுங்கா விளையாடாவிட்டால் அடுத்த மாட்சில் சேர்க்க மாட்டார்கள் என்ற ஒரு மனநிலையில் எந்த ஒரு பிளேயராளும் நல்லா விளையாட முடியாது.
அவங்கள நம்பிக்கையோட சுதந்திரமா விளையாடவிடுங்க, நிச்சயம் ஜெயிப்பாங்க
//முதலாவது டீம் ஸ்பிரிட் கிடையாது,
மோசமான பீல்டிங், பதற்றம், இப்படி நிறைய சொல்லலாம்.
//
உண்மைதாங்க ஆதிபகவன். நான் சும்மா கலாய்ச்சேங்க..நீங்க சொன்னதால தோத்துபோனுதுன்னு..
//அண்ணா என்ன எல்லாரும் பயமுறுத்தறாங்க..அவ்வளவுதானா..:-((
//
என்னையும் நாலாதிசையிலிருந்தும் பந்தி வீசி தாக்கறாங்க..ஒன்னும் சொல்றதுக்கில்லை சகோதரி :(
//இன்னைக்கு பங்களாதேஷ், ஐயர்லாந்து (தப்பான இடத்தில் அழுத்தம் குடுத்துப் படிச்சு இவங்களுக்கு முத்திரை எல்லாம் குத்தக் கூடாது!) வெற்றி. நீங்க அந்த சின்னப் பசங்களை ஆட்டத்துல சேக்காதேன்னு சொன்னாலும் சொன்னீங்க. ரொம்பவே ரோஷம் வந்திருச்சு போல!
//
ஆமா கொத்ஸ், எந்த நேரத்துல பதிவு போட்டேனோ, நமக்கே ஆப்பு வச்சிட்டாங்க. இதுதான் சொ.செ.சூ வா?
//ஒழுங்கா விளையாடாவிட்டால் அடுத்த மாட்சில் சேர்க்க மாட்டார்கள் என்ற ஒரு மனநிலையில் எந்த ஒரு பிளேயராளும் நல்லா விளையாட முடியாது.
அவங்கள நம்பிக்கையோட சுதந்திரமா விளையாடவிடுங்க, நிச்சயம் ஜெயிப்பாங்க //
இன்னும் எத்தனை தடைவைங்க அவருக்கு வாய்ப்பு குடுக்கறது?
சேவாக் அவ்வளவு மோசம்னு தெரிஞ்சா ஏன் அவரை டீம்ல சேர்த்தீங்க.
இந்திய டீமைவிட மோசம் செலக்ஷன் கமிட்டி.
Bangladesh deserves this victory and super 8s qualification too...
They did all the hard work and they play with committment, killer instinct etc.,whereas Indian team floats high with complacency and low with jealous on others.
I 'want Srilanka & Bangladesh to get thro super 8s.
Lets see!
மணிகண்டன்
கொஞ்சம் அதிர்ச்சியான தோல்விதான் என்றாலும் எல்லாம் முடிந்துவிடவில்லை. உலக கோப்பை முதல் போட்டிகள் எதுவும் இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததில்லை. இதை விட நெருக்கடியான சூழல்களை சந்தித்து அடுத்த சுற்றிற்கு முன்னேறி இருக்கிறோம். எடுத்துகாட்டாக 1999 உலககோப்பையில் முதல் இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க, ஜிம்பாப்வே அணிகளோடு தோற்று அடுத்த சுற்றிற்கு முன்னேறி இருக்கிறோம். அதுவும் போட்டி நடத்திய இங்கிலாந்து அணியோடு இரண்டு நாட்கள் விளையாடி வென்றிருக்கிறோம். இந்த தோல்வி இரு விளைவுகளை ஏற்படுத்தும். ஒன்று பீனிக்ஸ்பறவை போல மீண்டெழுந்து சென்ற முறை போன்ற எழுச்சி பெறும். அல்லது பாகிஸ்தானோடு சேர்ந்து வீடு திரும்பும். நான் முன்னது நடக்கும் என நம்புகிறேன். பார்ப்போம்.
