Monday, April 2, 2007

நாளைய தலைப்புச் செய்திகள்



நாள் : ஏப்ரல் 3 , 2023

27 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு முற்படுத்தப்பட்டவர்கள் போராட்டம்.

இன்று 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்

இது ஒரு கண்துடைப்பு பட்ஜெட் - அதிமுகவின் தலைவர் டி.டி.வி தினகரன் பேட்டி

2026ல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் - காங்கிரஸ் தலைவர் கார்த்திக் சிதம்பரம் பேட்டி.

சினிமாவில் இரத்தத்தை காண்பிக்கக்கூடாது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி உத்தரவு

இந்திய வேலைகளை அமெரிக்காவுக்கு அவுட்சோர்சிங் செய்வதை எதிர்த்து இந்திய கனினிப் பொறியாளர்கள் கட்சி போராட்டம்.

தனுஷ்-ஐஸ்வர்யா மகனும், ஜோதிகா-சூர்யா மகளும் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்.

தண்ணீரின் விலை இன்று 24 ரூபாய் உயர்ந்து லிட்டருக்கு 865 ரூபாயாக இருந்தது.

தொடர்ந்து ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையிலிருந்து இந்தியா முதல் சுற்றில் வெளியேறியது.

பெர்முடாவுடனான நல்லுறவை வளர்க்கும் முயற்சியாக, அந்நாட்டிற்கான இந்திய தூதுவராக ஷேவாக் நியமனம்.

எல்லாம் ஒரு கற்பனைதாங்க :) யாருக்கு தெரியும் எதாவது நடந்தாலும் நடக்கலாம்.

டிஸ்கி : எல்லாம் ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது தாங்க. எதாவது முத்திரை குத்திடாதீங்க :)

19 comments:

-L-L-D-a-s-u said...

தொடர்ந்து ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையிலிருந்து இந்தியா முதல் சுற்றில் வெளியேறியது.//

இதுதானே நீங்க சொல்லவந்ததில் முக்கியமான மேட்டர்..
நல்லாருக்கு

தென்றல் said...

கற்பனை மாதிரி தெரியலையே, மணிகண்டன் ;)?

/தொடர்ந்து ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையிலிருந்து இந்தியா முதல் சுற்றில் வெளியேறியது.
/
விமோசனமே இல்ல-னு சொல்லுங்க..!

பொன்ஸ்~~Poorna said...

நல்ல கற்பனை :)

மணிகண்டன் said...

//இதுதானே நீங்க சொல்லவந்ததில் முக்கியமான மேட்டர்..
நல்லாருக்கு
//

ஆமாங்க..ஆனா விளையாட்டு செய்திகள் கடைசியா தான வரும்..அதுக்குதான் அந்த பில்டப் :)

மணிகண்டன் said...

//கற்பனை மாதிரி தெரியலையே, மணிகண்டன் ;)?
//

கற்பனை தாங்க தென்றல், அடுத்த உலகக்கோப்பை நம்ம ஊருல நடக்குது.அதனால் இந்தியா எப்படியும் அடுத்த சுற்றுக்கு போயிடும் :)

மணிகண்டன் said...

//நல்ல கற்பனை :)

//
ரொம்ப நன்றி யானையக்கா :)

Naufal MQ said...

//தொடர்ந்து ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையிலிருந்து இந்தியா முதல் சுற்றில் வெளியேறியது.
//

சச்சின் எத்தனை ரன்?

Anonymous said...

இந்தியா எப்படியும் அடுத்த சுற்றுக்கு போயிடும்

adapppppavi.. Innum Thirunthalya nee

LLDasu

Santhosh said...

மணி வழக்கம் போல கலக்கிட்டிங்க.

//
தொடர்ந்து ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையிலிருந்து இந்தியா முதல் சுற்றில் வெளியேறியது.

பெர்முடாவுடனான நல்லுறவை வளர்க்கும் முயற்சியாக, அந்நாட்டிற்கான இந்திய தூதுவராக ஷேவாக் நியமனம்.
//
எங்க போனாலும் இங்க வந்துடுறான்யா இந்த ஆளு. இந்தியா டீமுல இவரை சேர்த்தால் தான் அடங்குவார் போல. யாராச்சும் இதுக்கு ஒரு வழி பண்ணுங்கப்பா.

Santhosh said...

//இந்தியா எப்படியும் அடுத்த சுற்றுக்கு போயிடும்

adapppppavi.. Innum Thirunthalya nee

LLDasu//

:))

சிவபாலன் said...

//தொடர்ந்து ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையிலிருந்து இந்தியா முதல் சுற்றில் வெளியேறியது.//

இது பன்ச்..

மணி, ஆனாலும் இந்திய அணியை அநியாத்திற்கு ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க..

மணிகண்டன் said...

//சச்சின் எத்தனை ரன்?
//

வழக்கம் போல் முட்டை :)

மணிகண்டன் said...

//adapppppavi.. Innum Thirunthalya nee
//

:)

மணிகண்டன் said...

//எங்க போனாலும் இங்க வந்துடுறான்யா இந்த ஆளு. இந்தியா டீமுல இவரை சேர்த்தால் தான் அடங்குவார் போல. யாராச்சும் இதுக்கு ஒரு வழி பண்ணுங்கப்பா.
//

என்னங்க பண்ரது கழுதை கெட்டா கிரிக்கெட்டு :)

மணிகண்டன் said...

//மணி, ஆனாலும் இந்திய அணியை அநியாத்திற்கு ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க..
//

எவ்வளவு அடிச்சாலும் அவங்க தாங்கிப்பாங்க சி.பா.

நேட்து நீங்க 2011ல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்னு சற்றுமுன்ல போட்ட பதிவு தான் இந்த பதிவுக்கு இன்ஸ்பிரேஷன் :)

Unknown said...

//தொடர்ந்து ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையிலிருந்து இந்தியா முதல் சுற்றில் வெளியேறியது.

சினிமாவில் இரத்தத்தை காண்பிக்கக்கூடாது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி உத்தரவு//
அதாவது இன்னும் குறைந்தது பதினாறு ஆண்டுகள் வரை அன்புமணிதான்........

கதிர் said...

மணிகண்டன்,

எப்படிங்க இப்படி கற்பனை செய்ய முடியுது!!

நல்லா இருக்கு

மணிகண்டன் said...

//அதாவது இன்னும் குறைந்தது பதினாறு ஆண்டுகள் வரை அன்புமணிதான்........
//

வாங்க சுல்தான், பதினாறு ஆண்டுகள் வரைனு சொல்ல முடியாதே, பதினாறு ஆண்டுகள் கழிச்சு மறுபடியும் அமைச்சரா ஆகலாமே :)

மணிகண்டன் said...

//எப்படிங்க இப்படி கற்பனை செய்ய முடியுது!!
//

எல்லாம் உங்க ஆசி தான் :)