Tuesday, April 3, 2007

ICL Indian Cricket League - சாத்தியமா ? ? ?

இந்தியா உலகக்கோப்பைல தோத்து வெளியே போனாலும் போச்சு ஆளாளுக்கு அடுப்பு பத்த வச்சு அல்வா கிண்ட ஆரம்பிச்சுட்டாங்க. என் பையனை ஓபனிங் இறக்கியிருந்தா நல்லா ஆடியிருப்பான், இந்தியா ஜெயிச்சிருக்கும்னு ஷேவாகோட அப்பா ஒரு அல்வா குடுத்தாரு. முதல் சுற்றுல தோத்து வெளியே வரவரைக்கும் வாய் தொறக்காத சேப்பல், இந்த அணி தேர்வுல உடன்பாடில்லை, மூத்த வீரர்கள் ஒத்துழைக்கலைனு வரிசையா பவுண்ஸர் போட்டுகிட்டு இருக்காரு.

இந்த வரிசைல லேட்டஸ்டா சேர்ந்திருக்கறது ஜீ(Zee) டி.வியை சேர்ந்த சுபாஷ் சந்திரா. Indian Cricket Leagueனு ஒரு புது திட்டத்தை தொடங்கப்போறதா சொல்லியிருக்காரு இவர். இதுக்கான அனுமதி வேண்டி பிசிசிஐக்கு லெட்டர் அனுப்பிச்சிருக்காங்க. பிசிசிஐ செயலாளர் நிரஞ்சன் ஷா இது பத்தி சீக்கிரம் முடிவெடுப்போம்னு சொல்லியிருக்காரு. இந்தியால நடக்கற உள்நாட்டு போட்டிகளான ரஞ்சி, இரானி, சேலஞ்சர் போட்டிகள் மாதிரி இதுவும் நடத்தப்படும்னு சொல்லியிருக்கு Zee டி.வி குழுமம்.

முதல் கட்டமா இதுல 100 கோடி ரூபாய் முதலீடு பண்ணப்போறாங்க. பதினாலு பேர் கொண்ட ஆறு லீக் அணிகள் உருவாக்கப்படும். இதுல ரெண்டு பேர் இந்திய அணியில விளையாடுற இல்ல விளையாடுனவங்க இருப்பாங்க. நாலு வெளிநாட்டு வீரர்களும் எட்டு இளம் வீரர்களும் இருப்பாங்க. கொஞ்ச கொஞ்சமா மூனு வருஷத்துல இது பதினாறு அணிகளா உயர்த்தப்படும். பிசிசிஐ தேர்வுக்குழு தகுந்த வீரர்கள் இல்லாம தடுமாறுறதை மனதில் கொண்டு இது தொடங்கப்பட்டதாகவும், பிசிசிஐ இந்த லீக்ல இருந்து எந்த வீரரை வேணும்னாலும் தேர்வு செஞ்சுக்கலாம்னும் சொல்லியிருக்காங்க (வெளிநாட்டு வீரரை தேர்வு செய்யலாமா ? ). ஒவ்வொரு மாநிலத்திலயும் இதுக்கான திறனாய்வுக்குழு அமைக்கப்ப்படும்னும், ஒவ்வொரு வீரரோட ஆட்ட விவரங்கள், குணாதிசயங்கள் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் பதிவு செய்யப்படும்னும் சொல்லியிருக்காங்க.

The finer points of ICL:

- 6 teams or clubs to play in the opening year
- Talks on with BCCI for gaining access to stadiums
- Executive Board of the league under installation
- Pool of referees and umpires to be created
- Rules committee to form regulations for ICL
- Ombudsman to look into grievances of players
- League to begin with Twenty20 format and move to ODI format
- League to be a joint venture between Essel Group and ILFS Group
- Each team to have a mentor, media manager, psychologist, physio
- Prize money for the winner- US$ 1 million
- League teams to compete with teams internationally
- Number of teams to be increased from 6 to 16 in three years


நன்றி : Cricinfo.com

இப்போ மனசுல தோனுற கேள்விகள் ....

இது போன்ற தனியார் லீக்குகள் தாக்குபிடிப்பது சாத்தியமா?

இப்போட்டிகளுக்கு மக்களிடையே வரவேற்பு இருக்குமா?

பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட பிசிசிஐ இதன் மூலமும் காசு சம்பாதிக்க முயலுமா?