//சேவாக் அவ்வளவு மோசம்னு தெரிஞ்சா ஏன் அவரை டீம்ல சேர்த்தீங்க.
இந்திய டீமைவிட மோசம் செலக்ஷன் கமிட்டி.//
டீம்ல அவரை சேர்த்தது டப்பு தாங்க.அதுக்குதான் வெங்சர்கார் திராவிடோட கட்டாயத்துல தான் சேர்த்தோம்னு சொன்னாரே. இப்போ முழுப்பொறுப்பும் திராவிட் மேல தான். நிச்சயமா ஷேவாக்குக்கு பதிலா வேர யாரையாவது சேர்த்திருக்கலாம்.
//Bangladesh deserves this victory and super 8s qualification too...
They did all the hard work and they play with committment, killer instinct etc.,whereas Indian team floats high with complacency and low with jealous on others.
I 'want Srilanka & Bangladesh to get thro super 8s.
Lets see!
//
வாங்க பொட்'டீ'கடை.
பங்களாதேஷ் இன்னைக்கு நல்லா பந்து வீசினாங்கங்கறது உண்மைனாலும், இந்தியா முதல்ல பந்து வீசியிருந்தா நிச்சயமா அவங்களை இதைவிட குறந்த ரன்களுக்கு சுருட்டி இருப்பாங்க. ஏன்னா பிட்ச் அப்படி.போன பயிற்சி போட்டில இந்தியா மேற்கிந்தியத்தீவுகளை 85க்கு சுருட்டினதை மறந்துடாதீங்க. அங்க இருக்க முக்கால்வாசி பிட்சுகல ம்தல் 1 மணிநேரத்துக்காவது பவுலர்களுக்கு சாதகமா இருக்கும்.
போன உலகக்கோப்பையோட இறுதிபோட்டில டாஸ் ஜெயிச்ச கங்கூலி பவுலிங் எடுத்து சொதப்பினாருன்ன, இந்த தடவை முதல் போட்டிலயே டாஸை ஜெயிச்சு பேட்டிங் எடுத்து சொதப்பினாங்க.
அடுத்த பெர்முடா-இந்தியா மேட்ச், இலங்கை-பெர்முடா ஆடின பிட்சுலயும், அதற்கடுத்த இலங்கை-பங்களாதெஷ் மேட்ச் இன்னைக்கு ஆடுன பீசுலயும் நடக்கும். அப்ப முதல்ல ஆடறவங்க என்ன பண்ராங்கன்னு பார்க்கலாம். அப்ப தெரியும் நம்ம அணி மோசமா இல்லை பிட்ச் மோசமான்னு?
//மணிகண்டன்
கொஞ்சம் அதிர்ச்சியான தோல்விதான் என்றாலும் எல்லாம் முடிந்துவிடவில்லை. உலக கோப்பை முதல் போட்டிகள் எதுவும் இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததில்லை. இதை விட நெருக்கடியான சூழல்களை சந்தித்து அடுத்த சுற்றிற்கு முன்னேறி இருக்கிறோம். எடுத்துகாட்டாக 1999 உலககோப்பையில் முதல் இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க, ஜிம்பாப்வே அணிகளோடு தோற்று அடுத்த சுற்றிற்கு முன்னேறி இருக்கிறோம். அதுவும் போட்டி நடத்திய இங்கிலாந்து அணியோடு இரண்டு நாட்கள் விளையாடி வென்றிருக்கிறோம். இந்த தோல்வி இரு விளைவுகளை ஏற்படுத்தும். ஒன்று பீனிக்ஸ்பறவை போல மீண்டெழுந்து சென்ற முறை போன்ற எழுச்சி பெறும். அல்லது பாகிஸ்தானோடு சேர்ந்து வீடு திரும்பும். நான் முன்னது நடக்கும் என நம்புகிறேன். பார்ப்போம்.
