Wednesday, February 7, 2007

மீண்டும் Match Fixing ???



இந்தியாவிற்கும் மேற்கிந்தியத்தீவுகளுக்கும் கடந்த மாதம் 21ம் தேதி நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் Match Fixing (சரியான தமிழ் பதம் என்னங்க?) நடந்திருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்கிந்தியத்தீவுகளின் மார்லோன் சாமுவேல்ஸ், அன்றைய போட்டியில் விளையாடப் போகும் தனது அணி பற்றிய ரகசிய தகவல்களை முன்கூட்டியே முகேஷ் கோச்சார் என்ற புக்கியிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது.இதுபற்றிய புகாரை நாக்பூர் காவல்துறையினர் பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.சி.சி.க்கு அனுப்பியுள்ளனர்.

இதைபற்றி பேட்டியளித்த நாக்பூர் உதவி ஆணையாளர் அமிதேஷ் குமார், சாமுவேல்சுக்கும் கோச்சாருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.பலமுறை இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், மேற்கிந்தியத்தீவுகளின் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆர்டர் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.இதில் பணப்பரிமாற்றம் ஏதும் நடந்ததா எனத் தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

பி.சி.சி.ஐ செயலாளர் நிரஞ்சன் ஷா 'நாக்பூர் காவல்துறையினரின் அறிக்கை இன்னும் எங்களிடம் வரவில்லை.அது கிடைத்ததும் அதைப்பற்றிய அறிக்கையை ஐ.சி.சி.க்கு அனுப்புவோம்' என தெரிவித்தார்.


இப்போட்டியில் இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

7 comments:

Sundar Padmanaban said...

//Match Fixing (சரியான தமிழ் பதம் என்னங்க?) //

'கரெக்ட்' பண்றது!

மணிகண்டன் said...

//'கரெக்ட்' பண்றது!//

கரெக்டா சொல்லியிருக்கிங்க! :) துபாஷி வேலை பார்த்திருக்கீங்களோ ??

Anonymous said...

ஆஹா! கப்பை புடுங்கீருவாய்களா!!

தொடரட்டும் தங்கள் பணி

மணிகண்டன் said...

வாங்க அனானி,பேரை சொல்லியே பின்னூட்டமிடலாமே!

VSK said...

//Match Fixing (சரியான தமிழ் பதம் என்னங்க?) //

போட்டி முன் முடிவிறுத்தல்.....???

மணிகண்டன் said...

//போட்டி முன் முடிவிறுத்தல்.....??? //

நல்ல மொழிபெயர்ப்பு.

முதன்முறையாக எனது பதிவிற்க்கு வந்துள்ளீர்கள்.நன்றி S.K ஐயா.

Naufal MQ said...

//Match Fixing (சரியான தமிழ் பதம் என்னங்க?) //

தீப்பெட்டி ஒட்டுறது.