Wednesday, April 4, 2007

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ?




கிரிக்கெட்டின் மற்றொரு முகமான Twenty/20 போட்டிகள் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது. அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் தற்பொழுது இந்த போட்டியையும் ஆடுகிறார்கள். பாகிஸ்தான்,இலங்கை,இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் Twenty/20 கோப்பைக்கான உள்நாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இன்னும் அவ்வளவு பிரபலமா ஆகவில்லையெனினும், இதுதான் கிரிக்கெட்டின் எதிகாலம்னு ஒரு பேச்சு இருக்கு. சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணி கூட ஒரு Twenty/20 போட்டியில் விளையாடி ஜெயித்தார்கள். இதுதான் இந்திய அணி ஆடியிருக்கும் ஒரே Twenty/20 போட்டி. தற்பொழுது மண்டல அணிகளுக்கு இடையேயான Twenty/20 போட்டிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஐந்து நாட்கள் தொடர்ந்து ஆடும் டெஸ்ட் போட்டியை பார்க்க பொறுமையில்லாதவர்களுக்கு ஒரு மாற்றாக ஒருநாள் போட்டிகள் இருந்தது. பரபரப்புக்கும், சுவாரசியங்களுக்கும் குறைவில்லாத இப்போட்டிகள் ரசிகர்களை கட்டிப்போட்டது. இன்றைய வேகமான உலகில் ஒருநாள் முழுதும் செலவழித்து ஒரு ஆட்டத்தை ஆடுவதும் அதிகமாகவே தோன்றுகிறது. இதுவே கூட நிறைய நாடுகள் கிரிக்கெட்டில் ஆர்வமில்லாமல் இருப்பதற்கும் ஒரு காரணம். இதற்கெல்லாம் ஒரு தீர்வாக வந்திருப்பதே Twenty/20 போட்டிகள். முதல் அதிகாரபூர்வ Twenty/20 போட்டி இங்கிலாந்தில் 2003ம் ஆண்டு ஆடப்பட்டது. கால்பந்தாட்டம், ஹாக்கி போல இப்போட்டிகளும் குறைவான நேரத்தில் ஆடப்படுகிறது. சுமாராக ஒரு போட்டி மூன்று மணிநேரத்தில் முடிந்துவிடுவது இதன் சிறப்பு.

இப்போட்டிகளை பிரபலப் படுத்துவதன் மூலம் விரைவில் ஒலிம்பிக்கில் சேர்க்க ஐசிசி முயன்று வருகிறது. போட்டிநேரம் காரணமாக ஒலிம்பிக்கில் இடம்பெற முடியாமல் இருந்ததால், மற்ற விளையாடுகள் போல் கிரிக்கெட்டையும் விரைவில் ஆடி முடிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் முதல் Twenty/20 உலக சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இவை அனைத்தும் கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்த ஐசிசி எடுத்து வரும் முயற்சிகள்.

Twenty/20 எப்படி விளையாடப்படுகிறது, அதன் விதிமுறைகள் என்ன என்பவை தெரியாதவர்களுக்காக..

ஒவ்வொரு அணியும் 20 ஓவர்கள் வீசும்.

வழக்கம்போல் ஒவ்வொரு அணியிலும் பதினொன்று வீரர்கள் இருப்பார்கள். ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக நான்கு ஓவர்கள் வீசலாம்.

நோ-பாலுக்கு 2 ரன்கள் கொடுக்கப்படும். அதுமட்டுமன்றி அதற்கடுத்த பந்து 'Free Hit Delivery'யாக எடுத்துக்கொள்ளப்படும். இதில் ரன் அவுட் முறையில் மட்டுமே ஒரு பேட்ஸ்மேனை அவுட்டாக்க முடியும். இது ஒருநாள் போட்டிகளில் இரண்டு நோ-பால் வீசுவதற்கு சமம்.

