Wednesday, May 2, 2007

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை..



இது அடிக்கடி விளம்பரங்கள்ல நீங்க கேக்கற ஒரு வாக்கியம் தான். அதுலயும் குறிப்பா சரவனா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள்ல கேக்கலாம். சரவனா ஸ்டோர்ஸ் சகோதரர்கள் பிரிஞ்சதுக்கப்புறம் சரவனாங்கற பெயர்லயே ஆளுக்கு ஒரு கடைய தொறந்துகிட்டு விளம்பரத்துல எங்களுக்கு வேற எங்கும் கிளைகள் இல்லைனு சொல்லி எல்லாரையும் குழப்புவாங்க. சரி இப்ப எதுக்கு இதெல்லாம்னு கேக்கறது தெரியுது..


வேற ஒன்னுமில்லைங்க கடந்த ரெண்டு மாசமா கிரிக்கெட் வச்சு இந்த பதிவை ஓட்டியாச்சு. இனிமே வேற எதாவது எழுத முயற்சி பண்ணனும். அதுக்கு மறுபக்கம் அப்படிங்கற பேர்ல வேற ஒரு பதிவை ஆரம்பிச்சிருக்கேன். இனிமே அதுல வேற எதாவது எழுதலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அதுக்குதான் இந்த பில்டப். மறுபக்கம்ன உடனே எதோ வில்லங்கமா எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்க சிங்கத்தை பத்தி எழுதப் போறேன்னெல்லாம் கற்பனை பண்ணிக்காதீங்க. கிரிக்கெட் தவிர மத்ததெல்லாம் எழுதற ஒரு பக்கம் தான் மறுபக்கம். அப்பாடா பெயர்க்காரணம் சொல்லியாச்சு :) இதுவரைக்கும் இந்தியா பெர்முடாவோட ஆடற மாதிரி சுலபமா அங்கங்க நடக்கற மேட்ச் பத்தி செய்தி, புகைப்படம், வீடியோனு சுலபமா ஓட்டியாச்சு. இனிமே தான் எதாவது சொந்த சரக்கு எழுதனும். இந்தியா பங்களாதேஷோட ஆடற மாதிரி ரொம்ப கஷ்டமான காரியம் தான். பார்க்கலாம். இந்த உதாரணத்துலயும் கிரிக்கெட்டானு கேக்காதீங்க..வாலை நிமிர்த்த முடியாது :)

எனது மறுபக்கம்

6 comments:

Boston Bala said...

---இந்தியா பங்களாதேஷோட ஆடற மாதிரி ரொம்ப கஷ்டமான காரியம் தான்.---

:))

தென்றல் said...

/இந்தியா பங்களாதேஷோட ஆடற மாதிரி ரொம்ப கஷ்டமான காரியம் தான்./

இந்த குறும்பு தான வேண்டாங்கிறது...!! ;)

தம்பி said...

மறுபக்கம் சிக்சரும், போருமாக விளாச எனது வாழ்த்துக்கள்.

Arunkumar said...

உங்க மறுபக்கத்த படிக்க நாங்க ரெடி மணி.. கலக்குங்க :)

சிறில் அலெக்ஸ் said...

வாங்க! கலக்குங்க!
உங்க முதுகப்(மருபக்கம்) பாக்க ஆவலாயிருக்கோம்.

:))

மணிகண்டன் said...

பாபா,தென்றல்,தம்பி,அருண் மற்றும் சிறில் அனைவருக்கும் நன்றி