இதில் விளையாட திறமையான வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா? அல்லது பெயருக்காக சோப்ளாங்கி வெளிநாட்டு வீரர்கள் அழைத்து வரப்படுவார்களா?

இந்திய மைதானங்களை வெளிநாட்டு மைதானங்கள் போல் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றி நமது வீரர்களுக்கு பயிற்சி அளிக்காமல், இதுபோல் நூற்றுக்கணக்கான வீரர்களை உருவாக்குவது மட்டுமே பலன் தருமா?

பிசிசிஐன் அணியில் உள்ள வீரர்கள் இதில் விளையாட பிசிசிஐ அனுமதிக்குமா?

இதற்கான விடைகள் கொஞ்ச நாள்ல தெரியும். என்னோட கருத்து இந்த முயற்சி வெற்றி பெறுவது கஷ்டம் தான். இந்திய கிரிக்கெட்டில் புரளும் அரசியல்,மாநிலபற்று மற்றும் பணம் இதையும் சில மாதங்களில் திசை திருப்பி விடும் என்பது தான். இதுல எவ்வளவு திறமையான வீரர்களை உருவாக்குனாலும் பிசிசிஐ தேர்வுக்குழுவில் உள்ள மாநில மற்றும் வட்டார பாசம் அதை ஓரம்கட்டிவிடும்.

28 comments:

நாமக்கல் சிபி said...

இன்னொரு கிரிக்கெட் பதிவு வந்தா சென்னைக்கு ஆட்டோ பிடித்து வந்து உம்மை என்ன செய்வேன் என்றே தெரியாது!

ஆமா! நீங்க சென்னைலதான இருக்கீங்க?

மணிகண்டன் said...

ஐயா சிபியாரே, மன்னிச்சுக்குங்க. உலகக்கோப்பை முடியற வரைக்கும் தான் இந்த இம்சை. அதுவரைக்கும் பொறுத்துக்கோங்க.

//ஆமா! நீங்க சென்னைலதான இருக்கீங்க?
//
அப்பாட தப்பிச்சேன்..நான் சென்னைல இல்லையே :)

enRenRum-anbudan.BALA said...

Mani,

Let this system come into effect first. Let us watch what happens !

If some good happens to INDIAN CRICKET, YOU and I will be HAPPY :)

VSK said...

IRELAND 61 for 2 in 19 overs vs South Africa

மணிகண்டன் said...

//If some good happens to INDIAN CRICKET, YOU and I will be HAPPY :)
//

Bala, it's true. But will this happen when money-minded and corrupted bcci is in place?

மணிகண்டன் said...

//IRELAND 61 for 2 in 19 overs vs South Africa

//

தகவலுக்கு நன்றி VSK ஐயா.

Santhosh said...

சொல்ல முடியாது மணி இதுவே ஒரு நல்ல துவக்கமா இருக்கலாம் இல்லையா? இங்கே அமெரிக்காவில் எப்படி விளையாட்டு வணிகப்படுத்தப்படுகிறதோ அது மாதிரியான முயற்சி தான் இதுவும். NBA. NFL மாதிரியான முயற்சி கொஞ்ச நாள் கழிச்சி தவறுகள் திருத்தப்படலாம். பார்க்கலாம் நல்லது நடந்தால் சரி.

மணிகண்டன் said...

//சொல்ல முடியாது மணி இதுவே ஒரு நல்ல துவக்கமா இருக்கலாம் இல்லையா? இங்கே அமெரிக்காவில் எப்படி விளையாட்டு வணிகப்படுத்தப்படுகிறதோ அது மாதிரியான முயற்சி தான் இதுவும். NBA. NFL மாதிரியான முயற்சி கொஞ்ச நாள் கழிச்சி தவறுகள் திருத்தப்படலாம். பார்க்கலாம் நல்லது நடந்தால் சரி.

//

நல்ல துவக்கமா இருந்து நல்லது நடந்தா சரி தான் சந்தோஷ். இதுலயாவது அரசியலும், அதிகாரமும் கலக்காம இருந்தா உருப்படும்.

சிவபாலன் said...

மணிகண்டன்,

நீங்கள் சொல்வது போல் இதில் நடைமுறை சிக்கல் நிறைந்ததுதான்.

ஆனால் இந்த விசயம் BCCIக்கு ஆப்பு வைத்தாலும் வைக்கும். அதனால் BCCI யோசித்து சம்மதிப்பது நல்லது.