ஒவ்வொரு அணியும் தங்களது 20 ஓவர்களை 75 நிமிடங்களில் வீசி முடிக்க வேண்டும். அப்படி வீசி முடிக்காவிட்டால், 75 நிமிடங்களுக்குப் பிறகு வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் கூடுதலாக ஆறு ரன்கள் பேட்டிங் டீமுக்கு வழங்கப்படும். பேட்டிங் செய்யும் அணியால் நேரம் விரயமாக்கப்பட்டிருந்தால் கூடுதல் நிமிடங்கள் அளிப்பது குறித்து நடுவர்கள் முடிவெடுக்கலாம்.

தேவையின்றி நேரத்தை வீண் செய்யும் அணியின்(பேட்டிங்/பவுலிங்) ஸ்கோரில் ஐந்து ரன்கள் குறைக்கப்படும்.

முதல் ஆறு ஓவர்களுக்கு இரண்டு தடுப்பாளர்கள் மட்டுமே 30 யார்ட்க்கு வெளியே நிற்க முடியும். அதன் பின் ஐந்து தடுப்பாளர்கள் மட்டுமே எல்லைக்கோட்டில் நிற்க முடியும்.

இரு அணிகளும் சமமான் ரன்கள் எடுத்திருந்தால் Bowl-Out முறையில் வெற்றி பெறும் அணி தீர்மானிக்கப்படும். Bowl-Out பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.



இப்போட்டிகளால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள்..

டெஸ்ட் போட்டிகளில் இருக்கும் தரம் மற்றும் ஜென்டில்மேன்ஷிப் ஒருநாள் போட்டிகளில் குறைந்துவிட்டதாக் ஒரு குற்றச்சாட்டு உண்டு. Twenty/20 போட்டிகளால் அது மேலும் குறைய வாய்ப்புள்ளது.

50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளின் வேகத்திற்கேற்ப வீரர்கள் குறைந்தது 30 ஓவர்களாவது (முதல் 20 மற்றும் கடைசி 10) அடித்து ஆட வேண்டிய சூழ்நிலை உள்ளது. 20 ஓவர்கள் கொண்ட இப்போட்டிகளால் தொடக்கத்திலிருந்து இறுதி வரை அடித்து ஆடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது கிரிக்கெட்டின் தரத்தை மேலும் குறைக்கக்கூடும்.

நடுவர்களின் பொறுப்பு அதிகரிக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாத அணிகளுக்கு விதிமுறைகள் கடுமையாக இருப்பதால், இதில் முடிவெடுக்க வேண்டிய பொறுப்புள்ள நடுவர்கள் செய்யும் சிறு தவறும் சச்சரவுகளுக்கு வழிவகுக்கும்.

இப்போட்டிகள் பிரபலமடைந்தால், காலம் காலமாக ஆடப்பட்டு வரும் டெஸ்ட் போட்டிகளுக்கான வரவேற்பு குறையும். இது காலப்போக்கில் டெஸ்ட் போட்டிகளே இல்லாத நிலையை கூட உருவாக்கக்கூடும்.இதில் ஒருநாள் போட்டிகளும் விதிவிலக்கல்ல.


சாதகங்களும் பாதகங்களும் நிறைந்த Twenty/20 போட்டிகள் வெற்றி பெறுமா? காலமும் கிரிக்கெட் ரசிகர்களும் தான் பதில் சொல்ல வேண்டும்.

16 comments:

அகில் பூங்குன்றன் said...

டெஸ்ட் மேட்ச் க்குன்னு நிறைய இரசிகர்கள் இருக்காங்க. அவர்களால் டெஸ்ட் மேட்ச் என்றைக்கும் இருக்கும்.

எனக்கு டெஸ்ட் மேட்ச்தானுங்க புடிக்கும். அது என்ன்வோ தெரியல. ஒண்டெ மேட்ச் டென்சன ஜாஸ்தி பன்னுது. ஏற்கனவே பொட்டி தட்டி, தட்ட வெச்சு பயங்கர டென்சன்.