//
வாங்க முத்துக்குமரன்..நீங்களாவது நமக்கு ஆதரவா பேசறீங்களே. இங்க வர பின்னூட்டத்தை பார்த்தா எல்லாரும் காய்ச்சி எடுக்கறாங்க :(
Mani,
I see your disappointment :( Like you, I am also !
But the essence is that if you lose 5 wickets for 4 runs, you do not deserve to win !!!
Like Pakistan, India will be knocked out by Srilanka, so better be prepared !
Sorry to tell this.
//அவரோட ஃபுட்வொர்க், Body Language எதுவுமே கான்ஃபிடண்டா இல்லை.//
அவர் மட்டும் இல்லங்க. எல்லா வீரர்களும் கான்ஃபிடண்டா இல்லை. அப்புறம், பொருப்பின்மை. உதா, க்ரீஸ் அருகில் வந்து கூட பேட்டை அந்திரத்தில் வைத்திருந்தது. இரண்டு ஆட்டங்களுக்கு முன் தான் இந்த தப்பை செய்து ரண்-அவுட் ஆனார். இன்னுமா புத்தி வரவில்லை?
http://vettipaiyal.blogspot.com/2007/03/blog-post_17.html
//Mani,
I see your disappointment :( Like you, I am also !
But the essence is that if you lose 5 wickets for 4 runs, you do not deserve to win !!!
Like Pakistan, India will be knocked out by Srilanka, so better be prepared !
Sorry to tell this.
//
வாங்க பாலா, ஒருமூலைல அந்த பயம் இருந்தாலும், இன்னும் கொஞ்சம் நம்பிக்கை ஒட்டிகிட்டிருக்கு. பார்ப்போம் :)
//அவர் மட்டும் இல்லங்க. எல்லா வீரர்களும் கான்ஃபிடண்டா இல்லை. அப்புறம், பொருப்பின்மை. உதா, க்ரீஸ் அருகில் வந்து கூட பேட்டை அந்திரத்தில் வைத்திருந்தது. இரண்டு ஆட்டங்களுக்கு முன் தான் இந்த தப்பை செய்து ரண்-அவுட் ஆனார். இன்னுமா புத்தி வரவில்லை?
//
வாங்க சீனு,
சேவக்கை பத்தி பேசவெ வெறுப்பா இருக்கு.He is not fit to be even in a local team !
யாகெமெல்லாம் செய்வது வீண் வேலைன்னு இந்த போட்டியில் தோற்றது மூலம் தெரிகிறது. இழந்த பார்மை மீட்க யாகம் உதவாது என்பதையே இந்த தோல்வி தரும் பாடமாக நான் ஏற்றுக்கொள்வேன்.
thanks anna...thank u very much
மணி
இந்த துக்கத்துல நீங்க பதிவு போட்டிருக்க மாட்டீங்கன்னு நெனச்சேன்... நல்ல தான் analyze பண்ணியிருக்கீங்க.. நமக்கு தெரியிர இந்த மாதிரி சில costly mistakes (selecting to bat,including out-of-form shewag,players like sachin/dravid getting subdued to a not-so-good bowling attack,no commitment in field etc)
ஏன் இவங்களுக்கு தெரிய மாட்டிங்குது? எதிர்பாக்குற நம்ம தான் பாவம் :(
//
உங்களுக்கெல்லாம் இரண்டே வார்த்தைகள் - GET REAL!!!
//
ஹ்ம்ம்
புத்திக்கு தெரியுது கஷ்டம்னு
மனசு கேக்குது சூப்பர் எட்டுனு
என்ன பண்ண , இப்பிடி அடுத்தவன் தோத்து நம்ம முன்னேறியே பழகிட்டோம் !!!
இப்ப கூட ஒண்ணும் மோசம் இல்லை. முடிவா, சாப்பல், த்ராவிட்கிட்ட இனிமே ஷேவாக் உலகக் கோப்பைல கிடையாதுன்னு சொல்லிட்டு, கார்த்திக்கை சேர்த்துகிட்டு ஆடினா, நாம நிலைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு.
