Tuesday, March 13, 2007

பாகிஸ்தான் பரிதாப தோல்வி ! ! வீடியோ மற்றும் அலசல்


இன்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் 54 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகளிடம் பரிதாபமாக தோற்றது.







9வது உலகக்கோப்பையின் முதல் போட்டி இன்று ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் நடந்தது. டாஸில் ஜெயித்த இண்சமாம் மேற்கிந்தியத்தீவுகளை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த உலகக்கோப்பையின் முதல் பந்தை பாகிஸ்தானின் உமர் குல் வீசினார். கிறிஸ் கேல் அதை மிட்-விக்கெட் பகுதிக்கு தட்டி ஒரு ரன் எடுத்தார். தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடிய கேல் 6 பந்துகளில் 2 ரன் எடுத்திருந்த பொழுது, 3வது ஓவரில் குல்லின் ஆஃப்-சைடில் அளவு குறைவாக விழுந்து வெளியே ஸ்விங்காகி சென்ற பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரையடுத்து களமிறங்கிய சர்வான் முதல் பந்திலேயே ஸ்லிப்பில் நின்றிருந்த யூனிஸ்கானிடம் கேட்ச் கொடுத்தர். மிகச் சுலபமான கேட்சை யூனிஸ் தவறவிட்டார். அந்த கேட்ச் பிடிக்கப்பட்டிருந்தால் ஆட்டத்தின் போக்கு மறியிருக்கக் கூடும். அதன் பின் சந்தர்பாலும் சர்வானும் ஜோடி சேர்ந்து ஆடினர். ஒருமுனையில் சர்வான் பந்தை பவுண்டரிக்கு விரட்டிக்கொண்டிருக்க மறுமுனையில் சந்தர்பால் மிகவும் பொறுமையாக ஆடினார். அதனால் அணியின் ரன்ரேட் மிக குறைவாகவே இருந்தது. 20வது ஓவரில் இஃப்திகரின் பந்தில் கீப்பர் அக்மலிடம் கேட்ச் கொடுத்து சந்தர்பால் அவுட்டானார். அவர் மிக மெதுவாக் விளையாடி 63 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்பொழுது அணியின் ஸ்கோர் 20 ஓவர்களில் 64 மட்டுமே. அதன் பின் 24வது ஓவரில் சர்வானும் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி திரும்பினார். அவர் 65 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தார்.









24 ஓவர்களில் 77/3 என்ற மோசமான் நிலையில் லாரவுடன் சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்தார். அதன் பின் ஆட்டம் சூடு பிடித்தது. சாமுவேல்ஸ் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரும், ரன்ரேட்டும் உயர வழி செய்தார். இருவரும் சேர்ந்து 16 ஒவர்களில் 91 ரன்கள் சேர்த்தனர். மேற்கிந்திய அணி சொற்ப ரன்களுக்கு மீண்டும் ஆட்டமிழக்கும் என்ற நிலையில் இருந்து சுதாரித்து ஆடத்தொடங்கியது. அணியின் ஸ்கோர் 168ஆக உயர்ந்த பொழுது ஹஃபீஸின் பந்தை லாரா ஸ்வீப் செய்ய முயன்று கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சாமுவேல்ஸும், ராம்தினும் அவுட்டாகி திரும்பினர். லாரா 37 ரன்களும் சாமுவேல்ஸ் 63 ரன்களும் அடித்தன்ர். பின்னர் களமிறங்கிய ஸ்மித் அதிரடி ஆட்டம் ஆடினார். 15 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் 2 சிக்ஸ்களுடன் 32 ரன்கள் அடித்தார். மற்றொரு ஆட்டக்காரரான் ப்ரேவொ 17 பந்துகளில் 16 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரின் முயற்சியால் மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்களில் 241 எனற கெளரவமான் ஸ்கோரை அடித்தது. கடைசி பத்து ஓவர்களில் 85 ரன்கள் அடிக்கப்பட்டது. குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் 57 ரன்கள் அடித்தனர்.