மு.கார்த்திகேயன் said...

விடாம கிரிக்கெட் பத்தி எழுதி தள்றீங்களே, மணி..

எப்படி உங்களால மட்டும் முடியுது..

மு.கார்த்திகேயன் said...

தாங்கள் சொல்வது போல இந்த புதுமுறையில் தரம் குறைந்தாலும், சுவாரஸ்யம் கூடும் என்று தோன்றுகிறது, மணி..

மணிகண்டன் said...

//டெஸ்ட் மேட்ச் க்குன்னு நிறைய இரசிகர்கள் இருக்காங்க. அவர்களால் டெஸ்ட் மேட்ச் என்றைக்கும் இருக்கும்.
//

உண்மை தான் அகில், ஆனா மத்தவங்க கிட்ட இப்போ இருக்க வரவேற்பு இருக்குமானு தெரியலை.

மணிகண்டன் said...

//விடாம கிரிக்கெட் பத்தி எழுதி தள்றீங்களே, மணி..

//

எதோ தெரிஞ்சதையாவது எழுதுவோம்னு தான் கார்த்தி. சீக்கிரமா இதை விட்டு வெளியே வந்து மத்த விஷயங்களையும் எழுத ஆரம்பிக்கனும்.

மணிகண்டன் said...

//தாங்கள் சொல்வது போல இந்த புதுமுறையில் தரம் குறைந்தாலும், சுவாரஸ்யம் கூடும் என்று தோன்றுகிறது, மணி..//

சுவாரசியம் நிச்சயமா கூடும் கார்த்தி. ஆனா காட்டான் மாதிரி அடிக்கிறான்னு சொல்வாங்களே..அந்த மாதிரி ஆளுங்க அதிகமாயிடுவாங்க.

Avanthika said...

அண்ணா ரொம்ப நாளா இந்த ஒன் டே மாட்ச் பத்தி இப்படி சொல்லீட்டு இருக்காங்க..ஆனா இது தான் அடிக்கடி நடக்குது...young generation கூட இந்த ஒன் டே கல்ச்சர் பார்த்து பார்த்து, அவங்களுக்கு டெஸ்ட் மேட்சோட importance தெரியாம போயிடும் இல்லண்ணா...அவங்க விளையாட வந்தாகூட பெருசா டெஸ்ட் மேட்ச்ல ஒரு இன்ட்ரெஸ்ட் இல்லாம தான் வருவாங்க

Naufal MQ said...

கிரிக்கெட் என்பது, பந்துவீச்சு / துடுப்பாட்டம் இரண்டுக்கும் சாதகமாக இருக்க வேண்டும். இதில் ஒருநாள் போட்டிகள் ஏறக்குறைய பந்துவீச்சை நாசப்படுத்திவிட்டது. துடுப்பாட்டம் மட்டுமே ஒருநாள் கிரிக்கெட் என்ற நிலை வந்துவிட்டது. இதில் இந்த 20/20 வேறு. ஹும் கிரிக்கெட் அழியப்போகிறதோ என்ற பயம் எனக்கு.

என்னதான் சொல்லுங்க, டெஸ்ட் மேட்சில் உள்ள க்ளாஸ், போட்டி வேறெதிலும் இல்லங்க. ஒருநாள் போட்டிகளில் கூட அதிர்ஷ்டம் இருந்தால் வென்று விடலாம். ஆனால், டெஸ்டில் அப்படி இல்லை. அது ஒரு ரியல் டெஸ்ட். நான் எப்பவும் டெஸ்ட் மேட்ச் ரசிகனுங்கோ. அதுதான் ரியல் கிரிக்கெட். அங்கேதான் திறமைக்கு மதிப்பு.

மணிகண்டன் said...