செய்வாங்களா?
well I would say that everyone underestimated Bangladesh ( especially the decision at toss). I was expecting a tight contest but did not expect India to lose. To be honest they outplayed us in all departments.
This is not the end of road for India but India must play out of their skins to reach super8. We usually played well when we are in a tight situation and it is like we have to reach the score within 35 overs for better NRR kind of situation.
I think we should try to reach the super8 by beating srilanka with better NRR. Bangladesh have match against Bermude so we have to target Lanka, but only something close to a miracle only can take India to super8. my bet is we have only 25% chance :((
BTW, shockingly Bob woolmer has died :(
//ஒருவேளை இந்தியா அடுத்தடுத்த சுற்றுக்கு போய் கோப்பையவே ஜெயிச்சாலும், இந்த தோல்வியோட தழும்பு ரொம்ப நாளைக்கு எல்லாரோட மன்சுலயும் இருக்கும்.//
ரொம்ப சரி மணிகண்டன்... இந்த தோல்வி நிச்சயம் ஆறாத் தழும்பு தான்
//யாகெமெல்லாம் செய்வது வீண் வேலைன்னு இந்த போட்டியில் தோற்றது மூலம் தெரிகிறது. இழந்த பார்மை மீட்க யாகம் உதவாது என்பதையே இந்த தோல்வி தரும் பாடமாக நான் ஏற்றுக்கொள்வேன்.
//
ஓ அந்தக்கூத்து வேற நடந்துதா?
//இந்த துக்கத்துல நீங்க பதிவு போட்டிருக்க மாட்டீங்கன்னு நெனச்சேன்... நல்ல தான் analyze பண்ணியிருக்கீங்க.. நமக்கு தெரியிர இந்த மாதிரி சில costly mistakes (selecting to bat,including out-of-form shewag,players like sachin/dravid getting subdued to a not-so-good bowling attack,no commitment in field etc)
ஏன் இவங்களுக்கு தெரிய மாட்டிங்குது? எதிர்பாக்குற நம்ம தான் பாவம் :(
//
துக்கத்தால தாங்க பதிவே போட்டேன். அப்படியாவது ஒரு வடிகால் கிடைக்குமேன்னு.
நிஜமாவே எதிர்பார்க்கற நம்மளை மாதிரியான கோடிக்கணக்கான ரசிகர்கள் தான் பாவம்
//இப்ப கூட ஒண்ணும் மோசம் இல்லை. முடிவா, சாப்பல், த்ராவிட்கிட்ட இனிமே ஷேவாக் உலகக் கோப்பைல கிடையாதுன்னு சொல்லிட்டு, கார்த்திக்கை சேர்த்துகிட்டு ஆடினா, நாம நிலைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு.
செய்வாங்களா?
//
செய்யனும் SK ஐயா. WE ARE IN A DO OR DIE SITUATION NOW.
//well I would say that everyone underestimated Bangladesh ( especially the decision at toss). I was expecting a tight contest but did not expect India to lose. To be honest they outplayed us in all departments.
This is not the end of road for India but India must play out of their skins to reach super8. We usually played well when we are in a tight situation and it is like we have to reach the score within 35 overs for better NRR kind of situation.
I think we should try to reach the super8 by beating srilanka with better NRR. Bangladesh have match against Bermude so we have to target Lanka, but only something close to a miracle only can take India to super8. my bet is we have only 25% chance :((
BTW, shockingly Bob woolmer has died :(
//
வாங்க அனானி. நீங்க சொல்றபடி பெர்முடாவையும் இலங்கையையும் இந்தியா மிகப்பெரும் வித்தியாசத்தில வெற்றி பெறனும்.ஒருவேளை இலங்கையும் பங்களாதேஷ் கிட்ட தோத்தா, இந்தியா-இலங்க ஆட்டம் டிசைடர் மாதிரி ஆயிடும். ரன்ரேட் எல்லாம் வேணாம்.அதுல ஜெயிக்கறவங்க அடுத்த சுற்றுக்கு போகலாம்.