பாகிஸ்தானின் இஃப்திகர் அஞ்சும் 10 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்தபடியாக் உமர் குல் மற்றும் ஹஃபீஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாகிஸ்தான் மொத்தம் 11 உதிரிகளை விட்டுக்கொடுத்தது. சர்வானின் தவற விடப்பட்ட கேட்ச் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

50 ஓவர்களில் 242 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது பாகிஸ்தான். பவல் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தை ஸ்கொயர்-லெக் திசையில் ஸிக்ஸ் அடித்து இம்ரன் நசீர் தனது கணக்கையும் அணியின் கணக்கையும் துவக்கினார். துரதிர்ஷ்டவசமாக அடுத்த பந்திலேயே ட்ரைவ் செய்ய முயன்று கீப்பர் ராம்தினிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 4வது ஓவரில் அணியின் ஸ்கோர் 17ஆக இருந்தபொழுது, உயரம் அதிகமாக வந்த பந்தை ஹுக் செய்ய முயன்று கீப்பரிடம் கேச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினனர் யூனிஸ்கான். அவர் 13 பந்துகளில் 9 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த யூசுஃபும், ஹஃபீசும் பொறுமையாக ஆடி அணியின் ஸ்கோரை 10 ஓவர்களில் 39 ரன்களாக உயர்த்தினர். தலைக்கு மேல் தூக்கி அடிக்க முயன்று மிட்-ஆனில் கேட்ச் கொடுத்து அவுட்டானர் ஹஃபீஸ். அதன்பின் இண்சமாமும், யூசுஃபும் சேர்ந்து நாலாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். இருந்த போதிலும் அணியின் ரன்ரேட் மிகக்குறைவாகவே இருந்தது. 29 ஓவர்களில் 99 ரன்கள். தேவைப்படும் ரன்ரேட் ஏறக்குறைய 6.7 ஆக இருந்தது. அப்பொழுது அளவு குறைவாக விழுந்து எழும்பி வந்த பந்தை தடுத்தாட முயன்று கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர் யூசுஃப்.







அதன்பின் விக்கெட்டுகள் மடமடவென சரிய ஆரம்பித்தன. யூசுஃப் 37 ரன்களும் இண்சமாம் 36 ரன்களும் அடித்தனர். 33 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் என்ற பரிதாப நிலையில் தத்தளித்தது பாகிஸ்தான். ஒருமுனையில் ஷோஹைப் மாலிக் அடித்து ஆடிய பொழுதிலும் மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்ததால் தோல்வியை நோக்கி வேகமாக முன்னேறியது பாகிஸ்தான். 187 ரன்கள் இருந்த பொழுது கடைசி மூன்று விக்கெட்டுகளையும் இழந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. மாலிக் 54 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார். மேற்கிந்தியத்தீவுகளின் ஸ்மித் மற்றும் ப்ரேவோ தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மற்றும் 15 பந்துகளில் 32 ரன்கள் அடித்த காரணத்திற்காக ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.




பயிற்சி போட்டிகளின் பொழுது இலக்கின்றி தடுமாறிய மேற்கிந்திய அணி சரியான நேரத்தில் சிறப்பாக ஆடி 2 புள்ளிகளை வென்றுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் (அயர்லாந்து, ஜிம்பாப்வே) வெற்றி பெற்றால் பாகிஸ்தான் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும். புது விதிகளின்படி மேற்கிந்திய அணியைவிட புள்ளிகள் குறைவாக இருந்தாலும், தரவரிசைப்படி முன்னிலையில் உள்ளதால் D1 ஆகவே சூப்பர்8 சுற்றுக்கு செல்லும். இருப்பினும் மற்றொரு புது விதியின்படி, முதல் சுற்றில் தகுதிபெறும் மற்றொரு அனிக்கு எதிராக எடுத்த புள்ளிகள் மட்டுமே சூப்பர்8ல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், மேற்கிந்திய அணி 2 புள்ளியுடனும், பாகிஸ்தான் 0 புள்ளியுடனும் சூப்பர் 8க்கு செல்லும். இது பாகிஸ்தான் அணி அரை-இறுதிக்கு தகுதி பெற பின்னடைவாகவே இருக்கும். இதே காரணத்தால் இந்தியா இலங்கையை ஜெயிக்க வேண்டியது முக்கியமாகும். சூப்பர்8க்கு தகுதி பெற்றாலும், முதல் சுற்றில் பெறும் இவ்விரு புள்ளிகள் அரை-இறுதிக்கு செல்லும் அணிகளை முடிவு செய்வதில் முக்கிய பங்காற்றும்.