//அவங்க விளையாட வந்தாகூட பெருசா டெஸ்ட் மேட்ச்ல ஒரு இன்ட்ரெஸ்ட் இல்லாம தான் வருவாங்க
//

ஆமாம் சகோதரி. இப்ப ஆடவர நிறைய வீரர்களுக்கு இன்னும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏத்தமாதிரி தங்களை மாத்திகிட்டு ஆட தெரியறதில்லைங்கறது உண்மை

மணிகண்டன் said...

//என்னதான் சொல்லுங்க, டெஸ்ட் மேட்சில் உள்ள க்ளாஸ், போட்டி வேறெதிலும் இல்லங்க. ஒருநாள் போட்டிகளில் கூட அதிர்ஷ்டம் இருந்தால் வென்று விடலாம். ஆனால், டெஸ்டில் அப்படி இல்லை. அது ஒரு ரியல் டெஸ்ட். நான் எப்பவும் டெஸ்ட் மேட்ச் ரசிகனுங்கோ. அதுதான் ரியல் கிரிக்கெட். அங்கேதான் திறமைக்கு மதிப்பு.
//

முன்னெல்லாம் ஒரு நாட்டுக்கு ஆடப்போனா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆடிட்டு வருவாங்க. சமீபகாலமா வெறும் ஒருநாள் போட்டி மட்டும் ஆடிட்டு திரும்பிடறாங்க. திறமையும் பொறுமையும் இருக்கறவங்க மட்டுமே டெஸ்ட்ல சாதிக்க முடியும் அதனால தான் அதோட தரமும் நல்லா இருக்கு.

Naufal MQ said...

என்னைப் பொறுத்தவரை 20/20 கிரிகெக்ட்டில் பரவி வரும் ஒரு புற்று நோய். இப்போவே அதை நிறுத்துனாத்தான் விடிவு.

A Simple Man said...

என்னோட ஓட்டும் டெஸ்ட் மேட்சுக்குத்தான்..
20/20 என்பது கிரிக்கெட் அழிவதற்கான ஆரம்பமே..

தென்றல் said...

/Twenty/20 எப்படி விளையாடப்படுகிறது, அதன் விதிமுறைகள் ... /

interstingஆ இருக்கும்போல தெரியுதே?

/என்னதான் சொல்லுங்க, டெஸ்ட் மேட்சில் உள்ள க்ளாஸ், போட்டி வேறெதிலும் இல்லங்க. .... ஆனால், டெஸ்டில் அப்படி இல்லை. அது ஒரு ரியல் டெஸ்ட்...
20/20 கிரிகெக்ட்டில் பரவி வரும் ஒரு புற்று நோய்.
/
பெரியவங்களாம் என்ன பேசிறீங்க-னு வந்தேன்...ரொம்ப technicalஆ இருக்கு...

சரி..அப்புறமா வரேன் ;)

மணிகண்டன் said...

//என்னைப் பொறுத்தவரை 20/20 கிரிகெக்ட்டில் பரவி வரும் ஒரு புற்று நோய். இப்போவே அதை நிறுத்துனாத்தான் விடிவு.//

நிச்சயமா இது இந்தியால அவ்வளவு பிரபலமாகாதுன்னு தாங்க தோனுது. இந்தியால போணி ஆகலைன்னா தன்னால இதோட தாக்கம் குறைஞ்சிடும். கிரிக்கெட்டோட முக்கிய வருமான மையமே இந்தியா தான..

மணிகண்டன் said...

//என்னோட ஓட்டும் டெஸ்ட் மேட்சுக்குத்தான்..
20/20 என்பது கிரிக்கெட் அழிவதற்கான ஆரம்பமே..//

அபுல், எனக்கென்னவோ இது கொஞ்சநாள்ல வரவேற்பை இழந்துடும்னு தோனுது. கவலை வேண்டாம்.

மணிகண்டன் said...

//பெரியவங்களாம் என்ன பேசிறீங்க-னு வந்தேன்...ரொம்ப technicalஆ இருக்கு...
//

ரொம்ப நக்கலடிக்கிறிங்க தென்றல்..