////ஒருவேளை இந்தியா அடுத்தடுத்த சுற்றுக்கு போய் கோப்பையவே ஜெயிச்சாலும், இந்த தோல்வியோட தழும்பு ரொம்ப நாளைக்கு எல்லாரோட மன்சுலயும் இருக்கும்.//
ரொம்ப சரி மணிகண்டன்... இந்த தோல்வி நிச்சயம் ஆறாத் தழும்பு தான்//
ஆமாம் தல, எப்ப பங்களாதேஷோட ஆடுனாலும், இந்த போட்டி நினைவுக்கு வரும். நாம மறந்தாலும், வர்ணனையாளர்கள் ஞாபகப்படுத்திடுவாங்க :)
பாக்கிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மரின் மரணத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :(
yov 60,70 runs difference lam kanadhu ..nama ninaicha indha match i jeyichrukalam ..but nambikai illma adinaanga
2000 la nu ninaickane india oru matchula 183 ku all out avanga appuram srilanka kooda india padu payangara vilayaadi avangalai 90 runks ku aal out akkuvanaga
srinathu mari oru fat bowler venuma ya ..ennaya bowlign iruku nama kitta ..mudhall iavangalai advertisemnt la nadikka vidama ban pannanumnum
india ngura nadu autrlaia mari cricket i oru game a madhikira nadu illai ..idhu unarchi poorvamana nadu ..
and pakistan thothadhuku idhuvey pakistan palaya nilamaila irundha (endha araiyala probs illam irundha)ella players kum srupaala adi vilum
dhoni oda bad keeping , zaheer and agarkar oda kevalama na bowling and matamana fielding ..pointing sonnadhu unmai agiduchu
eppadiyum kopai aus or south afr ku than
nama 200 runs diffrence la jeyikanum and bangalades niachyma srilanka a kitta thokkum ..nama bermuda kuda jeyipom but srilanka kuda thorpom
apppuram airport la indian team return agum podhu periya kalavarame nadaka poguthu
என்னங்கையா இப்படி கவுத்திட்டாங்க!!!
எல்லாம் வாட் மோரின் கைங்கரியம்.
2011 கப்பை கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள்.
திறமையால் பெற்ற வெற்றி.
they dominated in all department.
they did not give any chance to india.
india :: very very poor fielding. they missed tow or three catches.
நல்ல ஆரயிறின்க !!!
//டாஸை ஜெயிச்சு பேட்டிங் எடுத்தது. எந்த காரணத்துக்காக திராவிட் அந்த முடிவை எடுத்தாருன்னு தெரியலை.///
batting practise க்காக இருக்கலாம்
பங்காளதேஸ் டொஸ் வெண்டு துடுப்பாட்டத்தை fielding எடுத்து இருந்த?
இவங்க கிட்ட fielding இல்ல, positive thinking இல்ல
ஆனாலும் finalக்கு போவங்க எண்டு
நம்புறேன் :)))!!!
கார்த்திக்,
நான் 60,70 ரன்னுனு சொல்றது இலங்கை கிட்ட. பெர்முடா இந்த கணக்குல வராலை. பெர்முடா கிட்ட மத்த ஆனிகள் மாதிர் ஒரு 200 ரன் வித்தியாசத்திலயாவது ஜெயிச்சாதான் உண்டு.
அகர்கர்கு பதில பதானை ட்ரை பண்ணலாம். இந்த பவுலிங் மற்றும் ஃபீல்டிங் வச்சுகிட்டு இலங்கைய ஜெயிக்கறது கஷ்டம்னாலும், Do or Dieனு வறப்ப நம்ம பசங்க நல்லாவே ஆடுவாங்க. பார்க்கலாம்.
//ஆனாலும் finalக்கு போவங்க எண்டு
நம்புறேன் :)))!!!
//
திலகன் நானும் அதே :)
Post a Comment