:)

Anonymous said...

//இந்திய மைதானங்களை வெளிநாட்டு மைதானங்கள் போல் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றி நமது வீரர்களுக்கு பயிற்சி அளிக்காமல், இதுபோல் நூற்றுக்கணக்கான வீரர்களை உருவாக்குவது மட்டுமே பலன் தருமா? //

I agree without grounds where you bring talent .

Whatever ZEE TV does is nothing but commercial interests . if ZEE TV want to bring Indian pride in sports why they didnt look to promote olymic athelete ? or hockey /football team?

Boston Bala said...

---இது போன்ற தனியார் லீக்குகள் தாக்குபிடிப்பது சாத்தியமா?---

As long as a media powerhouse like Zee is behind it, anything is possible.

The matches are guaranteed live telecast. There could be games shows and many more promotions around the 'playoffs'.

If more ODIs are played by Indian team, then experts complain about too much cricket. Now, this can be also resolved. But, the appetite will be satiated.

Zee could bring in total packages for the advertiser. Instead of match fixing allegations, important players could be on rotation, if any team becomes 'superstar' and could be made to lose to make the matches more thrilling.

VSK said...

IRELAND VS SOUTH AFRICA

Restricted to 35 overs.
Ireland 152 for 8 in 35 overs but are fighting back!

1 for 1 in 1 over!!

மணிகண்டன் said...

//ஆனால் இந்த விசயம் BCCIக்கு ஆப்பு வைத்தாலும் வைக்கும்//

வாய்ப்புகள் இருக்கு சிவபாலன். Bombay Bulls, Delhi Daazlersனு லீக் அணிகள் பிரபலமாகி பிசிசிஐக்கு ஆப்பு வச்சாலும் வைக்கலாம். பிசிசிஐ கண்டிப்பா இதையெல்லாம் யோசிக்கும்.

மணிகண்டன் said...

//Whatever ZEE TV does is nothing but commercial interests . if ZEE TV want to bring Indian pride in sports why they didnt look to promote olymic athelete ? or hockey /football team?
//

true anony, they are investing in cricket because they know thier returns on it will be much more..

மணிகண்டன் said...

//As long as a media powerhouse like Zee is behind it, anything is possible.

The matches are guaranteed live telecast. There could be games shows and many more promotions around the 'playoffs'.

If more ODIs are played by Indian team, then experts complain about too much cricket. Now, this can be also resolved. But, the appetite will be satiated.

Zee could bring in total packages for the advertiser. Instead of match fixing allegations, important players could be on rotation, if any team becomes 'superstar' and could be made to lose to make the matches more thrilling.
//

கலக்கல் பாபா. எப்படியும் அவங்களுக்கு அறுவடை தான்.

மணிகண்டன் said...

//IRELAND VS SOUTH AFRICA

Restricted to 35 overs.
Ireland 152 for 8 in 35 overs but are fighting back!

1 for 1 in 1 over!!

//

இப்போ 43/1. தென்னாப்பிரிக்கா சுலபமா ஜெயிச்சிடுவாங்கன்னு தான் தோனுது ஐயா. பார்க்கலாம்.

வெண்பா said...

WWF னு டிவில குத்துச்சண்டை காட்டுவாங்க பார்த்திருக்கீங்களா? இந்த ICL லும் அது போல ஆகிவிடும்.

Arunkumar said...

//
இதுல எவ்வளவு திறமையான வீரர்களை உருவாக்குனாலும் பிசிசிஐ தேர்வுக்குழுவில் உள்ள மாநில மற்றும் வட்டார பாசம் அதை ஓரம்கட்டிவிடும்.
//
பதிவ படிச்சிட்டு நானும் இதத்தான் சொல்ல நெனச்சேன் மணி

Naufal MQ said...

//ஆனால் இந்த விசயம் BCCIக்கு ஆப்பு வைத்தாலும் வைக்கும். அதனால் BCCI யோசித்து சம்மதிப்பது நல்லது.
//
இப்போ இருக்குற அணி இந்திய அணி இல்லையாமே. பி.சி.சி.ஐ அணியாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி பி.சி.சி.ஐ சொன்னது.

Naufal MQ said...

20/20 கிரிக்கெட் என்பது சுத்த வேஸ்டுங்க. அதுல இருந்து திறமையான வீரர்களை எடுப்பது என்பது நல்ல ஜோக். 20/20 வேண்டாம் என்பது என் எண்ணம்.