விரிவான ஸ்கோர்கார்ட்.




இந்த போட்டியின் வீடியோ தொகுப்பு (Highlights Runtime 1 Hr 17 Mins)





















போட்டிகள் நடைபெறும்பொழுது நேரடியாக(Live) பார்த்து ரசிக்க
இங்கே க்ளிக்கவும்

22 comments:

தமிழ்பித்தன் said...

அப்ப பாகிஸ்தான் தோற்றதற்கு சுவீட் கிடையாதா

Ram Ravishankar said...

your passion for cricket is contageous! மிக்க நன்றி!

Naufal MQ said...

அழகான வர்ணனை நண்பரே. வீடியோவிற்கும் நன்றி. :)

Prabu Raja said...

2 points carry over aguma....
intha maathiri rules vera irukka..
Thanks for the introduction.

தென்றல் said...

நல்ல அலசல், மணிகண்டன்!

//
புது விதிகளின்படி மேற்கிந்திய அணியைவிட புள்ளிகள் குறைவாக இருந்தாலும், தரவரிசைப்படி முன்னிலையில் உள்ளதால் D1 ஆகவே சூப்பர்8 சுற்றுக்கு செல்லும்
//

தெளிவு படுத்தியதற்கு நன்றி!

மணிகண்டன், உண்மைய சொல்லுங்க.... நீங்க office போனீங்களா..இல்லையா? rediff prem panickar க்கு போட்டியா வர்ணனை/அலசல் இருக்கு.. :)
இதே போல் தொடர வாழ்த்துக்கள்!!

Mani said...

கலக்கறிங்க மணிகண்டன்!

மணிகண்டன் said...

//
அப்ப பாகிஸ்தான் தோற்றதற்கு சுவீட் கிடையாதா
//

இந்தியா ஜெயிச்சா தரேங்க :)

மணிகண்டன் said...

//your passion for cricket is contageous! மிக்க நன்றி!

//

நன்றி ரவிசங்கர். பார்த்து இருங்க..உங்களுக்கும் தொத்திக்க போகுது!

மணிகண்டன் said...

//அழகான வர்ணனை நண்பரே. வீடியோவிற்கும் நன்றி. :)

//

மிக்க நன்றி நண்பரே.

மணிகண்டன் said...

//2 points carry over aguma....
intha maathiri rules vera irukka..
Thanks for the introduction.

//

ஆமாங்க பிரபு,, இந்த முறை நெறைய புது விதிகள் அறிமுகப்படுத்தி இருக்காங்க.

மணிகண்டன் said...

//மணிகண்டன், உண்மைய சொல்லுங்க.... நீங்க office போனீங்களா..இல்லையா? rediff prem panickar க்கு போட்டியா வர்ணனை/அலசல் இருக்கு.. :)
இதே போல் தொடர வாழ்த்துக்கள்!!
//

வாங்க தென்றல். நெஜமா போனேங்க. ஆனா அங்கயும் உக்காந்து மேட்ச் தான் பார்த்திட்டு இருந்தேன் :). முக்கியமான போட்டிகளுக்கு எழுத முயற்சி பண்ரேங்க.

மணிகண்டன் said...

//கலக்கறிங்க மணிகண்டன்! //

நன்றி ஜெகன்.

தென்றல் said...

//
இந்தியா ஜெயிச்சா தரேங்க :)
//

அப்படியா ங்க? மார்ச் 17 க்கு என்ன பலகாரம்-னு சொல்லுங்க? என் முகவரிய அனுப்புறேன் ;)

மணிகண்டன் said...

//அப்படியா ங்க? மார்ச் 17 க்கு என்ன பலகாரம்-னு சொல்லுங்க? என் முகவரிய அனுப்புறேன் ;)
//

அல்வா :)

வைசா said...

