Monday, April 30, 2007

Well Done Ozs



நான்காவது முறையாக மற்றும் தொடர்ந்து மூன்று முறை உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்கள்!




அனைத்து அணியினரையும் துவம்சம் செய்து தாங்கள் உண்மையிலேயே உலக சாம்பியன்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். They Deserve it.

ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், அயர்லாந்து போன்ற அணிகளுக்கு இது மறக்க முடியாத உலகக்கோப்பையாக அமைந்தாலும், பிற அணிகளுக்கு இது விரைவில் மறக்க நினைக்கும் உலகக்கோப்பையாகவே அமைந்தது. இந்தியா,பாகிஸ்தான் அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறிய ஏமாற்றம், பாப் உல்மரின் மரணம் தந்த சோகம், அவரின் மரணம் பற்றிய விசாரனை தந்த அதிர்சிகள், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளின் வளர்ச்சி தந்த ஆச்சரியம், ஆஸ்திரேலிய அணியினரின் அதிரடி ஆட்டம் தந்த மலைப்பு,இறுதிப்போட்டியின் இறுதியில் நடந்த சிறுபிள்ளைத்தனமான குழப்பம் என இந்த உலகக்கோப்பை உணர்ச்சிகளின் கலவையாக அமைந்தது. ஒருசில போட்டிகள் தவிர்த்து மற்ற அனைத்தும் ஒருதலைப் பட்சமாக அமைந்தது ரசிகர்களிடையே சோர்வையே ஏற்படுத்தியது.

மொத்தத்தில் இந்த உலகக்கோப்பை பெரிய ஏமாற்றமே (ஆஸ்திரேலிய ரசிகர்களை தவிர மற்றவர்களுக்கு ) .


2 comments:

மு.கார்த்திகேயன் said...

இப்படி ஒன்று நடந்ததே மறந்துபோய்விட்டதுங்க மணி

மணிகண்டன் said...

//இப்படி ஒன்று நடந்ததே மறந்துபோய்விட்டதுங்க மணி //

அப்படிப்பட்ட உலகக்கோப்பை தொடர் இது கார்த்தி. ஒரு சுவாரசியமே இல்லாம போயிடுச்சு.