அப்புறம், இந்த ஐ.சி.எல் மேட்டர் எப்படி சரிப்பட்டு வரும் என்பது தெரியல. அதிலும் அரசியல் இருக்காதென்பது எவ்வளவு சாத்தியம்?

மணிகண்டன் said...

//WWF னு டிவில குத்துச்சண்டை காட்டுவாங்க பார்த்திருக்கீங்களா? இந்த ICL லும் அது போல ஆகிவிடும்//

veebee, மாறி மாறி பிசிசிஐயும் zee டி.வி குழுமமும் அறிக்கை விடுறதை பார்த்தா, இப்பவே ஆரம்பிச்சிட்ட மாதிரி தான் தோனுது :)

மணிகண்டன் said...

////
இதுல எவ்வளவு திறமையான வீரர்களை உருவாக்குனாலும் பிசிசிஐ தேர்வுக்குழுவில் உள்ள மாநில மற்றும் வட்டார பாசம் அதை ஓரம்கட்டிவிடும்.
//
பதிவ படிச்சிட்டு நானும் இதத்தான் சொல்ல நெனச்சேன் மணி

//
ஆமாம் அருண், எங்க சுத்துனாலும் இவங்க கடைசில் அங்க தான் வந்து நிப்பாங்க.

மணிகண்டன் said...

//20/20 கிரிக்கெட் என்பது சுத்த வேஸ்டுங்க. அதுல இருந்து திறமையான வீரர்களை எடுப்பது என்பது நல்ல ஜோக். 20/20 வேண்டாம் என்பது என் எண்ணம்.
//

ஐசிசி இந்த 20/20 கிரிக்கெட்ட வளர்க்கறதுக்கான காரணமே சீக்கிரமா ஒலிம்பிக்ல இதை சேர்க்கனும்னு தான் நண்பரே. இதை பத்தி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.

மணிகண்டன் said...

//அப்புறம், இந்த ஐ.சி.எல் மேட்டர் எப்படி சரிப்பட்டு வரும் என்பது தெரியல. அதிலும் அரசியல் இருக்காதென்பது எவ்வளவு சாத்தியம்?
//

கண்டிப்பா இதுலயும் கொஞ்ச நாள்ல அரசியல் புகுந்துடும். ஒரு விளம்பரத்துக்காக தான் zee இதை அறிவிச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். இதுல நடைமுறை சிக்கல் நிறைய இருக்கு. இந்திய (பிசிசிஐ) அணி வீரர்களை விளையாட வைக்கிறது, சர்வதேச வீரர்களை விளையாட வைக்கிறது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை. நிறைய சம்பிரதாயங்கள், சிகப்பு நாடாக்கள்னு தடங்கல்கள் இருக்கு.

மு.கார்த்திகேயன் said...

மணிகண்டன், அடுத்த உலககோப்பை வரை இது மாதிரி ஏதாவது சொல்லிகிட்டே தான் இருப்பாங்க.. என்ன வந்தாலும் நீங்க சொல்ற மாதிரி, அரசியல் மற்றும் மாநில பாசம் விடவே விடாது..

மு.கார்த்திகேயன் said...

சிபியோட வார்த்தையை நானும் வழிமொழிகிறேன்.. நீங்க எங்க இருக்கீங்கன்னு லோகேட் பண்ணி அக்னியை விடுவோம், மணிகண்டன்

மணிகண்டன் said...

//மணிகண்டன், அடுத்த உலககோப்பை வரை இது மாதிரி ஏதாவது சொல்லிகிட்டே தான் இருப்பாங்க.. என்ன வந்தாலும் நீங்க சொல்ற மாதிரி, அரசியல் மற்றும் மாநில பாசம் விடவே விடாது..

//

உண்மைங்க கார்த்தி..இந்த குண்டுசட்டில இருந்து வெளியே வந்தா தான் இந்திய கிரிக்கெட்டுக்கு விடிவுகாலம்.

மணிகண்டன் said...

//நீங்க எங்க இருக்கீங்கன்னு லோகேட் பண்ணி அக்னியை விடுவோம், மணிகண்டன்
//

ஏன் தல இவ்வளவு கோபம்..இன்னும் ரெண்டு வாரத்துல இதுக்கெல்லாம் மூட்டை கட்டிடலாம்..