// அதன்பின் இண்சமாமும், யூசுஃபும் சேர்ந்து நாலாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். இருந்த போதிலும் அணியின் ரன்ரேட் மிகக்குறைவாகவே இருந்தது. 29 ஓவர்களில் 99 ரன்கள். தேவைப்படும் ரன்ரேட் ஏறக்குறைய 6.7 ஆக இருந்தது. //

இதில்தான் பிரச்சனையே. இன்சமாமும் யூசுஃபும் நிறைய தடவைகளில் ஒற்றை ரன்கள் இரண்டு ரன்களாக்க முயற்சிக்கவேயில்லை. இலகுவாக இரண்டு ரன்கள் பெறக்கூடிய சந்தார்ப்பத்திலும் அவர்கள் ஒரு ரன்னுடன் நின்றுவிட்டனர். இதனாலேயே ரன்ரேட் அப்படி உயர்ந்து கொண்டே போயிற்று. அந்த ஒரு ஓவரில் யூசுஃப் ஸ்மித்துக்கு எதிராக அடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தது போல முட்டாள் அடிகளை முயற்சி செய்து இறுதியில் அவுட்டானார்.

இதுவே பாகிஸ்தானுடைய விதியை நேற்று நிர்ணயித்தது.

வைசா

தென்றல் said...

//
அல்வா :)
//

திருநெல்வேலி காரனுக்கே அல்வா-ங்க?

பங்களாதேஷ்-காரனுங்க குடுக்க போறனு ங்க இந்தியாவுக்கு..?!
[அய்யயோ.... tension ஆயிடாதிங்க, ம்ணிகண்டன்!]

மணிகண்டன் said...

//இதில்தான் பிரச்சனையே. இன்சமாமும் யூசுஃபும் நிறைய தடவைகளில் ஒற்றை ரன்கள் இரண்டு ரன்களாக்க முயற்சிக்கவேயில்லை. இலகுவாக இரண்டு ரன்கள் பெறக்கூடிய சந்தார்ப்பத்திலும் அவர்கள் ஒரு ரன்னுடன் நின்றுவிட்டனர். இதனாலேயே ரன்ரேட் அப்படி உயர்ந்து கொண்டே போயிற்று. அந்த ஒரு ஓவரில் யூசுஃப் ஸ்மித்துக்கு எதிராக அடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தது போல முட்டாள் அடிகளை முயற்சி செய்து இறுதியில் அவுட்டானார்.
//

உண்மை தான் வைசா. ரெண்டு பேரும் ரொம்ப நேரம் விக்கெட்ல இருக்கனும்னு தான் முயற்சி பண்ணாங்களே தவிர அவங்களோட ஒரிஜினல் கேம் ஆடின மாதிரி தெரியலை. இண்சமாம் ரொம்ப சோர்வா வேற தெரிஞ்சாரு. யூசுஃப் அவுட்டான் அந்த ஓவரில நீங்க சொன்ன மாதிரி தேவையில்லாம அடிக்க முயற்சி பண்ணி அந்த ஓவர் முழுதும் தடவிகிட்டே இருந்தாரு. எது எப்படியோ முக்கியமான போட்டில தோத்ததோட பின்விளைவுகள் சூப்பர்8ல தெரியும்!

மணிகண்டன் said...

//பங்களாதேஷ்-காரனுங்க குடுக்க போறனு ங்க இந்தியாவுக்கு..?!
[அய்யயோ.... tension ஆயிடாதிங்க, ம்ணிகண்டன்!]
//

டென்ஷனே ஆகலைங்க.. It's going to be a CAKE WALK for India!

சிவபாலன் said...

Mani,

Good Analysis!!

Thanks for the video!!

மணிகண்டன் said...

//Mani,

Good Analysis!!

Thanks for the video!!

//

மிக்க நன்றி சி.பா

Santhosh said...

மணி,
கலக்கிடிங்க நல்ல வர்ணனை, ஆபீஸே போகலை போல... :))..
//அல்வா :)//
அல்வா யாருக்கு இந்தியாவுக்கா, பங்களாதேசுக்கா இல்ல உங்களுக்கா? :))

மணிகண்டன் said...

//மணி,
கலக்கிடிங்க நல்ல வர்ணனை, ஆபீஸே போகலை போல... :))..
//அல்வா :)//
அல்வா யாருக்கு இந்தியாவுக்கா, பங்களாதேசுக்கா இல்ல உங்களுக்கா? :))

//

இல்லைங்க சந்தோஷ், ஆஃபீஸ் போனேன். அங்கே போய் மேட்ச் பார்த்தேன் :)

அல்வா பங்களாதேஷுக்கு தாங்க :)